(332) எம்.ஜி.ஆருக்கு ஜெ செய்த துரோகம் -கே.ஏ.கே
ஜெயலலிதாவுக்கு கட்சியில் தேவையில்லாம முக்கியத்துவம் கொடுப்பதாக எம்.ஜி.ஆரை எதிர்த்து "நமது கழகம்' என்கிற கட்சியைத் தொடங்கி, வாஷ்அவுட்டான எஸ்.டி.சோமசுந்தரம் என்கிற எஸ்.டி.எஸ், பிறகு எம்.ஜி.ஆரையே சரணடைஞ்சார். எம்.ஜி.ஆரோட மறைவுக்குப் பின்னாடி, ஜெ.கிட்டயே சேர்ந்தார். ஜெயலலிதா முதன் முறை முதலமைச்சாராக இருந்தபோது "ஜெ.'வின் காரில் ஃபுட் போர்டு அடித்து தொங்கிக்கொண்டே போனார். "அண்ணா காலத்து அரசியல்வாதி, இப்படியா? தொங்கிக்கொண்டு போவது?' என பத்திரிகைகளும், பொதுமக்களும், அரசியல் வட்டாரத்தினரும் காய்ச்சினாங்க. அதுபற்றி யெல்லாம் கண்டு கொள்ளாமல், தொங்கு வதை கைவிடல எஸ்.டி.எஸ். "ஒரு சீனியர் அரசியல்வாதி இப்படி தன் காரில் ஃபுட்போர்டு அடிக்க வேண்டாம்' என ஜெ. சொல்லியிருந்தால்... எஸ்.டி.எஸ்., தொங்கப் போவதில்லை. ஆனால்... அவர் தொங்கிக் கொண்டு வருவதை ஜெ. ரசிச்சாருனுதான் சொல்லணும்.
எஸ்.டி.எஸ்.ஸைப் பற்றி கே.ஏ.கே. சொன்னதை முதலில் பார்ப்போம்.
"அவர் தன்னைத்தானே மிக உயர்வாக எண்ணிக் கொள்ளும் மனோபாவம் கொண் டவர். அதுமட்டுமா? கட்சியிலும், ஆட்சி யிலும் தனது திறமைக்கேற்ப இடம் கிடைத்திருக்கிறது என திருப்திப்படமாட்டார். மற்றவர்களைவிட முன்னாடி இருக்க வெண்டும் என்பதுதான் அவரது கொள்கை. ஒரு முறை புரட்சித்தலைவரிடம் "எனக்கு கே.ஏ.கே.வைவிட உயர்வான இடத்தை மந்திரிசபையில் தரணும்' எனக் கேட்டார். பண்ருட்டி ராமச்சந்திரன், நாவலர் போன்றவர்கள் ஜெயலலிதாவை விட்டு வந்துவிட்ட போதும் எஸ்.டி.எஸ். அங்கேயே இருக்கிறார். இது... ஜெயலலிதாவுக்கு அடுத்த இடம் நமக்கு இருக்கு என்கிற காரணத் தால்தான். மற்றபடி ஜெயலலிதா மீது அவருக்கு விசுவாசமெல்லாம் கிடையாது. இடத்தைப் பார்த்து தன்னை அதற்கேற்ப மாற்றிக்கொள்ளும் குணம்கொண்டவர் எஸ்.டி.எஸ்.'
லிஇப்படி சொல்லியிருந்தார் கே.ஏ.கே.
"ஏசுநாதர், யூதாஸை நம்பினார். அதுபோல எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நம்பினார். இறுதியில் என்னாச்சு' என்கிற கேள்வியை முன்வைத்து, பழைய பேட்டி ஒன்றில் எம்.ஜி.ஆர் கால அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி சொன்னதைப் பார்ப் போம்...
"ஜெயலலிதாவை கட்சிக்குள் சேர்த்தபோது புரட்சித்தலைவர் என்னைக் கலந்து ஆலோசித்தார். நான் நடத்திய "தென்னகம்' பத்திரிகையின் பழைய பிரதிகளை ஜெயலலிதாவுக்கு கொடுக்கச் சொன்னார். "கட்சியின் வரலாற்றை தெரிந்துகொள்ள அது ஜெயலலிதாவுக்கு உதவியாக இருக்கும்' என்றும் தலைவர் சொன்னார். ஒவ்வொரு தொகுப்பாக என்னிடமிருந்து வாங்கிக்கொண்டுபோய் ஜெயலலிதா அதைப் படித்தார். ஜெயலலிதா பேசிய பேச்சுக்களின் கேஸட்டை எனக்கு அனுப்பி, அதை சரி பார்க்கச் சொன்னார் புரட்சித்தலைவர். அவர் ஜெயலலிதாவை நம்பினார். ஆனால் அந்த நம்பிக்கையை தலைவருக்குப் பின் பொய்ப்பித்து விட்டார் ஜெயலலிதா.
ஏசுநாதர் யூதாஸை நம்பினார். ஆனால் யூதாஸ் வெள்ளிக்காசுக்கு ஆசைப்பட்டு ஏசுநாதரை காட்டிக்கொடுத்தான்.
ஜெயலலிதா பிடிவாதம் பிடித்த பெண்தான். ஆனால்.... புரட்சித்தலைவர் வெறும் குறையாக மட்டுமே அதைக் கருதினாரே தவிர... அதை பெரிய குற்றமாகக் கருதவில்லை. அதனால்தான் அவருக்கு பெரிய வாய்ப்பை அளித்தார் தலைவர். அது மிகத் தவறானது என்பது ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் மூலம் இப்போது நிரூபணமாகிவிட்டது.'
லிஇவ்வாறாக எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு ஜெ. துரோகம் செஞ்சுட்டதா அந்தப் பேட்டியில சொல்லியிருந்தார் கே.ஏ.கே.
"நான் அ.தி.மு.க.வில் இருந்த சமயம் ஜெயலலிதா கட்சிக்குள் நுழைய நினைத் திருந்தால்... அப்போதே நான் கடுமையாக எதிர்த்திருப்பேன்' என நாஞ்சில் மனோகரன் ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார்.
கலைஞரிடமிருந்த நாஞ்சிலார், நாவ லரின் டார்ச்சர் தாங்கமுடியாமல் எம்.ஜி.ஆரிடம் வந்து சேர்ந்தார். எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில், எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியா நிதியமைச்சரா பதவி வகித்தார். ஒருகட்டத்தில் நாவலர் எம்.ஜி.ஆரிடம் வந்து சேரவே... வருத்தமாகி மீண்டும் கலைஞரிடம் போனார் நாஞ்சிலார். எம்.ஜி.ஆரின் இருவிதமான பக்கங்களையும் தான் நன்றாகவே தெரிந்திருப்பதாவும் அந்தப் பேட்டியில் சொல்லியுள்ளார் நாஞ்சிலார்.
அதுபற்றிப் பார்ப்போம்...
"ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும். ஒன்று, வெளிச்சமான பக்கம். இன்னொன்று இருட்டான பக்கம். நான் எம்.ஜி.ஆரின் இரண்டு பக்கங்களையும் பார்த்திருக்கிறேன். அவரது தலைமையில் நான் நிதியமைச்சராக பணியாற்றியபோது... திடீரென்று காலை உணவு சாப்பிட அழைப்பார். அங்கே போனால், தலைமைச் செயலாளர் உட்பட பல அதிகாரிகள் இருப்பார்கள். அவர்கள் முன்னிலையில் என் தோளைத் தட்டி, முதுகில் தட்டி பாசம் காட்டுவார். அதிகாரிகள் வியப்பினால் வாயடைத்துப் போவார்கள். இது எம்.ஜி.ஆரின் வெளிச்சமான பக்கம்.
இளம் வயதில் பெண்கள் விஷயத்தில் எம்.ஜி.ஆர் நெருப்பாகத்தான் இருந்திருக் கிறார். ஒரு நடிகை எம்.ஜி.ஆரை தன் சாகஸ வலையில் வீழ்த்த எவ்வளவோ முயற்சித்தும் எம்.ஜி.ஆர். அதற்கு மசியவில்லை. இதுபோன்ற நிகழ்வுகளை எம்.ஜி.ஆரே என்னிடம் சொல்லியிருக்கிறார். நாளடைவில்... ஜெயலலிதா போன்றவர்களுடன் அவர் கொண்டிருந்த உறவு, அவரது இருட்டான பக்கம். "ஆயிரத்தில் ஒருவன்' படம் தயாரிக்கப்பட்டுக் கொண்டி ருந்தபோது முதன் முதலாக ஜெயலலிதாவை பார்த்தேன். மிகவும் சிறிய பெண்ணாக ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர். அவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தபோது பேசுவதற்கே ஜெயலலிதா மிகவும் கூச்சப்பட்டார்.
அப்படிப்பட்ட ஜெயலலிதா, பிறகு எம்.ஜி.ஆரை தனக்கு நெருக்கமானவராக ஆக்கிக்கொண்டார். நான் எம்.ஜி.ஆரை விட்டுப் பிரிந்து வந்த பிறகே... 1982லிலேதான் ஜெயலலிதா மீண்டும் எம்.ஜி.ஆருடன் இணைந்தார். நான் இருக்கும்பொழுது அவர் அ.தி.மு.க.வில் நுழைய முயற்சித்திருந்தால் நான் அதை கடுமையாக எதிர்த்திருப்பேன்'
லிஎன நாஞ்சிலார் அந்த பேட்டியில சொல்லியிருந்தார்.
நாங்கள் நாவலர் நெடுஞ்செழியனை முதலமைச்சராக்க விரும்பி செயல்பட்டோம். கட்சிக்கு பொதுச்செயலாளராக ஜெயலலிதா ஆனார். நான் பொருளாளராக்கப்பட்டேன். "பொன்மனம்' பத்திரிகையை நான் தொடங்கிய போது ஜெய லலிதா எனக்கு எவ்வித பண உதவியும் செய்ய வில்லை. வங்கி யில் கடன் வாங்கித்தான் பத்திரிகையை நடத்தினேன். ஜெயலலிதா தன் னைச் சுற்றியுள்ள சிலருடன் தான் கலந்தாலோசிக் கிறார். மூத்த தலைவர்களிடம் ஆலோசனை கேட்பதில்லை. வசூலித்த நிதியை பொருளாளரான எனது வங்கிக் கணக்கில் செலுத்தவில்லை. ஜெயலலிதா பேரில் உள்ள கணக்கில் போடப்படு கிறது. இதைச் சுட்டிக்காட்டினால்... "குரைக்கும் நாய்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை' என்கிறார் ஜெயலலிதா. நாய் நன்றியுள்ள பிராணி என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும் நான்?'
லிஇது ஜெ. அணியை பாதுகாத்த திருநாவுக்கரசுவின் மனக் குமுறல்.
எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தவரை கட்சியில் இருந்த தனது ஆதரவாளர்களுடனும், ராஜீவ்காந்தி துணையுடனும் தன் இதய தெய்வம் எம்.ஜி.ஆருக்கு ஏகப்பட்ட இம்சைகள் கொடுத்தார் இம்சை அரசி ஜெ.
ஆனால் எம்.ஜி.ஆரோ, ராஜீவ்காந்தி சொல்லியும், ஜெ.வே தலைமைச் செயலகத்தில் எம்.ஜி.ஆரைச் சந்தித்துக் கேட்டும், "அமைச்சரவையில் "ஜெ.'வுக்கு இடம் கொடுக்கல. துணை முதலமைச்சராகவும் ஆக்கல. இதனால எம்.ஜி.ஆரை கடுமையா விமர்சிச்சிட்டு இருந்தார் ஜெ.
எம்.ஜி.ஆரோட மறைவுக்குப் பின்னாடி...
1990 இறுதியில சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னலில் கட்சி சார்பில் எம்.ஜி.ஆருக்கு சிலை அமைத்தார் ஜெ.
ராஜீவ்காந்தி அந்த சிலையை திறந்து வச்சார். அன்னிக்கி மதியம் ஜெ. வீட்லதான் ராஜீவுக்கு விருந்து. அன்னிக்கி சாயங்காலம் மெரீனா பீச் சீரணி அரங்கத்துல பொதுக்கூட் டம் நடத்தினாங்க. இந்த கூட்டத்துலதான் "ஜெயலலிதா ஜி... நீங்கதான் எம்.ஜி.ஆர். அவர் களின் அரசியல் வாரிசு' என ராஜீவ் பேசினார்.
எம்.ஜி.ஆர் இருக்கிற வரைக்கும் எம்.ஜி.ஆரை மீறி ஜெ.வால ஒண்ணும் செய்ய முடியல. எம்.ஜி.ஆரோட மறைவுக்குப் பின்னாடிதான் ஜெ.வால் அரசியல்ல வளர முடிஞ்சது.
"ஜெ' நாலைஞ்சு முறை முதல்வரா ஆனது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனா... சொத்துக் குவிப்பு வழக்குல பாதிக்கப்பட்ட ஜெ., தனக்கு நிச்சயம் தண்டனை என்பதை உணர்ந்து அப்பல்லோவில் சிகிச்சைல இருந்தப்போ... மருத்துவர்கள் சொன்னத கடைப்பிடிக்காம... தன்னோட உடலுக்கு ஒவ்வாத விஷயங்களை வேணும்ணே செஞ்சார். இதெல்லாம் பார்க்கும்போது 35 வருஷத்துக்கு முன்னால அவரு சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருது.
சொன்னது எவரு?
அப்படி என்னதான் சொன்னாரு.....?!
எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் அமைச்சராக
இருந்தவர்; அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவர்; இப்போது அண்ணன் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அவர் சொன்ன ஒரு பேட்டி அதிர்ச்சி நிறைந்தது. அப்படி என்ன சொன்னார் அன்றைய லிஇன்றைய அமைச்சர்?
"ஜெயலலிதா தற்கொலை செய்து கொள்வார்....'
(புழுதி பறக்கும்)