லகின் மிகப் பழமையான 10 நகரங் களில் ஒன்றாக மதுரை இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் இங்குள்ளன. அப்பகுதியிலுள்ள அரிட்டா பட்டி உலகின் அரியவகைப் பறவைகளின் பாரம்பரிய பல்லுயிர்த் தளமாக திகழ்கிறது. இவ்வளவு தனித்துவமான அடை யாளங்களைத் தாங்கி நிற்கும் இடத்தை குறிவைத்து ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நடத்திவந்த வேதாந்தா நிறுவனத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறு வனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான இடமாகப் பட்டியலிட்டு, அதை ஏலப் பட்டியலில் சேர்த்து ஒன்றிய அரசு சில நாட்களுக்கு முன் தினசரி நாளிதழில் அறிவித் திருப்பது, அந்தப் பகுதி மக்க ளையும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

vv

இச்செய்தியை அறிந்த அப்பகுதி கிராம மக்கள் நவம்பர் 18 அன்று, வேதாந்தாவின் டங்ஸ்டன் சுரங்கம் 5,000 ஏக்கரில் மதுரையில் அமைந்தால் 10 கிராமங்கள் அழியும். இதைத் தடுக்க வேண்டு மெனக் கோரி சூழலியல் ஆர்வலர் முகிலன் தலைமையில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்துக்கு உட்பட்ட நாயக்கர்பட்டி பிளாக்கில் 2015.51 ஹெக்டர், அதாவது 5000 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தைக் கையகப் படுத்தி அதில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்தை எடுக்கத் திட்டமிட்டு இருப்ப தாகவும், இதற்காக வேலைகள் நடைபெற்று வருவதாகவும் இது தொடர்பாக பத்திரி கைச் செய்தி வெளியானது. இந்த ஏலம் முதல் அட்டவணையில் பகுதி டி பட்டியலிடப் பட்டுள்ள முக்கிய கனிமங்களுக்கு கனிமச் சலுகைகளை வழங்கு வதற்கான ஒன்றிய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி நடத்தப் பட்டுள்ளது. இதில் தமிழக அரசுக்கு நேரடியாக எந்தப் பங்கும் இல்லை' என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

இதுகுறித்து சூழலியல் ஆர்வலர் முகிலன் நம்மிடம், "டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் முத்துவேல்பட்டி, குளனிப்பட்டி, கிடாரிப் பட்டி, எட்டிமங்கலம், அரிட்டாபட்டி, வெள் ளாளப்பட்டி, சிலீப்பியாபட்டி, செட்டியார் பட்டி, நாயக்கர்பட்டி எனும் 10 கிராமங்கள் அழியும் நிலை ஏற்படும். மேலும், அரிட்டா பட்டி பல்லுயிர்த் தளமும் அங்கிருக்கும் தொல்லியல் சின்னங்களும் அழிய வாய்ப்பு இருக்கிறது. எனவே இதனைத் தடுத்துநிறுத்த அரசு முடிவெடுக்க வேண்டும்.

இதன்மூலம் 10 கிராமங்கள் அழிவதோடு மட்டுமல்லாமல் சுரங்கம் விரிவடைந்தால் மேலூர் வட்டத்தில் பெரும்பாலான கிராமங் கள் அழியும் சூழல் ஏற்படும். தொல்லியல் சின்னங்களும் அழியும். எனவே இதனைத் தடுத்துநிறுத்த வேண்டும். தமிழ்நாட்டின் வளங்களையும், வரலாற்றையும் ஒருசேர அழிக்கும் முயற்சி இது. 2022-ஆம் ஆண்டு அரிட்டாபட்டியைப் பாதுகாக்கவேண்டிய இடம் எனக் கூறி, பல்லுயிர் பாதுகாப்பு மண்ட லம் என அரசாங்கம் அறிவித்தது. தற்போது அதை அனில் அகர்வாலின் பணப் பசிக்கு இரையாகத் தருவதற்கு இசைந்துள்ளது ஒன்றிய அரசு. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுபற்றி கேட்டால், "எங்களுக்கு எதுவுமே தெரியாது. அரசின் கவனத்திற்கு கொண்டு போகிறோம்' என மனுவை பெற்றுக்கொண்டு பேசுவது, அரசு நிர்வாகமே பொய், பித்த லாட்டமயமாகிவிட்டதன் அறிகுறி''” என்றார்.

00

Advertisment

இதுகுறித்து அரிட்டாபட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் நம்மிடம், "ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத் தின் கீழ் வரும் இந்திய விலங்கியல் ஆய்வு மற்றும் புவி யியல் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்கீழ் 1918-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இங்கிருக்கும் மலைகள், பாறைகள் மற்றும் மண் திட்டுக்கள், குகைகள் என இயந்திரங்களுடன் பரிசோதனை செய்தனர். "இப்பகுதிக்கு உட்பட்ட தாலுகா தாசில்தாரிட மோ, ஆர்.டி.ஓ.விடமோ அனுமதி பெற்றிருக்கிறீர்களா?' என்று அப்போதே கிராம இளைஞர்கள் அவர்களிடம் கேட்டனர். எதற்காக சோதனை இடுகிறீர்கள் என்று கேள்விமேல் கேள்வி கேட்டவுடன் இந்தியில் ஏதோ பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளனர்.

ஆனால் சிறிது நாட்களில் அடுத்தடுத்து உள்ள ஊர்களில் இதேபோன்று சோதனை செய்தனர். இதுகுறித்து அருகிலுள்ள காவல் துறையிடமும் தாசில்தாரிடமும் புகார் கொடுத்திருந்தோம். அவர்கள் சரியான பதிலைத் தெரிவிக்கவில்லை. 8 வருடங்கள் கழித்துதான், தூத்துக்குடியை அழிக்கப் பார்த்தவர்கள், இப்படி ஒரு நாசகாரத் திட்டத்தோடு வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த மதுரையைக் குறிவைத் திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. இதற்கெதிராக மக்களைத் திரட்டிப் போராடு வோம்''’என்றார்.

மதுரை பாராளுமன்ற எம்.பி. சு.வெங்க டேசன் கூறுகையில், “"அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலம். மதுரை அழகர் மலைக்கருகே 2015.51 ஹெக்டேரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கிறது வேதாந்தா நிறுவனம். சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் கீழ் நடத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் 4-வது ஏலத்தில் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவிலுள்ள டங்ஸ்டன் கனிமத் தொகுதியை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்ததாக ஒன்றிய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியைத் தருகிறது.

இந்த ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சூழல் சீர்கேடுகளுக்குக் காரணமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். தமிழ் நாட்டின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றான அழகர் மலையானது, சுரங்கத் தொகுதியின் எல்லையிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பெருமாள் மலை இச்சுரங்கத்தொகுதியை ஒட்டியே அமைந்துள்ளது. பெருங்கற்காலத்தைச் (ம்ங்ஞ்ஹப்ண்ற்ட்ண்ஸ்ரீ) சேர்ந்த அமைவுகள், 2200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி கல்வெட்டுகள், சமணர் படுகைகள், சங்ககால பாண்டியர்களால் கொடையளிக்கப்பட்ட கற்படுக்கைகள், குடைவரைக்கோயில்கள் என தமிழ்நாட்டு வரலாற்றின் தனித்துவமான அடையாளங் களைத் தாங்கிநிற்கும் இடம் இது.

குளங்கள், நீர்ச்சுனைகள், ஊற்றுக்கள், தடுப்பணைகள், பறவைகள், விலங்குகள் என தொல்தமிழர் வரலாற்று மற்றும் உயிர்ப்பன்மை மிக்க பகுதியாக அரிட்டாபட்டி விளங்குகிறது. அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரியத் தல மானது ஏழு சிறுகுன்றுகளைத் தொடர்ச்சி யாகக் கொண்டுள்ளது. இந்த மலைக்குன்று களின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக செயல்படுகிறது. இங்கு 72 ஏரிகள், 200 இயற்கைச் சுனைகள், 3 தடுப்பணைகள் உள்ளன. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி, பதினாறாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது. மேலும் இப்பகுதியில் வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, ராசாளிக் கழுகு உள்ளிட்ட 250 பறவைகளும், அழுங்கு, மலைப்பாம்பு, தேவாங்கு போன்ற உயிரினங்களும் வாழ்கின்றன. இப்படி பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான இடமாகப் பட்டிலியலிட்டு, அதை ஏலப்பட்டியலில் சேர்த்ததே தவறு.

கீழடி அகழாய்வுக்கு அனுமதி கேட்டபோது தராத ஒன்றிய அரசு, அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி தருகிறது. தமிழர் பண்பாட்டுச் சுவடுகளை அழித் தொழிக்கும் வகையில் இவ்விடம் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கான சுரங்க அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவற்றை வழங்கக்கூடாதென வலியுறுத்துகிறேன்” என்றார்.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா இதுநாள்வரை தமிழக அரசு இந்த திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் வழங்கவில்லை'' என்று முடித்துக்கொண்டார்

தூத்துக்குடியை குறிவைத்து 13 உயிர் களைப் பலிவாங்கி, அங்கிருந்து விரட்டி யடிக்கபட்ட அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனம், அடுத்த பேரழிவை ஏற்படுத்தத் தயாராகி யிருப்பது மதுரை மக்களை பதட்டத்துக்கு ஆளாக்கியுள்ளது.

இந்நிலையில், "மதுரை அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை' என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

-அண்ணல்