• 1989-ல் ரஜினியின் "மாப்பிள்ளை' வெளியானது. அதில் வில்லியாக நடித்த ஸ்ரீவித்யா கதாபாத்திரம் ஜெ.வை வைத்து உருவாக்கப்பட்டது என பேசப்பட்டது.

• 1989 டிசம்பர் 14-ஆம் தேதி ரஜினி புதியதாக கட்டியுள்ள ராகவேந்திரா திருமண மண்ட பத்தை கலைஞர் திறந்துவைத்தார். இதனால் ரஜினி மீது தி.மு.க. முத்திரை விழுந்தது.

rajinikanth

• 1992-ல் போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு ரஜினி காரில் சென்றபோது, முதல்வர் ஜெ. வீடு உள்ள பகுதி என சோதனை என்கிற பெயரில் ரஜினி கார் நிறுத்தியதால் கோபம். அதன்பின் வந்த "அண்ணாமலை', "பாண்டியன்', "முத்து' படங்களில் முதல்வர் ஜெ. அரசியலை விமர்சனம் செய்யும் வசனங்கள் இடம் பெற்றன.

Advertisment

• 1995 ஜூலை - "பாட்ஷா' பட வெற்றிவிழாவில், ""தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவிவிட்டது'' என பேசினார் ரஜினி. இதனால் விழா மேடையில் இருந்த அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் அமைச்சர் பதவியை பறித்தார் ஜெ.

• 1996 சட்டமன்ற தேர்தலின்போது, ""மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவ னாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது'' என விமர்சனம் செய்தார். தி.மு.க.- த.மா.கா. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். தி.மு.க. வெற்றி.

• 1998 - நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.- த.மா.கா. கூட்டணிக்கு வாய்ஸ் தந்தார். அந்த தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது.

Advertisment

• 2002 - ரஜினி-பா.ம.க. இடையே மோதல்.

• 2004 - நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.- காங் கிரஸ் கூட்டணியில் இருந்த பா.ம.க. போட்டி யிட்ட 6 தொகுதிகளில் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார். தி.மு.க. கூட்டணி 40-க்கு 40-ம் வெற்றி பெற்றது.

• 12-12-12 - உடல்நிலை பாதிக்கப்பட்டு வெளி நாட்டுக்கு சிகிச்சைக்குப் போய்வந்த பின்பு ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது "உங்கள் விருப்பத்தை (அரசியல்) நிறைவேற்றுவேன்' என பேசினார்.

• ஏப்ரல் 2014 - நாடாளுமன்ற பிரச்சாரத்துக்கு தமிழகம் வந்த மோடி ரஜினியை அவரது வீட்டில் சந்தித்தார். "மோடி சிறந்த தலைவர், சிறந்த நிர்வாகி' என பாராட்டு.

• கட்சி தொடங்குவதாக ரஜினி அறிவிப்புக்கு பின்பு...

• 19-5-2017 - மாவட்டங்களில் இருந்து ரசிகர் களை வரவைத்து ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து புகைப்படம் எடுத்தபோது பேசியது, ""இங்கு ஜனநாயகம் கெட்டுப்போயிருக்கு, சிஸ்டம் கெட்டுப்போயிருக்கு. சிஸ்டம் சரி பண்ணணும், மாற்றத்தை உருவாக்கணும், அப்போதான் நாடு உருப்படும், நாம் சேர்ந்து செய்யணும். கடமையைச் செய்யுங்க, போர் வரும்போது பார்த்துப்போம்.''

• 31-12-2017 - ""நான் அரசியலுக்கு வருவது உறுதி, இது காலத்தின் கட்டாயம். வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நாங்கள் நிற்போம். மாற்றனும் எல்லாத்தையும் மாத்தணும். அரசியல் மாற்றத்துக்கான நேரம் வந்துடுச்சி. சாதி, மத சார்பற்ற ஒரு ஆன்மீக அரசியல் கொண்டு வருவேன்.''

rajinikanth

• 05-03-2018 - ""சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரக்கூடாது என்கிறார்கள். நான் நடிகனா என் வேலையை சரியா செய்திருக்கேன். நீங்கள் உங்க வேலையை சரியா செய்யல. எம்.ஜி.ஆர். மாதிரி ஆகணும்னு ஒருத்தன் சொன்னால் அவனை மாதிரி பைத்தியக்காரன் யாரும் இருக்கமுடியாது. எம்.ஜி.ஆர். போல் என்னால் ஆட்சி தரமுடியும்.''

• 9-4-2019 - நாடாளுமன்ற தேர்தலின்போது பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை பாராட்டி னார். மறைமுகமாக பா.ஜ.க. ஆதரவு.

• 19-04-2019 - ""ரசிகர்களை, மக்களை ஏமாற்றமாட்டேன். 2021 சட்டமன்ற தேர்தலே இலக்கு, எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்.''

• 11-11-2019 - ""திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசுன மாதிரி, எனக்கும் பி.ஜே.பி வண்ணம், காவி வண்ணம் பூசப் பார்க்கறாங்க. திருவள்ளுவரும் மாட்டமாட்டார், நானும் மாட்டமாட்டேன்.''

• 12-03-2020 லீலாபேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பில்... ""1996-ல் இருந்து அரசியலுக்கு வர்றேன், வர்றேன்னு சொல்லிக் கிட்டே இருக்காங்க. நான் அப்படி எப்போதும் சொல்லவில்லை. நான் 2017-ல்தான் அரசிய லுக்கு வருவேன்னு முதன்முதலா சொன்னேன். சிஸ்டம் கெட்டுப்போயிருக்கு, மக்கள் மனதில் மாற்றத்தை உருவாக்கனும். அதை மாற்றாமல் அரசியல் கட்சி துவங்கினால் மீன் குழம்பு வைத்த பாத்திரத்தில் சர்க்கரை பொங்கல் வைத் தது போல் இருக்கும். தமிழகத்தில் இரண்டு ஆளுமைகள் கிடையாது, இதுதான் நேரம் 50 ஆண்டுகால இந்த ஆட்சிகளை அகற்றுவதற்கு. மக்கள் யோசிக்கணும். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் செய்ய மக்களிடம் எழுச்சி உருவாகனும், உண்டாகிவிட்டால் எல்லாம் மாறும். அதைதான் நான் விரும்புகிறேன்.''

• அக்டோபர் 2020 - ரஜினி உடல்நிலை குறித்த அதிகாரபூர்வமற்ற அறிக்கை வெளியாகி ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

• 29-11-2020 - ரசிகர் மன்ற மா.செக்களிடம் தன் உடல்நலன் குறித்து பேசுகிறார், விரைவில் அரசியல் முடிவை வெளியிடுகிறேன் என்றார்.

• 03-12-2020 - ""அரசியல் மாற்றம் இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை'', டிசம்பர் 30-ஆம் தேதி ""கட்சி எப்போது தொடங்கப்போகிறேன், பெயர் என்னவென அறிவிப்பேன். கட்சி தொடங்குவதற்கான ஒருங்கிணைப்பாளர்களாக தமிழருவிமணியன், அர்ஜுனமூர்த்தி நியமனம்'' என அறிவித்தார்.

• 15-12-2020 - "அண்ணாத்த' படப்பிடிப்புக்காக தனி விமானத்தில் ஐதராபாத் பயணம்.

• 20-12-2020 - ரஜினியின் கட்சியின் பெயர் "மக்கள் சேவை கட்சி', "ஆட்டோ' சின்னம் என தகவல் வெளியாகிறது.

• 21-12-2020 - "கட்சி பெயர், சின்னம் குறித்து தலைவர் அறிவிக்கும்வரை எதையும் பரப்ப வேண்டாம்' என அறிவிப்பு.

• 24-12-2020 - "அண்ணாத்த' படப்பிடிப்பில் பணியாற்றிய 4 பேருக்கு கொரோனா உறுதி.

• 25-12-2020 - ஐதராபாத் அப்போலோ மருத்துவ மனையில் ரஜினி அனுமதி. ரத்த அழுத்தம் அதிகரிப்பால் சிகிச்சை. 3 நாள் சிகிச்சைக்கு பின்பு சென்னை திரும்பினார்.

• 29-12-2020 - "கொரோனா நோய் தாக்கும் அபா யம் இருப்பதால் அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை' என அறிக்கை வெளியிட்டு ரசிகர்களிடம், மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

-தொகுப்பு: து. ராஜா