ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிறையிலிருக்கும் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 3-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.
ஒருபக்கம் சிதம்பரத்தின் ஜாமீனுக்காக தொடர்ந்து அவரது குடும்பம் முயற்சித்து வந்தபோதும், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையின் தொடர்ந்த ஆட்சேபங்கள், எதிர்ப்பு காரணமாக அது கைகூடிவரவில்லை. ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், சிதம்பரத்துக்காக வாதாடும்
வழக்கறிஞர் கபில்சிபல், இம்முறை அவரது வயது, உடல்நிலையைக் காரணமாகக் காட்டி, திகார் சிறைவாசத்தின்போது சிதம்பரத்துக்கு போஷாக்கான உணவுகள் வழங்கப்படுவதோடு முறையான மருத்துவப் பரிசோதனைகளும் வழங்கவேண்டுமென கோரிக்கை வைத்தார்.
திகார் சிறையில் அடைப்பதன்மூலம் சிதம்பரத்தின் மன உறுதியைக் குலைத்துவிடலாம் என நினைத்திருந்த பா.ஜ.க.வுக்கு, சிறைசென்ற பின்னும் தனது குடும்பத்தினரின் மூலம் ட்விட்டரில் சிதம்பரம் வெளியிடும் டார்ச்சர் ட்வீட்டுகள் தொடர் அதிர்ச்சியை அளித்துவரு கின்றன.
செப்டம்பர் 9-ஆம் தேதி ட்வீட் ஒன்றில்,
இந்த வழக்கில் கோப்புகளை பார்த்து பரிசீலித்து கையெழுத்திட்ட டஜன் கணக்கான அதிகாரிகள் இருக்க, நீங்கள் மட்டும் ஏன் கைதுசெய்யப்பட்டீர்கள். இறுதிக் கையெழுத்துப் போட்டதாலா என மக்கள் கேட்கிறார்கள். அதற்கு என்னிடம் பதிலில்லை என ஒரு போடு போட்டார்.
மற்றொரு ட்வீட்டில்
இன்றைய என் சிந்தனைகள் பொருளா தாரத்தைக் குறித்ததாக உள்ளன. ஒரே ஒரு புள்ளிவிவரம் மொத்தக் கதையையும் சொல்லும். ஆகஸ்ட் மாத ஏற்றுமதி வளர்ச்சி 6.05 என உள்ளது.
வருடத்துக்கு 20 சதவிகிதம் ஏற்றுமதி வளர்ச்சி காணாமல் எந்த ஒரு நாடும் 8 சதவிகித ஜி.டி.பி. வளர்ச்சியை சாதிக்க முடியாது.
என வார்த்தைகளாலே ஆளுங் கட்சியினருக்கு குங்பூ அட்டாக்குகளை அள்ளிவிடுகிறார்.
அவரது பிறந்தநாளான செப்டம்பர் 16 அன்று,
எனக்கு 74 வயதாகிவிட்டது உண்மைதான். ஆனால் இதயபூர்வமாக 74 வயது இளையவனாக நான் உணர்கிறேன். எனது உத்வேகம் அதிகரித்திருக்கிறது
தனக்கு இடைஞ்சல் தரவேண்டு மென்ற நோக்கில் சிறைவைத்த ஆளுங் கட்சியை, தனது ட்வீட்டுகளால் இடைஞ்சல்படுத்திக்கொண்டிருக்கிறார் சிதம்பரம்.
-க.சுப்பிரமணியன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-09-20/chidambaram-t.jpg)