காலம் மாறினாலும், தாங்கள் மாறாமல் பழைய ஞாபகத்தில் குழந்தைத் திருமணம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் சிதம்பரம் தீட்சிதர்கள். மூன்றாண்டுகளுக்கு முன்புகூட அப்படியொரு பால்யவிவாகம் நடந்ததை, சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் திருமண பத்திரிகையுடன் நக்கீரன் இதழ் பிரசுரித்தது.
இந்த நிலையில்தான் சமூக நலத்துறையினருக்கு, தீட்சிதர்களுக்கு இடையிலான கோஷ்டிப்பூசலாலும் வேறு பல அமைப்புகளாலும் கடந்த ஒரு மாதமாக சிதம்பரத்தில் நடந்த பால்ய விவாகம் குறித்த புகார்கள் வரத்தொடங்கின. அதன் பேரில் கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் ரம்யா உள்ளிட்ட அலுவலர்கள் சிதம்பரத்தில் முகாமிட்டு குழந்தைத் திருமணம் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kovil_25.jpg)
விசாரணையில், குழந்தைத் திருமணம் நடந்தது உண்மை என தெரியவரவே சம்பந்தப்பட்ட நடராஜர் கோவிலின் மூன்று தீட்சிதர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 5-க்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், அக்டோபர் 15-ஆம் தேதி மாலை நடராஜர் கோவில் தீட்சிதர்களின் தற்போதைய செயலாளர் ஹேமசபேச தீட்சிதர், அவரது மகளை குழந்தைத் திருமணம் செய்து வைத்ததாக, அவருடன் இரண்டு தீட்சிதர்களை கடலூர் மாவட்ட டெல்டா காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தினர். இதனையறிந்த மற்ற தீட்சிதர்கள் மாலை 6 மணி முதல்
இரவு 8 மணிவரை கீழவீதியில் போக்குவரத்தைத் தடுத்து தரையிலமர்ந்து மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர், அவர் களிடம் சட்டப்படிதான் நட வடிக்கை எடுக்கப்படுகிறது என கூறியும் கேட்கவில்லை. எனவே மறியலில் ஈடுபட்ட 7 தீட்சிதர் களை காவல்துறையினர் குண்டுக் கட்டாக வேனில் ஏற்றி மண்டபத் தில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து கீழசன்னதியில் குடும்பத்துடன் அமர்ந்து இரவு 2 மணி வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், "11 வயது குழந்தைக்கு திருமணம் செய்த வீடியோ, போட்டோ உள்ளது. தீட்சிதர்கள் சம்பந்தமாக 13 புகார்கள் வந்துள்ளது. 3 புகார்கள் மீது விசாரணை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. மற்ற புகார் களை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்''’என கூறினார்.
தீட்சிதர்களின் பால்ய விவாகத்துக்கு ஆதரவான போராட் டத்தில் கலந்துகொண்டு காவல் துறையை பணிசெய்யவிடாமல் தடுத்த பா.ஜ.க.வினர், தீட்சிதர்கள் உள்பட 28 பேர் மீது சிதம்பரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-காளிதாஸ்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-10/kovil-t.jpg)