பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்பு பிரமுகர் களுக்கு வழங்கப்பட்டி ருக்கும் போலீஸ் பாதுகாப்பை விலக்கிகொள்ள வேண்டுமென்று கிறிஸ்தவ அமைப் பினர் குரல் எழுப்பியிருக்கும் நிலையில்... "சில இந்து அமைப்பின ரால் உயிருக்கு ஆபத்து' என குமரி மாவட்டம் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியின் நிர்வாகி பாலபிரஜாபதி அடிகளாருக்கு தமிழக காவல்துறை, போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கருவறையில் கடந்த ஜூலை 2-ம் தேதி திடீரென்று தீ பிடித்தது. இதைத் தொடர்ந்து கோயிலில் தேவபிரசன்னம் நடத்தவேண்டும் என்று பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் தேவசம்போர்டை வலியுறுத்தி வந்தனர்.

dd

இந்த நிலையில்... சாமித்தோப்பு அன்புவனத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பால பிரஜாபதி அடிகளார், "மண்டைக்காடு கோயில் என்பது பருவமடைந்த திருமணமாகாத ஒரு பெண்ணின் கல்லறைதான். அந்த பெண்ணின் முன்னோர்கள் வழிபட்டு வந்த ஸ்தலம்தான். எனவே அதற்கு தேவபிரசன்னம் பார்த்தது தேவை யில்லாத ஒன்று'' என ஒரு கருத்தை பதிவிட்டார். இது பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதோடு, பாலபிரஜா பதிக்கு எதிராக மாவட்டம் முழுவதும் எதிர்ப்புகளும் கிளம்பியது. அவரை கைது செய்ய வேண்டும் என தென்தாமரைகுளம் போலீசில் பா.ஜ.க. சார்பில் புகார் கொடுத்தனர். புகாரில் நம்பகத்தன்மை இல்லை என போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங் களிலும் இந்து அமைப்பு கள் சார்பில் புகார் கொடுத்தும் பாலபிரஜாபதி மீது நடவடிக்கை எடுக்க வில்லை.

Advertisment

பா.ஜ.க. வழக்கறி ஞர்கள் பிரிவு சார்பில் தென்தாமரைகுளம் சந்திப்பில் போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் "பாலபிரஜாபதி அடிகள், பிற மதத்தினருடன் கூட்டுவைத்து செயல்படுகிறார்' என இந்து அமைப்புகள் குற்றம்சாட்டியதோடு அவரை இந்து வழிபாட்டுத் தலங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என கடும் எதிர்ப்பைக் காட்டினார்கள்.

இந்தநிலையில் நம்மிடம் பேசிய தமிழ்நாடு நாடார் மகாஜன சங்க தலைவர் கருங்கல் ஜார்ஜ்... "பாலபிரஜாபதி அடிகளார் நடுநிலையான பொதுமனிதர். அதனாலதான் தமிழக அரசின் "கோட்டை அமீன் விருது' அவரைத் தேடி வந்தது. மண்டைக்காடு குறித்து அவர் அறிந்த ஓரு கருத்தை பதிவிட்டதற்காக இந்து அமைப்பைச் சேர்ந்த நெல்லை மணிகண்டன், பாலபிரஜாபதி அடிகளாருக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் அவருக்கு பாதுகாப்பு கேட்டு நான் டி.ஜி.பி., உள்துறை செயலாளருக்கு மனு கொடுத்திருந்தேன் அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பால கிருஷ்ணனும், பாலபிரஜாபதி அடிகளாருக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தார். அதன் அடிப்படையில்தான் தற்போது அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்க பட்டிருக்கிறது'' என்றார்.

Advertisment

ii

இது குறித்து பாலபிரஜாபதி அடிகளாரிடம் நாம் கேட்ட போது... "நான் எந்த மதத்தையும் குறித்தோ, அரசியல் கட்சிகளை குறித்தோ எந்த கருத்துகளையும் பேசியது கிடையாது. மண்டைக் காடு பற்றி பேசும்போது "ஒரு வரலாறு இப்படிச் iiசொல்லுகிறது' என்றுதான் அதை பதிவு செய்தேன். அதை தவறுதலாகப் புரிந்துகொண்டனர். இதனால் எனக்கு போனிலும், மறைமுக மாகவும் கொலை மிரட்டல் வந்தது உண்மைதான். அதற்காக நான் புகார் கொடுக்கவோ, பாதுகாப்பு கேட்கவோ இல்லை. என்னுடைய நலன் விரும்பிகள் வைத்த கோரிக்கையை ஏற்று காவல்துறை இரண்டு போலீசாரை பாது காப்புக்கு தந்திருக்கிறார்கள். இதைக்கூட நான் சிரமமாகத்தான் கருதுகிறேன்'' என்றார்.

இது குறித்து பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பினர் கூறும்போது... "லட்சக்கணக்கான பக்தர்களைக் கொண்ட மண்டைக்காடு பகவதி அம்மன் வரலாறு பாலபிரஜாபதிக்கு தெரியாமல் இல்லை. அப்படியிருக் கையில் வேண்டுமென்றேதான் திரித்துக் கூறியிருக்கிறார். இதைத்தான் கண்டித்தோமே தவிர, அவருக்கு யாரும் மிரட்டல் விடுக்கவில்லை. காவல் துறையை ஏமாற்றி பாதுகாப்பை வாங்கியிருக்கிறார்'' என்றனர்.

பாலபிரஜாபதிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியிருப்பது குறித்து அகில இந்திய கிறிஸ்தவர் முன்னேற்ற சேனை தலைவர் வழக்கறிஞர் தியோடர் சாம் கூறும்போது.... "மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து தனிநபருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்திருப்பது குமரி மாவட்டத்தில்தான் அதிகம். இந்த மாவட்டத்தில் இந்து -கிறிஸ்தவர்கள் பிரச்சினை என்பது அடிக்கடி நிகழ்கிறது. அதற்கு கிறிஸ்தவ பாதிரியார்களுக்கோ அதன் மத தலைவர்களுக்கோ போலீஸ் பாதுகாப்பு கொடுத்தது இல்லை, அவர்கள் கேட்டதும் இல்லை'' என்றார்.

இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசில் விசாரித்தபோது, "பாலபிரஜாபதிக்கு மிரட்டல் வந்ததையடுத்துதான் உள்துறையின் உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை போலீசார் பாதுகாப்பில் இருப்பார்கள்'' என்றனர்.