poorkalam

(40) "நாமதான் ஜெயிப்போம்!''

Advertisment

ff

ங்க சீனியர் அட்வகேட் ப.பா.மோகன் சார், ஒரு வழக்கு விஷயமா திருப்பூர் போனவரு, என் லைனுக்கு வந்தாங்க.

Advertisment

"சார், திருப்பூர் கோர்ட்டுல இருக்கேன். பொள்ளாச்சில பிராக்டிஸ் பண்ணுற சீனியர் கவுன்சில் தங்கரத்தினம் சார் என்ன பார்த்தாரு. நான், உங்கள்ட்ட பேசுறது தெரிஞ்சதும், அவங்க நக்கீரனோட தீவிர வாசகர்னு சொல்லிட்டு, நீங்க எழுதுற "போர்க்களம்' தொடர தொடர்ந்து படிச்சிட்டு வர்றதாவும், அவரு உங்களப் பத்திச் சொன்னது எனக்கு ரொம்ப ஆச்சரியமாவும் அதிர்ச்சியாவும் இருந்தது.

எந்தக் கட்சியையும் சாராத ஒருத்தர், ஜென்டில்மேன், இண்டீஜுவல் புரொபஷ னிஸ்ட், எந்த மேப்பூச்சம் இல்லாம யதார்த் தமா அவர் பேசுனது என்னன்னா...

இப்படி எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு, தினம்... தினம்... உசுர கைல புடுச்சுக்கிட்டு... சாவோட செத்து செத்து பொழச்சு போராடுனதுனாலதான் ஒங்க முன்னாடி நாங்க தல நிமிர்ந்து நிக்கிறோம்.

திருடன், மொள்ளமாரி, முடிச்சவுக்கி, பொறுக்கி... இவனுகள ஈஸியா போலீஸ் தூக்கிட்டுப் போயிரும். சீக்கிரமா அவனுங்க மாட்டிக்கவும் செய்வானுங்க.

ஆனா, நாம அவங்க நெனைக்கிற மாதிரி அந்த லிஸ்ட் கெடையாதுல்ல. நமக்கு எல்லாமே... விடியிறதுல இருந்து வீட்டுல போய் அடையுறது வரைக்கும் சுவாசமே நக்கீரன்தான்.

எனக்கு ஒரே ஒரு கேள்விதான்...

"நாம அப்படி என்ன பெரிய தப்ப செஞ்சுப்புட்டோம்? நம்மளத் தேடி ஏன் இத்தன கொலவெறியோட அலையுறாங்க?''

பூதகி ஜெயலலிதாவ பொறுத்த மட்டுல... அன்னிக்கு தேதி யில நக்கீரன் மட்டும்தான் அதுக்கு குறி. தமிழ்நாட்டுக்கு முதலமைச் சரா இருக்கிற ஒரு மொரட்டுப் பொம்பள, ஒரு நாள் முழுக்க நக்கீரன்ங்கிற வளர்ந்த புள்ளைய... அடிவேரோட புடுங்கி எறிஞ்சிட ணும், அவனோட சகாப்தத்த இன்னியோட முடிச்சிரணும்... இருந்த துக்கான எந்த தடயமும் இல்லாம குழி தோண்டிப் புதைச்சிட ணும்னு போயஸ் வீட்ல நட்ட நடு ஹால்ல அட்னக்கால் போட்டு உக்காந்துக்கிட்டு வௌங்கொண்டு "காச்... மூச்'னு கத்தியிருக்கு.

அடுத்தநாள்...

8-1-2021, அதிகாலை 4:00 மணி.

லாட்ஜ் ஓனரும் வீட்டுக்குப் போகாம அங்கயே கெடந்தாரு. அவருக்கு வேற ஏதாவது நெருக்கடி வந்துச்சுன்னா... ஆளு வேணும்ல. அத நெனைச்சு அவ ரும் அங்கயே கால நீட்டிட்டாரு.

நானும் கால நீட்டி அக்கடான்னு சுவரோட சாஞ்சு உக்காந்திருக்கேன். ஒருபக்கம் தூக்கம் கண்ண சொக்குது... ஆனா என்னால தூங்கவும் முடியல. திடீர்னு யாரோ நடந்து வர்ற சத்தம் கேக்குது... வந்த தூக்கம் போயிருச்சு. கொஞ்ச நேரத்துல காலிங்பெல் அடிக்கிறாங்க. "படக்'னு கைலிய மடிச்சுக் கட்டி சுதாரிச்சிட்டு... சந்தேகத்தோடயே போய் லேசா கதவத் தொறந்து பாக்குறேன். எனக்கு கொஞ்சம் வேர்த்திருச்சு... ஒரு கை செல் போன மட்டும் நீட்டுது!

நான் "யாருண்ணே''ன்னேன்.

"நான் தாண்ணே....''னு ரொம்ப கமுக்கமா பேசுனாரு நம்ம லாட்ஜ் ஓனரு.

"என்னன் ணே... ஏதாவது தகவல்...?''

"அண்ணே... உங்களுக்கு போன்...'' அப்ப டின்னாரு.

"பார்த்திபன் பேசணுமாம்?''னாரு.

"சொல்லுங்க பார்த்தி''ன்னேன்.

"அண்ணே... பரமேஷ் உங்கள்ட்ட பேசணுமாம்ணே''.

தம்பி பரமேஷ் அப்போ நக்கீரன்ல துணையாசிரியரா இருந்தாரு. (இப்ப அவரு வேலையில இல்ல)

ff

"அண்ணே... அடுத்த நக்கீரன் இஷ்யூக்கான வேலைகள எல்லாரும் பாத்துக்கிட்டிருக்கோம். லெனின், பெரியய்யா, தமிழ்நாடன், பிரகாஷ், இளையசெல்வன், இரா.த.சக்திவேல், மனோ எல்லாருமே இங்கதான் இருக்கோம். கரண்ட் வேற இல்ல? என்ன பண்றதுன்னு தெரியல. உங்கள கேக்கச் சொல்லிட்டுக் காமராஜ் அண்ணன் கௌம்பிட்டாரு. அடுத்ததா என்ன பண்ணணும்னு சொல்லுங்கண்ணே''ன்னாரு தம்பி பரமேஷ்.

"நாளைக்கே எல்லாத்தையும் முடிச்சிருங்க. காலையிலயே ஜெனரேட்டர கொண்டுவரச் சொல்லிர்றேன். தம்பி கேஷியர் ஆனந்துட்ட ஏற்கனவே அதப் பத்தி சொல்லிட்டேன். ஆனந்த் தோட மச்சான் சினிமா லைன்ல இருக்குறாரு. அவரு அதுக்கு ஏற்பாடு பண்ணிர்றேன்னு சொல்லிட்டாராம். குருசாமி, கணேசன், சரவணன், தாணு, ராஜேந்திரன் எல்லார்ட்டயும் சொல்லி நக்கீரன் புக் ஒர்க்க காலையிலயே முடிச்சிறச் சொல்லுங்க. வழக்கமா திங்கள்கிழமை முடிப்போம், இப்போ ஒருநாள் முன்னாடி ஞாயிற்றுக்கிழமை நைட்டே பிரிண்டிங் ஆகணும். கரண்ட் இல்லன்னாலும் ஜென்செட் வச்சி ஓட்டிக்கலாம்...''

பரமேஷ், தம்பி செந்தில்கிட்ட போன குடுத்தாரு.

"தம்பி, பரமேஷ்கிட்ட எல்லாத்தையும் சொல்லிவுட்டுருக்கேன். நாளைக்கே சீக்கிரமா இஷ்யூ முடிச்சாகணும். காமராஜ் கிளம்பிட்டா ருன்னா தம்பி லெனின்கிட்ட லிஸ்ட் போட்டு வாங்கிக்கிங்க''ன்னு சொல்லிட்டிருக்கும்போதே...

"அண்ணே சம்பத் ஐயா பேசணும் னாங்க...''ன்னு தம்பி செந்தில் சொன்னாரு.

"குடுங்க... குடுங்க...''ன்னேன்.

சம்பத் ஐயா!

ஐயாவ பத்தி சொல்லியே ஆகணும். ஐயா, நக்கீரன்ல வேலைக்கு சேர்றதுக்கு முன்னாடி, பெரியவர் ஈ.வி.கே.எஸ்.சம்பத்கிட்ட வேலை பார்த்தவரு. உண்மையிலயே சீனியர் ஜர்னலிஸ்ட்னு அவர சொல்லலாம். சிவாஜி சாருக்காக அப்போ வெளிவந்த "சிவாஜி ரசிகன்'ங்கிற சினிமா பத்திரிகையில ஆசிரியரா இருந்தவர். வேலூர் நாராயணன் நடத்துன "அலை ஓசை' பத்திரிகைலயும் ஆசிரியரா வேலை பார்த்திருக்காங்க. சின்ன குத்தூசி ஐயா மூலமாத்தான் நக்கீரனுக்கு வந்தாரு. எங்க எல்லாருக்கும் மரியாதை குடுக்கிற ஒருத்தரு. அவரு மேல எல்லாருக்குமே அன்பு. எப்பவும் எதையாவது படிச்சிக்கிட்டே இருப்பாரு. வயது 70+ ஆனாலும் சுறுசுறுப்பா இருப்பாரு. நக்கீரன் மேல அவருக்கு அவ்வளவு மரியாதை. அந்த அளவுக்கு நக்கீரன நேசிச்சாரு. (இப்ப அவரு நம்மளோட இல்ல... மறைஞ்சிட்டாரு) அவரு இப்ப நம்மளோட இல்லையேங்கிற ஆதங்கம் எப்பவுமே எங்க எல்லாருக்கும் உண்டு.

நக்கீரன்ங்கிற செடி வளர்றதுக்கு எத்தனையோ பேரு தண்ணி ஊத்தியிருப்பாங்க. அதுல ஒருத்தரு சம்பத் ஐயா.

இப்ப... கொதிக்கிற தண்ணிய ஊத்துற கொஞ்சபேரும் இருக்கானுவோ, இருக்கட்டும்... இருக்கட்டும்...!

எங்க ஆபீஸ்ல எல்லாரையும் விட அதிக வயசு உள்ள ரெண்டு பேரு வேல பாத்தாங்க. ஒருத்தரு பெரியய்யா, இன்னொருத்தரு சம்பத் ஐயா.

"சம்பத் ஐயா, சொல்லுங்க''ன்னேன்.

"ஐயா நீங்க பயப்படாதீங்க... தைரியமா இருங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும். நாங்க எல்லாரும் ஆபீஸ்லதான் இருக்கோம். நாமதான் ஜெயிக்கிறோம், நாமதான் ஜெயிப்போம். உங்களுக்கு ஒரு கடிதம் கொடுத்து விடுறேன்''னு சொல்லிட்டு, செந்தில்கிட்ட லைன குடுத்தாரு.

அந்தக் கடிதத்தை நீங்க படிச்சுப் பாருங்க... அதுல எவ்வளவு உத்வேகம் இருக்குதுன்னு. தன்னுடைய 70-ஆவது பிறந்தநாள் அன்னிக்கு இத எனக்கு எழுதி அனுப்பியிருந்தார். எங்களிடம் இருக்கும் பொக்கிஷத்தில் இந்தக் கடிதமும் ஒண்ணு.

f

தொடக்கத்துல எங்க ப.பா.மோகன் சார்ட்ட பொள்ளாச்சி வழக்கறிஞர், "எப்படி ஸார் இவ்வளவுப் பிரச்சினைகள்ல இருந்தும் தப்பி உயிர் பொழைச்சீங்க?'ன்னு கேட்டாருன்னு சொன் னேன்ல. இந்தக் கேள்வி தொடர படிக்கிற எல்லாரோட மனசுக்குள்ளயும் வரும்.

ஏன்னா, யாருமே சந்திக்காத ஒரு பயங்காரவாதத்த சந்திச்சி... அதையெல்லாம் முறியடிச்சி... நக்கீரனோட சேர்ந்து இன்னமும் ஓடிக்கிட்டே இருக்கோம்னா... சம்பத் ஐயா, பெரியய்யா மாதிரி அர்ப்பணிப்போட நமக்கு கூடவே இருந்து வேலை செஞ்சாங்க பாருங்க... அதனாலதான்.

கொஞ்ச நேரத்துல தம்பி ஆனந்த்துக்கு போன் போட்டேன்.

"ஜென்செட்டுக்கு சொல்லியாச்சிண்ணே... "மணி ஜென்செட்' ஓனர் மணியண்ணன்தான் சப்ளை பண்றார்''

"தம்பி... ஆபீஸ்ல மிஷின், பைண்டிங் எல்லாம் ஓடுறதுக்கு ஜெனரேட்டர் எவ்வளவு கிலோ வாட்னு (Kilo Watt) பாத்து கொண்டுவரச் சொல்லுங்க. அதவிட முக்கியம்... வெள்ளனமா விடியறதுக்கு முன்னாடி ஆபீசுக்குள்ள கொண்டு வந்துரணும். ஏன்னா... எழவெடுத்தவய்ங்க அப்ப 92-ல செஞ்ச மாதிரி ஏதாவது பண்ணித் தொலைச்சா... அவ்வளவுதான் முடிஞ்சோம்...!

என்ன அந்த 92...?

(புழுதி பறக்கும்)