"நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டு கள் கடந்த பின்னரும், உயர்கல்வி நிறுவனமான அழகப்பா பல்கலைக்கழகத்தில் தீண்டத்தகாதவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்கின்ற பாகுபாட்டுடன் மாணாக்கர்கள் நடத்தப்படுகின்றனர். அதனால் பாதிக்கப்பட்டவள் நான்'' என்கின்ற ரீதியில் வரலாற்றுத்துறை மாணவி ஒருவர் எழுதிய கடிதம் பல்கலைக்கழக துணைவேந்தர், ஆட்சியர், மனித உரிமை கமிஷன், எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தின் கதவினைத் தட்ட, பல்கலைக்கழகத்தில் சாதியா? என்கிற சர்ச்சையில் சிக்கியுள்ளது அழகப்பா பல்கலைக்கழகம்.

a

குறிப்பிட்ட அந்த கடிதத்திற்கு சொந்தக்காரர் சிவகங்கை மாவட்டம் பூதவயலைச் சேர்ந்த மாணவி வைஷ்ணவி. அழகப்பா பல்கலைக்கழகத்தின் முதுகலை வரலாறு (2022-24) இறுதியாண்டினை நிறைவு செய்துள்ள அந்த மாணவி எழுதிய கடிதம், "எங்களது இறுதியாண்டின் இறுதி செமஸ்டரின்போது நாங்கள் எந்தவொரு தலைப்பிலாவது ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்கவேண்டும். ஆய்வுக்கட்டுரை தொடர்பாக, எனக்கு வழிகாட்டியாக துறையின் உதவிப் பேராசிரியர் பரந்தாமன் இருந்துவந்தார்.

"இந்திய விடுதலைப் போராட்டத்தில் இமானுவேல் சேகரனாரின் பங்கு'’ என்கிற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை எழுத உள்ளதாக அறிவித்திருந்தேன். உதவிப் பேராசிரியரோ, "அந்தத் தலைப்பை மாற்று! வேறு ஏதும் தலைப்பு கிடைக்கவில்லையா..?' என சாதிய எண்ணத்தோடு என்னைத் திட்டி அவமானப்படுத்தியதோடு, அந்த தலைப்பினை ஏற்றுக்கொள்ள வில்லை. தொடர்ந்து, சத்தியமூர்த்தி எனும் ஆதிக்க சாதி மாணவனைத் தூண்டிவிட்டு என்னை அடித்துக் காயப்படுத்தினார்கள். இதுகுறித்து எனது துறைத்தலைவர் கிருஷ்ண மூர்த்தியிடம் கூறியதற்கு, "இதுபற்றி யாரிடமும் பேசாதே' என என்னை சமாதானம் மட்டும் செய்துவிட்டு, அவர்களைக் கண்டிக்காமல் விட்டுவிட்டார். இது பெரிதான நிலையில் ஒருகட்டத்தில், என்னு டைய ஆய்வுக்கட்டுரைக்கு வழிகாட்டியாக துறைத்தலைவரே வந்தார். அதனைக் காரணமாகக் கொண்டு என்னுடைய ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்துவிட் டேன். இதுபோல் ஒரு மாணவன் ஆய்வுக்கட்டுரை முகப்பில் அம்பேத்கர் படம் வைத்ததற்கு அதனைக் கிழித்துவிட்டு “"வேறு படம் வைத்து வா' என்றதும் இதே உதவிப் பேராசிரியர் பரந்தாமனே. "இமானுவேல் சேகரனார் பெயரில் ஆய்வுக்கட்டுரை எழுதக்கூடாதா? கல்வியில் எதற்கு சாதி வேண்டும்?' என்கின்ற கேள்விகளுடன் நியாயம் கேட்கின்றது.

Advertisment

aa

இது துணைவேந்தர் தரப்பிற்கு சென்ற நிலையில், அவசர அவசரமாக வர லாற்றுத்துறை வகுப்பிற்கே வந்துள்ளார் துணைவேந்தர் ரவி. "சாதி பார்க்குறதுக்கு எங்கே கத்துக்கிட்டீங்க. இவ்வளவு பெரிய பேராசிரியர்களாக இருக்கீங்க. நீங்களே சாதி பார்க்கலாமா.? இனிமேல் இப்படி நடக்கக்கூடாது'' என மாணவர்கள் மத்தியில் அனைவரையும் வெளுத்து வாங்கியிருக்கின்றார் அவர்.

இது இப்படியிருக்க, பல்கலைக்கழகத்தின் எஸ்.சி., எஸ்.டி. நோடல் அதிகாரியான பேராசிரியர் வேதிராஜன் வைஷ்ணவியை அழைத்து, "ஏம்மா.! உம்பாட்டுக்கு எல்லா இடத்துக்கும் புகார் கொடுத்துப் போயிருக்க.! எஸ்.சி., எஸ்.டிக்கென நான் இங்கே இருக்கேன். நீ உடனே நாளைக்கு (05-06-2024) எஸ்.சி., எஸ்.டி. செல்லிற்கு வா. வந்து விசாரணையில் கலந்துகொண்டு பேசு'' என்றிருக்கின்றார். பெண் அலுவலர்கள், கேமரா பாதுகாப்பு எதுவுமில்லாத அந்த ஹாலில், வரலாற் றுத்துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அழகப்பா பல் கலை கழக சிண்டி கேட் மெம்பர் பழனிச்சாமி மட் டும் இருந்த நிலை யில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற அந்த விசாரணையில், "செக்ஸ்' தொடர்பான கேள்விகள் மட்டுமே முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

மாணவியோ, "சார்... நான் கொடுத்த புகாரை தவிர்த்து இப்படி யெல்லாம் கேள்வி கேட்கிறீர்களே? இது நியாயமா? பெண் அதிகாரி களை வரவழைத்த பின்னர் விசா ரணையை நடத்துங்கள். உங்கள் பெண்ணாக இருந்தால் இப்படிப் பேசுவீர்களா..?'' என சரமாரியாக கேள்வியெழுப்ப, "என்னுடைய பெண் இங்கே ஏன் படிக்க வருது. அது எம்.பி.பி.எஸ். படிக்குது'' என கேலி செய்திருக்கின்றது அந்த விசாரணை டீம். இதற்கு ஆவணமாக விசாரணையின்போது அந்த மாணவி சாதுர்யமாக பதிவு செய்த ஆடியோக்கள் மீண்டும் மனித உரிமை ஆணைய வசம் சென்றுள்ளது.

ssஇதுதொடர்பாக பேசிய உதவிப் பேராசிரியர் பரந்தாமனோ, "எனக்கு அந்த மாதிரி எண்ணம் கிடையாது. சிலரின் தூண்டுதலால் அந்த மாணவி என்மீது புகாரளித்திருக்கின்றார். மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது'' என மறுத்தார். வரலாற்றுத்துறைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தியோ, "பேசமுடியாது'' என்றார் ஒரேயடியாக. கடந்த டிசம்பரில், "செல்போனில் ஆபாச புகைப்படம், வீடியோக்களை காண்பித்து பாலியல் சீண்டலில் ஈடுபடுகின்றார்' என துறைத்தலைவர் கிருஷ்ணமூர்த்திமீது துறையின் உதவிப் பயிற்றுநர் ராதா என்பவர் புகார் கொடுத்தது தனிக்கதை.

விஷயம் சர்ச்சையானதும் துணைவேந்தர் ரவி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் பதிவாளர் அறையில் பதிவாளர் செந்தில்ராஜன், ஆட்சிக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, எஸ்.சி., எஸ்.டி. நோடல் அதிகாரியான வேதிராஜா, பெண் பேராசிரியர் சுதா, பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோபிநாத், வழக்கறிஞர் உள்ளிட்டோர் கலந்துகொள்ள மீண்டும் விசாரணை நடத்தியிருக்கிறார்.

விசாரணை நிறைவு பெற்றுவிட்டது. நடவடிக்கை என்ன? என முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகாரனுப்பியுள்ளார் மாணவி வைஷ்ணவி. தமிழக முதல்வர் தலையிட்டு பல்கலைக்கழகத்தில் பரவிவரும் சாதிய வன்மத்தைக் களையவேண்டுமென்பது முன்னாள் மாணாக்கர்களின் கோரிக்கை.

கவனிப்பாரா தமிழக முதல்வர்?

-நா.ஆதித்யா

படங்கள்: விவேக்