சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த சுபாஷ் சந்திரபோஸின் 127-ஆவது பிறந்த தின விழாவில் காந்தி குறித்தும், இந்திய விடுதலை குறித்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

"1942-க்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரஸில் எந்த செயல்பாடும் நடைபெறவில்லை. மகாத்மா காந்தி தலைமையிலான சுதந்திரப் போராட்டத்தை எடுத்துக் கொண்டால், 1942-க்குப் பிறகு எதுவுமே நடக்கவில்லை. நாம் நமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம். முகமது அலி ஜின்னா தனி நாடு கேட்டுக்கொண்டிருந்தார். சுதந்திரம் வேண்டும், இல்லையென்றால் எதற்குமே ஒத்துழைக்கமாட்டோம் என்று கூறிக்கொண்டிருந்தோம். ஆனால் அதை பிரிட்டிஷ் அரசு கண்டுகொள்ளவில்லை'' என்றும் இன்னும் பல சர்ச்சை கருத்துகளையும் ஆளுநர் பேசியுள்ளார்.

nn

ஆளுநரின் பேச்சுக்குப் பதிலடி தந்துள்ள மூத்த பத்திரிகையாளரும் இந்து குழும பத்திரிகைகளின் முன்னாள் முதன்மை நிர்வாக ஆசிரியருமான என். ராம், "ஆளுநர்களோ…. அரசியல் தலைவர்களோ இந்திய சுதந்திர வரலாறை ஆழமா படிக்கணும். இல்லைனா மேடையில பேசக்கூடாது. அவர் சொன்னது ஒரு ஜோக் மாதிரி இருக்குது. "இந்தியாஸ் ஸ்ட்ரகிள் பார் இன்டிபெண்டன்ட்' புத்தகத்தை வேணா ஒரு காபி வாங்கி அனுப்பறேன். படிக்கட்டும்.

Advertisment

காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பிச்சு நடத்துனாங்க. குறிப்பா 1942-ல வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்துச்சு. அதைத் தொடங்குவதற்கு முன்னாலே காந்தியையும், நேருவையும் பல தலைவர்களையும் ஆங்கிலேயர்கள் சிறையில் அடைத்துவிட்டார்கள்.

தலைவர்கள் அனைவரும் சிறையிலடைக்கப் பட்ட நிலையில் போராட்டம் கலகலத்துவிடும் என ஆங்கிலேயர் நினைத்தார்கள். அதற்குமாறாக, மக்கள் தன்னிச்சையாகவே கிளம்பிவந்து போராடினாங்க. நகரத்துல மட்டுமில்லாம கிராமப்புறத்திலிருந்தும் வந்தாங்க… தொழிலாளர்கள் வந்தாங்க...… வணிகர்கள் வந்தாங்க. ஒரு பெரிய எழுச்சி ஏற்பட்டது. அதை பயங்கரமான அடக்குமுறை மூலம் கட்டுப்படுத்த ஆங்கிலேயர் முயன்றாங்க. முடியவில்லை.

இந்த இயக்கம் தோல்வியடைவதுபோல் இருக்கும்போது, அடித்தளத்தில் மக்கள் செயல்பாடு நடந்தது. பல இடங்களில் மக்கள் காவல் நிலையங்களை, அரசு அலுவலகங்களைத் தாக்கினார்கள். இந்த எழுச்சி மக்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆளுநர் எதுவுமே நடக்கலைன்னு சொன்னார்ல அதே காலகட்டத்துலதான் இது நடந்தது. வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஒரு சகாப்தம்.

Advertisment

nn

நேதாஜியைப் பற்றி சொல்லவேண்டு மானால்…. அவர் ஒரு சுதந்திர இயக்க காலகட்டத் தலைவர். தொடக்கத்தில் இடதுசாரிக் கருத்தோடு தனது இயக்கத்தைத் தொடங்கினார். தியாகத்துக்கு ஒரு நல்ல அடையாளம். ஆனால் அவர் ஹிட்லரையும், முசோலினியையும் போய்ப் பார்த்தாரு. அங்க உதவிக்கான உத்தரவாதம் கிடைக்கலை. நீர்மூழ்கிக் கப்பல்ல ஜப்பானியர் களையும் போய்ப் பார்த்தார். மோகன்சிங் போன்றவர்கள் ஐ.என்.ஏ.வை தொடங்கியிருந் தாங்க. நேதாஜி வந்ததும், அவரை தலைவராக்கி அவர் கையில கொடுத்துட்டாங்க. ஐ.என்.ஏ. சுதந்திரத்துக்கு ஒரு நல்ல பங்களிப்பா என்றால் இல்லை. சரியான பாதை இல்லை. பாசிசம், சுதந்திரத்துக்கு உதவி செய்யும்னு நினைச்சா அது ஒரு தப்புக் கணக்குதான்.

நேதாஜி ஒரு பெரிய ஹீரோதான். விமான விபத்துல இறந்துட்டார். அவரோட இயக்கம் பெரிய ட்ராஜடியா முடிஞ்சிடுச்சு.

சுதந்திரத்துக்கு எந்த ஒரு தனி மனிதரையும் காரணமாகக் குறிப்பிடுவது தவறானதுன்னு சொல்வேன். மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் தலைவர். காந்தியின் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பு, தேசிய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத் தினது. அதைப் புரியாமப் பேசுறவர் களின் பொதுவாழ்க் கையைப் பார்த்து பரிதாபப்படுவேன்.

அண்மைக் காலமாக தமிழ்நாடு பெயர் விவகாரம், வள்ளுவர் விவ காரம்னு தொடர்ந்து ஆளுநர் ரவி தமிழ் நாட்டை டார்கெட் பண்ணி தவறான கருத்துகளைத் தொடர்ந்து பேசிவருகிறார். அவருக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வுக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. நான் பொலைட்டா சொல்றேன். அவருக்கு இங்க ஆளுநரா இருப்பதற்கான தகுதி கிடையாது. ஒரு மாநிலத்தின் அரசியலமைப்புச் சட்டத்தின் தலைவர், மசோதாக்களை தன் மேஜையிலே வைத்துக்கொள்வது தவறுன்னுதான உச்சநீதி மன்றத்துலகூட சொல்லியிருக்காங்க.

nn

ஆளுநரின் செயல்களுக்கும், பேச்சுக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. அவங்களோட வேலைகளைத்தான் இங்கே செய்யறார். அவரை எவ்வளவுநாள் இங்கே வெச்சுப்பாங்கனு தெரியலை. இவர் இப்படி செய்யச் செய்ய மக்களுக்கு ஒரு வெறுப்புதான் ஏற்படும்.

மகாத்மா காந்தியின் மகத்துவத்தைக் குறைக்க அவர் செய்யும் முயற்சி, வெட்கக்கேடான செயல். காந்தியின் எல்லா செயல்களையும் நாம் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் அவர் ஒரு தலைசிறந்த தலைவர். அவர் ஒரு போராளி, வீரர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு "டூ ஆர் டை' என ஸ்லோகன் கொடுத்தவர். ஜப்பான் வந்து நமக்கு சுதந்திரம் கொடுக்க ப் போகிறார்கள் என்பது ஒரு பிரமைதான். நேதாஜி ஒரு பெரிய தலைவர். அவர் தேர்ந்தெடுத்தது தவறான பார்வை''’எனக் குறிப்பிடுகிறார்.

தொகுப்பு: க.சுப்பிரமணியன்