cellphone

வேலியே பயிரை மேய்ந்த கதையைப் போல, பயணிகளை பாதுகாக்க வேண்டிய தமிழக இரயில்வே போலீúஸ பயணிகளிடம் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இது தொடர்பாக ஆதாரத்துடன் வழக்கறிஞர் இசக்கி என்பவர் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஜான்பால், பெரம்பூர் இரயில்வே காவல் நிலையத்தி-ருந்து, அயல் பணியாக சென்னை இரயில்வே காவல் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இயங்கிவரும் சைபர் செல் பிரிவில் எட்டாண்டுகளாக முதல் நிலை காவலராகப் பணியாற்றுகிறார்.

Advertisment

இவரது பணி, இரயில் பயணிகளிடம் காணாமல் போகும், திருடப்படும் செல்போன்களை, ஐ.எம்.இ.ஐ. நம்பரை வைத்து இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து துறைக்கு தெரிவிப்பதாகும். ஆனால் இவரோ, ஐ.எம்.இ.ஐ. நம்பரை வைத்து கண்டுபிடிக்கும் செல்போன்களை இவரே ஓ.எல்.எக்ஸ். ஆப் மூலமாக விற்பனை செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். மேலும் தனியார் டிடெக்டிவ் ஏஜென்சியிலுள்ள சிலருடன் தொடர்புகொண்டு, கால் ஹிஸ்டிரி (ஈஹப்ப் க்ங்ற்ஹண்ப்ள்)யை விற்பதாகவும் இவர்மீது புகாருள்ளது.

Advertisment

கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் திருட்டு வழக்கிலுள்ள சாம்சங் செல்போனை மீட்டு, யாருக்கும் தெரியாமல் ஓ.எல்.எக்ஸ். ஆப் மூலம் விளம்பரம் செய்து... சென்னை, நங்கநல்லூரை சேர்ந்த இம்மானுவேல் என்பவருக்கு 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

மேற்படி செல்போனின் ஐ.எம்.இ.ஐ. நம்பரை வைத்து விசாரணை செய்தபோது, அந்த செல்போன் இம்மானுவேல் என்பவரிடம் இருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை செய்தபோது, அந்த செல்போனை ஓ.எல்.எக்ஸ் ஆப் மூலம், காவலர் ஜான்பாலிடம் வாங்கியதாகத் தெரிவித்தார். இதையடுத்து, ஜான்பா-டம் விசாரணை மேற்கொண்டதில், பிடிபட்ட அவரோ விசாரணை நடத்தும் அதிகாரிகளிடம், ""நான் செய்தது தவறு. என்னை மன்னித்து விடுங்கள். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் சஸ்பெண்ட் செய்துவிடுவார்கள். என் குடும்பம் பாதிக்கும். என் குடும்பத்திலுள்ள அனைவரும் தற்கொலை செய்து கொள்வார்கள்'' எனக்கூறி கதறியதால், ஜான் பாலை மன்னித்துவிட்டு, அவருக்குப் பதிலாக வேறொரு வழக்கில் தொடர்புடைய ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவரின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனையும் வாங்கிக் கொடுத்துள்ளனர்.

அரசாங்கத்தை ஏமாற்ற வேண்டுமென்ற நோக்கத்தில், தனது குடும்பத்தை சென்னை காவலர் குடியிருப்பில் வைத்துக்கொண்டு,சென்னை தலைமையகத்தில் வேலை பார்த்துக்கொண்டு, ஓசூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு மாறுதல் மட்டும் கேட்டு, மீண்டும் ஓசூர் ரயில்வே காவல் நிலையத்திலிருந்து அயல் பணியாக இதே சைபர் செல் பிரிவில் பணிபுரிந்துகொண்டு, ஓசூர் ரயில்வே காவல் நிலையத்தில் வழங்கப்படும் அலவன்ஸ் தொகையை பெற்று வந்துள்ளார் ஜான்பால். இந்நிலையில் இவர் மீது சில புகார்கள் வர, ஓசூர் காவல் நிலையத்திலிருந்து பெரம்பூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, மறுபடியும் சென்னை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கே வந்துவிட்டார். காரணம், அவரை அங்கு மாற்றியவுடன் அவர் ஏற்கனவே பணிபுரிந்த சென்னை மாவட்ட ரயில்வே சைபர் செல் பிரிவில் பணிபுரிய ஆள் இல்லாதால் அங்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இவர் ஓசூர் ரயில்வே காவல் நிலையக் கணக்கில் சென்னையில் பணியாற்றிய 18 மாதங்களுக்கு அரசால் வழங்கப்படும் குளிர் மற்றும் மலைப்பிரதேசங்களுக்கான அலவன்ஸ் மாதம் ஒன்றிற்கு ரூ.4,750 மற்றும் ரூ.1,500-ம் சேர்த்து மொத்தம் ரூ.85,680-ம், மேலும் மாதம் ஒன்றுக்கு ரூ.1,500 வீதம் 6 மாதங்களுக்கு மொத்தமாக ரூ.9000 எனவும், ஆக மொத்தம் 94,680 ரூபாயை அரசை ஏமாற்றி பெற்று வந்துள்ளார். அவர் அரசை ஏமாற்றி வாங்கிய ஊக்கத்தொகைகளை திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

ஒரு அரசு ஊழியர் பணிபுரியும் காலத்தில் தன் பெயரிலோ, தன் மனைவி பெயரிலோ எந்த சொத்து வாங்கினாலும், அவற்றை பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும். அதேபோல, ஒரு சொத்தை தன் பெயரிலோ, மனைவி பெயரிலோ வாங்குவதற்கு காவலர்சார் நிலை நடத்தை விதிப்படி அனுமதி பெற வேண்டும். இவற்றில் அவர் எதுவுமே பின்பற்றவில்லை. கடந்த 20-1-2018 அன்று கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவில் குலப்புறம் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் சர்வே எண் 63/12ல் 7 சென்ட் இடத்தை 18 லட்சம் கொடுத்து தனது மனைவி டினுமோல் பெயரில் வாங்கியுள்ளார். இவர் வாங்கிய சொத்துக்கள் எதையும் பதிவு செய்யவில்லை. முன்அனுமதியும் பெறவில்லை.

காவலர் ஜான்பால் மீதான புகாரை விசாரித்த டி.எஸ்.பி. ரமேஷை தொடர்புகொண்டோம். போனை எடுக்கவில்லை. பொதுமக்களின் உடைமைகளைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பிலுள்ள ஒரு காவலர், இதுபோன்ற தில்லாலங்கடி திருட்டில் ஈடுபடுவதும், அப்பாவிகளைக் குற்றவாளிகளாகக் கைது செய்து சிறையில் அடைப்பதும் தடுக்கப்பட வேண்டும்.