டதுசாரிகள் ஆட்சியிலிருக்கிற ஒரே மாநிலம் கேரளா. அதைத் தக்கவைக்கும் விதமாக அங்கு கட்சிக்குள் கொண்டுவந்த சில சீர்திருத்த அதிரடி நடவடிக்கைகளும், மக்களுக்கான அசராத ஆட்சிப் பணியும்தான், மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆட்சியைக் கொண்டுவந்திருக்கிறது. பினராய் விஜயனையும் முதல்வராக்கியுள்ளது.

kerala

கடந்த 5 மாதங்களுக்கு முன் கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதென எடுத்த முடிவு, அதிக இடங்களை மார்க்சிஸ்ட் கட்சிக்கு கிடைக்கச் செய்தது.

தேர்தலுக்கு முன் ஏ.கே.ஜி. சென்டரில் நடந்த கம்யூனிஸ்ட் மாநில கமிட்டியில் பினராய் விஜயன் அதே போன்ற பார் முலாவை முன்வைக்க, அது சீனியர்கள் மத்தியில் விவாதமாக மாறியது. இருந்த போதும் பினராய் விஜயனின் கோரிக்கையை மாநில கமிட்டி அங்கீகரிக்க, உடனே அதில் அதிரடியைக் காட்டினார் பினராய் விஜயன்.

Advertisment

நடந்துமுடிந்த தேர்தலில் இருமுறை மந்திரி மற்றும் எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்களுக்கு சீட் வழங்கப் படவில்லை. இதன் மூலம் 33 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, அது புதியவர்களுக்கு கொடுக்கப்பட் டது.

அடுத்த அதிரடியாக கட்சியின் மாநிலக்குழு கூட்டத் தில் புதிய மந்திரிசபையில் அத்தனை பேரும் புதியவர்கள் தான், கடந்த மந்திரி சபையில் இருந்த ஒருவருக்குக்கூட இடமில்லை என்ற கோரிக் கையை வைத்து, அதை மாநிலக் குழுவும் அங்கீகரிக்கச் செய்தார்.

இது கட்சி யில் அந்தந்த பகுதிகளில் செல்வாக்குமிக்க நிர்வாகிகளாக இருக்கும் தாமஸ் ஐசக், வி.பி. ஜெயராஜன், இ.சுதாகரன், கடகம்பள்ளி சுரேந்திரன் போன்றோர்களுக்கு அதிர்ச்சி யை ஏற்படுத்தியபோதி லும் மாநிலக் குழு முடிவை அவர் களால் தட்ட முடியவில்லை.

Advertisment

இந்த நிலை யில் 20 மந்திரிகளுடன் ஆட்சியமைத்த பினராய் விஜயன் அமைச்சரவையில் சி.பி.எம்.மைச் சேர்ந்த 11 பேரும் மற்றும் சி.பி.ஐ.யைச் சேர்ந்த 4 பேரும் புதியவர்கள்.

ஆனால் இதில் கூட்டணிக் கட்சியை சேர்ந்த 5 மந்திரிகளும் பழையவர்கள்தான். இதற்கிடையில் மந்திரிசபையில் புதியவர் களில் பினராய் விஜயனின் மருமகன் (மகளின் கணவர்) முகம்மது ரியாஸ் மற்றும் மாநில சி.பி.எம். (பொறுப்பு) செயலாள ரும் இடது ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளருமான விஜயராகவனின் மனைவி பிந்து இடம் பிடித்திருப்பது பற்றி, அதிருப்தியில் உள்ள பழைய மந்திரிகள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் நிலவியது.

முகம்மது ரியாஸ், டி.ஒய். எப்.ஐ.யின் அகில இந்தியத் தலைவராக இருக்கிறார். இதே போல் கேரளா வர்மம் கல்லூரி துணை முதல்வரான பிந்து ஜனநாயக மாதர் சங்கத்தின் செய லாளராக இருப்பதால் அவர்கள் மீதான விமர்சனங்கள் அடங்கிப் போனது.

kk

இவர்களோடு புதுமுக மந்திரிகளான கம்யூனிஸ்ட் பத்திரிகையான தேசாபிமானியின் முன்னாள் ஆசிரியர் ராஜீவ், பத்திரிகையாளரான வீணா ஜார்ஜ் தேர்வுசெய்யப்பட் டிருக்கின்றனர்.

வீணா சவாலான கொரோனா காலகட்ட நேரத்தில் சுகாதாரத்துறை மந்திரியாக்க பட்டிருக்கிறார்.

பா.ஜ.க. மாஜி கவர்னரான கும்மணம் ராஜசேகரனைத் தோற்கடித்த சிவன்குட்டி, தேவசம் போர்டு மந்திரியாக்க பட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ராதா கிருஷ்ணன், மழைவெள்ளப் பாதிப்பின்போது மக்களோடு மக்களாக நின்று உதவிசெய்து அனைத்து தரப்பினரால் கவனம் ஈர்த்த சஜிசெரியன் மற்றும் மாஜி மேல்சபை எம்.பி. பாலகோபாலன் போன்றோர் கம்யூனிஸ்ட் தோழர்களின் எதிர்பார்ப்பில் இருக் கிறார்கள்.

இந்த நிலையில் மந்திரி சபையில் புதுமுகங் களைப் புகுத்தியிருக்கும் பினராய் விஜயனின் அதிரடி நடவடிக்கை கள் குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் "மாத்ருபூமி' ராமானந்த குமார், “சி.பி.எம்., சி.பி.ஐ.யால் நியமிக் கப்பட்டிருக்கும் மந்திரிகள், அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுக் கப்பட்ட தகுதியானவர்கள். திறமையானவர்களும்கூட. கடந்தமுறை சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து நல்லமுறை யில் செயலாற்றிய சைலஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்காதது, அதேபோல் எந்த ஒரு புகாரும் குற்றச்சாட்டும் இல்லாத பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்த சுதாகரன், மின்துறை மந்திரியாக இருந்த மணி போன் றோர்களை மந்திரியாக்காததற்கு பினராய் விஜயனின், கட்சியின் எதிர்கால தொலைநோக்குப் பார்வை தான் காரணம்.

கம்யூனிஸ்ட்டின் கோட் டையாக இருந்த மேற்குவங்கம், திரிபுராவில் ஆட்சியை இழந்ததற்குக் காரணம் அங்கு ஆட்சியில் இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் கம்யூனிஸ்ட் முன்னுரிமை கொடுக்கவில்லை.

பழைய ஆட்களே அதிகாரத்தில் நீடித்ததால், அங்கு கம்யூனிஸ்ட் ஆதர வாளர்கள் பா.ஜ.க.வுக்குச் செல்லும் சூழல் உருவாகி யுள்ளது.

அதை உணர்ந்தே, பினராய் விஜயன் எடுத்த இந்த நடவடிக்கைக்கு, கேரள கம்யூனிஸ்ட் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கட்சிக்கு இது பூஸ்ட்தான்.

கேரளாவில் பத்திரிகை யாளர் மந்திரி ஆவதும், ஒரே அமைச்சரவையில் மூன்று பெண்கள் இருப்பதும் இதுதான் முதல்முறை’என்றார்.

கம்யூனிஸ்ட் தொண் டர்களின் ஜாம்பவனாக இருந்தவர் அச்சுதானந்தன். அவரைப்போல தொண்டர் களிடம் செல்வாக்கு பெற்ற வராக ஆரம்பத்தில் பினராய் விஜயன் இல்லை. எனினும் தன்னுடைய மக்கள் நலன் சார்ந்த அதிரடி நடவடிக்கை ளால் தோழர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இன்று உயர்ந்து நிற்கிறார்.