விருதுக்குப் பெருமை கிடைக்கும் தருணங்கள் அரிதாக அமையும். மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என அறிவித்தார். முதல் விருது, சி.பி.எம் கட்சியின் மூத்த தோழர் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது விருது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட்டது.

nn

சுதந்திர நாளில் முதல்வரிடமிருந்து அத னைப் பெற்றுக்கொண்ட தோழர் ஆர்.நல்லகண்ணு, விருதுத் தொகையான 10 லட்ச ரூபாயுடன் தனது பங்களிப்பாக ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையை யும் சேர்த்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். தன்னலமற்ற அவரது இச்செயல் புதிததல்ல.

சுதந்திரப் போராட்ட வீரர், விவசாயிகள் -விவசாயத் தொழிலாளர்களுக்கான களப் போராளி, சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டக்காரர், என அய்யா நல்லகண்ணுவின் பொதுவாழ்வு அறத்தொண்டு இப்போதும் தொடர்கிறது.

Advertisment

1948-ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டதையடுத்து, சிறிது காலம் தலைமறைவு வாழ்க்கையை வாழ நேர்ந்தது. 1949ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி கைது செய்யப்பட்ட தோழர் நல்லகண்ணுவிடம், தலை மறைவாக உள்ள இயக்கத் தோழர் களைக் காட்டிக்கொடுக்கச் சொல்லி, அவரது மீசையைப் பொசுக்கியும், மீசை முடிகளைப் பிய்த்தெடுத்தும் காட்டுமிராண்டித்தனமாக போலீசார் கொடுமைப்படுத்தினர். மன உறுதியுடன் போலீசாரின் தாக்குதலை எதிர்கொண்டவர். 1951 முதல் 1956-ஆம் ஆண்டு வரை சிறையில் கழித்தார்.

dd

1999-ஆம் ஆண்டில், தென் மாவட்ட சாதிக் கலவரங்களின்போது சாதி ஒழிப்புப் போராளியான அவரது மாமனார் அன்னச்சாமி வெட்டிக் கொல்லப்பட்டபோது, பதட்டமான சூழலை மிகவும் நிதானத்தோடு கையாண்டார் தோழர் நல்லகண்ணு. மாமனாரின் மரணத்துக்காக அரசு கொடுத்த இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ளாமல், அந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விச் செலவுக்காக அதனை அளித்தார்.

Advertisment

சுதந்திரப் போராட்டத் தியாகி என்ற வகை யில், அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீடு ஒதுக்கீட்டை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், மாதா மாதம் வாடகை செலுத்திவந்தார். தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட அம்பேத்கர் விருதுக்கான ஒரு லட்சம் ரூபாயில் பாதியை கட்சிக் கும், மீதியை தொழிலாளர் சங்கத்துக்கும் வழங்கி னார். அவரது 80-வது பிறந்த நாளுக்கு கட்சி சார்பில் 1 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டு அவருக்கு வழங்கியதை, அப்படியே கட்சிக்காகக் கொடுத்து விட்டார். பணத்தை மறுத்துவிட்ட தால், அவர் பயணிப்பதற்கு காரினை கட்சியினர் வழங்க, அதையும் கட்சி யின் செயல்பாட்டுக்காக வழங்கி விட்டார். 97 வயதிலும் தமிழக இளைஞர்களுக்கு, பொதுவாழ்வின் இலக்கணமாகத் திகழ்கிறார் தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு.