ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக அண்ணாமலை போட்ட நாடகம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
அண்ணாமலைக்கு அவரது நிகழ்ச்சிகளுக் காக மத்தியில் உள்ள பா.ஜ.க. லட்சக்கணக்கில் நிதி கொடுத்து வருகிறது. அண்ணாமலை வார் ரூம் உட்பட பல விஷயங்களை உரு வாக்கி செயல்பட்டு வந்தார். அண்ணாமலையின் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் சுமார் 1 கோடி ரூபாய் செலவில் நிதி அளித்து வந்தது. தற்பொழுது இனிமேல் அதுபோல நிதி கொடுக்க முடியாது என மத்திய பா.ஜ.க. அறி வித்துவிட்டது. அண்ணாமலை தனக்கு கொடுக்கப்படும் நிதியை கட்சியின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தாமல் சுயநல விஷயங்களுக்காகச் செலவு செய்கிறார் என கட்சி மேலிடத்திற்கு சென்ற புகாரால், அளித்துக்கொண்டிருந்த நிதியை நிறுத்தி விட்டார்கள். இது அண்ணாமலையை கடுமையாக பாதித்துள்ளது. கட்சிக்காரர்களி டம், எனக்கு நிதி வசூலித்துத் தாருங்கள் என அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.
பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார் என அமர்பிரசாத் ரெட்டி மூலம் நிதி வசூல் செய்தார். யாரும் அண்ணாமலைக்கு நிதி கொடுக்கத் தயாராக இல்லை. பிரதமர் ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்பதை யாரும் நம்பத் தயாராக இல்லை. இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்தத் தேர்தலைப் பற்றி கடலூரில் கூடிய பா.ஜ.க. செயற் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. பா.ஜ.க.வினர் ஓ.பி.எஸ்.ஸிடம் ரகசிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஓ.பி.எஸ்.ஸும் பா.ஜ.க.வின் சார்பாக குருமூர்த்தியும் சந்தித்து பேசினார்கள்.
பா.ஜ.க. சார்பில் போட்டியிட எதிர்ப்பு இல்லையென ஓ.பி.எஸ்.ஸை சொல்லவைத் தார்கள். ஏ.சி.சண்முகத்திற்கு நெருக்கமான அவரது சமூகத்தைச் சார்ந்த ஒருவரை வேட்பாளராக்க முடிவு செய்தனர். ஏ.சி.சண் முகத்திடமிருந்து ஒரு பெரிய தொகை அண்ணா மலைக்கு வழங்கப்பட்டது. அத்துடன் ஏற்கனவே எம்.பி. தேர்தலில் எம்.பி.யாக்குகிறேன் என பா.ஜ.க. வின் பெண் எம்.எல்.ஏ.வான சரஸ்வதியின் உறவினரை தயார் செய்து வைத்திருந்தார்கள். அவரை நிறுத்தினால் கொங்கு வேளாளர் ஓட்டு கிடைக்குமெனச் சொன்னார்கள். ஏற்கனவே "எம்.பி. தேர்தலில் போட்டியிட வைக்கிறேன்' என 10 கோடி ரூபாய் அவரிடமிருந்து பெற்றிருக்கிறார் அண்ணாமலை. அத்துடன் இந்த சட்டடமன்ற இடைத்தேர்தலில் உங்களை போட்டியிட வைக்கிறேன் என கலெக்சன் பார்த்துள்ளார். இப்படியாக, கொங்கு மண்டல பகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக உங்களை நிறுத்துகிறேன் என அண்ணாமலையும் அமர்பிரசாத் ரெட்டியும் வசூலித்த தொகை சுமார் 100 கோடி என்கிறார் கள் பா.ஜ.க.வினர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் செங்குந்த முதலியார்கள் அதிகம். 15% வரும் செங்குந்த முதலியார்களைத் தொடர்ந்து கவுண்டர்கள் 10% பேர் வருகிறார்கள். மைனாரிட்டிகள் 30% பேர் இருக்கிறார்கள். அனைத்துப் பிரிவு மக்களிடமும் வசூல் செய்தார் அண்ணா மலை. ஆனால் அண்ணாமலையின் வேட்பாளர் தேர்வுக்கு அமித்ஷா ஓ.கே. செய்ய மறுத்துவிட்டார். அதனால் அண்ணாமலையிடம் கொடுத்த பணத் தை திருப்பிக் கேட்டு பணம் கொடுத்த வர்கள் நிற்கிறார்கள் என்கிறது பா.ஜ.க. வட்டாரம்.