வேலியே பயிரை மேய்வது என்று கேள்விப் பட்டிருக்கிறோம். அதற்குச் சரியான உதாரணத் தைக் காட்டியிருக்கிறார்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தின் நராஹி காவல் நிலைய போலீசார்.

உத்தரப்பிரதேச- பீகார் எல்லையில் வாக னங்களில் வருவோரிடம், வழிப்பறிக் கும்பலைப் போன்று மிரட்டிப் பணம்பறித்த 23 பேரை ரெய்டு ஒன்றின் மூலம் கைதுசெய்திருக்கிறது உத்தரப் பிரதேச போலீஸ். இதில் காவல்துறையினரும் இடம்பெற்றிருந்ததுதான் வேதனை.

d

உத்தரப்பிரதேச -பீகார் எல்லையில் அமைந்துள்ளது நராஹி காவல் நிலையம். இரு மாநில எல்லையென்பதால் இப்பகுதியில் போலீஸ் கெடுபிடி அதிகம். எல்லை தாண்டும் வாகனங்களில் தொடர்ச்சியாக மிரட்டி பணம் வசூல் செய்யப்படுவதாக உ.பி. உயரதிகாரிகளுக்கு தொடர்ச்சியாகப் புகார் வந்தது.

Advertisment

இதையடுத்து, இதை விசாரிக்க ஒரு ரகசியப் படை அமைக்கப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தையோ, சோதனைச்சாவடி அரு கிலுள்ள காவல் நிலையத்தையோ சேர்ந்த அதி காரிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது.

அதிகாலை 4 மணியளவில் போலீஸ் படை அந்தச் சோதனைச்சாவடியைச் சுற்றிவளைத்து விசாரித்ததில், 18 பேர் சிக்கினர். அதில் இரண்டு பேர் நராஹி காவல் நிலைய போலீசார் என்பது அவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

அந்தக் கும்பல் எல்லை தாண்டிச்செல்லும் ட்ரக் வண்டியின் ஓட்டுநர்களைக் குறிவைத்து ஒவ்வொரு வாகனத்துக்கும் ரூ.500 வசூல் செய்தது கண்டறியப்பட்டது. இந்த பணவசூல் விவரங்களை அங்கிருந்தவர்கள் ஒரு நோட்டில் பதிவுசெய்து வந்ததையும் சோதனைப்படையினர் கைப்பற்றினர்.

Advertisment

பின்பு நடந்த விசாரணையில்தான் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியான விவரங்கள் வெளிவந்தன. சிக்கியவர்கள் தந்த விவரங்களின் அடிப்படையில், இதில் தொடர்புடைய காவலர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது. விரிவான விசாரணைக்குப் பின் எஸ்.ஓ. பன்னேலால், இரவுநேர பொறுப்பு அதிகாரி மக்லா பிரசாத், ஹெட்கான்ஸ்டபிள், ஐந்து கான்ஸ் டபிள்கள், மற்றொரு சோதனைச்சாவடியான கோரந்தாதிஹ் அதிகாரி ராஜேஷ்குமார் பிரபாகர், இந்த அவுட்போஸ்டைச் சேர்ந்த இரு ஹெட்கான்ஸ்டபிள்கள், ஆறு கான்ஸ்டபிள்கள் என 23 பேர் இவ்விஷயத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

சோதனையில் கைப்பற்றப்பட்ட நோட்டை ஆராய்ந்தபோது, நாளொன்றுக்கு 1000 ட்ரக்குகள் வரை சராசரியாக ரூ.500 பணவசூல் செய்திருப் பதும், இந்தப் பணம் 5 லட்சம் காவலர்களுக் குள்ளும் வழிப்பறிக் கும்பலுக்குள்ளும் பங்கிடப் பட்டிருப்பதும் வெட்ட வெளிச்சமாயிருக்கிறது.

சோதனையின்போது சம்பவ இடத்திலிருந்து 3 கான்ஸ்டபிள்கள் தப்பியோடியுள்ளனர். அடையாளம் காணப்பட்டு அவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து மாநிலத்தின் எல்லைப்புறத்திலுள்ள சோதனைச் சாவடிகள் அனைத்திலும் சி.சி.டி.வி. கண் காணிப்பை அதிகரிக்க உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளன.