"ஹலோ தலைவரே.. அதி.மு.க.வில் தனக்கு எதிராகக் கொடிபிடிக்கும் மாஜி மந்திரி களை அடக்க முடியாமல் எடப்பாடி திணறுகிறாரே?’''
"உண்மைதாங்க... ... மாஜி வேலுமணிக்கும் எடப்பாடிக்கும் இடை யில் ஏற்பட்ட தகராறுக்கு மூல காரணமே பணம்தான் என்கிறார்கள். தினகரனிடம் கொடுத்து வைத்திருந்த பெரும் பணத்தால், சசிகலாவுக்கும் அவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதுபோல், முதல்வராக இருந்த போது எடப்பாடி, தன்னிடம் புழங்கிய பணத் தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை, தனக்கு விசுவாசமானவர்கள் என்று கருதி, மாஜிக்களான வேலுமணியிடமும், தங்கமணியிட மும் கொடுத்து வைத்தாராம். அதிலிருந்து அப்போதைக்கு அப்போது கட்சிச் செலவுகளுக்கு பணத்தை எடப்பாடி வாங்கி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பணத்தைத் தரமுடியாது என்று இந்த இருவரும் சொல்லிவிட்டார்களாம். அதிலிருந்துதான் இவர்களுக்குள் பகை புகைய ஆரம்பித்ததாம். இப்போது பா.ஜ.க. கொடுத்திருக்கும் தைரியத்தால் சசிகலா, ஓ..பி.எஸ்.சை வைத்து அ.தி.மு.க.வையே உடைக்கும் அளவுக்கு துணிவு பெற்றிருக்கிறாராம் வேலுமணி. பணம் சிக்கிக் கொண்டிருப்பதால், தனக்கு எதிராகக் காய் நகர்த்தும் மாஜி மந்திரிகளை அடக்க முடியாமல் ’தேள்கொட்டிய கள்வர் போல’ தவிக்கிறாராம் எடப்பாடி.''”
"பா.ஜ.க.வின் சென்னை கோட்டப் பொறுப்பாளராக இருக்கும் கரு.நாகராஜனை நீக்க அந்தக் கட்சியிலேயே காய் நகர்த்தப்படுகிறதே?''”
"ஆமாங்க தலைவரே, இதற்குக் காரணம், நாடாளுமன்றத் தேர்தலின் போது கரு.நாகராஜன் மீது, கட்சிப்பணத்தில் விளையாடியதாக ஊழல் புகார்கள் கிளம்புச்சு. இது தொடர்பான புகார்கள் டெல்லிக்கும் போனது. இந்த நிலையில், அவரை மாற்றணும்னு டெல்லிக்கு கோரிக்கை வைத்திருப்பதோடு, அவரது நாற்காலியில், மத்திய சென்னை பா.ஜ.க. வேட்பாளரான வினோஜ் செல்வத்தை உட்காரவைக்கணும்னு அந்த பா.ஜ.க. மாநில நிர்வாகியும், கட்சியின் சீனியர் மேன் கேசவவிநாயக மும் காய் நகர்த்திக்கிட்டிருக்காங்க. இதையறிந்த பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் சிலரும், சென்னை கோட்டப் பொறுப்பாளர் பதவியிலிருந்து கரு.நாகராஜன் தூக்கப்பட வேண்டியவர்தான். அதற் காக அவரை மாற்றிவிட்டு அந்த இடத்தில், வினோஜ் செல்வத்தை நியமிப்பது ஆபத்து. ஏன்னா, எந்த ஊழல் குற்றச் சாட்டுகளுக்காக கரு.நாகராஜனை மாற்ற நினைக்கிறார் களோ, அதைவிட மோசமான புகார்களை சம்பாதித்தவர் வினோஜ் செல்வம். அதிலும் கரு.நாகராஜ னாவது ஏதோ ஒரு கணக்கைக் காட்டினார். வினோஜ் செல்வமோ இதுவரை தேர்தல் செலவுகளுக்கான கணக்கை காட்டவே இல்லை. பேயை விரட்டிட்டு பிசாசையா அந்த இடத்தில் கொண்டுவந்து உட்கார வைக்கணும்?னு குரல் கொடுக்கறாங்களாம்.''’
"தமிழக பா.ஜ.க.வில் 2 நபர்கள் நடத்தும் கேம் விறுவிறுப்பாக இருக்கிறதாமே?''”
"ஆமாங்க தலைவரே முரளி யாதவ், சூரி என்கிற இரண்டு நபர்கள், தமிழக பா.ஜ.க.வில் சில சித்துவேலைகளை நடத்திவருகின்றனர். குறிப்பாக, முரளி யாதவ், மாநில பா.ஜ.க.வின் அந்த நிர்வாகிக்கு நெருக்கமாக இருந்ததோடு, அவரது கணக்கு வழக்குகளையும் பார்த்துக் கொண்டிருந்தவராம். அந்தக் கணக்கு வழக்கில் ஏற்பட்ட பிரச்சினையால் அவர் இப்போது, அந்த நபரிடம் இருந்து விலகி, பா.ஜ.க.வின் மற்றொரு பிரமுகரான நயினாரிடம் சென்று, அவரது கணக்கு வழக்குகளை கவனித்து வருகிறாராம். அவர் இப் போது நயினாரின் 4 கோடி ரூபாய் தேர்தல் அதி காரிகளிடம் பிடிபட்டதற்கு, அந்த பா.ஜ.க. மாநில நிர்வாகிதான் காரணம் என்று சொல்லிவருகிறாராம்.''
’"ஓ...''”
"ஆனால் சூரியோ, பணம் பிடிபடக் காரணமானவர் கேசவவிநாயகம்தான் என்கிறாராம். இந்த சூரி, கொஞ்ச நாட்களுக்கு முன்புவரை கேசவவிநாயகத்திற்கு நெருக்கமாக இருந்தவர். கேசவிற்கு பல்வேறு பிரச்சினைகள் எழுந்த போது, அவற்றிலிருந்து அவரைக் காப்பாற்ற ரூபாய் 4 கோடிவரை பேசி 2 கோடி ரூபாயை வாங்கினாராம். இந்த சூரி, ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் நெருக்கமாகப் பழகிவந்ததால் அவரை நம்பி, கேசவவிநாயகம் பணத்தை அள்ளிக் கொடுத்தாராம். இவர்களின் பிரச்சினைகள் இப்படியாக ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அமர்பிரசாத் ரெட்டி மூலம், அந்த பா.ஜ.க. மாநில நபர் பற்றிய வசூல் தகவல்கள் எல்லாம், பா.ஜ.க.வின் தேசியத் தலைமைக்குச் சென்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறதாம்.''”
"சென்னையில் சுதா என்ற சிறுமியை வெறிபிடித்த ராட்வைலர் நாய் கடித்துக் குதறிய சம்பவம், பதட்டத்தை ஏற்படுத்திவருகிறதே?''”
"இந்தியாவில் இந்த ராட்வைலர் வகை நாய்களை வளர்க்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதனால், அந்த நாயை வளர்த்த உரிமையாளர் புகழேந்தியைக் கைது செய்திருக்கிறது போலீஸ். பொதுவாக சென்னையில் வெறி பிடித்த தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்தபடியே இருக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள், தொடர்ந்து புகார் கொடுத்தும், இதில் மாநகராட்சி நிர்வாகம் அக்கறை காட்டவில்லையாம். இதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள தமிழக அரசின் விளையாட்டு கிராம வளாகத்தில் 50 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உட்பட மத்திய -மாநில அரசு அதிகாரிகள் பலரின் குடியிருப்புகளும் இருக்கின்றன. பிரமாண்டமான இந்த வளாகத்தில் பெரிய பூங்கா ஒன்றும் இருக்கிறது. ஆனால், இந்த வளாகத்திலும் பூங்காவிலும் வெறிநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கே வசிக்கும் அதிகாரிகளின் குழந்தைகள் வெளியே வந்து விளையாடவே பயப்படுகிறார்களாம். இந்தக் குடியிருப்புகளில் வசிக்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியே, ஆஜானுபாகுவான 2 நாய்களை வளர்த்து அக்கம்பக்கவாசிகளை மிரள வைத்து வருகிறாராம்.''”
’"நானும் என் காதுக்கு வந்த ஒரு முக்கிய மான தகவலைப் பகிர்ந்துக்கறேன். அ.தி.மு.க. வின் முன்னாள் அமைச்சர்களான செங்கோட் டையனும் வேலுமணியும் சமீபத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்தி லிங்கத்தை நேரில் சந்தித்துப் பேசியிருக் கிறார்கள். அவர்கள் எடப்பாடி குறித்த விமர்சனத்தையே பகிர்ந்துகொண்டார்களாம். வேலுமணியும் வைத்திலிங்கமும் சந்தித்ததை அ.தி.மு.க.வில் பலரும் திகைப்பாகப் பார்க் கிறார்கள். காரணம், அ.தி.மு.க.வில் இருந்த போது வைத்திலிங்கத்துக்கும் வேலுமணிக்கும் இடையில்தான் முதலில் முட்டிக்கொண்ட தாம். தன்னைக் கேட்காமல் தனது டெல்டா மாவட்டங் களில் கட்சி நிர்வாகிகளை வேலுமணி மாற்றியதால்தான் இவர்களுக்கிடையில் அப்போது பிரச்சினை ஏற்பட்டதாம். இதனால் வைத்திலிங்கம், ஓ.பி.எஸ். பக்கம் சென்று அவரது படைத்தளபதியாகவே மாறி னார். அப்படிப்பட்ட வைத்தி லிங்கத்தைத்தான் வேலுமணி சந்தித்திருக்கிறார். அ.தி.மு.க.வில் உள்ள சீனியர்களை எடப் பாடிக்கு எதிராக வைத்திய லிங்கம் மூலம் ஒருங்கிணைக்க ஓ.பி.எஸ். முயற்சித்து வருகிறாராம். ஜூன் 4-க்கு பிறகு அ.தி.மு.க.வில் பெரும் கலகமே வெடிக்கவிருக்கிறது என்கிறார் கள் ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்க மானவர்களும்.''
_________
இறுதிச் சுற்று!
முன்னாள் மத்திய இணையமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி கடந்த மார்ச் 14-ஆம் தேதி சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயர்ரக சிகிச்சை அளிக்கக்கூடிய ஏ வார்டில் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துரைதயாநிதிக்கென்று தனி மருத்துவக் குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் அவரைக் கண்காணித்து சிகிச்சையளித்து வருகின்றனர். இந்நிலையில் துரைதயாநிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 8-ஆம் தேதி மாலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். துரைதயாநிதிக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவக் குழுவிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
அழகிரி, அவரது மனைவி, துரைதயாநிதி மனைவி ஆகியோர் மதுரை, சென்னைக்கு கூட செல்லாமல் மருத்துவமனையிலிருந்து துரைதயாநிதியைக் கவனித்து வருகின்றனர். துரைதயாநிதி இப்போது வார்டுக்குள் நடக்கத் துவங்கியுள்ளார். நன்றாகப் பேசவும் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. விரைவில் முழுமையாக அவரது உடல் சீராகிவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
-து.ராஜா