யினாரை விடுங்க, வானதி சீனிவாசன் உள்பட பலபேர் போட்டியில் இருந்தார் கள். யார் மேலேயும் டெல்லிக்கு நம்பிக்கை வரவில்லையா?

வானதி சீனிவாச னுக்கு அவ்வளவுதான். இனி எம்.எல்.ஏ. சீட் கிடைப்பதே சந்தேகம் தான். கட்சியில் பெரிய அளவில் பதவிகளெல்லாம் வராது. அவுங்களுக்கு நெகட்டிவான இமேஜ் நிறைய டெல்லிக்கு போயிருக்கிறது. பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவராக இருக்கிறார்கள் அவ்வளவுதான். லலிதா குமாரமங்கலம் பெரிய பதவியில் இருந்தார். அதற்குப்பின்னர் என்ன பதவி வந்தது. ஸ்மிருதி ராணி 10 வருடம் அமைச்சராக இருந்தவர், அவரையே ஓரமா உட்கார வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு வேண்டுமென்றால் தூக்கி ஆடுவார் கள். வேண்டாமென்றால் தூக்கிப் போட்டுவிடு வார்கள். 2026 வரைக்கும் இவர் (மா.த) தொடர்வார். ஏனென்றால் யாரை நியமிப்பது என்ற குழப்பம்தான். டெல்லியில் இவருக்கு மரியாதை இல்லை. இவருக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் குறைந்துவிட்டது. கை, கால்களை அமுக்கிக்கிட்டு உட்காரு, நான் சொல்றத கேளு என்று சொல்லிவிட்டார்கள். அதனால்தான் இதனைப் பயன்படுத்தி தி.மு.க. காய் நகர்த்தப் போய்தான் செந்தில்பாலாஜி வெளியே வரக்கூடிய சூழ்நிலை உருவாகிறது.

ss

மா.தலைவர் தன் இருப்பை காட்டிக் கொள்ள எதையாவது பேசுவார். எடப்பாடி மேல் அவர் கடுமையான விமர்சனம் வைப்பதே எனக்கு அரசியலாகத் தோன்றுகிறது. அதேபோல மத்திய அரசுக்கு எதிராக செய்திகள் வரும்போதும் அதனை திசை திருப்புவதில் திறமையானவர் மா.தலைவர். கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவில் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டார். அந்த விழாவில் பா.ஜ.க.வினர் கலந்துகொண்டனர். இதனை தி.மு.க.-பா.ஜ.க. உறவு அம்பலமானது என அ.தி.மு.க. கையிலெடுத்தது விவாதமானது. இதனை திசை திருப்பவே எடப்பாடியை தாக்கிப் பேசினார் மா.தலைவர். அ.தி.மு.க.வும் எடப்பாடியை இப்படி பேசுவதா என மா.தலைவரின் உருவ பொம்மையை எரிப்பது, ஆர்ப்பாட்டம் நடத்தி, தேவையில்லாமல் மா.தலைவரை வளர்த்துவிட்டு, ராஜ்நாத்சிங் வந்த விஷயத்தையே விட்டுவிட்டனர்.

Advertisment

டெல்லி பா.ஜ.க., தி.மு.க.வை சீண்டமாட்டார் கள், வம்பிழுக்கமாட்டார்கள். கடந்த நாடாளு மன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க.வை இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். பா.ஜ.க.தான் அதிக இடத்தில் டெபாசிட் போனது என்று அ.தி.மு.க. சொல்கிறது. அ.தி.மு.க.வுக்கு ஒரு விசயம் புரிகிறதா என தெரியவில்லை. பா.ஜ.க. டெபாசிட் வாங்கினால் தான் சாதனை. பூஜ்ஜியம் வாங்குவது பா.ஜ.க.வுக்கு அசிங்கம் இல்லை. பூஜ்ஜியம் பா.ஜ.க.வுக்கு புதுசு இல்லை. அ.தி.மு.க. என்கிற கட்சி டெபாசிட் வாங்காமல் இருப்பது அவமானமா இல்லையா? 2026ல் அ.தி.மு.க.வை குளோஸ் பண்ணிவிட்டு, அந்த ஓட்டுக்களை பா.ஜ.க.வுக்கு மாத்தணும் என்கிறதுதான் அவர்களது ப்ளான். எதிர்க்கட்சியா உட்காரணும் என்பதுதான் பா.ஜ.க. கணக்கு. 2026 தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான இதே கூட்டணி தொடரும். அன்புமணிக்கு 60 சீட், டி.டி.வி. ஏதோ பாத்து செஞ்சிட்டு போப்பா என்கிற அளவுக்கு ஆயிட்டாரு. தமிழக அரசியல் களத்தில் பா.ஜ.க. மா.தலைவரை விட்டால் வேறு யாரும் டி.டி.வி.யை மதிப்பதில்லை. இதனால் 5 சீட் கொடுத்தாலும், 10 சீட் கொடுத்தாலும் வாங்கிக்கிறேன் என்கிற அளவுக்கு வந்துட்டாரு. இதேபோல ஓ.பி.எஸ். ஸுக்கும் சீட் கொடுத்து தேர்தலை சந்திப்பார்கள்.

தேவநாதன் யாதவ், ஐ.ஜே.கே.வுக்கு சீட் கிடையாதா?

ss

Advertisment

நிதிநிறுவன மோசடி விவகாரத்தில் தேவ நாதன் யாதவ் சிக்கியது மா.தலைவரால்தான். அந்த நிதிநிறுவனத்தில் கணக்கு வைத்தவர்கள், எல்லா ஆவணங்களையும் மா.தலைவரை பார்த்து கொடுத்துள்ளனர். அதனை இவர்தான் பைல் போட்டு விஜிலென்ஸுக்கு கொடுத்துள்ளார். இதைவிட ஒரு ஹைலைட் என்னவென்றால், தேவநாதனை கைது செய்வதற்கு, பா.ஜ.க. மேலிடத்தில் க்ளீயரன்ஸ் வரவரைக்கும் தி.மு.க. அரசு அமைதியாக இருந்திருக்கிறது. மேலேயிருந்து ஒப்புதல் கொடுத்த பின்னர்தான் அவரை கைது செய்திருக்கிறார்கள்.

தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டவுடன் அறிக்கையெல்லாம் வெளியிட்டாரே மா.தலைவர்?

கைது செஞ்சிருக்காங்க. மா.தலைவரா என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு கேட்பாங்க. அதற்காக அறிக்கை வெளியிட்டார். தேவநாதனுக்கு எதிராக முக்கியமான ஐ.ஜி.கிட்டதான் எல்லா ஃபைலையும் மா.தலைவர் கொடுத்திருக்கிறார்.

2026 தேர்தலில் இருந்தவர்கள் கூட்டணில் தொடர்வார்கள். 75 முதல் 90 தொகுதிகள் வரை பா.ஜ.க. நின்று, கூட்டு ஆட்சி என்பதுதான் அவர்கள் ப்ளான். மா.தலைவர் என்ன ப்ளான் போட்டார் என்றால், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் டி.டி.வி. வெற்றி பெற்றிருந்தால் கேபினட் அமைச்சராக்கிவிடலாம். 2026 தேர்தலில் அன்புமணியை துணை முதலமைச்சராக்கிவிடலாம், தான் முதல்வராகிவிடலாம் என்று கனவு கண்டார். முக்குலத்தோர் சமுதாயத்தில் மத்திய அமைச்சர், கவுண்டர் சமுதாயத்தில் முதலமைச்சர், வன்னியர் சமுதாயத்தில் துணை முதலமைச்சர் என மூன்று சமுதாயத்தை வைத்து லாபி பண்ணலாம் என்று நினைத்தார். போடுகிற கணக்கெல்லாம் வேலை பார்த்துடுமா? நமக்கு மேலே ஒருத்தன் இருக்கான்ல, அவன் ஒரு கணக்கு போடுவான்ல என்கிற மாதிரி இவர் நினைச்ச மாதிரியெல்லாம் நடக்கல; நடக்காது.

முதலமைச்சர் கனவோட பயணிக்கிறார்களா?

அவர்கள் (பா.ஜ.க.) இரண்டு துணை முதல்வர் கூட கொடுக்க தயாராக இருக்கிறார்கள். எனக்குத் தெரிஞ்சி 2026ல் அ.தி.மு.க.வின் அஜெண்டாவே அப்படி போகிறது என்கிறார்கள். ஒருவேளை விஜய் வந்தால், எடப்பாடி போடும் கணக்கு என்னவென்றால்... விடுதலை சிறுத் தைகள், சீமான், விஜய் ஆகியோ ருடன் கூட்டணி அமைப்பது. இதில் எடப்பாடி முதலமைச்சர், விஜய் கட்சிக்கும், வி.சி.க.வுக்கும் துணை முதல்வர் பதவிகள். தலித் சமுதாயத்தில் துணை முதல்வர் பதவி கொடுத்தால் அ.தி. மு.க.வுக்கு பெயர் கிடைக்கும் என நினைக்கிறார்கள்.

தனித்து போட்டி என்று சீமான் சொல்லியிருக்கிறாரே?

"இலை மலர்ந் தால் ஈழம் மலரும்' என்று பிரச்சாரம் செய்திருக்கிறார். அ.தி.மு.க.வின் ஆதரவை விக்கிரவாண்டியில் கேட்டார்கள். அவர்கள் அப்படித்தான். ஒருவேளை விஜய் வரமறுத்தால், காங்கிரஸ் கட்சியை அ.தி.மு.க. நாடும். தி.மு.க. -காங்கிரஸ் இடையே பெரிய பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது. செல்வப்பெருந்தகை தி.மு.க. மா.செ. போல ஸ்டாலினை புகழ்ந்து பேசுவார். சட்டப்பேரவையில் செல்வப்பெருந்தகை பேசும்போது சபாநாயகரே குறுக்கிடமாட்டார். அவரே 2026ல் தி.மு.க. கூட்டணி குறித்து யோசிக்கணும் என்று சொல்லும் அளவுக்கு வந்துவிட்டார் என்கிறார்கள்.

பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறினாலும் இன்றுவரை எல்லோரும் சொல்வது பா.ஜ.க. -அ.தி.மு.க. ரகசிய உறவு உள்ளது. கூட்டணி முறிவு என்பது நாடகம் என்பதுதான். இதனால்தான் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால் மக்கள் மத்தியில் ஒரு பெயர் கிடைக்கும் என்று எடப்பாடி நம்புகிறார். எது எப்படியோ தி.மு.க. கூட்டணியிலிருந்து வி.சி.க. வெளியேறும்.

பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட்டணி தொடரும் என்றுதானே திருமாவளவன் சொல்கிறார்?

2026ல் வி.சி.க. -தி.மு.க. கூட்டணியில் இருக்காது. கொடிக்கம்ப பிரச்சினை நடந்தது. வாரிய தலைவர் பதவிகள் கொடுக்கவில்லை என ஆரம்பத்தில் இருந்தே பல வருத்தங்கள் திருமாவளவனுக்கு இருக்கிறது.

எத்தனை வருத்தங்கள் இருந்தாலும் தி.மு.க. கூட்டணியில் இருப்பது உறுதி என்றுதானே வி.சி.க.வினர் சொல்கிறார்கள்?

பா.ரஞ்சித்தை தூண்டிவிட்டு திருமாவளவனுக்கு எதிராக பேசவைப்பது பா.ஜ.க.தான். அதனை தி.மு.க. செய்யவில்லை. சென்சார் போர்டுகளில் அரசியல் சம்மந்தப்பட்டவர்களை போடக்கூடாது. துறை சார்ந்தவர்களைப் போடவேண்டும். டிக்கெட் வாங்க காசு இல்லாமல் தியேட்டர் வாசல்ல நிற்பவர்களையெல்லாம் சென்சார் போர்டில் நியமிச்சிருக்காங்க. இதனால் என்னவாகிறது என்றால் சினிமாகாரர்கள், அரசியல் வாதிகள் சொல்வதைக் கேட்க வேண்டிய நிலை வந்துவிடுகிறது. மா.தலைவரால் கவர்பண்ண முடியாத ஓட்டு தலித் ஓட்டுகள். தலித் தலைவர்கள் எத்தனைபேர் வந்தாலும் திருமாவளவன் ஏற்படுத்தி வைத்திருக்கிற கட்டமைப்பை உடைக்க முடிய வில்லை. தி.மு.க. கூட்டணியிலிருந்து திருமாவளவனை உடைக் கணும். இல்லையென்றால் திருமாவளவனுக்கு நிகராக ஒருவரை உருவாக்கணும். அதற்காக பா.ரஞ்சித்தை கையில் எடுத்தது, ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தை எந்த அளவுக்கு அரசியல் ஆக்க முடியுமோ அந்த அளவுக்கு அரசியல் ஆக்கினார் மா.தலைவர். ஆளூர் ஷாநவாஸ், பா.ஜ.க. -தி.மு.க.வுடன் கைகோர்த்தால் திருமாவளவன் வெளியேறுவார் என்று பேட்டி கொடுத்திருக் கிறார். கண்டிப்பாக பா.ஜ.க., தி.மு.க.வின் கதவை தட்டும் என நான் போன பேட்டியிலேயே சொன்னேன்...

(தொடரும்)

சந்திப்பு: -வே.ராஜவேல்

படம்: நவீன்