மக்கு பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுவதும், ஊழல் அமைச்சர்களின் மிரட்டலால் தற்கொலையும், லஞ்சமும் தலைவிரித்தாடுவதும் அனைவராலும் கவனிக்கப்படுகிறது.

கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த ஒப்பந்த தாரர் சந்தோஷ் பாட்டீல், முடித்துக்கொடுத்த கட்டிடப் பணிகளுக்கான பணத்தைத் தராமல் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா இழுத்தடிப்பதாகவும், 40% கமிஷன் கொடுக்க ஒப்புக் கொண்டால் மட்டுமே பணத்தைத் தருவேனென்று மிரட்டுவதாகவும், தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அமைச்சர் தான் பொறுப்பு என்றும் புகார் தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி உடுப்பியிலுள்ள ஹோட்டலில் சந்தோஷ் பாட்டீல் பிணமாகக் கிடந்தார். இந்த சந்தோஷ் பாட்டீல், எதிர்க்கட்சி ஆதர வாளரோ, மோடி எதிர்ப்பாள ரோ கிடையாது. இந்து வாஹினி என்ற இந்துத்வா அமைப்பின் தேசியத் தலைவராக இருந்தார்.

modi

Advertisment

எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையிலெடுக்கவும், வேறுவழியில்லாமல் ஈஸ்வரப்பா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகாவது 40% கமிஷன் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமென்று எதிர்பார்த்த நிலையில், அதே கமிஷன்... அதே மிரட்டல்களால் ஒப்பந்த தாரர்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்தது. பெங்களூருவைச் சேர்ந்த அம்பிகாபதி என்ற கான்ட்ராக்டர், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கிழக்கு பெங்களூருவில் டொம்லூரில் விளையாட்டு மைதானத்தை வடிவமைக்கும் பணியை எடுத்த போது, தன்னிடம் 40% லஞ்சத்தை மிரட்டி வாங்கியதாக ஆதாரத்துடன் குற்றச்சாட்டு வைத்தார். அதேபோல் இன் னொரு ஒப்பந்ததாரர் மஞ்சுநாத், சித்ரதுர்கா மாவட்டத்தில் 18 கோடி ரூபாய் மற்றும் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவமனைகள் கட்டக் கூடிய ப்ராஜெக்ட்டுகளுக்காக 40% லஞ்சத்தை அளித்ததாகக் குற்றச்சாட்டு வைத்தார்.

கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் கெம்பண்ணா, தோட்டக்கலைத்துறை அமைச் சர் முனிரத்னா மீதும் ஊழல் குற்றச்சாட்டை வைத்தார். கர்நாடகாவிலுள்ள அமைச்சர் கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகளென அனைவருமே அனைத்து அரசுப் பணிகளிலும் 40% கமிஷன் கேட்டு ஒப்பந்த தாரர்களை மிரட்டுகிறார்கள் என்றும், சந்தோஷ் பாட்டீல் மரணத்துக்குப் பின்னரும் இந்த கமிஷன் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என்றும் புகாரளித்தார். இதுகுறித்து கடந்த ஆண்டே பிரதமர் மோடிக்கு கடிதமெழுதியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றவர், மீண்டும் கடந்த ஆகஸ்ட் இறுதியில், 'கர்நாடகா வில் அரசின் திட்ட பணிகளை மேற்கொள்வதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சர் கள் 40 சதவீத கமிஷன் கேட்கிறார்கள். இதுபற்றி முதல்வர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை.' என்று குறிப்பிட்டு பிரதமருக்கு கடிதமெழுதினார்.

ஊரக வளர்ச்சித்துறை... தோட்டக்கலைத்துறையைத் தொடர்ந்து கல்வித்துறையிலும் ஊழல் புகார் எழுந்தது. கர்நாடகாவைச் சேர்ந்த 13 ஆயிரம் தனியார் பள்ளிகள் ஒன்றிணைந்து, அவற்றின் இரண்டு சங்கங்களின் சார்பில் பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதிய கடிதத்தில், "கர்நாடகா வில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவ தில்லை. புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதில் பெரிய அளவில் ஊழல் நடக்கிறது. இதில் கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் மற்றும் முதல்வர் பசவராஜ் ஆகியோரிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கை யும் இல்லை'' என்று குற்றம் சாட்டியிருந்தனர்.

யுனைடேட் ஸ்கூல்ஸ் அசோசியேஷனைச் சேர்ந்த கிரண் பிரசாத், இரண்டு பள்ளிகளை நடத்திவருகிறார். அந்த பள்ளிகளுக்கு தீ விபத்துப் பாதுகாப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக, வெறும் 20 ஆயிரம் ரூபாய் தரவேண்டிய இடத்தில், 3 லட்ச ரூபாயை வலுக்கட்டாயமாக வசூலித்த தாகக் குற்றம்சாட்டினார். இப்படியான ஆதாரங்களுடன் பிரதமருக்கு கடிதம் எழுதியும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

modi

Advertisment

ஏற்கெனவே, பசவராஜ் பொம்மைக்கு முன்பு கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா ஆட்சிக்காலத்தில் பெங்களூரு பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் (பி.டி.ஏ.) புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை வழங்கியதற்காக, ஒப்பந்ததாரரும், எடப்பாடியின் நெருங்கிய உறவினருமான சந்திரகாந்த் ராமலிங்கம் என்பவர் 12 கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுத்த தாகக் குற்றச்சாட்டு எழுந்ததில், எடியூரப்பா, அவரது மகன், பேரன், ஒப்பந்ததாரர், கூட்டுறவுத்துறை அமைச்சர், பி.டி.ஏ. தலைவர் உள்ளிட்ட 8 பேர்மீது உயர்நீதிமன்ற உத்தரவுப் படி கடந்த செப்டம்பரில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, விசாரணை நடந்துவருகிறது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 22ஆம் தேதி கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அலுவலகத்திலிருந்து பத்திரிகையாளர்களுக்கு வழங்கப் பட்ட தீபாவளி ஸ்வீட் பாக்ஸு டன் ரூ.1 லட்ச ரூபாய் ரொக்கமும் வைத்திருந்தது பெரும் சூறாவளியைக் கிளப்பியது. பத்திரிகையாளர்களை வளைக்க முயற்சிப்பதாக மூத்த பத்திரிகை யாளர்களும், எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பை வெளிப்படுத்த, முதல்வர் பொம்மை பத்திரிகை அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு, தனக்குத் தெரியாமல் நடந்துவிட்டதாகக்கூறி வருத்தத்தைத் தெரிவித்திருக் கிறார்.

இப்படி கர்நாடக பா.ஜ.க. அரசாங்கத்தில் லஞ்ச ஊழல் தலைவிரித்தாடுவதைக் கண்டு கொள்ளாமல் பிரதமர் மோடி ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக இருக்கிறார். முன்னாள் கர்நாடக சிங்கமும்(!), தனது கர்நாடகத்தில் இவ்வளவு ஊழல்கள் மலிந் திருக்கும் நிலையில், எடப் பாடிக்கும் தொடர்பிருக்கும் நிலையில், அதைப்பற்றி தப்பித் தவறியும் பேசிவிடாமல், நாடக அரசியல் நடத்துவது வேடிக் கையாக உள்ளது!