மிழகத்தின் அரசியல் வரலாற்றையே மாற்றக்கூடிய கொட நாடு கொலை வழக்கு தற்பொழுது சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

நாம் கடந்த நக்கீரன் இதழில் ராங்கால் பகுதியில் கொடநாடு வழக்கு விசாரணை அதிகாரி மாற்றப்படப் போகிறார் என்றும் ஏற்கெனவே உளவுத் துறையின் ஐ.ஜி.யாக இருந்த ஆசியம்மாள் அந்தப் பொறுப்புக்கு வர இருக்கிறார் எனக் குறிப்பிட்டிருந்தோம். நாம் சொன்னது போலவே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை அதிகாரியாகவும் மேற்கு மண்டல ஐ.ஜி.யாகவும் இருந்த சுதாகர் ஐ.பி.எஸ். கொடநாடு வழக்கு விசாரணைப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அந்தப் பொறுப்பு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ff

Advertisment

ஆசியம்மாள் வசம் கொடநாடு வழக்கு விசாரணையை ஒப்படைக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது. அவரை அழைத்து காவல் துறை உயர் அதிகாரிகள் பேசினார்கள். அவரும் வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் சுதாகரிடம் விரிவாக ஆலோசனை செய்தார்.

ஆனால் இந்த செய்தி நக்கீரனில் வெளியாகியதால் ஆசியம்மாளுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்படவில்லை. ஆசியம்மாளுக்கு கொடநாடு வழக்கு விசாரணை மட்டுமல்ல, மேற்கு மண்டல ஐ.ஜி. பொறுப்பும் வழங்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், திடீரென தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. வசம் கொடநாடு வழக்கை ஒப்படைத்து விட்டது என்கிறது காவல்துறை வட்டாரம். ஏற்கெனவே பல வழக்குகளை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டிக்கு இந்த வழக்கு ஒரு பெரிய சவாலாகவே இருக்கும்.

அ.தி.மு.க.வின் முக்கியத் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்படுகிறார். அவரது உத்தரவின் பேரில் அமைச்சர் வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி ஆகியோருக்கு மிக நெருக்கமான கனகராஜ் மற்றும் அ.தி.மு.க. வர்த்தக அணிச் செயலாளராக இருந்த சஜீவன் ஆகியோர் கேரளாவைச் சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உட்பட பத்து பேருடன் சேர்ந்து கொடநாட்டில் கொலையும், கொள்ளையும் செய்தார்கள். இந்த கொடும் நிகழ்வை மறைப்பதற்காக கனகராஜ் கொல்லப்பட்டார். சயானை கொலை செய்ய நடந்த முயற்சியில் அவரது மகளும், மனைவியும் கொல்லப்பட்டனர். இப்படி மொத்தம் ஐந்து மரணங்கள் இந்த வழக்கில் சம்பந்தப் பட்டுள்ளது.

ff

Advertisment

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் சயானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இந்த வழக்கின் அனைத்துக் குற்றங்களும் எடப்பாடி பழனிச்சாமியின் கட்டளைப்படியே நடந்தன என சயான் வாக்குமூலம் அளித்திருந்தார்.

ஆனால், வழக்கை விசாரித்தவர்களில் பலர் எடப்பாடிக்கு நெருக்கமானவர்களாக இருந்தார்கள். நீலகிரி மாவட்ட உளவுப்பிரிவு ஆய்வாளர் சுபாஷினி, மேற்கு மண்டல டி.ஐ.ஜி.யாக இருந்த முத்துச்சாமி, வழக்கின் விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. சுரேஷ்குமார் ஆகியோர் எடப்பாடிக்கு நேரடியாக வழக்கு விசாரணை விவரங்களை தெரிவிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால், இந்த அதிகாரிகள் மேல் எந்த நடவடிக்கையும் தமிழகக் காவல்துறையால் எடுக்கப் படவில்லை. அவர்களை வழக்கு விசாரணையிலிருந்து மாற்றவும் இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் எடப்பாடிக்கு நெருக்கமாக இருந்தவரும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடியின் அனைத்து அசைவுகளையும் தெரிந்தவருமான ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. கட்சி மாறி தி.மு.க.வில் இணைந்தார். முதல்வர் ஸ்டாலினிடம் தனியாக நாற்பத்தி ஐந்து நிமிடம் அவர் பேசினார்.

dd

அப்போது அவர், "சயானின் வாக்குமூலம் உண்மைதான். எடப் பாடிதான் கொடநாட்டில் கொள்ளையடிக்க உத்தரவிட்டார். கொட நாட்டில் கொள்ளை யடிக்கப்பட்ட சொத்து ஆவணங்களை அ.தி.மு.க. தலைவர்களுக்கு எடப் பாடி பகிர்ந்தளித்தார். அதன்மூலம் அந்தத் தலைவர்களிடமிருந்து ஜெயலலிதா கைப்பற்றிய சொத்துக்கள் மீண்டும் அவர்கள் வசம் சென்று சேர்ந்தது. அதன் மூலம் அ.தி. மு.க.வில் எடப்பாடி ஒரு பெரிய தலை வராக உயர்ந்தார். இந்தக் கொள்ளைக் காக சஜீவன் மற்றும் அனுபவ் ரவி ஆகியோரை, நீலகிரி மாவட்ட காவல்துறை எஸ்.பி.யாக இருந்த முரளி ரம்பா மற்றும் கலெக்டராக இருந்த சங்கர் ஆகியோர் மூலம் எடப்பாடி பயன்படுத்தி னார்.

அ.தி.மு.க. அமைச்சர் வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன் ஆகியோர், இந்த வழக்கில் கேரள நாட்டு குற்றவாளிகளை தங்களுக்கு சொந்தமான இடத்தில் தங்க வைத்தார்கள். அங்கிருந்து தான் கனகராஜை கொலை செய்ய காவல்துறை படையொன்று ஏவப்பட்டது'' என விளக்கமாகச் சொன்னார் ஆறுக்குட்டி.

dd

இதைக் கேட்டுக்கொண்ட ஸ்டாலின், “போலீஸ் இதுவரை இந்த வழக்கில் என்ன கண்டுபிடித்திருக் கிறது?''”என மாநில உளவுப்பிரிவுத் தலைவர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் அறிக்கை கேட்டார். அவர், “இதுவரை எடப்பாடிக்கு எதிராக பெரிய கண்டுபிடிப்புக்கள் எதையும் போலீசார் கண்டு பிடிக்கவில்லை. எனவே, சுதாகரை விசாரணைப் பொறுப்பிலிருந்து மாற்றிவிட்டு ஆசியம்மாளை அவரது பதவியில் அமர்த்தலாம்” என பரிந்துரை செய்தார்.

இந்தத் தகவல் வெளியாகி விட்டது. அதனால் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. சி.பி.சி.ஐ.டி.யில் தற்பொழுது டி.ஜி.பி.யாக ஷகில் அக்தர் இருக்கிறார். அவர் இந்த மாதம் ஓய்வு பெறுகிறார். ஐ.ஜி.யாக இருக்கும் நிர்மல்குமார் ஜோஷி மீது குட்கா ஊழல் வழக்கு புகார் உள்ளது.

மற்றபடி பெரிய அளவுக்கு புகழ்பெற்ற அதிகாரிகள் சி.பி.சி.ஐ.டி.யில் இல்லை. ஒரு காலத்தில் துர்க்கையாண்டி, நல்லம நாயுடு எனத் திறமையான அதிகாரிகள் சி.பி.சி.ஐ.டி.யில் இருந்தனர். அவர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு, டான்சி வழக்கு ஆகியவற்றில் தண்டனை பெற்றுத் தந்தார்கள்.

dd

ஜெ. மட்டுமல்ல, மதுசூதனன், செல்வகணபதி என பலரை சிறைக்கு அனுப்பியது சி.பி.சி.ஐ.டி.தான். இன்று போதிய ஆட்கள் இல்லாமல் எலும்பும் தோலுமாக காணப்படும் சி.பி.சி.ஐ.டி., கொடநாடு வழக்கை எப்படி கையாளப் போகிறது என்கிற கேள்வி எழுந் துள்ளது.

அரசின் இந்த நகர்வு எடப் பாடியை சந்தோசம் அடையச் செய் துள்ளது. ஏனென்றால், முதல்வருக்கு அனுப்பப்பட்ட கொடநாடு வழக்குப் பற்றிய உளவுத்துறை அறிக்கையை எடப்பாடி நகல் எடுத்துப் படித்து விட்டார். அதனால் அவர் உற்சாகத்தில் இருக்கிறார் என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

_____________

இறுதிச்சுற்று!

உண்ணாவிரதப் போராட்டம்!

ff

ஆசிரியர் தேர்வில் வெற்றிபெற்ற ஆசிரியர்கள், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி அனைவருக்கும் பணி வழங்கக் கோரி வள்ளுவர் கோட்டத்தில் 3-10-2022- திங்கள் அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மறு நியமன போட்டித் தேர்வு என்ற அரசாணை எண் 149- நீக்கவேண்டும். 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக் களித்தபடி ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றவர்கள் அனை வருக்கும் பணி வழங்கவேண்டும். பணி நியமனத்தின்போது வயதைக் கருத்தில் கொண்டு, மீண்டும் வயதுத் தளர்வு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் போராட்டக் காரர்களால் முன்வைக்கப்பட்டன.

-மணி