2024 பிறந்ததுமே பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பு அனைத்துக் கட்சியினரிடமும் தொற்ற ஆரம்பித்துள்ளது. ஒரு பக்கம் கட்சித் தலைமைகள் தேர்தல் ஆயத்தப் பணிகளைத் துரிதப்படுத்திக் கொண்டிருக்க, உள்ளூர் பெருந்தலைகள் கட்சித் தலைமையிடம் சீட்டுக் கேட்டு நெருக்குதலைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் திண்டுக்கல், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, நத்தம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் உள்ளன. மீதமுள்ள ஒரு தொகுதியான வேடசந்தூர், கரூர் பாராளுமன்றத் தொகுதியில் உள்ளது.

dd

இந்த நிலையில்தான் திண்டுக்கல் பாராளு மன்றத் தொகுதியிலுள்ள கரை வேஷ்டிகள் போட்டி போட்டுக்கொண்டு சீட்டுக்காக மல்லுக்கட்டி வருகிறார்கள். இதில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிட்டிங் எம்.பி. வேலுச்சாமியை ஊரக வளர்ச்சித்துறை அமைச் சர் ஐ.பெரியசாமியும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கடந்த தேர்த லில் களமிறக்கினார்கள். இதில் நாலரை லட்சம் ஓட்டு கூடுதலாக வாங்கி தமிழகத்திலேயே முதல் இடத்தை வேலுச் சாமி பிடித்தார். இதற்காக, முதல்வர் ஸ்டாலினிடம் இரண்டு அமைச் சர்களும் பாராட் டைப் பெற்றனர்.

Advertisment

அதைத் தொடர்ந்து வேலுச்சாமி தன் நிதி மூலம் தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஓரளவிற்கு பூர்த்தி செய்து கொடுத்திருக்கிறார். அதனாலேயே மீண்டும் இரண்டு அமைச்சர்கள் மூலமாக சீட் கேட்க இருக்கிறார். 25 வருடங்களுக்கு மேலாக கட்சிப் பணியாற்றிக்கொண்டு தொண்டர்களையும் அரவணைத்து வரும் அமைச்சர் ஐ.பி.யின் தீவிர விசுவாசியான மாநில வர்த்தகர் அணி இணைச்செய லாளர் ஜெயன், அமைச்சர் ஐ.பி. மூலம் சீட் வாங்க களமிறங்கி வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் சீட் கேட்ட தெற்கு ஒன்றியச் செயலாளர் வீராசாமிநாதனும், எம்.பி. தேர்தலில் சீட் கேட்கும் மனநிலையில் இருக்கிறார். இப்படி சில உ.பி.க்கள் சீட்டுக்காக முட்டி மோதி வருகிறார்கள்.

hh

கடந்த எம்.பி. தேர்தலில் தமிழகத் திலேயே அதிக ஓட்டு வாங்கியதுபோல் இந்த தேர்தலிலும் அதிக ஓட்டு வாங்கி முதல்வர் ஸ்டாலினிடம் பாராட்டைப் பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அமைச்சர் ஐ.பி. இருந்துவருகிறார். அதனால் மேற்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சக்கரபாணியுடனும், கிழக்கு மாவட்டச் செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருடனும் கலந்து ஆலோ சனை செய்து புதுமுகத்தை களத்தில் இறக்கவும் தயாராகிவருகிறார்.

ஓ.பி.எஸ்.ஸுக்கும், இ.பி.எஸ் .ஸுக்கும் நடந்த அரசியல் மோதலில் இ.பி.எஸ். அ.தி.மு.க.வை கைப்பற்றி இருக்கிறார். அப்படி இருந்தும் அ.தி.மு.க.வுக்கு அடித்தளம் போட்ட திண்டுக்கல்லிலேயே வரக்கூடிய பாராளு மன்றத் தேர்தலில் போட்டிபோட வேட்பாளர் கிடைக்காமல் மாவட்டப் பொறுப்பாளர்கள் தவித்துவருகிறார்களாம். ஜெ. பேரவை மாநில இணைச்செயலாளரும் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனின் மருமகனான கண்ணன்தான் எம்.பி. தேர்தலில் நிற்கப்போகிறார் என்ற பேச்சு ர.ர.க்கள் மத்தியில் இருந்து வந்தது. அதைத் தொடர்ந்து எடப்பாடியும் கண்ணனை வேட்பாளராக நிறுத்திவிடலாம் என முன்னாள் அமைச்சர் ssவிசுவநாதனிடம் கேட்டிருக்கிறார், அதற்கு விசுவநாதன் மறுத்துவிட்டாராம். நான் எம்.எல்.ஏ.வாக இருந்தாலும்கூட என்னு டைய நத்தம் தொகுதியின் பணி களைப் பார்த்ததே என் மருமகன் தான், அதனால் என் மருமக னுக்கு எம்.பி. சீட் வேண்டாம் என்று கூறியிருக்கிறாராம். இருந்தாலும், எடப்பாடியோடு தங்கமணி, வேலுமணி ஆகியோர் தொடர்ந்து விசுவநாதனிடம் மருமகனை நிறுத்துங்கள் என்று கேட்டுவருகிறார் களாம். முன்னாள் அமைச்சர் சீனிவாசனின் மகனும், திண்டுக்கல் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராஜ்மோகனையும் தேர்த லில் போட்டிபோட தலைமை வலியுறுத்தி வருவதாகத் தெரிகிறது. முன்னாள் பழனி சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபால், வேடசந்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னம்பட்டி பழனிச்சாமி பெயர்களும் சீட் ரேஸில் இருக்கின்றன.

இத்தொகுதியை தி.மு.க., கூட்டணிக் கட்சிக்கு கொடுக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் இத் தொகுதியை காங் கிரஸுக்கு ஒதுக்க வேண்டுமென்று தலைமையில் கள மிறங்கிவருகிறார்கள். அப்படி இத்தொகுதி யை காங்கிரஸுக்கு ஒதுக்கினால் திண்டுக் கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை மணி கண்டன் சீட் கேட்டு வருகிறார். அதுபோல் கரூர் பாராளுமன்ற உறுப்பினரான ஜோதி மணியும் திண்டுக்கல்லில் களமிறங்க காய்நகர்த்தி வருவதாகவும் தெரிகிறது.

பா.ஜ.க. திண்டுக்கல்லில் போட்டி யிடும் பட்சத்தில் கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் மற்றும் மேற்கு மாவட்ட தலைவர் பழனி கனகராஜ், வித்யபாரதி பள்ளி நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி உட்பட சில பா.ஜ.க.வினர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டி போடுவதற்கு சீட் கேட்க ஆயத்தமாகி வருகிறார்கள். திண்டுக்கல் பூட்டை எந்த சாவி திறக்குமென்பது தேர்தல் வரும்போது தெரிந்துவிடும்.

Advertisment

dd