சேலத்தில் அமையவிருக்கும் ஜவுளிப் பூங்கா மூலம் சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான கனிமங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளி (டெக்ஸ் டைல்) ஏற்றுமதி வர்த்தகத்தில் தமிழ்நாட்டின் ஜவுளி உற்பத்திக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இதனால் ஜவுளித் துறையை மேம்படுத்தவும், அதன் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத் துச் செல்லவும் தி.மு.க. அரசு பல திட்டங்களை நடை முறைப்படுத்துவதில் கவனம் செலுத்திவருகிறது.

salem

தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் மதிப் புடைய பொருளாதார மாநிலமாக மாற்றுவதே முதல்வர் ஸ்டாலினின் குறிக்கோள். பல்வேறு நிதி நெருக்கடிகள் சூழ்ந்திருக்கும் நிலையிலும் இதற்காக பல முயற்சிகளை எடுத்துவருகிறார் ஸ்டாலின்.

Advertisment

அந்த வகையில், தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என 2022-ல் அறிவித்திருந்தார் முதலமைச்சர். அதன்படி, 2023-2024 நிதியாண்டிற் கான பட்ஜெட்டில், சேலத்தில் 119 ஏக்கர் பரப் பளவில் சுமார் 880 கோடி ரூபாய் மதிப்பில் மிக பிரமாண்டமான ஜவுளிப் பூங்காவானது ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் நிதி உதவியுடனும், தனியார் தொழில் முனைவோர்களின் பங்களிப்புட னும் அமைக்கப்படும் என்று தெரிவித்தார் அன் றைய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

அதற்கான பணிகள் துவங்கப்படாத நிலையில், 2024-2025 நிதியாண்டுக்கான நடப்பு பட்ஜெட்டை வாசித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சேலம் மற்றும் விருதுநகரில் 2,483 கோடியில் புதிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

சேலத்தில் அமையவிருக்கும் இந்த ஜவுளி பூங்கா திட்டத்தில்தான் தற்போது சர்ச்சைகள் வெடிக்கின்றன.

Advertisment

sa

இதுகுறித்து தமிழக அரசின் நிதித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘"தமிழக அரசின் கைத்தறி மற்றும் ஜவுளித்துறையின் மூலம் சேலத்தில் அமையவிருக்கும் ஒங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டம், இத்தொழிலின் ஏற்றுமதி வர்த்த கத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும். இத்திட்டத் தை நடைமுறைப்படுத்த சேலத்தில் ஜாகீர்அம்மா பாளையத்தில் 119 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட் டது. அதற்கான ஆயத்தப் பணிகளும் தொடங்கின.

குறிப்பாக, இந்த திட்டத்தில் ஜவுளி உற்பத்திக் கான அனைத்தை வகையான கட்டடங்களைக் கட்டும் பொறுப்பு மட்டும் தனியாரிடம் கொடுக் கப்பட்டது. அந்த வகையில், பர்ன் ஸ்டேண்டர்ட் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட்டது. ஜவுளிப் பூங்கா அமைப்பதற் காக தேர்வு செய்யப்பட்டுள்ள 119 ஏக்கர் நிலமானது மேக்னசைட் மற்றும் டுயூனைட் கனிமங்கள் கொண்ட பூமி. உலகஅளவில் பெரும் மதிப்பு கொண்ட தாது, கனிமங்கள் மேக்னசைட், டுயூனைட். இந்தியாவிலேயே அதிக அளவிலும் தரமாகவும் இந்த கனிமங்கள் கிடைப்பது சேலத்தில் மட்டும்தான். இந்த கனிமங்களுக்கு சர்வதேச மார்க்கெட்டில் டிமாண்ட் அதிகம்.

ஜவுளிப் பூங்காவுக்காக கட்டடம் கட்டும் தனியார் நிறுவனத்திற்கு இந்த நிலத்தில் விலைமதிப்புமிக்க கனிமங்கள் இருப்பது தெரியும். ஏனெனில் இந்த நிறுவனம் சுரங்கத் தொழிலில் (மைனிங்) ஈடுபட்டு வருகிறது. ஜவுளி பூங்காவிற்காக கட்டடம் கட்டுவதற்காக நிலம் தோண்டப்படும் போது வருகிற மணல்களில் கனிமங்களைத் தனியா கப் பிரித்து அதனை கடத்தி விற்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏற்கனவே இந்த நிறுவனம் மைனிங் லீஸ் லைசன்ஸ் எடுத்து வைத்திருக்கிறது. ஆனால், அதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் தனது மைனிங் லீஸ் லைசன்சை சாயில் ரெஃப்ரக்டரி கம்பெனி லிமிடெட்டுக்கு மாற்றித்தர சேலம் கலெக்டர் கார்மேகத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறது.

ss

இந்த நிலையில் லீஸ் லைசன்ஸை மாற்றித்தரவும், நிலத்தில் கனிமங்கள் இருப்பதால் தடையின்மை சான்றிதழ் (என்.ஓ.சி.) வழங்கவும் தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் கமிஷனரிடம் அனுமதி கேட்டு கடந்த 2022-ல் கடிதம் அனுப்பப்படுகிறது. அன்றைக்கு இத்துறை யின் கமிஷனராக இருந்த ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ்., இதனை முழுமையாக ஆய்வு செய்திருக்கிறார்.

அதனடிப்படையில், ஜவுளிப் பூங்காவிற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் சுமார் 119 ஏக்கர் நிலத்தில் விலை மதிப்புமிக்க மேக்னசைட், டியூனைட் கனிமங்கள் இருக்கின்றன. இதன் மதிப்பு குறைந்தபட்சம் 3,860 கோடிகள். அந்த வகையில் சுமார் 4,000 கோடி மதிப்பிலான இந்த கனிமங்கள் அரசின் சொத்து. கனிமங்கள் நிறைந்த இந்த நிலத்தில் ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கு பதில், சேலத்தில் வேறு நிறைய இடங்கள் இருப்பதால், அந்த இடங்களை ஆய்வு செய்து அதில் ஒன்றை ஜவுளிப் பூங்கா அமைக்க தேர்வு செய்யலாம் என்று தமிழக அரசின் உயரதிகாரிகளுக்கு கடிதம் எழுதியதுடன் என்.ஓ.சி. தர மறுத்துவிட்டார் ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ்.!

ஆனால், இதனை உயரதிகாரிகள் புறந் தள்ளியதோடு தங்களின் அதிகாரத்தைப் பயன் படுத்தி துறையின் சார்பில் என்.ஓ.சி. வழங்கினர். ஆனாலும் சில சிக்கல்கள் இருந்ததால் கடந்த 18 மாதங்களாக கிடப்பில் இருந்த இந்த திட்டத்தில் தற்போது வேகம் காட்டப்படுகிறது. அதேசமயம், ஜவுளிப் பூங்கா திட்டத்தில் கட்டடம் கட்டப்படும் அனுமதியை தனியார் நிறுவனம் மேற்கொள்ள விருப்பதால் சுமார் 4,000 கோடி மதிப்பிலான கனிமங்கள் கொள்ளை போகப்போகிறது''’என்று சுட்டிக்காட்டுகிறார்கள் தமிழக அரசின் நிதித்துறையினர்.

இந்த திட்டம் குறித்து அரசின் சுரங்கத்துறை தரப்பில் விசாரித்தபோது, ‘’"ஜாகீரம்மாபாளை யத்தில் ஒதுக்கப்பட்ட நிலத்தில் கனிமங்கள் இருப்ப தால் என்.ஓ.சி. வழங்க ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ். மறுத்த நிலையில், கனிமங்கள் கொள்ளைபோகாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குங்கள் என அவருக்கு மேலதிகாரிகள் உத்தரவிட்டனர்.

ss

இதனையடுத்து, கட்டடம் கட்டும் பணிகளுக் காக நிலம் தோண்டப்பட்டு மணல் அள்ளப்படும் வேலைகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக் கக் கூடாது. தமிழக அரசின் மேக்னசைட் நிறுவனம் கனிமங்களை கையாளும் பொறுப்பினை மேற்கொள்ளலாம். தோண்டப்படும் மணலிலிருந்து கனிமங்களைப் பிரித்து அதனை தமிழக அரசே மேக்னசைட் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யலாம். இதன்மூலம் அரசுக்கு 3,860 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்பதையும், எப்படி, எந்தெந்த வகைகளில் அவை கிடைக்கும் என்பதையும் பட்டியலிட்டு யோசனை தெரிவித்திருக்கிறார் ஜெயகாந்தன்.

அதாவது, மேக்னசைட் கனிமங்களை கையாள்வதற்காகவே சேலத்தில் தமிழக அரசுக்கு சொந்தமாக மேக்ன சைட் எனும் நிறு வனம் இருக்கிறது. அந்த நிறுவனத்தை ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டத் தில் ஈடுபடுத்தினால் கனிமங்கள் கொள்ளை போகாமல் தடுக்கப் படுவதுடன் அரசுக் கும் வருவாய் கிடைக்கும் என்பதற்காகவே இந்த யோசனை தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதனை ஏற்பதற்கு பதில், சுரங்கத்துறையிலிருந்து வேறு துறைக்கு அவரை மாற்றிவிட்டனர். அதன்பிறகு நிர்மல்ராஜ், பூஜா குல்கர்னி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சுரங்கத்துறையின் ஆணையராக அடுத்தடுத்து நியமிக்கப்பட்டும் ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணிக்காக எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இத்தனைக்கும் சுரங்கத்துறையின் ஆணையராக இருந்த பூஜா குல்கர்னியிடம் மேக்னசைட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவி கூடுதலாகக் கொடுக்கப்பட்டி ருந்தது. ஆனாலும் ஆக்சன் எடுக்கப்படாமல், தனியாரிடம் ஒப்படைப்பதற்கு வசதியாகவே காலம் கடத்தினர். சமீபத்தில், சுரங்கத்துறையின் ஆணையர் பதவியிலிருந்து பூஜா குல்கர்னி மாற்றப்பட்டார்.

ஆனால், மேக்னசைட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவி இப்போதும் பூஜா குல்கர்னியிடம் தான் இருக்கிறது. அதேபோல, சுரங்கத் துறையின் ஆணையராக தற்போது இருக்கும் சரவணவேல்ராஜ் ஐ.ஏ.எஸ்.சும், தமிழக அரசின் மேக்னசைட் நிறு வனத்துக்கு இந்த பணிகளை மாற்ற முயற்சிக்க வில்லை. இதுமட்டுமல்ல; ஜவுளித்துறையின் கமிஷனராக வள்ளலார் ஐ.ஏ.எஸ். கடந்த 2 வருடங்களாக இருந்து வருகிறார். அவரும் இந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தை அமைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. காரணம், சம்பந்தப்பட்ட நிலத்தில் கனிமங்கள் இருப்பதும், அந்த கனிமங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்படக்கூடாது என்பதாகவும் இருக்கலாம்.

ஏற்கனவே கடந்த காலங்களில், தமிழக அரசின் கனிமவளத்துறையின் சேர்மனாக இருந்தவர் வள்ளலார். அதனால், கனிமங்களின் மதிப்பு, அதன்மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் குறித்தெல்லாம் அவருக்குத் தெரியும். அதனால்கூட பூங்கா விசயத்தில் அமைதியாக இருந்திருக்கலாம். ஆனாலும், இவர் ஆக்ஷன் எடுத்திருக்க வேண்டும்.

கனிமங்களில் அரசுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் மேக்னசைட் நிறுவனத்துக்கு பணிகளை மாற்றியமைக்காமல் தனியார் நிறுவனத்திடமே ஒப்படைக்க அதிகாரிகள் பலரும் திட்டமிடுவதால்தான் ஜவுளி பூங்கா திட்டம் கடந்த 18 மாதங்களாக கிடப்பில் கிடக்கிறது. இந்த திட்டத்தில் விரைந்து அரசு முடிவெடுக்க வேண்டும்''‘என்கிறார்கள் அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறையினர்.

இந்த நிலையில், சேலத்தில் ஜவுளிப் பூங்கா திட்டத்தை அமல்படுத்துவதற்காக நிலம் தோண் டப்படும் பணிகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கக்கூடாது என கடுமையாக எதிர்த்த ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ்.சையே ஜவுளித்துறை கமிஷனராக சமீபத்தில் நியமித்திருக்கிறார்கள். இதற்காக வள்ளலார் ஐ.ஏ.எஸ். மாற்றப் பட்டுள்ளார்.

அரசுக்கு சொந்தமான 4,000 கோடி மதிப்பு மிக்க கனிமங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப் பட்டால் தி.மு.க. அரசுக்கு கெட்டபெயரை உரு வாக்கும் என்கிறார்கள் நேர்மையான அதிகாரிகள்.