"பவர் ஸ்டார்' என ரசிகர்களால் அழைக்கப்பட்ட பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம், கர்நாடகாவை ஸ்தம்பிக்க வைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 29-ஆம் தேதி உடற்பயிற்சி செய்து வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த புனீத், கன்னட சூப்பர் ஸ்டாராக விளங்கிய ராஜ்குமாரின் கடைசி மகன். இவரது அண் ணன்களான சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார் ஆகி யோரும் திரைத்துறையில் பிரபலமானவர்கள். வீரப்பனால் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது, 108 நாட்கள் காட்டுக்குள் அவர் உயிரின் பாதுகாப்பை உறுதி செய்து, அரசுத் தூதுவராக பயணம் மேற்கொண்டு, நன்முறையில் மீட்டு வந்த நக்கீரன் ஆசிரியர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தவர் புனீத்.

punith rajkumar

Advertisment

அக்டோபர் 29-ஆம் தேதி காலையில் தனது சகோதரர் சிவராஜ்குமாரின் "பஜ்ரங்கி-2' படத்துக்காக வாழ்த்தி ட்வீட் செய்த புனீத், அதற்கு முன்தினம் அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவராஜ்குமார், யாஷுடன் சேர்ந்து நடனமாடவும் செய்திருந்தார்.

புனீத் ராஜ்குமார் தனது சதாசிவநகர் இல்லத்திலுள்ள ஜிம்மில் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்திருக்கிறார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. மறைந்த புனீத்துக்கு 46 வயதுதான் என்பதும், அவர் அக்கறையுடன் உடல்நலத்தைப் பேணி வந்தவர் என்பதும் விதியின் ஏளனச் சிரிப்பென்றே சொல்லவேண்டும்.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான புனித், 2002-ல் "அப்பு' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். நடிகராக மட்டுமல்லாமல் தனது குரல் வளத்தால் தனது படங்களிலும், பிற நாயகர்களின் படங்களிலும் பாடி, பாடகராகவும் பிரபல மானவர். தனது நடிப்புக்காக தேசிய விருதை ஒரு முறையும், மாநில விருதை ஆறு முறையும் வென்றி ருக்கிறார்.

Advertisment

புனீத் தனது தந்தையைப் போல மனிதாபிமானச் செயல்களிலும் ஆர்வம்மிக்கவர். ஆதரவற்றோர்களுக்காக அநாதை இல்லங்களையும் பள்ளிகளையும் நடத்திவருவதோடு, பிள்ளைகளால் கவனிக்கப்படாத பெற்றோருக்காக முதியோர் இல்லங்களையும் கட்டியிருக்கிறார். 1500-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்விச் செலவையும் ஏற்றுக்கொண்டிருந்தார்.

புனீத்தின் தந்தை ராஜ்குமாருக்கு உடலுறுப்பு தானத்தில் ஆர்வம் உண்டு. அனைவரையும் உடலுறுப்பு தானம் செய்ய அவர் வலியுறுத்துவார். அதனாலேயே பத்தாண்டுகளுக்கு முன்பே விழாவொன்றில் தனது கண்களைத் தானம் செய்யவுள்ளதாக புனீத் அறிவித்திருந்தார். அவரது விருப்பப்படி புனீத்தின் கண்கள் நாராயண நேத்ராலயாவுக்கு அளிக்கப் பட்டுள்ளது.

அக்டோபர் 31-ஆம் தேதி பெங்களூரு கண்டீரவா அரங்கில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலிசெலுத்த அரசியல் ஆளுமைகள், திரையுலகினர், ரசிகர்கள் என அலையலையாய் பெருங்கூட்டம் திரண்டது. அரசு மரியாதையுடன் விடைபெற்றார் புனீத்.