cc

(73) பெரியாரை விமர்சிப்பவனும் லேசியம் விற்பவனும்!

டன் சுமையை உதவித்தொகை என்று சொல்லும் ஒன்றிய அரசை ஏன் விமர்சிக்கவில்லை?

ஒரு மாபெரும் கவிஞனின் கதையைச் சொல்கிறேன். மாபெரும் கவிஞன் அவன்... பாரதி போல், பாரதிதாசன் போல் நெருப்புநிகர் கவிதை கள் புனைபவன். நெற்றிக்கண்ணனின் கோபத்துக்கு ஆளான நக்கீரன், "நீரே முக்கண்ணனே ஆயினும் ஆகுக... ஆனால் குற்றம் குற்றமே' என்று சொன் னதுபோல... சொல்லாடும் அச்சமற்ற மாபெரும் கவிஞன். தன் முன்னால் தவறான கவிதைகள் படிக் கப்பட்டால், போலி கவிஞர்கள் பொய்யுரைப்பின், நேருக்கு நேர் தன் கருத்தை சொல்லி, போலிகளின் முகத்திரையைக் கிழித்து தொங்கவிட்டுவிடுவார். அதனால் இந்தக் கவிஞர் அமர்ந்திருக்கும் அவையில் அரைகுறை கவிஞர்கள் கவிதை சொல்லத் துணிவதில்லை.

Advertisment

ஒருநாள் இந்த உண்மைக் கவிஞனுக்கும் ஒரு கஷ்டம் வந்தது. மட்டமான, கேவலமான கவிதை களைக் கேட்டுக் கேட்டு மன்னர் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. தினமும் எதையாவது கிறுக்க ஆரம்பித்தார். உடனிருந்த ஜால்ராக்கள் எல்லாம் "கம்பனையும், மிஞ்சிவிட்டீர்கள் மன்னா' என்று புகழ்ந்தார்கள். மமதை மன்னரின் தலைக்கேறியது. ஏதோ ஒரு தலைப்பில் அடுக்கு மொழியில் தொகையறா, பல்லவி, சரணம் என்று எதை, எதையோ எழுதி பத்து தடவைக்கு மேல் கண்ணாடி முன்னால் நின்று கவிதையை பலவிதமாகச் சொல்லிப் பார்த்தார். பலத்த நம்பிக்கை ஏற்பட்டது. அடுத்தநாள் "ராஜ்யத்திலுள்ள அத்தனை கவிஞர்களும், அரச சபைக்கு வந்து, மன்னரின் கவிதையைக் கேட்டு அபிப்பிராயம் சொல்ல வேண்டும். சிறந்த ஆய்வு செய்பவருக்கு பரிசு உண்டு' என அறிவிக்கப்பட்டது.

நமது கவிஞரும் வந்தே ஆகவேண்டிய கட்டா யம். வந்தார். மன்னர் உற்சாகமாக கவிதையை உரக்கப் படித்தார். அத்தனை கவிஞர்களும் ஆஹா... ஓஹோ... என்று புகழ்ந்து தள்ளினார்கள். இறுதியாக நமது கவிஞர் அழைக்கப்பட்டார். அவருக்கு தர்மசங்கடமான நிலைமை. கவிதையோ குப்பை, அதை வெளிப்படையாகச் சொன்னால் நமது கவிஞர் அடித்து உதைத்து குப்பைத் தொட் டிக்குள் வீசப்படுவார். அதையும் அவர் உணர்ந் திருந்தார். ஆனாலும் பொய்யுரைக்க மனம் இடம் தரவில்லை. அதனால் இப்படி பேச ஆரம்பித்தார்... "மன்னா, நீங்கள் சகலகலாவல்லவன் என்பதை இந்த பாரே அறியும். இந்த அவையில் உங்களுக்கு உண்மையை உரைக்கக்கூடிய விசுவாசிகளை கண்டறியவே இந்தக் குப்பைக் கவிதையைப் படித்தீர்கள். இதற்கு முன்னால் நீங்கள் கிறுக்கிப் போட்ட பேப்பர்களை நான் பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன்... வியந்திருக்கிறேன். என்ன வார்த்தைப் பிரயோகம். அது புதுக்கவிதைபோல் தோன்றும். ஆனாலும் எதுகை, மோனை பிசகாது இருக்கும். இன்று ஒரு குப்பைக் கவிதையை ஏன் எழுதிப் படித்தீர்கள்? என சிந்தித்தேன். இந்தக் கவிஞர் கூட்டத்தில் எத்தனை உண்மைவிளம்பிகள், விசுவாசிகள் இருக்கிறார்கள் என்பதை கண்டறி யவே இப்படி ஒரு குப்பைக் கவிதையைப் படித்தீர் கள்? உங்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தினா லும் பரவாயில்லை, விசுவாசிகளைக் கண்டறிய வேண்டும் என்பதற்காக இக்காரியத்தை செய்தீர்கள். வரிகள், வார்த்தைகள், கருப்பொருள் அனைத்துமே தப்பு...'' என கவிஞன் பேசியதை சரியென்று சொன்னது, அதை எதிர்த்துப் பேசி மேலும் அவமானப்பட மன் னன் விரும்பவில்லை. எனக்கு விசுவாசமான கவிஞர், என் எண்ணத்தை சிறப்பாக புரிந்துகொண்டு உண்மையைப் பேசியதால் இந்த விருது அவருக்கே என வழங்கப்பட்டது. அத்தோடு மன்னன், கவிதை எழுதும் எண்ணத்தையே கைவிட்டுவிட்டார்.

cc

Advertisment

இன்று காரணமில்லாமல் தந்தை பெரியாரை கொச்சைப்படுத்துபவர்கள், இந்த மன்னனைப் போல் உணர்ந்து திருந்திவிட்டு அரசியல் திட்டங் களை வகுத்து, உங்க வேலையைக் கவனிச்சா இப்ப இருக்கும் வாக்கு வங்கியையாவது காப்பாற்ற முடியும். இல்லேன்னா சுனாமியில் சிக்கிச் சிதைந்த படகு மாதிரி உருத்தெரியாமல் போயிடுவீங்க.

ஒருசில அரைவேக்காடுகள் அரசியலை ஒரு திரைப்படம் போல் எண்ணுகிறார்கள். அரசியல் பேச்சரங்கங்களில் நாடக மேடைபோல் பயன்படுத்துகிறார்கள். "மனோகரா' திரைப்படத்தில் மன்னரின் கொலுமண்டபத்து மிகப்பெரிய தூணிலே நாயகன் சிவாஜி சங்கிலியால் பிணைக்கப் பட்டிருப்பார். பழி சுமத்தப்பட்ட மனோகரனின் தாயார் கண்ணாம்பா அவைக்குள் நுழைகிறாள். மன்னனின் வைப்பாட்டியும், அவள் கள்ளக் காதலனும் கண்ணாம்பாளை தரக்குறைவாகப் பேசுகிறார்கள். இப்போது அவையில் சிரிப்பொலி.

தாய் பேச ஆரம்பிப்பாள். "செவ்வாழைத் தோட்டத்து குரங்குகளே ஏன் சிரிக்கிறீர்கள்?'' என ஆரம்பித்து, மகனை உசுப்பிவிடும்விதமாக ஆக் ரோஷமாகப் பேசுவாள். மகன் தூணை உடைத்து, இரும்புச் சங்கிலியையும் தூள் தூளாக்கி கையில் வாளுடன் வில்லனோடு மோதி வெற்றிகொள்வார். தந்தையையும், தாயையும் சேர்த்து வைப்பார் சிவாஜி. அதன்பின் மளமளவென்று வளர்ந்து உலக மகாநடிகராக உயர்ந்து நிற்பார். அவரே, புதுக்கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்றபோது... அவர் கட்சியும் தோற்றது, அவரும் தோற்றார்.

சினிமா வேறு, அரசியல் வேறு. இந்த வித்தி யாசத்தை மக்கள் புரிந்துகொண்டது பெரியாரால், அண்ணாவால்! தெருவில் லேகியம் விற்பவன்... மிகத்தெளிவாக, ஆக்ரோஷமாகப் பேசுவான். அதை வேடிக்கை பார்க்க வேலை வெட்டியற்ற ஒரு கூட்டம் கூடத்தான் செய்யும். அதுக்காக லேகியம் விற்பவனுக்கு மக்கள் ஓட்டுப் போடுவார்களா?

என் துரோணர் தலைவர் கலைஞரே ஒரு தடவை மேடையில் சொன்னதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். "நான் பேசும் கூட்டங்களுக்கு லட்சக்கணக்கில் மக்கள் வருகிறார்கள். என் பேச்சை கைதட்டி, உற்சாகமாக ரசிக்கிறார்கள். ஆனால் ஓட்டுப் போடும்போது வேறிடத்தில் போட்டுவிடு கிறார்கள்'' என மனம் வருந்திப் பேசினார்.

இன்னொரு கூட்டத்தில் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சைக்குப் போயிருந்தபோது, கலைஞர் பேசியது என்ன தெரியுமா? "ஓட்டுப் போட்டு என்னை முதல்வர் ஆக்குங்கள்... எம்.ஜி. ஆர். நாடு திரும்பிய தும் நான் அவரிடம் ஆட்சியை ஒப்ப டைக்கிறேன்'' என் றார்... அதுவும் பயனளிக்கவில்லை. அதன்பின் அவர் தன் அரசியல் போக்கை மாற்றினார். மக்களுக்கான பல புதிய திட்டங்களை உருவாக்கினார். விவசாயத்துக்கு இலவச மின்சாரம், விவ சாயிகளின் ஒட்டுமொத்த கடனையும் ரத்து செய்தார். மத்திய அரசின் துணை இல்லாமல் மாநில அரசு நினைப்பதை சாதிக்க முடியாது என்பதை புரிந்துகொண்டவர், நேரத்துக்கு ஏற்றபடி கூட்டணி அமைத்து மத்திய அரசில் முக்கியமான இலாகாக்களை தன் கட்சிக்கு பெற்றுத் தந்து மாநில அரசை பலப்படுத்தி பல கோடிகளுக்கான திட்டங்களை மாநி லத்துக்கு பெற்றுத்தந்தார். அதனால் தான் தமிழ் மாநிலம் இந்தியாவின் முதல் மாநிலமாக வளரத் தொடங்கி யது. அண்ணா திராவிட நாடு கேட்டார். கலைஞர் அதனை இப்படி மாற்றினார். "மத்தியில் கூட்டாட்சி... மாநிலத்தில் சுயாட்சி'. இன்றளவும் முதல்வர் இந்தியாவுக்கே "திராவிட மாடல் ஆட்சி' என்கிறார். இதுதான் அரசியல் வளர்ச்சி!

மேதகு பிரபாகரன் ஈழத்தில் நடத்தியது விடுதலைப் போராட்டம். உரிமைகள் பறிக்கப்பட்டு, குடியிருப்பு மூலம் தமிழ் மண்ணில் சிங்களரை குடியேற்றி, அதன்மூலம் நில அபகரிப்பு, ராணுவத்திலோ போலீசிலோ தமிழர்களை அகற்றி, வன்கொடுமைகளை தூண்டிவிட்டு தமிழனத்தை நசுக்கி, சர்வாதிகாரம் பெருகி... தமிழினமே அழிந்துபோகும் நிலையில், விடுதலைப்போர் தொடங்கியது. இங்கே அப்படியொரு நிலை கிடையாது. ஜனநாயக ரீதியாக வே நமது முதல்வர் "திராவிட மாடல்' என்ற கொள்கை நிலைப் பாட்டை இந்தியா முழுவதும் பரப்பிவருகிறார். பல மாநி லங்கள் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.

இந்த வளர்ச்சியை சாதாரணமாக எடைபோட முடி யாது. இதற்கு ஆணிவேரே தந்தை பெரியார்தான். "அவர்கள் கட்டி முடிக்கப்பட்ட கோபுரம். நானோ கொட்டிக் கிடக்கும் செங்கல். மக்கள் மனது வைத்தால் என்னை அதைவிடப் பெரிய கோபுரமாக கட்டி எழுப்ப முடியும்'' என்றார் அண்ணா. இப் பணியினைத்தான் நமது முதல்வர் இன்று செய்துகொண்டி ருக்கிறார் "திராவிட மாடல்' என்ற பெயரிலே.

cc

பெரியாரை இழிவுபடுத்துவதாலோ, ஆட்சியாளர் ஊழல் வாதிகள் என்று சொல்வதாலோ இயக்கம் பாதிக்கப்படாது, கொள்கைகள் திசை மாறாது. திராவிட இயக்கம் வெறும் அர சியலுக்கான இயக்கம் மட்டுமல்ல... தமிழ் சமுதாயத்துக்கான இயக்கம். இதை எந்தக் கொம்பனாலும் அசைத்துப் பார்க்கக் கூட முடியாது. பார்ப்பனீயம் நீங்கலாக ஏனைய மக்கள், அனைவருமே இந்த இயக்கத்தின் உறுப்பினர்களே. இது ஒரு தேன்கூடு. கல்லெறிந்து பாருங்கள்... அப்போது தெரியும் எது சரியென்று! மத்திய அரசின் புதிய கொள்கைகளால் மாநில சுதந்திரங்கள் ஒவ்வொன்றாகப் பறிபோய்க்கொண்டிருக்கிறது. அதை எதிர்கொண்டு போராடிக்கொண்டிருப்பது கழகமும் அதன் முதல்வரும்தான். அதனால் மத்திய அரசு, கழகத்தைக் கவிழ்ப்பதற்கு காய் நகர்த்துகிறது. இந்த நேரத்தில் பெரியாரை விமர்சனம் செய்யும் அரசியல் தலைவர்களின் நோக்கம் என்ன?

இன்றைய ஒன்றிய அரசு, நாட்டில் நிலவும் வறுமையை பற்றாக்குறை என்றும், வேதனைகளை சோதனை என்றும், கடன் சுமையை உதவித்தொகை என்றும் வார்த்தை ஜாலம் செய்து... கார்ப்பரேட்டுகளையும், குறிப்பிட்ட ஒரு மதத்தினரை யும் நிதியளிக்கும் பணக்காரர்களை தங்கள் காவல் வேலியாக வைத்துக்கொண்டு ஒரே மதம், ஒரே ரேஷன் கார்டு, ஒரே மொழி என்று மாநிலங்களின் அதிகாரங்களை அடக்கிவைக்க காய் நகர்த்துகிறது. பெரியாரை விமர்சனம் செய்யும் மாநில அரசியல்வாதிகள் இதையெல்லாம் ஏன் கேட்கவில்லை. ஈழ தமிழ நிலப்பரப்பில் மேதகு நடத்திய விடுதலைப் போராட்டம் போல் ஏன் போராட முன்வரவில்லை.

பெரியாரை விமர்சனம் செய்பவர்கள் இதை ஏன் எதிர்க்கவில்லை? இந்த இடத்தில் மக்களும் சிந்திக்க வேண்டும்.

முக்கியமான சில விஷயங்களை அடுத்த இதழில் தொடருகிறேன்.

(திரை விரியும்)