பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் கட்சி மாறி வாக்களித்த பிரகஸ்பதிகள் உண்டு. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபிறகு சுய ஆதாயத்துக்காக கட்சி தாவுவ தெல்லாம் சர்வசாதாரணமாக நடக்கும். இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார், சாத்தூர் கிழக்கு அ.தி.மு.க. ஒ.செ. சண்முகக்கனி. எப்படி தெரியுமா?

விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சாத் தூர் நகர்மன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம், விருதுநகர் கிழக்கு மா.செ. ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தபோது ‘மைக்’ பிடித்த ஒ.செ. சண்முகக் கனி...

admk

Advertisment

"அ.தி.மு.க.வில் இரட்டை இலையில் ஜெயித்து எந்த கவுன்சிலர் கட்சி மாறினாலும் அவனை வீடுபுகுந்து வெட்டு வேன். மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன்கிட்ட சொல்லிட்டு வெட்டுவேன். என் வெட்டுதான் முதல் வெட்டாக இருக்கும். எவன் கட்சி மாறுகிறானோ, கட்சியை வைத்து ஜெயித்து விட்டு, எவனெவன் கட்சி மாறுகிறானோ, அவனுடைய போஸ்ட்மார்ட்டம் அரசு மருத் துவமனையில்தான் நடக்கும். இப்பவே நான் சொல்கிறேன். இந்தப் பேச்சால், என் மேல் கேஸ் கொடுத்தாலும் பிரச்சினை இல்லை. ஏனென்றால், போன உள்ளாட்சி தேர்தலின்போது, என்மேல் உள்ள கேஸ், தேர் தலையே பார்க்க விடல. அது ஒண்ணும் பிரச்சினை இல்ல. கட்சி மாறுவது தெரிந்தால், இரட்டை இலையில் ஜெயிச் சுட்டு கட்சி மாறி போனால், உங்க ஆத்தாகிட்ட வாய்க்கரிசி வாங்கிட்டு போங்க''’என வகை தொகையில்லாமல் பேசிவிட்டும், விருதுநகர் மாவட்ட நிர் வாகிகள் சிலரைக் கெட்ட வார்த்தைகளால் திட்டி விட்டும் ஓய்ந்தார்.

சண்முகக்கனியின் இந்த மிரட்டல் பேச்சு, விருதுநகர் மாவட்டத்தில் வீடியோ பதிவாக சுற்றலில் விடப்பட்டுள்ளது. அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் விருதுநகர் மாவட்டத்துக்கு தண்ணி தெளித்துவிட்ட’ நிலை யில், நிர்வாகிகள் சிலர் கடிவாளம் இல்லாத குதிரைகள்போல், தறிகெட்ட பேச்சினை தாறு மாறாகப் பேசிவருகின்றனர்.

தான் பேசிய வீடியோ வைரலானதை, தமிழ்நாடு அளவில் தனக்குக் கிடைத்த இலவச அரசியல் விளம்பரமாகக் கருதிய சண்முகக்கனி, இந்த மாவீரன்(?) அடையாளத்தை அவரே குஷியாக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்த நிலையில், பல சமுதாயத் தைச் சேர்ந்த மக்கள் மத்தியில் பீதியும் பயமும் அச்சுறுத்தலும் ஏற்பட்டு, சமுதாயப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக, மூன்று பிரிவுகளின்கீழ் (505 (1) (க்ஷ), 153 (ஆ), 506 (ண்) ஒடஈ) கீழ் சண்முகக் கனி மீது வழக்கு பதிவு செய்துள் ளது சாத்தூர் நகர் காவல்நிலை யம்.