மீபத்தில்தான் உரிமையியல் (சிவில்) நீதிபதிகள் தேர்ச்சிப் பட்டியலில் பழங்குடி யினத்தைச் சேர்ந்த பெண், கூலித்தொழிலாளியின் மகன் என ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவினரிலிருந்து நிறைய சிவில் நீதிபதிகள் தேர்வானது குறித்து மிகவும் மகிழ்ச்சியோடும், ஆச்சர்யத்தோடும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், "இந்த சிவில் நீதிபதிகள் தேர்ச்சிப் பட்டியல் வெளியீட்டில் தவறு நடந்துள்ளது. மீண்டும் இந்த பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. சரிசெய்து இரண்டு வாரத்துக்குள் புதிய பட்டியலை வெளியிடவேண்டும்' என்று உயர்நீதிமன்றம் அறிவித்திருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது என்றும், தவறானது என்றும், டி.என்.பி.எஸ்.சி.யின் தேர்வு முறையில் தவறு என்றும் பலவிதமான கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் உலா வருகின்றன.

cc

உண்மையில் என்னதான் குழப்பம்? கேள்விக்கு விடை காண, நீதிமன்றங்களில் நீதிபதி கள் நியமனம் எப்படி நடக்கிறது என்பதைப் பார்ப் போம். தமிழ்நாட்டிலுள்ள கீழமை நீதிமன்றங்களில் உள்ள சிவில் நீதிபதிகளுக்கான காலிப்பணியிடங் களை 2014ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் டி.என்.பி.எஸ்.சி. (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்) அமைப்பே தேர்வு செய்கிறது. அதற்கு முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் தான் அதற்கான பொறுப்பெடுத்துச் செயல்பட்டது. ஆனால் இப்போதும்கூட எழுத்துத்தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் நிலையில், நேர்முகத் தேர்வு, கலந்தாய்வுப் பணிகளில் உயர்நீதிமன்றம் பொறுப்பெடுக்கிறது.

இந்நிலையில் 245 சிவில் நீதிபதிகளுக்கான பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பினை கடந்த ஆண்டு ஜூனில் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. இதற்கான தேர்வு, ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் அக்டோபர் 11ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் அடுத்தகட்ட முதன்மைத் தேர்வுக்கு 2,544 பேர் தகுதி பெற்றார்கள். அந்த முதன்மைத்தேர்வு நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்று, சிவில் நீதிபதிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற தற்காலிகப் பட்டியலை பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. அதுதான் பத்திரிகைகளில் வெளிவந்து பரபரப்பானது.

Advertisment

இச்சூழலில், இதில் இட ஒதுக்கீட்டு முறை முறையாகப் பின்பற்றப்படவில்லை எனவும், அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்கள் பொதுப்பிரிவுக்குப் பதிலாக இட ஒதுக்கீட்டுக்கான பிரிவில் சேர்க்கப் பட்டதால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டு இடங்கள் குறைந்துவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சென் னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய டிவிசன் பெஞ்ச், "அதிக மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்களை பொதுப்பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற உச்ச நீதி மனறத்தின் உத்தரவை மீறி, சிவில் நீதிபதிகளுக் கான தற்காலிகத் தேர்வுப் பட்டியலில், தவறான முறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளது. எனவே அந்த பட்டியலை உயர் நீதிமன்றம் ரத்து செய்கிறது. இட ஒதுக்கீட்டை முறையா கப் பின்பற்றி, புதிதாகத் திருத்தப்பட்ட பட்டி யலை இரண்டு வாரங்களுக்குள் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட வேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளது.

இதில் எங்கே குளறுபடி நடந்திருக்கிறது என்று துறை சார்ந்தவர்களிடம் விசாரித்தோம். பொதுவாக இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, அதிக மதிப்பெண் பெற்றவர்களை முதலில் பொதுப்பிரிவில் சேர்த்து அதற்கான காலியிடங் களை நிரப்பியாக வேண்டும். ஆனால், கடந்த 2016ஆம் ஆண்டு முதல், "காலிப் பின்னடைவு பணியிடங்கள்' (இஹஸ்ரீந் ப்ர்ஸ்ரீந் ஸ்ஹஸ்ரீஹய்ஸ்ரீண்ங்ள்) எனப்படும், முந்தைய காலத்தில் பொருத்தமான பணியாளர்கள் இல்லாமல் காலியாக இருக்கும் இடங்களை முதலில் நிரப்பிவிட்டு அதன்பின் இட ஒதுக்கீடு அடிப்படையிலானவர்களையும், பின்னர் பொதுப்பிரிவினரையும் நிரப்பியிருக்கிறார்கள். அதிலும் காலி பின்னடைவு பணியிடங்களிலேயே 97 பேர் வரை இருந்திருக்கிறார்கள். இப்படி நிரப்பு வதால், அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்வதால், இதில் இடம் கிடைக்க வேண்டிய பலருக்கும் கிடைக்காமல் போவதோடு, பொதுப்பிரிவில் முற்பட்ட வகுப் பினர் அதிக அளவில் இடம்பெற ஏதுவாகிறது. இப் போது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில், இந்த தவறு சரிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், முதலில் பொதுப்பிரிவினரை நிரப்பிவிட்டு, அடுத்ததாக காலி பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்பட்டு, இறுதியாக இட ஒதுக்கீட்டுப் பிரிவில் நிரப்பப்படுவ தால், இன்னும் அதிக அளவில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சிவில் நீதிபதிகள் உருவெடுக்கக்கூடும். உயர்நீதிமன்றத்தின் உத்தர வால் ஏற்கனவே தேர்வான பழங்குடியின, பிற் படுத்தப்பட்ட சிவில் நீதிபதிகளுக்கு எந்தச் சிக்கலும் கிடையாது. இட ஒதுக்கீட்டுப் பிரிவில் கூடுதலாக சிலருக்கு நீதிபதி பதவி கிடைக்கக்கூடும். அதே போல், பொதுப்பிரிவில் தற்போது இடம்பெற்றுள்ள முற்பட்ட வகுப்பினரில் சிலர் பட்டியலிலிருந்து நீக்கப்படலாம். ஆகமொத்தம் சரியான நேரத்தில் இவ்விவகாரத்தை உயர்நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றுள்ளதால் சமூகநீதி காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் டி.என்.பி.எஸ்.சி. அமைப்புக் குள் இருக்கும் எவரேனும் சமூக நீதிக்கெதிராக உள்ளடி வேலை செய்திருப்பார்களோ என்ற ஐயத்தை விலக்க முடியவில்லை!

Advertisment