பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையில் 281 தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்கள் 1 லட்சத்து 12 ஆயிரம் பேர் படித்து வரும் சூழ்நிலையில், அவர்களுக்குச் சொத்தாக இருப்பது இவர்களின் கல்வியேயாகும். ஆனால் இப்பள்ளிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, பத்தாம் வகுப்புகூடத் தேர்ச்சிபெறாத ஆசிரியர்கள் பலர் பணிபுரிந்து வருவதால். ஏழை எளிய மாணவர்களுடைய கல்வியறிவின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
2013-ம் ஆண்டு, சென்னை கல்வித்துறையில் முதல் மண்டல மேற்பார்வையாளர் ஆர்.விஸ்வ நாதன் சான்றிதழ்களை ஆய்வு செய்யும்போது இந்த மோசடியைக் கண்டறிந்தார். இடைநிலை ஆசிரியர் ஜஸ்டின், டி.ராஜாமணி உள்பட மொத்தம் 66 ஆசிரியர்கள் போலிச்சான்றிதழால் பணியாற்றும் மோசடியை வெளிக்கொணர்ந்தார். சான்றிதழ்களில் எஜிகேஷன் செகரெட்டரியின் கையொப்பம், சீல், ஒருவருக்கு ஒருவர் மாறுபடு கிறது. சான்றிதழில், பிறந்தநாள் கட்டத்திற்குக் கீழுள்ள கட்டத்தில் கவர்மெண்ட் ஹச்.எஸ் என்று ஊர்ப்பெயர் மட்டுமே வரும். ஆனால் ஜஸ்டினின் மார்க் சீட்டில் கவர்மெண்ட் ஹச்.எஸ். ஸ்கூல் என்று ஊர்ப்பெயர் வருகிறது. இது தொடர்பாக ஜஸ்டினிடம் கேட்டபோது, "நான் கன்னியாகுமாரி மாவட் டத்தில் கான்கிரிட்டியா பள்ளியில்தான் படித் தேன். அங்கு கொடுத்த மார்க் சீட்தான் இது. என்னுடைய இந்த மார்க்சீட்டும் விசாரணைக்குச் சென்று வந்துள்ளது'' என்றார்.
அப்போதைய கல்வி அலுவலர், இவர்களின் சான்றிதழ்களைச் சரிபார்ப்பதற்காக பள்ளிக் கல்வித் தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தார். அதில் 9 பேரின் சான்றிதழ்கள் போலியானவை என்று உறுதிசெய்து அவர்களின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களில் 8 ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப் பட்டபின்னர், முருகன் என்பவர் மட்டும் லஞ்சம் கொடுத்து நடவடிக்கையிலிருந்து தப்பி பணியிலிருக் கிறார். அதன்பிறகு 2016-ம் ஆண்டு, உதவி கல்வி அலுவலர் நளினிகுமாரி, ஆசிரியர் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கும்போது சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போலிச்சான்றிதழ் களைக் கொடுத்திருப்பது தெரியவந்து, அவர்களில் 46 பேருக்கு மெமோ வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி சாரணர் இயக்க அமைப்புச் செயலாளர் சிவக்குமார் தான் போலி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்துவந்துள்ளார். இவர் தற்போது பணி ஓய்வு பெற்றும் அதனைத் தொடர்ந்து செய்துவருகிறா ராம். இந்த சிவகுமார் மீது ஏற்கனவே இரண்டு பாலியல் புகார்கள் வீடியோ ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இவர் பணிபுரிந்த பெரம்பூர் பந்தர்காடன் சென்னை மேல்நிலைப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற சரவணன், சிவகுமாரின் முறை கேடுகளுக்குத் தடையாக இருந்தார். இதனால் சரவணன் மீது அவதூறு பரப்பினார்.
அந்தப் பள்ளிக்கு அருகிலுள்ள பழைய பேப்பர் கடைக்கு, அப்பள்ளியிலிருந்த சைக்கிள், லேப்டாப், பாடப்புத்தகங்களை முறைகேடாக விற்றதாக போலியாக ஒரு கடிதத்தைத் தயார் செய்து, சென்னை மாநகராட்சி விஜிலன்ஸ் அதிகாரிகள் அனுப்புவதுபோல அனுப்பி யுள்ளார். பின்னர், அந்த கடிதம் போலி என்பதையும், சிவகுமார் வீட்டிலுள்ள கணினியில்தான் கடிதம் டைப் செய்யப்பட்டது என்றும் சென்னை மாநகராட்சி விஜிலன்ஸ் ஆய்வாளர் இந்திராணி கண்டறிந்தார். அதன்பின் னும் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போலி ஆசிரியர்களுக்கும் கல்வி அதிகாரிகளுக்கு மிடையே லஞ்சத்தைக் கைமாற்றும் ஏஜென்டாக இவர் செயல்படுவதால் நடவடிக்கை பாயவில்லை'' என்கிறார்கள் மாநகராட்சி ஆசிரியர்கள்.
ஓய்வு பெற்ற கல்வித்துறை மேற் பார்வையாளர் விஸ்வநாதன் கூறுகையில், "நான்தான் போலி ஆசிரியர்கள் குறித்து 2013-ம் ஆண்டில் கண்டறிந்து 66 பேர் லிஸ்ட்டை கொடுத்தேன். சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில், பத்தாம் வகுப்பே முடிக்காத நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணியாற்றிவருகிறார்கள். சென்னை மாநகராட்சி மற்றும் கல்வித்துறை இரண்டையுமே பணத்தை வைத்து வாயடைத்து விடுவதே நடவடிக்கை எடுக்காதததின் காரணமாக உள்ளது. இதுகுறித்து, பெரிய அளவிலான விசாரணை ஆணையம் அமைத்து விசாரித்தால் கல்வித்துறை அதிகாரிகள் உள்பட பலரும் மாட்டுவார்கள். அப்போதுதான் தீர்வு கிடைக்கும்" என்றார்.
உதவி கல்வி அலுவலர் நளினிகுமாரியிடம் கேட்டபோது, "என்னுடைய ஜோனில் உள்ளவர்களை மட்டும் விசாரித்துள்ளேன். மற்றபடி எனக்கும் இதுக்கும் தொடர்பு இல்லை'' என்றார். கல்வித்துறை துணைஆணையர் சினேகாவிடம் கேட்டபோது, "இதுவரையிலும் இதுபோன்ற போலி ஆசிரியர்கள் மீது ஏதாவது வழக்கு தொடுக்கப் பட்டுள்ளதா என்பதை விசாரித்து, போலி ஆசிரியர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி நம்மிடம்... "இது மாணவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் விவகாரமாக இருப்பதால் இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். இதை சென்ற அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நக்கீரன் சுட்டிக்காட்டிய பிறகும், பணம் பாதாளம்வரை பாய்ந்ததால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்போது உள்ள புதிய ஆட்சி கல்விக்கு முக்கியத்துவம் அளித்துவரும் நிலையில், போலி ஆசிரியர்களைக் களை எடுப்பது மிகவும் அவசியமானதாகும்.