ர்நாடகத்தின் பா.ஜ.க. முதல்வர் பசவராஜ் பொம்மையின் முதல்வர் நாற்காலியின் மேல் கத்தியைத் தொங்க விட்டிருக்கிறது பிட்காயின் மோசடி விவகாரம். இந்த மோசடி விவகாரத்தில் கைதாகியிருக்கும் ஸ்ரீகிருஷ்ணா ரமேஷ் எனும் ஸ்ரீகி-க்கு கர்நாடக பா.ஜ.க. வின் முக்கிய பிரமுகர்கள் இருவருடன் சம்பந்தம் இருப்பதாகவும், அவர்களைக் காப்பாற்ற கர்நாடக பா.ஜ.க. முயல்வதாகவும் காங்கிரஸ் தரப்பிலிருந்து அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

யார் இந்த ஸ்ரீகிருஷ்ணா?

bitcoin

கர்நாடகத்தின் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்த ஸ்ரீகிருஷ்ணா, ஒரு வெப்சைட் ஹேக்கர். பிட்காயின் வலைத் தளங்கள், போக்கர் வலைத்தளங்கள், இதர விளையாட்டு வலைத்தளங்கள், கர்நாடக அரசின் இ-புரோகியுர் மெண்ட் வலைத்தளங்களை ஹேக்செய்து அதன் மூலம் ஆதாயம் அடைந்தவன். தனது திருட்டு வாழ்க்கையின் மறுபக்கமாக ஆடம்பர ஹோட்டல்களில் தங்குதல், மது, உல்லாச வாழ்க்கையென நடத்தியவன்.

2016, 2018-ஆம் ஆண்டுகளில் சிறுசிறு சச்சரவுகள், பப் மோதல் தொடர்பான பிரச்சனைகள் எழுந்து, கைது செய்யப்படும் சூழல் வந்தபோதும், ஜாமீன் பெற்றுத் தப்பித்த ஸ்ரீகிருஷ்ணா, 2020-ஆம் ஆண்டில் டார்க் வெப்பில் பிட்காயினைப் பயன்படுத்தி வெளிநாட்டில் போதைப்பொருள் வாங்கிய வழக்கில் வசமாகச் சிக்கினான். சி.சி.பி. எனப்படும் சென்ட்ரல் க்ரைம் பிராஞ்ச் போலீசார் கைது செய்து விசாரணை செய்தபோதுதான், ஒன்றைத் தொட்டு ஒன்றென ஸ்ரீகிருஷ்ணாவின் அசல்முகம் வெளிப்படத் தொடங்கியது.

தற்போதைய குற்றச்சாட்டின்படி, பல்வேறு பிட்காயின் நெட்வார்க்குகளிலிருந்து 5000 பிட்காயின்களை ஹேக் செய்து விற்று ஆதாயம் பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கேமிங் வெப்சைட்டான ரன்எஸ்கேப்.காமிலிருந்து ஒரு மில்லியன் டாலர் வரை ஹேக் செய்திருக்கிறார். போக்கர் வெப்சைட்டுகளை ஹேக் செய்திருக்கிறார். கர்நாடக அரசின் மின் கொள்முதல் வலைத்தளத் தை ஹேக்செய்து ரூ,11 கோடி மதிப்பிலான ஆதாயத்தை அடைந்திருக்கிறார் என இவர்மீதான குற்றச்சாட்டுகள் நீண்டுகொண்டே போகிறது.

f

சரி, ஹேக்கர் ஸ்ரீகிருஷ்ணா பிடிபட்டாகி விட்டது. அவர் மீது வழக்கும் பதிந்தாகிவிட்டது. பிறகு ஏன் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன?

எதிர்க்கட்சிகளின் பிரதான குற்றச்சாட்டுகள் இரண்டுதான். ஒன்று, இந்த பிட்காயின் மோசடியில் கர்நாடக பா.ஜ.க.வின் பிரதான தலைகள் இரண்டு சம்பந்தப்பட்டிருக்கின்றன. வழக்கில் அவர்களைப் பற்றிய எந்த விவரத்தையும் காணவில்லை. இரண்டாவது, ஸ்ரீகிருஷ்ணா ஹேக் செய்து ஆதாயமடைந்த உண்மை நிலவரத்துக்கும், சார்ஜ் சீட்டில் காவல்துறையால் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலவரத்துக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசமிருக்கிறது.

இதனால்தான் ராகுல்காந்தி, “"உச்சநீதிமன்ற கண்காணிப்பில் ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம் அமைத்து இந்த பிட்காயின் வழக்கை விசாரிக்க வேண்டும்''’என்கிறார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளரும் தலைமைச் செய்தித் தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜிவாலா, பிரதமரை நோக்கி கர்நாடக பிட்காயின் ஊழல் குறித்து சில முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார். “"இந்த ஊழல் நடைபெற்றபோது இன்றைய முதல்வர் பசவராஜ் பொம்மைதான் அன்றைய கர்நாடகாவின் உள்துறை அமைச்சர். அப்போது அவர் என்ன செய்தார்?

இந்த பிட்காயின் ஊழலை வெளிக்கொண்டு வருவதைவிட அதை மறைப்பதில்தான் பா.ஜ.க. ஆர்வம் காட்டுகிறது. பிட்காயின் நெட்வொர்க்கு களிடமிருந்து பிட்காயின் திருடப்பட்டிருக்கிறது. இத்தகைய விவகாரத்தில் இன்டர்போல் உள்ளிட்ட சர்வதேச விசாரணை அமைப்புகளுக்கு ஏன் ஸ்ரீகிருஷ்ணா கைது குறித்து தகவல் சொல்லப் படவில்லை.

கடந்த வருடம் நவம்பர் 14-ஆம் தேதியே ஸ்ரீகிருஷ்ணா அவனது முக்கியக் கூட்டவாளியான ராபின் கண்டேல்வாலுடன் கைது செய்யப்பட்டி ருக்கிறான். கிட்டத்தட்ட 100 நாள் போலீஸ் அவனை கஸ்டடியில் வைத்திருந் திருக்கிறது. மாஜிஸ்திரேட் முன்பு ஸ்ரீகிருஷ்ணா, தான் ஹேக் செய்த பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள், வலைத்தளங்கள், சட்ட விரோதமாக சம்பாதித்த தொகை பற்றியெல்லாம் வாக்குமூலம் தந்திருக்கிறான். ஆனால் ஐந்து மாதங்களாக இன்டர்போலுக்கு இதுகுறித்து தகவல் தரவில்லை. அவன் கைதுசெய்யப்பட்டு ஐந்து மாதங்களுக்குப் பிறகே தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, கர்நாடக அரசு அமலாக்கத் துறை, சி.பி.ஐ. போன்றவற்றுக்கும் உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கவில்லை. பசவராஜ் பொம்மையிடம் ஏன் இந்தத் தடுமாற்றம்?''’என கேள்வியெழுப்புகிறார்.

தவிரவும், ஸ்ரீகிருஷ்ணா கைதுசெய்யப்பட்ட பிறகு மீட்கப்பட்ட பிட்காயின்களில் 31 பிட்காயின்கள் காவல்துறையினருக்கு மாற்றப் பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காவல்துறை தன் மீதான குற்றச்சாட்டை மறுப்பதுடன், ஸ்ரீகிருஷ்ணாவின் போன், கணினி ஆகியவற்றில் டிஜிட்டல் புட்பிரிண்டில் ஆதாரம் கிடைத்த குற்றங்களை மட்டுமே பதிவுசெய்தோம் என விளக்கமளிக்கிறது.

பா.ஜ.க.வோ, ’"இந்த ஊழலில் காங் கிரஸுக்குத்தான் தொடர்பிருக்கிறது, பா.ஜ.க.வுக்கு அல்ல'” என்கிறது.

சில வருடங்களுக்கு முன் குஜராத்தில் 5000 கோடி பிட்காயின் மோசடி வெளி வந்தபோது, பா.ஜ.க. எம்.எல்.ஏ. நளின் கோட்டாடியா பெயர் அடிபட்டது. இப்போது கர்நாடக பிட்காயின் மோசடி யிலும் பா.ஜ.க.வினர் பெயர் அடிபடுகிறது. பிட்காயினுக்கும் பா.ஜ.க.வுக்கும் நல்ல பொருத் தம்தான்.

Advertisment