மலேசியாவின் 15-வது பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 222 தொகுதிகளைக் கொண்ட மலேசிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 112 தொகுதிகளை வெல்லவேண்டும். நான்கு முனைப் போட்டியாக நடைபெற்ற இத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
நான்காண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும் மலேசியாவில், கடந்த 2018 தேர்தல் வெற்றிக்குப் பின் மட்டும் 4 பிரதமர்கள் மாறிவிட்டார்கள். மலேசிய பிரதமர் நஜிப் துன் ரசாக், அரசு நிறுவனமான 1 மலேசியா டெவலப்மெண்ட் பெர்ஹார்ட்டிலிருந்து மில்லியன் கணக்கான டாலர்களை ஊழல் மூலம் அபகரித்துவிட்டார் என்ற புகாரில் சிறை சென்றார். கொரோனாவுக்குப் பிந்தைய மந்த நிலை, அரசியல் ஸ்திரமின்மை, முதலீடுகள் வருவதில் சரிவு என்ற நிலையில் மலேசியா தேர்தலை எதிர்கொண்டது.
இந்தத் தேர்தலில் அன்வர் இப்ராஹிமின் "பக்கத்தான் ஹரப்பான்' 82 இடங்களில் வென்றுள்ளது. இவர் ஒருபால் புணர்ச்சி குற்றச்சாட்டில் சிறைசென்ற அரசியல்வாதியாவார். தற்போதைய வெற்றிமூலம் மீண்டும் அரசியலில் முன்னணிக்கு வந்துள்ளார். இரண்டாவது இடத்தை 73 இடங்களை வென்றுள்ள முகைதீன் யாசீனின் "பெரிக்கத்தான் நேஷனல் கட்சி' பெற்றுள்ளது.
ஆளும் கட்சிக் கூட்டணியான "யுனைட் டட் மலயாஸ் நேஷனல் ஆர்கனைசேஷன்' வெறும் 30 இடங்களை மட்டுமே வென்றதில் இஸ்மாயில் சபரி யாக்கப் அதிருப்தி யடைந்துள்ளார். இப்போதைக்கு இவரின் தரப்பு ஆதரிக்காமல் இரு கட்சிகளுமே ஆட்சியமைக்க இயலாது.
லங்காவி தொகுதியில் போட்டியிட்ட மலேசியாவின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரான மகாதீர், 50 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். இவர் மட்டுமின்றி, அன்வர் இப்ராஹிமின் மகள் நூருல் இஸ்லா, அஸ்மின் அலி, மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் விக்னேஸ்வரன் ஆகிய பெருந்தலை களும் தோல்வியடைந்துள்ளனர்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும் அன்வர் இப்ராஹிம், ஆட்சியமைக்கத் தேவை யான கூட்டணிகளின் ஆதரவு இருப்பதாக அறிவித்துள்ளார். இரண்டாவது இடம்பிடித்த பெரிக்கத்தான் நேஷனல் கட்சியும், தங்களுக்குத் தேவையான ஆதரவு இருப்பதாக அறிவித்துள் ளது. என்றாலும், முஹைதீன் யாசீனுக்கு 103 பேரின் ஆதரவு மட்டுமே இருப்பதாகவும், மிச்சமுள்ள இடைவெளியைப் பூர்த்திசெய்யப் போராடுவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எந்தக் கட்சி ஆட்சியமைத்தபோதும், மலேசியாவில் முதன்முறையாக அமையும் கூட்டணி ஆட்சி இது.
இந்தத் தேர்தலின் போக்கை மாற்றிய விஷயங்களாக மூன்றைக் குறிப்பிடலாம். முதலாவதாக ஊழல் மீதான மக்களின் அதிருப்தி. இரண்டாவதாக மேற்கத்திய நாடுகள் விருப்பமுடன் முதலீடு செய் யும் நாடாக இருந்த மலேசியாவில் ஊழல்... நிலையான ஆட்சியின்மையால் முதலீடு வெகுவாகக் குறைந்துள்ளது. மூன்றாவதாக, இளைஞர்கள் பெருந் திரளாக இந்தத் தேர்தலில் வாக் களித்துள்ளனர். அவர்களது பங் கேற்பு தேர்தல் முடிவை பாதித் துள்ளது.
இந்நிலையில், பெரிக்கத்தான் நேஷனல் கட்சித் தலைவர் முஹைதீன், மலேசிய அரசரைச் சந்தித்தார். சந்திப்புக்குப் பின் தனது ஆதரவு கட்சிக்கு 115 நபர்களின் ஆதரவு இருப்பதாகவும், இருந்தும் அரசர் அன்வர் இப்ராஹிமை ஆதரிக்க வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் என்பதில் ஒரு முடிவு எட்டப்படாமலே இருந்தது.
யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் மலேசிய அரசரான அல்லிசுல்தான் அப்துல்லா, அன்வர் இப்ராஹிமின் பக்கமே கைநீட்டியுள்ளார். இதனால் மலேசியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற குழப்பம் நவம்பர் 24-ஆம் தேதி முடிவுக்கு வந்துள்ளது.
அன்வர் இப்ராஹிம் முன் ஒரு பெரிய சவால் நிற்கிறது. ஒருபக்கம் இஸ்லாமிய பழமைவாதத்தை வலியுறுத்தும் கட்சிகள், சரிந்துகிடக்கும் பொருளாதாரம், அலையென எழுந்துவரும் இளை ஞர்களின் புதிய விருப்பங்கள், கொரோனாவுக்குப் பின் உலகம் முழுவதையும் அழுத்தும் பணவீக் கம். இத்தனையையும் சமாளித்து மலேசியாவை தூக்கிநிறுத்த வேண்டும்.
அன்வர், சவாலை சமாளிப்பாரா பார்க்கலாம்!