ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்த அன்றிரவே கிள்ளியூர் காங் கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ.யும் வேட்பாளருமான ராஜேஷ் குமாரிடமிருந்து குமரி மேற்கு மா.தலைவர் பதவியைப் பறித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்ததோடு, அந்தப் பதவியில் மீனவப் பெண் ணான தாரகை கத்பட்டை நியமித்திருக்கிறது காங்கிரஸ் தலைமை.
ராஜேஷ்குமார் மீது எந்த புகாரும் இல்லாமல் பொறுப்பைப் பறித்த தலைமைமீது அவரது ஆதர வாளர்கள் கொதிப்பிலிருக்கிறார்கள்.
""ராஜேஷ்குமார் மா.தலைவரானதும் கேரள —குமரி எல்லையிலிருந்து திரு வனந்தபுரத்தில் செட்டிலான பிரவின், விளவங்கோடு தொகுதியைக் கண்வைத்து காங்கிரசில் சேர்ந்தார். டாக்டர் சாமுவேல் ஜார்ஜிட மிருந்த மாவட்டப் பொருளாளர் பதவியைப் பறித்து பிரவினுக்குக் கொடுத்தார் ராஜேஷ்குமார். பிரவினும், காங்கிரஸ் பிரமுகர்கள் யார் குமரி வந்தாலும் தாராள மாய்ச் செலவழித்தார்.
இந்நிலையில் விளவங் கோடு தொகுதி கிடைப்பதற்கு ராஜேஷ்குமார் எதிராக இருப்பதாகக் கூறி சண்டை யிட்டு, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மூலம் சீட் வாங்க அவரது உதவியாளர் சத்தியன்புத்தூரிடம் முதல்கட்டமாக 20 எல் கொடுத்தாராம். அதை பென் காமிரா மூலம் வீடியோ எடுத்தும் உள்ளாராம்.
கடைசியில் சீட் விஜய தாரணிக்குப் போனதால் ஆத்திர மடைந்த பிரவின், பென் காமிராவிலிருக்கும் வீடியோவைக் காட்டி, "உடனே ராஜேஷ்குமாரை பதவியிலிருந்து நீக்கவேண்டும்' என மிரட்டியதால் ராஜேஷ்குமாரின் பதவி பறிக்கப்பட்டது'' என்கின்றனர் சிலர்.
மேலும் சிலரோ, ""விளவங் கோடு தொகுதியில் விஜயதரணிக் குப் போட்டியாக சுயேட்சையாக நின்ற காங்கிரஸ் எக்ஸ் பொருளாளர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜிடம் பேசி வாபஸ் வாங்க வைக்க, காங்கிரஸ் மாநில தலைமை கேட்டுக்கொண்ட பிறகும் ராஜேஷ் குமார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாமுவேல் ஜார்ஜை எனக்கு எதிராக நிற்க தோளில் தட்டிக்கொடுத்து அனுப்பியதே ராஜேஷ்குமார்தான் என விஜய தரணி குற்றம்சாட்டி தலைமை யிடம் புகார் செய்தார்.
ராகுலின் குமரி மாவட்ட தேர்தல் பரப் புரையின்போது தேங்காப் பட்டணத்தில் கடலில் படகில் நின்று மீனவர்களிடம் ராகுல் கலந்துரையாடும் நிகழ்ச்சி தேசிய அளவில் பேசப்படும் விதமாக இருக்கவேண்டு மென்று ராகுல் விரும்பினார். ஆனால் அதைச் சரியான முறையில் ஏற்பாடு செய்யாததால் அந்த நிகழ்ச்சி ரத்தானது. இவையெல்லாம் சேர்ந்துதான் பதவிக்கு வேட்டு வைத்தது'' என்கிறார்கள்.
ராஜேஷ்குமாரே, “""என் மீது கூற எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. எதற்காக? இரவோடு இரவாக என் பதவியைப் பறித்தார்கள் எனத் தெரிய வில்லை. தலைமையிடம் விளக்கம் கேட்டிருக்கிறேன்'' என்கிறார்.
""ராஜேஷ்குமாரை பதவியிலிருந்து நீக்கியது கட்சிப் பிரச்சினை. எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. காங்கிரசை நம்பி தாராளமாகச் செலவு செய்தேன். அதனால் எந்த பலனும் இல்லை. இப்போது நான் காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர்கூட கிடையாது''’’ என்றார் பிரவீன்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் இருவர் தலையும் மாற்றி, மாற்றி உருட்டப்படுகிறது.