மோடி சர்க்காரின் மிக மோசமான வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லி யில் நடந்துவரும் உண்மையான விவசாயிகளின் மாபெரும் போராட்டம் 30-ஆவது நாளை நெருங்கிவிட்டது. "சட்டத்தில் திருத்தம் வேண்டுமானால் செய்வோமே தவிர, சட்டத்தையே திரும்பப் பெறமாட்டோம்' என்பதில் சர்வாதிகார உறுதியுடன் இருக்கிறது மோடி சர்க்கார்.
"சட்டத்தைத் திரும்ப பெற்றால்தான் பேச்சுவார்த்தையே' என்பதில் அதைவிட உறுதியாக இருக்கிறார்கள் விவசாயிகள். பார்த்தார்கள் மோடியும் அமித்ஷாவும்... "நாங்க கொண்டு வந்த சட்டம் நல்ல சட்டம்'’என்ற கோஷத்துடன் நாடு முழுவதும் பா.ஜ.க.வினரை பிரச்சாரப் பயணத்தில் இறக்கிவிட்டுள்ளனர்.
அதன்படி தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், கடந்த 19-ஆம் தேதி குன்னத்தில் தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார். முருகனின் காருக்கு முன்னும் பின்னும் ஏழெட்டு கார்களில் 60 பேர் கொண்ட பா.ஜ.க. டீம் தோளில் பச்சைத்துண்டுடன் ஏறி அமர்ந்துகொள்கிறது. முருகன் ஒரு இடத்தில் இறங்கி நிஜ விவசாயிகளுடன் பேசப் போகிறார் என்றால், மேற்படி 60 பேரும் முன்கூட்டியே போய் அந்த விவசாயிகளுடன் போய் நின்றுகொள்வார்கள்.
அதேபோல் லோக்கல் மீடியாக்களில் சிலரை செட்பண்ணி, ""அண்ணே இந்த சட்டத்தால் விளையும் நன்மைகள் என்ன?ன்னு எங்க தலைவர்ட்ட கேள்வி கேளுங்கண்ணே''’என ஏற்பாடு செய்துவிடுவார்கள்.
இந்த மாதிரி ஒரு புரட்(டு)சி ஏற்பாட்டுடன் கடந்த வாரம் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள நிலைவிளாகம் கிராமத்தில் விவசாயிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்தார் முருகன். “
கஜா புயல், நிவர் -புரெவி தாக்குதல்களால் நிலைகுலைந்து போயுள்ள விவசாயிகளை இதுவரை கண்டுகொள்ளாத பா.ஜ.க. திடீரென மோடி திட்டத்துக்கு ஆதரவாக களமிறங்கியது எதிர்விளைவை ஏற்படுத்தியது.
""மோடிஜீ கொண்டு வந்த சட்டம் நல்ல சட்டம், அது எப்படின்னா...''’என எல்.முருகன் ஆரம்பிக்க, அங்கிருந்த நிஜ விவசாயிகளின் கைகளில் இருந்த பேப்பரைப் பார்த்த 60 விவசாயிகளும் ஏதாவது ஏடாகூடமாக கேட்டு விடுவார்கள் என நினைத்து சட்டுபுட்டுன்னு ஸ்பாட்டை காலிபண்ணிவிட்டார்கள்.
அடுத்த ஸ்பாட், வேதா ரண்யம் அருகே உள்ள மருதூர். அங்குள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளுடன் கலந்துரை யாடல், கோரிக்கை மனு வாங்குதல் போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆல்ரெடி ரெடியாக இருந்த அந்த 60 பேரும் ஆஜரானார் கள். ஆனால் மகஜர் கொடுக்கத் தான் நிஜ விவசாயிகள் யாரும் வரவில்லை.
இதற்கடுத்து, பூம்புகார் அருகே இருக்கும் கருவிக்கு வருகை தந்த முருக னுக்கு செண்டை மேளம், வாண வேடிக்கை, அதிர் வேட்டு என மற்ற இடங்களைவிட வரவேற்பு கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. இதை யெல்லாம் கண்டு களிப்புற்ற முருகன், கஜா புயல் பாதிப்பி லிருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கும் கிராம மக்களை கண்டு கொள்ளாமலேயே தனது புரட்சிப் பிரச்சாரத்தைத் தொடர்ந்தார். முருகன் போன இடங்களில் எல்லாம் காவிரி விவகாரத்தில் ஜெ., எடப்பாடி ஆகியோருக்கு பட்டம் வழங்கியவரான மன்னார்குடி ரங்கநாதன் தவறாமல் ஆஜராகியிருந்தார்.
அவர் இருந்ததாலோ என்னவோ, “""இப்போது போராடுபவர்கள் விவசாயி களே அல்ல, இடைத்தரகர்கள்தான். இந்தப் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன''’’ என திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே போனார் முருகன்.
மன்னார்குடி சோழங்கநல்லூர் ராஜபாலன் நம்மிடம் பேசும்போது, ""விவ சாயப் பெருமுத லாளியான மன்னார் குடி ரங்கநாதனை அழைத்து வந்து, அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்து கிறார்கள்.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கொண்டு வந்தபோது கப்சிப்பென இருந்தவர்தான் இந்த ரங்கநாதன்''’என்றார் கொந்தளிப்புடன்.
பூம்புகார் விவசாயி வீரமணியோ... ""மீத்தேன், ஹைட்ரோகார்பனால் டெல்டா மாவட்டங்களின் 28 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தில் பாதி நாசமாப் போச்சு. இப்ப இந்த வேளாண் சட்டத்தால் மீதியும் நாசமாப் போகப்போகுது''’என கோபக்கனல் கக்கினார்.
மோடிக்கு அமெரிக்கா வின் மாஜி அதிபர் டிரம்ப் கொடுத்த உயரிய விருது முக்கியமா? விவசாயிகள் உயிர் முக்கியமா?என கேட் கிறார்கள் விவசாயிகள். பா.ஜ.க. போட்ட விவசாயி நண்பன் வேடம் தமிழக வயலில் விளையாமல் பதராகிவிட்டது.
-க.செல்வகுமார்