புதிய நாடாளுமன்றத்தில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் மே 28-ஆம் தேதி நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நடைபெற உள்ளது. இது ஒருபுறமிருக்க, புதிய நாடாளுமன்றத் திறப்புவிழாவினை 19 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக ஒருபக்கம் அறிவித்துள்ளதும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ff

இந்நிலையில் இந்திய சுதந்திரத்தினை அடுத்து அதிகார மாற்றத்தின்போது, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவிடம் அன்றைய கவர்னர் ஜெனரலான மவுண்ட்பேட்டன் பிரபு தமிழகத்தில் தயார் செய்யப்பட்ட தங்கத்தாலான செங்கோலை வழங்கியதாக அமித்ஷா தெரிவித்தார். மேலும், ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்துவதற்கு என்ன செய்வது என மவுண்ட்பேட்டன் நேருவிடம் கேட்க, நேரு அதுகுறித்து ராஜாஜி யிடம் கேட்டதாகவும், ஆட்சிமாற்றம் ஏற்படும் போது ராஜகுருவாக இருப்பவர் செங்கோலை புதிய மன்னருக்கு வழங்கி ஆசிர்வதிப்பார். அதுபோல நாமும் செய்யலாம் என யோசனை வழங்கியதாகவும், அதற்கேற்ப திருவாவடுதுறை ஆதினம் சடங்குகளைச் செய்து வழங்கிய செங்கோல் நேருவிடம் வழங்கப் பட்டதாகவும், இதனை உம்மிடி பங்காரு செட்டி சன்ஸ் உருவாக்கிய தாகவும் தெரிவித்தார்.

Advertisment

இந்தியா சுதந்திர மடைந்தபோது பல்வேறு மதத்தைச் சேர்ந்த வர்களும், ஆதீனம் மடத்தைச் சேர்ந்தவர்களும் நேருவுக்கு பரிசளித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட னர். அப்படி திருவாவடுதுறை ஆதினத்திலிருந்து ஒரு செங்கோல் பரிசளிக்கப்பட்டதும், அந்த புகைப்படமும்தான் இந்தப் ‘புதிய’ வரலாறாக உருவெடுத்து வருகிறது.

அந்த செங்கோல் தற்சமயம் அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருப்பதையறிந்து, அதனை செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவ மோடி திட்டமிட்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இதில்தான் நமக்குச் சில கேள்விகள் எழுகின்றன. மன்னர் ஆட்சிக்காலத்தில் செங்கோல் மாறுவதில் நியாயமிருக்கிறது. மக்களாட்சியில் செங்கோல் எதற்கு? மக்களாட்சியில் அசல் செங்கோல் வாக்குச் சீட்டு அல்லது மின்னணு வாக்குப் பதிவு எந்திரம்தான். தவிரவும், மார்க்சியப் பார்வையும், மதச்சார்பற்ற அணுகுமுறையும் கொண்ட நேரு, ஒரு சம்பிரதாயமாக தமிழகத்திலிருந்து செய்து கொடுத்த செங்கோலை பெற்றுக்கொண்டிருப் பாரேயன்றி, அதைப் பொருட்படுத்தியிருக்க மாட்டார். நாடாளுமன்றத்தில் அதன் அவசியம் இல்லை என்பதால்தான் அதை அருங்காட்சி யகத்துக்கு அனுப்பிவைத்திருப்பார்.

Advertisment

மேலும், அது சோழர்காலச் செங்கோல் இல்லை. அது உம்மிடி பங்காரு சன்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதை உருவாக்கிய உம்மிடி எத்திராஜூலுவும், உம்மிடி சுதாகரும் புதிய நாடாளுமன்றத் திறப்புவிழாவின்போது கௌரவிக்கப் படப் போகிறார்கள் என்பதே அதற்குப் போதுமான ஆதாரம். நாங்கள் சோழர் காலம் என்றது செங்கோல் என்ற பொருளை இல்லை,… கருத்தைச் சொன்னோம் எனக் கூறலாம்.

தற்போது ஆட்சியிலிருப்பவர்கள், செங்கோலை மீண்டும் கொண்டுவருவதன்மூலம் என்ன சொல்லவருகிறார்கள்? நாம் மீண்டும் மக்களாட்சியிலிருந்து மன்னராட்சி நடைமுறைக்குச் செல்லவிருக்கி றோம் என்பதன் குறியீடாக நாடாளுமன்றத்தில் அதனைக் கொண்டுவந்து நிறுவ விரும்புகிறார்களா? நீதி வழுவாத நடைமுறை உடையதாய் இவர்களது ஆட்சி திகழும் எனச் சொல்லவிரும்புகிறார்களா?

எனில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் தொடக்க விழாவின்போது அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த பட்டியலினத்தைச் சேர்ந்தவரான ராம்நாத் கோவிந்தைப் புறக்கணித்தார்கள். இன்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கான அழைப்பிதழில், இன்றைய குடியரசுத் தலைவரான பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவின் பெயர் இடம்பெறவில்லை. கட்சிகள் தாண்டி நாடாளுமன்றத்தை அனைவருக்கும் பொதுவான குடியரசுத் தலைவரால் திறக்கலாம் என்ற எதிர்க்கட்சிகளின் யோசனையைப் புறக்கணித்து மோடியே திறந்துவைக்கிறார். இப்படி முதல் குடிமகனுக்கே நீதி செய்யாதவர்களுக்கு எதற்கு செங்கோல்? என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.

dd

மோடி அரசு 2014-ல் வந்தது முதல் இந்தியாவெங்கும் ஒரு புதிய போக்கு உருவானது. அரசுத் திட்டங்களிலும் அரசு விளம்பரங்களிலும் எங்கெங்கும் மட்டுமீறி மோடியின் முகமே முன்னிறுத்தப்படும் போக்கு நடைமுறைக்கு வந்தது. மக்கள் பணத்தில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள இந்த நாடாளுமன்ற புதிய கட்டடத்தை, பிரதமர் மோடியின் சாதனையாக முன்வைக்க முயல்வதும் அத்தகையதே.

இத்தகைய போக்கை விமர்சித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், “"குடியரசுத் தலைவரை அழைக்காமல் நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழா நடத்துவது நாட்டின் உயரிய பதவிக்கு அவமானம் விளைவிப்பதாகும். நாடாளுமன்றம் அகங்காரம் என்ற செங்கல்லினால் கட்டப்பட்டவில்லை. மாறாக அரசியல் சட்ட மதிப்புகளின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது'’என விமர்சித்தார்.

ஜனாதிபதியை புறக்கணித்து திறப்புவிழா நடத்தும் மோடி அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதுமுள்ள 19 எதிர்க்கட்சிகள் அதிகாரப்பூர்வமாக

இந்த கட்டடத் திறப்புவிழாவை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளன. காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், சமாஜ்வாடி, என்.சி.பி. சிவசேனா, ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேசிய மாநாட்டுக் கட்சி, கேரள காங்கிரஸ் (எம்), விடுதலை சிறுத்தைகள் என கட்சிகளின் பெயர்கள் நீள்கின்றன.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “திறப்பு விழாவை புறக்கணிக்கவேண்டாம்” என எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை அழைத்தால் தீர்ந்துவிடப் போகிற விவகாரத்தில் சர்ச்சைக்கு நடுவில்தான் நாடாளுமன்றத்தைத் திறந்துவைக்கப் போகிறாரா மோடி!