தனது கட்டுப் பாட்டில் அ.தி. மு.க.வை கொண்டு வந்ததன் மூலம் பல மாவட்டங்களில் புதிய பொறுப் பாளர்களை நிய மித்திருக்கிறார் எடப்பாடி. எடப் பாடியின் அரசியல் எதிரியான ஓ.பி. எஸ்.ஸின் சொந்த மாவட்டமான தேனியில், ஓ.பி.எஸ். ஸின் தீவிர ஆதரவாளரான சையதுகான் மாவட்டச் செயலாளராக இருந்துவந்தார். ஓ.பி.எஸ்.ஸுக்கும், இ.பி.எஸ்.ஸுக்கும் நடந்த அரசியல் மோதலில், தேனி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான கட்சிப் பொறுப்பாளர்களும், தொண்டர்களும் இ.பி.எஸ். பக்கம் சாய்ந்தனர். அதோடு ஓ.பி.எஸ்.ஸையும், மிச்சம் மீதியுள்ள அவருடைய ஆதரவாளர்களையும் ஓரங்கட்டிய துடன், அவர்களிடமிருந்த மாவட்டம், நகரம், ஒன்றிய கட்சிப் பொறுப்புகளையும் பறித்துத் தனது ஆதரவாளர்களுக்கு கொடுத்திருக்கிறார் இ.பி.எஸ்.
தேனி மாவட்டத்தில், பெரியகுளம், ஆண்டிப்பட்டி, போடி, கம்பம் என நான்கு சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே இருப்ப தால், கட்சி வளர்ச்சிக்காக ஆளுங்கட்சியான தி.மு.க.வில் இரண்டு தொகு திக்கு ஒரு மாவட்டச் செய லாளர் என வடக்கு மாவட் டத்திற்கு தங்க தமிழ்ச்செல்வன், தெற்கு மாவட் டத்திற்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினரான ராமகிருஷ்ணன் என இண்டு மாவட்டச் செயலாளர்களை நியமித்துள்ளனர். அதுபோல் அ.தி.மு.க.வும் தேனி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, பெரியகுளம், ஆண்டிப் பட்டி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதி களுக்கு கிழக்கு மாவட்டச் செயலாளராக முருக்கோடை ராமரையும், போடி, கம்பம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதி களுக்கு மேற்கு மாவட்டச் செயலாளராக கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையனை யும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எடப்பாடி நியமித்திருக்கிறார்.
அதைக்கண்டு முக்குலத்தோர் சமூகத்தில் இருக்கக்கூடிய பிரமலைக்கள்ளர் கள் பெரும் அதிருப்தியடைந்ததாகக் கூறப் படுகிறது.
இது சம்பந்தமாக கட்சிப்பொறுப்பி லுள்ள பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த சில ர.ர.க்களிடம் கேட்டபோது, "இந்த தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை முக்குலத் தோர் சமூகத்திற்கு அடுத்தபடியாக தாழ்த்தப்பட்டோர், கவுண்டர், நாயக்கர், பிள்ளைமார், செட்டியார், நாடார் உள்ளிட்ட சில சமூகத்தினரோடு, முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் வாழ்ந்து வருகிறார்கள்.
இதில் முக்குலத்தோர் சமூகத்திலேயே பிரமலைக்கள்ளர் தான் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். அதனால்தான் எந்த ஒரு அரசியல் கட்சியானாலும் மாவட்ட பொறுப்பை எங்களுக்குத் தருவார்கள். ஆளுங்கட்சியான தி.மு.க. கூட பிரமலைக் கள்ளரைச் சேர்ந்த மூக்கையா மற்றும் ஜெயக்குமாரை மாவட்டச் செயலாளராக நியமித்திருந்தது. அதைத்தொடர்ந்து தற் போது சிட்டிங் வடக்கு மாவட்டச் செயலாளராக தங்கத்தமிழ்ச்செல்வனை நியமித்திருக்கிறது.
ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போது தி.மு.க.விலுள்ள தங்கத்தமிழ்ச் செல்வன்தான் அ.தி.மு.க.வில் தொடர்ந்து மாவட்டச் செயலாளராக இருந்துவந்தார்.
ஓ.பி.எஸ்.ஸுக்கும், தங்கத்தமிழ்ச் செல்வனுக்கும், கருத்து வேறுபாடு ஏற்படவே, தங்கத்தமிழ்ச்செல்வன் தி.மு.க. விற்கு போய்விட்டார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளரான சையது கானை மாவட்டச் செயலாளராக கொண்டுவந்தார். அதைக்கண்டு முக்குலத்தோர் சமூகத்தினரே ஓ.பி.எஸ். மேல் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில்தான் ஓ.பி.எஸ். ஓரங்கட்டப்பட்டு எடப்பாடி கைக்கு கட்சி வந்தததன் மூலம் கட்சியிலுள்ள பிரமலைக்கள்ளர் சமூகத்தினர் எடப்பாடிக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள். அதைக்கண்ட எடப்பாடியும் கூட, 'உங்களுக்கு எப்பொழுதும் போல் கட்சியில் பொறுப்பு கொடுக்கப்படும்' என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, நகரம், ஒன்றியங்களில் எங்களுக்கு சில பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறார். ஆனால் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், முன்னாள் தேனி பாராளு மன்ற உறுப்பினர் பார்த்திபன், தேனி நகர செயலாளர் வக்கீல் கிருஷ்ணகுமார், பெரியகுளம் முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளரும் யூனியன் சேர்மனுமான லோகிராஜன் உட்பட சிலர், அப்பதவிக்காக முயற்சியெடுத்து வந்தனர்.
அப்படியிருந்தும்கூட, இரண்டு மாவட்டச் செயலாளர்களில் ஒரு மாவட்டச் செயலாளர் பதவியைக்கூட கொடுக்காமல், முக்குலத்தோர் சமூகத்தில் உள்ள மறவரான முருக்கோடை ராமரை கிழக்கு மாவட்டச் செயலாளராகவும், மதுரையில் அரசியல் செய்துகொண்டு தேனி பக்கமே சரிவர வராத கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ.வான ஜக்கையனை மேற்கு மாவட்டச் செயலாளராகவும் நியமித்திருக்கிறார் எடப்பாடி.
இதன்மூலம், இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள பிரமலைக் கள்ளர்களை, ஓ.பி.எஸ். புறக்கணித்தது போலவே எடப்பாடியும் புறக்கணித்து நோகடித்துள்ளார். ஓ.பி.எஸ். பதவி தராததால், எடப்பாடியாவது மதிப்பளித்து மாவட்டச் செயலாளர் பதவியைத் தருவாரென நம்பி, எடப்பாடி அணிக்கு வந்தவர்கள் தற்போது ஏமாற்றப்பட்டுள்ளனர். அதன் பாதிப்பு, வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். பிரமலைக் கள்ளர்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் அ.தி.மு.க. இழக்கும். எனவே சுதாரித்துக் கொண்டு, எங்களுக்கு முக்கிய பொறுப்புக்களைக் கொடுக்க எடப்பாடி முன்வர வேண்டும்'' என்று கூறினார்கள். இதன்மூலம் தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க.வின் வெற்றி கேள்விக்குறியாகி யுள்ளது!