தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், "சன் பிக்சர்ஸ்' தயாரிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் "பீஸ்ட்'’ படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, அனிருத் இப்படத்திற்கு இசை யமைக்கிறார். கடந்தவாரம் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய்யும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் சந்தித்துக் கொண்டது தான் லேட்டஸ்ட் வைரல் கண்டென்ட். இந்த சந்திப்பின் ஆரவாரம் அடங்குவதற்குள், விஜய் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, "பீஸ்ட்'’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் ‘"பீஸ்ட்'’ படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலை எழுதி, பாடவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியான நிலையில், தற்போது சிவகார்த்திகேயனும் ஒரு பாடலை எழுதவுள்ளதாகக் கூறப்படுகிறது. "பீஸ்ட்'’ படத்தின் இயக்குநரான நெல்சன் திலீப்குமார், சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவருக்குமே நெருக்கமானவர் என்பதால் இத்தகவல் சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாலா இயக்கத்தில் கடைசியாக உருவான ‘"வர்மா'’ திரைப்படம் பல்வேறு பிரச்சனை களுக்குப் பிறகு ஓ.டி.டி.யில் வெளி யானது. இப்படத் திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்மறை யான விமர்சனங் களே கிடைத்தன. இப்படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் என்ன என்பது குறித்து பல்வேறு யூகங்கள் நிலவின. சூர்யா, அதர்வா, ஜீ.வி. பிரகாஷ், விஜய்ஆண் டனி, உதயநிதி ஸ்டா லின் என பல நடிகர் களிடம் பாலா கதை சொல்லியதாக தகவல் வெளியான சூழலில்... அவர் அடுத்ததாக யாரை கதாநாயக னாக வைத்து படம் இயக்கப்போகிறார் என்பது குறித்து எதிர்பார்ப்பும் நிலவியது.
இந்த நிலையில், பாலா இயக்கத்தில் அடுத்து உருவாகும் படம் குறித்து புதிய தகவல் வெளி யாகியுள்ளது.
அதன்படி இயக்குநர் பாலா, அதர்வா கதாநாயக னாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ள தாகவும், இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர் டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்திற்கான ஆரம்பகட்டப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
_________________________
வாட்ஸ் அப் வித் அனுபமா குமார்
சேரன் இயக்கத்தில் 2009-ஆம் ஆண்டு வெளியான "பொக்கிஷம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அனுபமா குமார். ஊடகத்துறையில் இருந்து பின்னர் நடிகையாகப் பரிணமித்த இவர், "முப்பொழுதும் உன் கற்பனைகள்', "துப்பாக்கி', "மூடர் கூடம்' என பல படங்களில் நடித்து திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். அண்மையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான "சார்பட்டா பரம்பரை' படத்தில் ஆர்யாவின் தாயாக பாக்கியம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றுவருகிறார். இந்தச் சூழலில், தன்னுடைய திரைத்துறை அனுபவம் குறித்து அவர் நக்கீரனுடன் பகிர்ந்துகொண்டார்.
திரைத்துறைக்குள் வந்த அனுபவம் குறித்து நாம் கேட்கையில், "சின்ன வயசில இருந்தே நடிக்கிறதுலதான் ஆர்வம். ஆனால், சரியான வழிகாட்டுதல் கிடைக்கல. அதுவுமில்லாமல், இந்த லைன் எப்படி இருக்கும்னு ஒரு குட்டி பயம் வேற. அதனால நடிப்புத்துறைக்கு கொஞ்சம் லேட்டாதான் வந்தேன். சினிமா துறையில் சரியான வழிகாட்டுதல் இல்லாததால, முதல்ல மீடியால சேர்ந்தேன். மீடியால ஆர்வம் இருந்துச்சு. அதுலேயும் எதாவது செய்யணும்னு ஆர்வம் இருந்துச்சு. அதுல இருந்து ஒவ்வொரு படியா வந்து, 35 வயசுலதான் சரியான நடிப்பு வாய்ப்பு கிடைச்சுது'' என்றார்.
அதன்பின்னர் "சார்பட்டா பரம்பரை' படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்துக் கேட்கையில், "யங் லுக்ல இருந்து வயசான லுக் வரைக்கும் இந்த படத்துல வரும் சேஞ்ச் ஓவர் ரொம்ப நுட்பமானதா இருக்கும். ஆனால், பார்க்க நல்லாருக்கும். ஆர்யா ரொம்ப நல்லவர். அவரை திட்டுற, அடிக்கிற சீன்ல எனக்குதான் கொஞ்சம் கூச்சமா இருக்கும். திட்டுறது ஓ.கே. ஆனால், அடிக்கிறதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனால், ஆர்யா, ரஞ்சித் ரெண்டு பேருமே "நிஜமாவே அடிங்க' அப்டின்னு சொல்லுவாங்க. "நீங்க நிஜமா அடிச்சாதான் அது நல்லாருக்கும். இல்லன்னா செயற்கையா தெரியும்' அப்படின்னு சொல்லுவாங்க. "அடிக்கிற சத்தம் எனக்கு கேக்குற வரைக்கும் நான் ஷாட் ஓகே பண்ண மாட்டேன்''-னு ரஞ்சித் சொல்லிடுவார். ஆர்யாவும், "நீங்க அடிங்க, நான் தாங்கிப்பேன்" அப்படின்னு சொல்லுவார். ஆனால், முதல்தடவை அப்படி ஒரு சீன் பண்ணும்போது எனக்கு ரொம்ப கூச்சமா இருந்துச்சு. எப்படி நாம ஒருத்தரை துடைப்பத்தால அடிக்க முடியும்னு. ஆனால், ரஞ்சித் சார் ஒரே ஒரு விஷயம்தான் சொன்னார். "நீங்க சரியா அடிக்கிற வரைக்கும் நான் ஓ.கே. சொல்லமாட்டேன். நீங்க ரீடேக் எடுத்தா யாருக்கு வலிக்கும். இதுக்காக ஃபீல் பண்ணினா, ஒரே டேக்ல முடிச்சிடுங்க'' அப்படின்னு சொன்னார். டயலாக், பாடி லாங்கு வேஜ், இது ரெண்டையும்விட எனக்கு கஷ்டமா இருந்தது ஆர்யாவை அடிக்கிறதுதான். படம் ரிலீஸ் ஆகி நான் பாக்குறதுக்கு ரெண்டுநாள் ஆகிடுச்சு. ஆனால், அதுக்கு முன்னாடியே நிறைய பேர் பாத்துட்டு மெஸேஜ் பண்ணிருந்தாங்க. உலகம் முழுக்க இருந்து மக்கள்கிட்ட இருந்து வாழ்த்து வந்துச்சு. சினிமா துறையில் உள்ளவங்க, நண்பர்கள், தெரியாதவங்கன்னு எல்லாரும் பாராட்டுனாங்க. சோசியல் மீடியால நிறைய பேர் பாராட்டுனாங்க. இது ஒரு கனவு மாதிரி இருக்கு'' என்றார்