நெல்லை காங்கிரஸ் பிரமுகர் கே.பி.கே. ஜெயக்குமார் கொலையில், இன்னார்தான் குற்றவாளிகள், இதற்காகத் தான் இந்தக் குற்றம் என கிட்டத்தட்ட கண்டறிந்துள்ளது காவல்துறை. எனினும், கண்ணுக்கெதிரே குற்றவாளிகளை இயல்பாக நடமாடவிட்டு குற்றத்திற்கான சாட்சிய, சான்றாவண சேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றது.
மரண வாக்குமூலம் என எழுதப்பட்ட கடிதத்தின் எழுத்து, துவக்கத்தில் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், 07/03/2024 அன்று வள்ளியூரிலுள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா விற்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளதாக ஜெயக்குமார் எழுதிய கடிதம் வெளியாகி அந்தக் கடிதங்களின் எழுத்துக்கள் அவருடையது என உறுதியானது. காணாமல் போனதாகக் கூறப்படும் 2-ஆம் தேதியன்று பேன்ஸி ஸ்டோர் ஒன்றில் டார்ச் லைட் ஒன்றை ஜெயக்குமார் வாங்கிய சி.சி.டி.வி. காட்சிகளும் வெளியாகி, ஜெயக்குமார் அன்றைய தினம் சொந்த ஊரில்தான் இருந்தார் என்பதற்கு ஆதாரமாயின. இது இப்படியிருக்க, கடன் பிரச்சனையால் 'தற்கொலை' செய்திருக்கலாம் என அனைவரையும் நம்பவைத்த நிலையில், 4-ஆம் தேதியன்று அரைகுறையாய் கருகிய நிலையில் கிடைக்கப்பெற்ற ஜெயக்குமாரின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றும்போது எடுத்த புகைப்படங்கள் செவ்வாய்க்கிழமையன்று வெளியாகி 'கொலைதான் இது' என உறுதியானது. அப்படியிருக்க யார் அந்த கொலையாளிகள்..?
"ஜெயக்குமார் கொலையில், நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், அவரது மகன் பக்கம் சந்தேகம் திரும்பினாலும் அது சாத்தியமில்லை என யூடர்ன் அடித்திருக்கின்றது தனிப்படை போலீஸ். இன்னொரு பக்கம் கள்ளிக்குளம் முன்னாள் பஞ்சா யத்துத் தலைவர் ஆனந்தராஜ். முதலில் தலைமறை வாய்ச் சென்றவர், பின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, வள்ளியூர் பகுதிகளில் பழம், காய்கறி வாங்குவதில் அக்கறை காட்டிவருகின்றார். மீதமுள்ள ஒரே சந்தேகம் அவரது குடும்பத்தார்களே. அவர்களையும் கண்காணித்து வருகிறோம்'' என்கின்றது நெல்லை மாவட்ட எஸ்.பி.யின் தனிப்பிரிவு போலீஸ்.
திசையன்விளையைச் சேர்ந்த ஜெயக்குமாரின் நண்பர் ஒருவரோ, "நீண்டகால நண்பன் அவன். உள்ளூரைப் பொறுத்தவரை அவன் ஜென்டில்மேன். எந்த குறையும் கூறமுடியாது. எந்தக் கல்லூரியில்/ எந்த பள்ளியில் சீட் வேண்டும் என்றாலும் இவன் உதவி செய்வான். கல்விக்கடன் என்றால் நேரடியாக வங்கிக்கே பேசி அதனைச் செய்துகொடுப்பான். அரசியல், காண்ட்ராக்ட் இப்படின்னு அடிக்கடி சென்னை செல்லவேண்டிய சூழ்நிலை அவனுக்கு. நீயும் ஒத்தாசையாக வர்றியான்னு கேட்பான். அவனை நம்பி ஊருக்குச் சென்றால் மாலை வரை அருகிலேயே வைத்திருப்பான். அதன்பிறகு எனக்குன்னு தனியாக அறை எடுத்துக்கொடுத்துட்டு, "அங்கே தங்குல.. காலையில் பேசிக்கலாம்'னு வலுக்கட்டாயமாக அனுப்பிவைப்பான். சென்னையில் இரவானால் ஜெயக்குமாரை கண்டுபிடிக்க முடியாது. அவன் ஒரு ராக்கோழி! இதற்கென்றே கட்சியில் சிலர் இருக்கின்றார்கள். ------------ சக்கரவர்த்தின்னு பேரு. அவரு மூலமாகத்தான் மற்ற அரசியல்வாதிகளுக்கு இருப்பதுபோல் துணை நடிகைகள் எல்லாம் பழக்கமானாங்க. இதுல ஒருத்தரோட தொடர்ந்து நட்பாயிட்டாங்கன்னு கேள்விப் பட்டேன். அவங்க மூலமாக பலர். ஒரு பெரிய பணத்தை வாங்கிட்டு, நம்பவைச்சு கழுத்தை அறுத்துட்டாங்க. அந்த துணை நடிகை பற்றி என்னை விசாரித்த தனிப்படை போலீஸிடம் கூறியிருக்கின்றேன்'' என்றார் அவர்.
இதேவேளையில், மரண வாக்குமூலம் என எழுதப்பட்ட கடிதம் எங்கிருந்து வெளியானது? யார் எழுத வைத்திருப்பார்கள்? என்கிற கோணத்துடன் விசா ரணையை ஆரம்பித்தது 8 தனிப் படைகளுள் ஒன்று. "துவக்கத்தில் அவரது மருமகன் ஜெபாவே இது மாதிரி கடிதங்களை எழுத வைத் திருக்கலாம்' என்கிற கோணத்தில் விசாரித்தோம். ஆனால், முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரோ, ஜெயக்குமாரை அழைத்து "இதுமாதிரி கடிதம் எழுது. கடன்காரன் தொந்தரவு இருக்காது. வரவேண்டிய பணமும் வந்துரும். இதை எழுதிக் கொடுத்திட்டு சில காலம் தலைமறைவாக இருந்துவந்தால் அனைத்து பிரச்சனையும் முடிந்துவிடும்' என அட்வைஸ் கொடுக்க மறுப்பேதும் கூறாமல் எழுதியிருக்கின்றார் ஜெயக்குமார். ஏனெனில் அந்த எக்ஸ்தான் ஜெயக்குமாருக்கு எல்லாமுமே. ஜெயக்குமாரின் பிணம் கண்டெடுக்கப்பட்ட 4-ஆம் தேதி அன்று அதிகாலையிலேயே சென்னையிலுள்ள சில செய்தியாளர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது அந்தக் கடிதம். ஆதலால் அந்த எக்ஸ்மீது இப்பவும் சந்தேகம் உண்டு. இருப்பினும் அந்த கடிதங்கள் கள்ளிக்குளத்தில் உள்ள 'இஊகக' எனப் பெயர் கொண்ட ஒருவர் மூலம் பரவவிடப்பட்டது என்பதை அறிந்துள்ளோம்'' என்கின்றது.
கை, கால்களில் எலெக் ட்ரிக் வயர்கள் சுற்றப்பட்டும், வயிற்றில் மொசைக் கல் வைத்து கட்டப்பட்டும், கண்டெடுக்கப் பட்ட ஜெயக்குமாரின் உடலில் கூடுதலாக, கட்டட வேலைக்குப் பயன்படுத்தும் கட்டுக்கம்பியும் வைத்து கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. பிணத்தை எரிக்கும்போதோ அல்லது எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டு கொலைசெய்யப்படும்போதோ வெப்பம் அதிகமாகி வயிறு வெடித்துவிடக்கூடாது என்பதற்காக, வெப்பத்தைத் தாங்குவதற்காக வயிற்றில் மொசைக் கல் வைத்துக் கட்டியிருக்க லாம். இந்த மாடலில் என்னென்ன கொலைகள் நடந்துள்ளது? முருகன் குறிச்சியில் கொல்லப்பட்ட மாநகராட்சி ஊழியர், களக்காட்டில் மனைவியையே கொலை செய்த பாம்பே ரவுடி ஆகிய கொலைகளுக்கும் இந்த கொலைக்கும் ஒப்பீடு நடத்தி ஆய்வையே நடத்தியிருக்கின்றது காவல்துறை. எனினும் சோர்வானதுதான் மிச்சம்.
36 நபர்களுக்கு சம்மன் கொடுத்து தனுஷ்கோடி ஆதித்தன் தொடங்கி அத்தனை பேரிடமும் விசாரணையைத் துவங்கிய போலீஸிற்கு, "அப்பாவிற்குக் கொடுக்கவேண்டிய பணத்தில் எனக்கு இவ்வளவு கொடுங்கள்' என கருத்தையா ஜெபரின் கூறியதாக தனுஷ்கோடி ஆதித்தனின் ஒப்புதல் வாக்குமூலம் சின்னக் கீறலை வெளிப்படுத்தியது. "கொலையாளிகளைக் கண்டுபிடியுங்கள்' என ஒற்றை வார்த்தைகூட பேசாததும், சீக்கிரம் நல்லடக்கம் செய்யுங்கள் என்பதும், அவர் எனது கணவரே இல்லை என்பதும் போன்ற வார்த்தைகளாலும், நடவடிக்கைகளாலும் குடும்பத்தாரை நோக்கியே சந்தேகப் பார்வை திரும்பியுள்ளது. தொடர்ச்சியாக, மகன் கருத்தையா ஜெபரின் தினசரி 4 முறை உவரி காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு அனுப்பப்படுகின்றார். அதுபோல், தனிப்படையிலுள்ள டி.எஸ்.பி. ஒருவரின் மொபைலுக்கு வீடியோ காலில் சென்ற மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன், ஜெயக்குமாரின் இளைய மகன் ஜோஸ்பினிடம் வீடியோ கால் பேசி ஆவணத்தை தயார்செய்துள்ளதும் குறிப் பிடத்தக்கது.
"களக்காட்டிலுள்ள பெண் ஒருவருக்கும் இவருக்கும் சம்பந்தம் உண்டு என வீட்டில் அடிக்கடி பிரளயமே வெடிக் கும். இதுகுறித்து ஜெயக்குமாரும் அந்த இளம்பெண்ணும் கண்டிக்கப்பட்டதாக தகவலும் உண்டு. இதுதொடர்பாக 14 மணி நேரம் அந்தப் பெண்ணிடம் விசாரணையும் நடத்தியுள்ளோம். அனைவரின் மேலும் சந்தேகம் இருப்பதுபோல் அவரது குடும்பத் தார் மீதும் சந்தேகம் இருக்கின்றது. ஆஜானுபாகுவான ஜெயக்குமாரை ஒருத்தர் மட்டும் கொலை செய்துவிடமுடியாது. கொலை செய்யப்பட்டே எரிக்கப்பட்டிருக்கின்றார் என்கிறது போஸ்ட்மார்ட்டம் அறிக்கை. ஆகையால் சிலர் மீது சந்தேகம் இருக்கின்றது. குறிப்பாக வள்ளியூர் தனியார் பள்ளி அருகிலுள்ள கஞ்சா அக்யூஸ்ட்கள் மீது. அவர்கள் உதவியிருக்கலாமோ என்று. இன்னார் தான் குற்றவாளிகள் என்பதற்கு ஆவணங்கள் வேண்டுமே.? அதன் மீதுதான் எங்கள் கவனம்'' என்கின்றது மாவட்ட உளவுப்பிரிவு.
படங்கள்: விவேக்