s

(328) எம்.ஜி.ஆருடன் மாறுவேஷத்தில் ஜெயலலிதா பயணம்!

சென்னை ராமச்சந்திரா ஹாஸ்பிடல்ல... முதுகு தண்டுவடத்துல ஒரு கட்டி வந்ததால 2009-ல அறுவை சிகிச்சை பண்ணிக்கிட்டார் கலைஞர். அதுக்குப் பிறகு முழுமையாவே சக்கர நாற்காலியைத்தான் கலைஞர் பயன்படுத்த வேண்டியிருந்துச்சு.

Advertisment

அந்தசமயம் "அரிசி மூட்டை', "நடைவண்டி' இப்படியெல்லாம் கலைஞரோட உடல்நிலைய கேலிபண்ணி பட்டப்பெயர் வச்சாரு ஜெ.

ஜெ.வோட இந்த உருவ கேலிக்கு கலைஞர் குடுத்த பதில்....

"என்னை அவர் விமர்சித்துவிட்டுப் போகட்டும். என் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தபோதே, அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களுக்கு சேலம் கண்ணன் மூலம் ஜெயலலிதா அப்போது தன் கைப்பட எழுதிய அந்தக் கடிதம் "மக்கள் குரல்' ஏட்டிலேயே "பிளாக்' செய்து வெளியிடப்பட்டிந்ததே.

Advertisment

அந்தக் கடிதத்தில்...

"மிகுந்த செல்வாக்குடன் நான் பிரபலமடைந் திருப்பதைப் பார்த்து முதலமைச்சர் மிகவும் பொறாமைப்படுகிறார். இதுதான் இங்கு நடைபெறும் ஒவ்வொரு செயலுக்கும் மூலகாரணம். நான் மிகவும் பிரபலமடைந்துள்ளதை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. எனவே அரசியலில் இருந் தும், பொதுவாழ்வில் இருந்தும், என்னை ஒழித்துக் கட்ட தன்னால் முடிந்ததையெல்லாம் செய்து வருகிறார்.

எனக்கு உரிய முக்கியத்துவம் தர விரும்பாத எம்.ஜி.ஆர்., என்னை அமைச்சரவையில் சேர்க்கவும் விரும்பவில்லை. அவரை எதிர்க்க இங்கு யாருக்கும் தைரியமில்லை. ஏனென்றால், அவரில்லாவிட்டால் மற்றவர்கள் எல்லாம் பூஜ்யங்கள்...'

-என்று எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதினார்.

"ஜெ.'வின் மூலகடிதம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது....

'The root cause of everything that is happening here is that the CM is terribly jealous of my popularity. He cannot stomach the fact that i have become so popular. So he is doing everything possible to eliminate me from the political scene and from public life.'

'MGR himself, who does not want to give me due importance, doesnot want to induct me into the cabinet. No one here can really dare to oppose him for without him they are zeros.'

ஆனா... ஜெ. உடல்நலமில்லாம அப்பல்லோ வுல அட்மிட் ஆனதும் "சீக்கிரம் குணமாகணும்'னு அறிக்கை வெளியிட்டார் கலைஞர்.

"அருமை நண்பர் எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது "நானும் பிரார்த்திக்கிறேன்' என்ற தலைப்பில் தொடர் கட்டுரையே எழுதியிருந் தேன். அதே உணர்வோடுதான் இப்போதும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பரபரப்பாகச் செய்தி வந்தவுடனே, "அவர் விரைவில் முழுமையான உடல்நலம் பெற்று, பணிக்குத் திரும்பிட வேண்டுகிறேன்' என அறிக்கை வெளியிட்டிருந்தேன்'

-இப்படிச் சொல்லியிருந்தார்.

1987 டிசம்பர் 24: ஒளியாக வாழ்ந்த புரட்சித் தலைவர், புகழாக மாறிவிட்டார். அவர் தமிழகத்திற்குச் சொல்லவிருந்த செய்திகள் சொல்லாமலே தடைப்பட்டுவிட்டன.

"யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்' என்ற பழமொழியும், “"செத்தும் கொடுத்தான் சீதக்காதி!' என்ற வரலாறும் உண்டு. அப்படிப்பட்ட பொன்மனச் செம்மலாக, வள்ளலாக புரட்சித் தலைவர் இன்றும் விளங்கிக்கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை.

dd

ஆனால், பலனை ஒரு சுரண்டல் கூட்டம் அனுபவித்தது. நான் முன்னாலே சொன்னதைப் போல புரட்சித் தலைவ ருடைய வீழ்ச்சியையே தன்னுடைய லட்சிய மாகக் கொண்டஜெயலலிதா, புரட்சித் தலைவரை "இதய தெய்வம்' என்று போலித் தனமாக வெளியிலே சொல்லிக் கொண்டு, அவர் உருவாக்கிய மாபெரும் இயக்கத்தைப் பயன்படுத்தி, அவர் சம்பாதித்துக் கொடுத்த புகழையும், பெருமையையும் வைத்துக் கொண்டு ஊரை அடித்து உலையிலே போடு கிற கொடுமையான குற்றத்திற்கு எப்படி யெல்லாம் ஜெயலலிதா காரணமாக இருந் திருக்கிறார் என்பதை இன்றைக்கு நாடு அனுபவத்தில் உணர்ந்துகொண்டிருக்கிறது. இப்படி ஒரு அபாயம் நேரக்கூடாது என்று தான் எம்.ஜி.ஆர். விரும்பினார். ஆனால், எப்படியோ? அபாயம் வந்துவிட்டது.

-இப்படி எம்.ஜி.ஆருக்கு எதிரா ஜெ. நடத்திய சதிவேலைகள... தன்னோட "எம்.ஜி.ஆர். யார்?' புத்தகத்தில் எழுதியிருந் தார் ஆர்.எம்.வீரப்பன்.

"போர்க்களம்' தொடர்ல, ஆர்.எம்.வீ. யோட நூல்லருந்து நாம எடுத்துச் சொன்ன விஷயங்கள்ல பல, நம்ம நக்கீரன் பத்திரி கைல அப்பப்போ நாம புலனாய்வு செஞ்சு, கவர் ஸ்டோரியா வெளியிட்ட விஷயங்கள் தான்கிறது நக்கீரனோட ஆரம்ப கால வாசகர்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஜெ.வ பத்தி அபாண்டமா நக்கீரன் எழுதலங்கிறதுக்கு இதை எடுத்துக் காட்டினோம்.

"எம்.ஜி.ஆரை கெடுத்தது ஜெயலலிதா தான்'' என ஒரு சமயம் பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார் அன்றைய அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன். வீரப்பன் ஏன் இப்படிச் சொன்னாரு? என நாம் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள்...

1971 சட்டமன்றத் தேர்தல் பிரச் சாரத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற் கொண்ட எம்.ஜி.ஆர்., தேர்தல் முடிஞ்சதும் நேபாளம் போயிட்டார். கூடப்போனது ஜெயலலிதா. அது வெளியே தெரியக் கூடா துங்கிறதுனால மாறுவேஷத்துல போனார்.

(பொதுவாக எம்.ஜி.ஆர்., பெண்கள் விஷயத்துல ரொம்ப கூச்ச சுபாவி. நடிகை அஞ்சலிதேவி, "எனது சினிமா காதலர்கள்' அப்படிங்கிற புத்தகத்துல தன்னோட நடிச்ச ஹீரோக்களப் பத்தி எழுதும்போது, "எம்.ஜி. ஆர். ரொம்ப கூச்ச சுபாவி. பெண்களுடன் நெருங்கி நடிக்கத் தயங்குவார். ஹாலிவுட்டின் ஙஏங நிறுவனம் மாதிரி பின்னாளில் எம்.ஜி.ஆர். புகழ்பெறுவார்'னு எழுதியிருந்தார்.)

"கூச்ச சுபாவியான எம்.ஜி.ஆரை கெடுத்தது ஜெயலலிதாதான். அதுமட்டுமல்ல... 1971 தேர்தலில் தி.மு.க. அமோகமா ஜெயித்து கலைஞர் முதலமைச்சரா இருக்கும்போது... மந்திரிசபையில் ஸீட் கேட்கச் சொல்லி தூண்டியது இவர்தான். இவர் பேச்சைக் கேட்டு எம்.ஜி.ஆரும் டிரங்கால் போட்டு கலைஞர்கிட்ட கேட்க... "சட்டமன்ற கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கலாம், நீங்க நேர்ல வாங்க'னு கலைஞர் சொன்னார்.

சென்னை வந்து கலைஞரை சந்திச் சப்போ... "நடிப்பா? மந்திரி பதவியா? ஏதா வது ஒண்ண டிஸைட் பண்ணுங்க. ரெண்டுலயும் இருக்கிறது சட்டச் சிக்க லாகும்'னு கலைஞர் சொல்ல... அன்னிக்கி இருந்துதான் எம்.ஜி.ஆருக்கும், கலைஞருக் கும் கருத்து வேறுபாடு உண்டாச்சு'' என கலைஞர் கால சீனியர் கட்சிப் பிரமுகர்கள் சொல்றாங்க.

"ஜெயலலிதாவுக்கு கட்டுப்பாடா இருக்க முடியாது. "கலசப்பாரா'ங்கிற இடத் துல ஷூட்டிங் நடக்கும்போது தினமும் தன் னோட தெலுங்கு காதலன் சோபன்பாபுவ சந்திக்க, பெங்களூரு அசோகா ஹோட்டல்லயிருந்து ஓடி வந்துருவாங்க. இந்த மாதிரி எதையும் சரியா கடைப்பிடிக்காதவங்கதான் ஜெயலலிதா. இதெல்லாம் அப்பவே பத்திரிகையில செய்தியா வந்ததுதான்.

தவறு என்று ஒரு மனிதன் உணர்ந்தாலே... அவன் மன்னிக்கப்படுகிறான். ஆனால் தவறுகளை பகிரங்கப் படுத்துபவர் இந்த ஜெயலலிதா.

ராஜீவ்காந்தியுடன் தான் பேசுவதையும், பழகுவதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிற இந்த ஜெயலலிதாவின் கீழ்த்தரமான குணம்தான் ராஜீவை பாதித்தது.

ஆர்.எம்.வீ. ஒரு கட்டத்துல ரொம்ப காட்டமா... "எல்லா வகையிலும் பிரபலமா இருக்குற பொம்ப ளைங்க கூட, தன் வாழ்க்கையை ரகசியமாக நடத்த வேண்டும் என்றுதான் நினைப்பாங்க. அது அவங் களின் இயற்கை குணம். ஆனால்... பெரியோர்களை எல்லாம் தன் கைக்குள் அடக்கி வைத்திருக்கிறோம்; அவர்கள் தனக்குள் கட்டுப்பட்டவர்கள்' என்கிற மாதிரி உணர்ச்சியிலே இந்த அம்மா ஈடுபடுவார்' என ஆர்.எம்.வீ. தெரிவித்துள்ளார்.

("உலகம் சுற்றும் வாலிபன்' படத்துக்கு கதாநாயகி களை தேர்வு செய்துகொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர்.கிட்ட இருந்து துண்டிக்க ணும்'னு காங்கிரஸ் பத்திரிகையான "நவசக்தி'யில ஜெயலலிதாவோட அம்மா சந்தியா ஒரு தொடர் எழு திட்டு வந்தாரு. அதுவுமில்லாம "செட்'டில் எம்.ஜி.ஆர ஜெ. மதிக்கிறதே இல்ல, இதனால கடுப்பான ஆர்.எம்.வீ., "உலகம் சுற்றும் வாலிபன்' படத்துல ஜெ.வை நடிக்கவிடாம பாத்துக்கிட்டார்.

ஒரு நாயகியா எம்.ஜி.ஆரே லதாவை செலக்ட் பண்ணினார். இன்னொரு நாயகியா மஞ்சுளாவை ஆர்.எம்.வீ. தேர்வு செஞ்சார். மூணாவது நாயகியாக ஜெ.வை ஒப்பந்தம் செய்ய விரும்பி, சென்னை ஆற்காடு சாலை அலுவலகத்துல வச்சு ஆர்.எம்.வீ.கூட பேசிய எம்.ஜி.ஆர்., "அம்மு முன்ன மாதிரி இல்லையாம், திருந்திட்டாராம்'னு சொல்ல....

"நான் ஒரு உதாரணத்துக்கு சொல்றேன்... அடா வடியா நடக்கிற பெண்களப் பத்தி ஊருல ஒரு சொலவட சொல்லுவாங்க'ன்னு... அந்த பலான பழமொழிய ரைமிங்கா ஆர்.எம்.வீ. சொல்ல... எம்.ஜி.ஆர். அதைக் கேட்டு அலுவலக அறையே அதிரும்படி சிரிச்சாராம்.)

அப்புறம் என்னாச்சு?

(புழுதி பறக்கும்)