"மதுரகீதம்' மக்களிடம் வரவேற்பைப் பெற்று, வர்த்த ரீதியில் -வசூலில் வெற்றிபெற்ற படம். அரசின் விருதுகளையும், பரிசுகளையும் பெற்ற படம். புதுமையான அமைப்பில் கதையை எழுதியிருந்தேன். இது நான் டைரக்ட் செய்த முதல் படம்.
ஆனால்... நான் டைரக்டர் ஆனது எதிர்பாராதவிதமாக நடந்த ஒன்றுதான்.
என்னிடம் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களில், எனது யூனிட்டில் இருந்தவர்களில் எஸ்.பி.முத்துராமனும் ஒருவர். "கனிமுத்து பாப்பா' படம் மூலம் எஸ்.பி.முத்துராமனை இயக்குநராக அறிமுகம் செய்தது நான்தான். "பெத்த மனம் பித்து', "காசி யாத்திரை', "தெய்வக் குழந்தை' என தொடர்ந்து நான் தயாரித்து மற்றும் எழுதிய கதைகளின் படங்களை இயக்கி னார்.
எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென ஒருநாள்... என்னிடமிருந்து விலகிச் சென்ற முத்துராமன், எனது யூனிட் டையும் மொத்தமாக கூட்டிக் கொண்டு போய்விட்டார்.
தனியாக விடப்பட்ட நான், மீண்டும் ஒரு நாடகத்தை எழுதினேன். எனது குகஜி நாடகமன்றத்தில் முன்பு நடித் துக்கொண்டிருந்த எம்.ஆர்.கே.விஜயகுமார், "படாபட்' ஜெயலட்சுமி, சுருளிராஜன், சேவா ஸ்டேஜ் பிரபாகரன் ஆகியோரை நடிக்க வைத்து "கல்யாணராமன்' என்ற நாடகத்தை "மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்'பில் அரங் கேற்றம் செய் தேன். நாடகத் திற்கு மிக நல்ல வரவேற்பு. இதனால் நாலு மாதங்களுக்குள் நூறு முறை அந்த நாடகம் நடை பெற்றது. இந்த நாடக வெற்றி எனக்கு மனநிறைவைத் தந்தது.
"மஞ்சள் முகமே வருக' என்கிற திரைக்கதை ஒன்றை எழுதிய நான், எனது மக்கள் தொடர்பாளர் "கிளாமர்' கிருஷ்ணமூர்த்தியை அழைத்து... "நான் உருவாக்கினவங்களும், என்னோட யூனிட்டைச் சேர்ந்தவங்களும் எஸ்.பி.முத்துராமன் கூட போயிட்டாங்க. என் யூனிட்ல இருந்த நீங்க மட்டும்தான் இப்ப என்கூட இருக்கிறீங்க. அதனால உங்களை நான் தயாரிப்பாளர் ஆக்குகிறேன்'' என்று சொல்லி, அதன்படியே படம் உருவாகிக்கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை எனப்படும் ஃபிலிம் சேம்பரில் ஒரு கூட்டம் நடந்தது. அங்கே என்னைப் பார்த்த தெலுங்கு -தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் டி.ராமாநாயுடு அவர்கள், "எனக்கொரு கதை தரக்கூடாதா குகநாதன்?'' என்று கேட்டார்.
"குடுக்குறேன் சார்''
"நாளைக்கே ஆபீஸுக்கு வாங்க''
மறுநாள்...
அவரின் அலுவலகம் சென்று கதை சொன்னேன்.
"உடனே பட வேலைகளை ஆரம்பிக்கலாம்...''
"சார்... இந்தப் படத்தை நான் தயாரிக்கிறேன்... நீங்க பணம் குடுங்க'' என்றேன்.
ராமாநாயுடு தயங்கினார்.
"சார்... அஞ்சு லட்ச ரூபாய்ல முடிச்சுத் தந்திடுறேன்...''
நான் சொன்னதும் "அது எப்படி அஞ்சு லட்சத்துக்குள்ள படம் எடுக்க முடியும்?'' என குழப்பமும், வியப்புமாய் கேட்டார்.
"நான் ரொம்ப வெறியோட இருக்கேன். நான் உருவாக்கிவிட்டவங்க... சரியான காரணமில்லாம பிரிஞ்சுபோய் படம் பண்றாங்க. நான் சும்மா இருக்க முடியாது'' என உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னேன்.
ராமாநாயுடு யோசனை செய்தார்.
"நாம நாளைக்கு சந்திக்கலாம் சார்'' எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
மறுநாள் கார் அனுப்பியிருந்தார். அவரது அலுவலகம் போனேன்.
"குகநாதன்... கதை புதுமையா இருக்கு. நானே தயாரிக்கிறேன். நீங்க டைரக்ட் பண்ணுங்க. சொன்னபடி அஞ்சுலட்ச ரூபாய்ல படத்த முடிச்சுக் குடுங்க'' என்றார்.
சற்றுநேரம் யோசித்தேன். பிறகு ஒப்புக் கொண்டேன். அப்போது அங்கே வந்த தெலுங்கு புரொடியூஸர் "நவயுகா' சசிபூஷன், ராமாநாயுடுவுடன் சேர்ந்து படம் தயாரிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். ஹைதராபாத்தில் அவருடைய ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடத்த முடிவானது.
விஜயகுமார், ஸ்ரீவித்யா, ஸ்ரீப்ரியா, சுருளிராஜன், சச்சு, அசோகன் ஆகியோரை ஒப்பந்தம் செய்தேன்.
ஸ்ரீவித்யாவிடம் கதையைச் சொன்னதுமே நடிக்க ஒப்புக்கொண்டார். அப்போதே அவரிடம்... "இந்தப் படத்துக்காக உங்களுக்கு சிறந்த நடிகை விருது கிடைக்கும்'' என்று சொன்னேன்.
ஹைதராபாத்தில் சாரதி ஸ்டுடியோவில் படப்பிடிப்பை துவக்கினோம். 19 நாட்களில் படத்தை முடித்துவிட்டேன். எடிட்டிங், ரீ-ரிக்கார்டிங், நெகட்டிவ் கட்டிங், மிக்ஸிங் அனைத் தையும் முடித்து ஃபர்ஸ்ட் காப்பி எடுப்பதற்காக லேபில் கொடுத்துவிட்டு... சென்னை திரும்பினேன்.
முதல் பிரதி தயாரானதும், சாரதி ஸ்டுடியோ பணி யாளர்கள் படத்தைப் பார்த்து பரவசப்பட்டு, தயாரிப்பாளர் சசிபூஷனிடம் சொல்லியிருக்கிறார்கள்.
அந்த சமயத்தில் அங்கே தனது படமொன்றின் படப் பிடிப்பை நடத்திக்கொண்டிருந்த டைரக்டர் கே.பாலசந்தருக்கு என் படம் பற்றி சேதி போக... அவரும் லேப்பில் படத்தைப் பார்த்திருக்கிறார்.
இந்த விஷயங்கள் எதுவும் தெரியாமல் நானும், நாயுடு சாரும் ஃபர்ஸ்ட் காப்பி பார்க்கப் போனோம்.
"இது சரியா இருக்குமா? நல்லா வந்திருக்குமா?' என்ற சந்தேகங்கள் எனக்கு எப்போதுமே வருவதில்லை. ஏனென்றால்... படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே முழுப்படமும் என் மனத்திரையில் படமாக ஓடிவிடும். அந்த நிலை வந்த பின்பே; மனக்கண்ணில் கண்டபடி காட்சிக் கோணங்களை வைத்து படப்பிடிப்பை நடத்துவேன்.
சாரதி ஸ்டுடியோ தியேட்டரில் படம் பார்த்தோம். படம் முடிந்ததும் ராமாநாயுடு என்னை மனம்திறந்து பாராட்டினார். எனக்கு முன்பே பாலசந்தரும் படத்தைப் பார்த்ததாகச் சொல்லி... என்னைப் பாராட்டினார். எனக்கே என் படம் சற்று வித்தியாசமாகவேபட்டது.
பாரதிராஜாவின் முதல் படமான "பதினாறு வயதினிலே' படத்தை மிட்லண்ட் தியேட்டரில் ரிலீஸ்பண்ண ஏற்பாடு செய் திருந்தார்கள். தியேட்டரைப் பார்வையிடப் போன பாரதிராஜா என் படத்தைப் பார்த்திருக்கிறார். என் பட எடிட்டர் பாஸ்கர்தான், பாரதிராஜா படத்திற்கும் எடிட்டர். அவரிடம்... "குகநாதன் நல்ல எழுத்தாளர்னு தெரியும். ஆனா, இந்தப் படத்தை அருமையா இயக்கியிருக்கார்'' எனச் சொல்லியிருக்கிறார்.
"பதினாறு வயதினிலே' படத்தை வெளியிட ஒப்பந்தம் போட்டுவிட்டதால் மிட்லண்ட் தியேட்டரிலிருந்து "மதுரகீதம்' படத்தை தூக்கவேண்டிய நிலை. இதனால் மீண்டும் மிட்லண்ட் தியேட்டரில் போய் படத்தைப் பார்த்திருக்கிறார் ஸ்ரீவித்யா. படம் தூக்கப்படும் கடைசி நாளான அன்றும்கூட ஹவுஸ் ஃபுல்.
படம் பார்த்துவிட்டு என் அலுவலகம் வந்த ஸ்ரீவித்யா, கண்கலங்கிய நிலையில்... "இன்னும் ஒரே ஒருவாரம் ஓடினால் நம்ம படம் நூறுநாள் ஆயிடும். நூறாவது நாள் வெற்றி தடைபடுதே... ஏதாவது செய்ய முடியாதா சார்!?'' என கேட்டார். எனக்கும் அந்த வருத்தம் இருந்தது.
"புரொடியூஸர் தெலுங்குக்காரர்... டைரக்டரா எனக்கு இது முதல் படம். படத்துல பெரிய ஹீரோ கிடையாது. அதுமட்டுமில்ல... நம்ம படம் பிளாக் அண்ட் வொய்ட்... லோ பட்ஜெட் படம். பெரிய அளவில் விளம்பரங்களோ, ரசிகர் மன்றங்களோ எதுவும் கிடையாதே...'' என எடுத்துச் சொன்னேன். ஸ்ரீவித்யா புரிந்துகொண்டார்.
பாலிவுட்டின் பிரபல நடிகையும் நானும் மட்டுமே... படம் பார்த்த அனுபவம்...!
(திரை விரியும்...)
படம் உதவி: ஞானம்
நான் இயக்கிய "மதுர கீதம்' படம் சென்னை மிட் லண்ட் தியேட்டரில் வெளியா னது. ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்று தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது. நடிகை சாரதா அவர்கள் படம் பார்த்துவிட்டு, தியேட்டரி-ருந்து நேராக என் அலுவலகம் வந்து பாராட்டியதோடு, என் படங் களில் நடிக்க விரும்புவதாகவும் சொன்னார். என் படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருந்ததால் அன்றைய முன்னணி நாயகிகள் பலரும் படத்தைப் பார்த்திருக் கிறார்கள்.