நீருக்காகத்தான் மூன்றாம் உலகப்போரே மூளும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர், அதற்கேற்ப இன்றைய நிலையில் தமிழகம் நீருக்காக நம் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்றவற்றிடம் போராடிவருகிறது.

உலக நீர் வளத்தில் வெறும் 3 சதவிகிதமே நன்னீர். புவி வெப்பமயம், மாசுபாடு காரணமாக இந்த 3 சதவிகித நன்னீரும், பல இடங்களில் மாசடைந்து உள்ளது. இதனால் மக்கள் குடிநீருக்காக வாட்டர் கேன், ஆர்.ஓ. போன்றவற்றை நாடுகின்றனர். ஆனால் இதன் ஆபத்து பெரும்பான்மையான மக்களுக்குத் தெரியவில்லை.

ww

1969-களில் வாட்டர் பாட்டில்கள் வணிகத்தில் ஒரு இத்தாலிய தனியார் நிறுவனம் நுழைந்தது. இந்தியாவில் பின்னர் மக்களின் அன்றாடத் தேவைக்கு 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் கேன் புழக்கத்துக்கு வந்து, தற்போது நகரம் முதல் கிராமம் வரை பரவிவிட்டது. மக்கள் மனதில் கேன் வாட்டர்தான் தூய்மையானது என்ற எண்ணம் பதிந்துவிட்டது.

Advertisment

இந்த வாட்டர் கேன் வர்த்தகம் தமிழகத்தில் மட்டும் ஒரு மாதத்திற்கு சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கு நடப்பதாகக் கூறப்படுகிறது. அப்படியென்றால் இந்திய அளவில் இந்த குடிநீரின் வர்த்தகம் எத்தனை கோடியாக இருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அதுவும் கோடை வெயில் வந்துவிட்டால் இந்த வாட்டர் கேன் விற்பனை இரு மடங்காகிவிடும். பலர் இந்த கேன் வாட்டரில்தான் சமையலே செய்கின்றனர்.

செய்துகொள்ளுங்கள். அதுவும் கோடை வெயில் வந்துவிட்டால் இந்த வாட்டர் கேன் விற்பனை இரு மடங்காகிவிடும். பலர் இந்த கேன் வாட்டரில்தான் சமையலே செய்கின்றனர்.

கேன் வாட்டர் ஐந்து விதங்களில் சுத்திகரிக்கப்படுகிறது. அவை, சாண்ட் ஃபில்டர், ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்டர், மைக்ரான் ஃபில்டர், ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ், யு.வி. ட்ரீட் மெண்ட் ஆகும்.

Advertisment

சமீபத்தில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு ஆய்வை நடத்தினார்கள். அதில் 30 பிரபல பிராண்ட் கேன் தண்ணீரை பரிசோதனை செய்து ஆய்வறிக்கை வெளி யிட்டனர். அதில் தண்ணீர் கேனில் இருக்க வேண்டிய மினரல் அதாவது தாதுக்கள்…

dd

கால்சியம் ஒரு லிட்டருக்கு 188 மி.கி. இருக்கவேண்டும். ஆனால் 3.5 மி.கி.தான் பெரும்பான்மையான கேன்களில் இருந்துள்ளது. இதன் குறைபாடு காரணமாக ஹைபோ கால்சீமியா, பல் நோய், எலும்பு முறிவு மற்றும் எலும்பு அடர்த்திக் குறைபாடு என பல நோய்கள் வரும்.

மெக்னீசியம் தண்ணீரில் 63 மி.கி. இருக்கவேண்டும் ஆனால் பல வாட்டர் கேன்களில் 2 மி.கி தான் உள்ளது. இதனால் சிறுநீரகக் கற்கள் உருவாகவும், சர்க்கரை நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

சோடியம் ஒரு லிட்டர் நீரில் 78 மி.கி. இருக்கவேண்டும். ஆனால் 14 மி.கி.தான் வாட்டர் கேன் நீரில் உள்ளது. இதனால் வயிற்றுப்போக்கு, இதய நோய் போன்றவை ஏற்படும் என எச்சரித்தனர்.

ஒட்டுமொத்தமாக குடிநீரில் டோட்டல் டிசால்வ்டு சாலிட் (நீரில் இருக்கவேண்டிய தாதுக்களின்) அளவு 100 மி.கி.க்கு குறையாமலும் 500 மி.கி.க்கு அதிகரிக்காமலும் இருக்கவேண்டும்.

இந்த தாதுக்கள் குறைபாடுகள் காரணமாக, தண்ணீரைக் குடித்தாலும் எளிதில் தாகம் தீராது. உடல் சோர்வாகவே இருக்கும்.

உணவு பாதுகாப்புத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இவை தவிர பல கம்பெனிகள் பதிவுசெய்யாமல் இயங்கிவருகின்றன. சென்னையை ஒட்டி மட்டும் சுமார் 600 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உள்ளதாகக் கூறுகின்றனர். நீரைச் சுத்திகரிப்பு செய்யும்போது மேற்கொள்ளவேண்டிய இந்திய தர நிர்ணய வழிகாட்டுதலை 80 சதவிகித தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை.

பெரும்பான்மையான வாட்டர் கேன்களில் லைசன்ஸ் எண், பதிவு எண், நுகர்வோர் சேவை எண், முக்கியமாக இந்திய தர நிர்ணய வழிகாட்டுதலின்படி அந்த குடிநீரில் என்னென்ன தாதுக்கள் உள்ளன, எந்த அளவு உள்ளன போன்ற எந்த விவரமும் பதிவு செய்யப்படுவதில்லை. மேலும் உற்பத்தி, காலாவதி தேதிகள் அதில் பதிவுசெய்யப்படுவதில்லை.

11

மிக முக்கியமாக, பல வாட்டர் கேன் (குடிநீர்) நிறுவனங்கள் தூய்மையான முறையில் கேனை சுத்தம் செய்வதில்லை. சில கேன்கள் பாசிபடிந்து இருப்பதை நாமே பார்த்திருக்கலாம். மேலும் வாட்டர் கேன்களில் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளும் இருக்கும். அதை சரியாகச் சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவதால் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வாட்டர் கேனை பல இடங்களில் வெயிலில்தான் அடுக்கி வைத்திருக்கிறார்கள். பல வாட்டர் கேன் லோடுகள் வெயிலில்தான் கொண்டுவரப்பட்டு இறக்கப்படு கின்றன. பிளாஸ்டிக் கேன் மீது வெயிலின் தாக்கத்தால் BISPHENOL என்ற வேதிப்பொருள் தண்ணீரில் கலந்துவிடும். அதை மனிதர்கள் குடிக்கும்போது கேன்சர் உருவாகும் வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் கருவிலுள்ள குழந்தைகள், கைக்குழந்தைகளின் மூளை, புரோஸ்டேட் சுரப்பியைப் பாதிக்கும். மேலும், சில ஆய்வுகள் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய்க்கும், பிஸ்பெனாலுக்கும் தொடர்பு இருப்பதாக வலியுறுத்துகின்றன. எனவே தண்ணீர் கேனை வெயிலில் வைப்பதை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் குடிதண்ணீருக் காக வாட்டர் கேன்களையே பெரும்பான் மையான மக்கள் நம்பியுள்ளார்கள். கம்பெனி களோ மிக அலட்சியமாகச் செயல்படுவதால், எதிர்காலத்தில் இந்த தண்ணீரை அருந்தி வரும் மனிதர்களுக்கு பெரிய அளவு உடல்நலக் கேடுகள் உருவாக வாய்ப்புள்ளது.

உணவுப் பாதுகாப்புத்துறை அதி காரிகளோ இந்த தண்ணீர் கம்பெனிகளில் பெயரளவில் மட்டுமே சோதனை நடத்திவிட்டு, மிகக் குறைந்த அளவு அபராதத் தொகை விதித்துவிட்டுச் செல்வதால் இந்த அலட்சியம் தொடர்கதையாகி வருகிறது. இதனை மாற்ற, அரசுகள் தட்டுப்பாடின்றி சுத்திகரிக்கப்பட்ட, பாதுகாப்பான குடிநீரை வழங்குவதை உறுதி செய்யவேண்டும்.

குடிதண்ணீர் நிறுவனங்களை வரன் முறைப்படுத்த அரசு கடுமையான சட்டங் களை இயற்றி, அவற்றை நடைமுறைப் படுத்தவேண்டும். குடிநீரை விற்பனை செய்யும் கம்பெனிகளை தீவிரமாகக் கண்காணித்து, தூய்மையான நீர் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யவேண்டும். அலட்சிய மாகச் செயல்படும் குடிநீர் கம்பெனிகளை அகற்றி சீல் வைக்கவேண்டும். விதிமுறைகளை மீறுபவர்களுக்கும் பாதுகாப்பற்ற நீர் வழங்குபவர்களுக்கும் கடுமையான தண்டனை கள் வழங்கப்பட வேண்டும்.

நகரமோ, கிராமமோ, அரசால் வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஒவ்வொரு குடும்பமும் கொதிக்க வைத்து ஆறவிட்டு பயன்படுத்திக் கொள்ளலாம். வேறுவழியில்லை, வாட்டர் கேன்தான் பயன்படுத்தியாக வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள் மேலே குறிப்பிட்ட பாதுகாப்பு அம்சங்களை அந்நிறுவனம் முறையாகப் பின்பற்றுகிறதா என சோதித்துப் பயன் படுத்தலாம்.

இதுதொடர்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரியான அனுராதாவைத் தொடர்புகொண்டோம்.

"காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதியில் 231 தண்ணீர் கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. 20 லிட்டர் வாட்டர் கேன் தயாரிக்கும் கம்பெனிகள் கட்டாயம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை, எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.வால் பரிந்துரை செய்யப்பட்ட என்.ஏ.பி.எல். லேப் மூலம் ஆய்வுசெய்து முறையாக ஐ.எஸ்.ஐ.க்கும், எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.க்கும் அளித்து லைசென்ஸை புதுப்பிக்கவேண்டும். வாட்டர் கேன் ட்ரான்ஸ்ப்ரண்டாக இருக்க வேண்டும். 20 முறை முதல் 30 முறை வரை மட்டுமே அந்த வாட்டர் கேனை பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தி மறுபயன்பாட்டுக்கு வரும் வாட்டர் கேனை முதலில் சோப் வாட்டரில் தூய்மைப்படுத்தி, பின்னர் சுடுநீரில் கழுவி, பிறகுதான் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கேனில் நிரப்பி தண்ணீர் தயாரித்த தேதி மற்றும் காலாவதி தேதியை பதிவிட வேண்டும்.

கம்பெனிகளில் கெமிஸ்ட்ரியில் பட்டம் முடித்த தகுதியான பணியாளர்கள் மூலம், லெபாரட்டரியில் தினம் தினம் தண்ணீரின் தரத்தை ஆய்வு செய்யவேண்டும். பொதுமக்கள் தண்ணீர் கேனைப் பயன்படுத்தும்போது கட்டாயம் இதையெல்லாம் சரிபார்க்க வேண்டும். மேற்சொன்ன தகவல்கள் இல்லாதபட்சத்தில் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார் தெரிவிக்கவேண்டும். தரமில்லாத குடிநீர் தயாரிக்கும் கம்பெனிகள் மீது உணவுப் பாதுகாப்புத் துறை நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கும்.

இந்த இரு மாவட்டங்களில் நான்-கார்பன் பெவரேஜ் என்ற பெயரில் லைசன்ஸ் வாங்கிக்கொண்டு 32 கம்பெனிகள் 20 லிட்டர் தண்ணீர் கேன் போடுகின்றன.

அதாவது கார்பனில்லாத பானம் தயாரிக்க லைசன்ஸ் வாங்கிக்கொண்டு, 20 லிட்டர் கேனில் மூலிகைத் தண்ணீர், அது இதுவென போட்டு மக்களை ஏய்ப்பதாகும். அவர்கள் மீது உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது'' என்றார்.

தமிழக மக்கள் தரமான நீர் அருந்துவதை, தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்.

படங்கள்: எஸ்.பி.சுந்தர்