gg

(314) ஜெயலலிதா அரசியல் என்ட்ரி! ஆர்.எம்.வீ. அதிர்ச்சி! ஆத்திரத்தில் ப.உ.ச!

ஜெயலலிதாவுக்கும் ஆர்.எம்.வீரப்பனுக் கும் இடையில அப்படி என்ன வாய்க்கா வரப்பு தகராறு?

ரெண்டு பேருக்கும் நடுவுல தனிப்பட்ட விரோ தம்னு எதுவும் இல்ல. அப்புறம் ஏன் பகைன்னா...

Advertisment

"உங்களுக்கு வேணும்னா எம்.ஜி.ஆர். பெரிய சிங்கமா இருக்கலாம். ஆனா என்னப் பொறுத்தவரைக்கும் அவரு ரொம்ப சாதாரணம்''

-இப்படி சினிமாவுல எம்.ஜி.ஆர் பிஸியா இருந்த காலத்துல இருந்தே எம்.ஜி.ஆரோட இமேஜ மட்டம் தட்டுற வேலைய திட்டம் போட்டு செஞ்சுக்கிட்டு வந்தவருதான் ஜெயலலிதா.

இதுக்கு ஒரு உதாரணம் சொல்லணும்னா...

Advertisment

பொதுவா ஷூட்டிங் ஸ்பாட்டுல எம்.ஜி.ஆர் வர்றதுக்காக ப்ளோர்ல எல்லாரும் காத்திருப் பாங்க. தி.மு.க. கட்சிக்காரங்க, ரசிகர் மன்றத்துக் காரங்கள்லாம் எம்.ஜி.ஆர பாக்க வெளியில காத்துக்கிட்டிருப்பாங்க. இதயெல்லாம் தெரிஞ்சுக்கிட்ட பின்னாடிதான் தி.நகர் வீட்டுல இருந்து ஜெயலலிதா கிளம்பி வருவாரு. மத்த நடிகர், நடிகைகள் ஷூட்டிங் நடக்குற இடத் துல உக்காந்திருந்தா லும் இந்தம்மா நேரா ஸ்டுடியோவுக்குள்ள வந்து எம்.ஜி.ஆரோட பர்சனல் மேக்-அப் ரூமுக்குள்ள போகும். இதனால கூடுதலா ஒரு அரைமணி நேரம் எம்.ஜி.ஆர். ஸ்பாட் டுக்கு வர்றதுக்கு லேட்டாகும். எம்.ஜி.ஆர். வரும்போது அவர் பக்கத்துலயே ஜெயலலிதாவும் வருவாரு. இதன்மூலமா எல்லாருக்கும் ஜெ. உணர்த்துன விஷயம் என்னன்னா... எம்.ஜி.ஆர். பெரிய சிங்கம் இல்ல, சாதாரணம் தான் அப்படிங்கிறதுதான்.

"எம்.ஜி.ஆர். இடம் கொடுக்காம, ஜெ.வால இம்புட்டு அலட்சியமும், தெனாவெட்டும் காட்ட முடியாதுங்கிறது ஆர்.எம்.வீ.க்கு நல் லாவே தெரியும்; எம்.ஜி. ஆருக்கு அதவிட நல்லாவே தெரியும். ஆனாலும் முடிஞ்ச அளவு எம்.ஜி.ஆர். கிட்ட ஜெயலலிதா நெருங்காம இருக்க, கண் கொத்திப் பாம்பா கவனிச்சுக்கிட்டிருப்பாரு ஆர்.எம்.வீ.

இந்த விஷயத்த எம்.ஜி.ஆரோட தி.நகர், ஆற்காடு ரோடு ஆபீஸ்ல வச்சு எம்.ஜி.ஆர். கிட்டயே நேருக்கு நேரா சொல்லியிருக்கார் ஆர்.எம்.வீ. அதோட ஜெ.வும், ஜெ.வோட உறவுக்காரங்களும் காங்கிரஸ் சார்புள்ள ஒரு பத்திரிகையில எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் இணைச்சு தினசரி கிசுகிசு தொடரா வெளிவரச் செஞ்சாங்க. இதை செய்றது யாருன்னு எம்.ஜி.ஆருக்கு தெரிஞ்சும், தெரியாதது மாதிரி அவர் காட்டிக்குவார். அந்த விஷயங்களையும் ஆதாரத்தோட எம்.ஜி.ஆர்.கிட்ட சொல்லியிருக்கார் ஆர்.எம்.வீ. இந்த சம்பவம் எல்லாம் "ரிக்ஷாக்காரன்' படத்துல ஜெயலலிதாவுக்கு வாய்ப்புத் தர மறுத்த சமயத்துல நடந்துச்சு.

தான் நடிக்க வேண்டிய படத்துல புதுமுகம் மஞ்சுளாவ அறிமுகப்படுத்துனத ஜெ.வால தாங்கிக்க முடியல. அதுமட்டும் இல்ல... "உலகம் சுற்றும் வாலிபன்' படத்துலயும் ஜெ.வ நடிக்கவிடாம செஞ்சார் ஆர்.எம்.வீ.

ds

எவ்வளவோ சமாதானங்கள எம்.ஜி.ஆர். சொல்லி, "அம்மு முன்ன மாதிரி இல்ல' என ஆர்.எம்.வீ.கிட்ட வலியுறுத்தியும் ஆர்.எம்.வீ. சமாதானம் ஆகல. கடைசியில கதாநாயகிகள் விஷயத்துல ஆர்.எம்.வீரப்பனையே ஜெயிக்க விட்டார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருக்கு ஜெ. மேல இருந்த ஒரு விதமான ஈர்ப்ப அவ்வளவு சீக்கிரம் ஆர்.எம்.வீ. யால மாத்த முடியல. "ஆயிரத்தில் ஒருவன்' படத் துல எம்.ஜி.ஆருக்கு ஜோடியா ஜெ. அறிமுக மானாரு. அதுல பாத்தீங்கன்னா... எம்.ஜி. ஆருக்கும் ஜெ.வுக்கும் இடையே இருக்கிற வயசு வித்தியாசம் ரொம்பவே அதிகம். ஆனா ஸ்கிரீன்ல அது தெரியாது. இந்தப் படம் வந்த சமயம்... "தாத்தாவும் பேத்தியும் காதல் வெறி யோட நடிச்ச மாதிரி இருக்கு'ன்னு அந்தக்கால பத்திரிகையாளர் அறந்தை நாராயணன் எழுதுனாரு. இதே கருத்து இண்டஸ்ட்ரியிலயும் எதிரொலிச்சுச்சு. ஆனா... எம்.ஜி.ஆர். ரசிகர்கள்ட்டயும் பெண்கள் மத்தியிலயும் இந்த ஜோடிப் பொருத்தம் ரொம்ப பாராட்டப் பட்டுச்சு. அதனால தான் "முகராசி' படத்துல இந்த சூழல வச்சு கண்ணதாசன் ஒரு பாட்டு எழுது னாரு.

"எனக்கும் உனக்கும்தான் பொருத்தம்

இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்

நம் இருவருக்கும் உள்ள நெருக்கம்

இனி யாருக்கு இங்கே கிடைக்கும்'

-இப்படி ஆரம்ப மாகும் அந்த பாட் டோட பல்லவி.

அதே எம்.ஜி.ஆர். தான் முதலமைச்சரா இருந்தப்ப "தேவை யில்லாம ஜெயலலிதாவ பெரிய ஆளாக்கி தப்பு பண்ணிட் டேன்'னு வேதனைப் பட்டதும் நடந்துச்சு.

இன்னும் இது போல எம்.ஜி.ஆர். ஜெ.வுக்கு இடையில சினிமா விஷயங்கள் நெறைய இருக்கு. அதெல்லாம் போகப்போகச் சொல்றேன்...

ஜெ.வுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட ஆர்.எம்.வீ.தான், ஜெ.வோட அரசியல் என்ட்ரிக்கு காரணமாவும் ஆனாருன்னு போன தொடர்ல முடிச்சிருப்பேன்.

ss

அது என்னன்னா...

எம்.ஜி.ஆருக்கும், ஆர்.எம்.வீரப்பனுக்கும் கணக்கு வழக்குகளப் பாத்த கம்பெனி. அதுல வேலை பாத்த ஆடிட்டர் கோபியின் வீட்டுப் பெண்ணோட பரதநாட்டிய அரங்கேற்றம் 1980 கடைசியில ராணி சீதை ஹால்ல நடந்துச்சு. தலைமை விருந்தினரா அப்ப அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீ. கலந்துக்கிட்டாரு. அரங் கேற்றம் முடிஞ்சதும்... வாழ்த்திப் பேசுறவங்கள மேடைக்கு அழைச்சாங்க. அப்ப, "செல்வி.ஜெய லலிதா அவர்கள் மேடைக்கு வரவும்'னு சொன்னாங்க. அப்பதான் ஆர்.எம்.வீ.க்கே, ஜெயலலிதா அங்க வந்திருக்கிறதே தெரிஞ்சது. 10 வருஷத்துக்குப் பின்னாடி நேருக்கு நேரா ஜெயலலிதாவ பாத்ததுனால, மரியாதை நிமித்தமா அந்த மேடையில ஜெயலலிதாவையும் குறிப்பிட்டுப் பேசுனாரு ஆர்.எம்.வீ.

"நம்ம வீட்டுப் பெண்கள் பரதநாட்டியம் கத்துக்கிறதோ, அரங்கேற்றம் பண்றதோ பெரிய விஷயம் இல்ல. தினமும் கொஞ்சநேரமாவது வீட்ல நடனமாடணும். அப்பத்தான் உடம்பும், மனசும் புத்துணர்ச்சியா இருக்கும். செல்வி.ஜெய லலிதா அவர்கள் கூட திறமையாக நாட்டியம் ஆடக்கூடியவர்தான்'' அப்படீன்னு பேசியிருக்கார். அன்னிக்கு ராத்திரி பத்து மணிக்கு எம்.ஜி.ஆர். கிட்ட இருந்து ஆர்.எம்.வீரப்பனுக்கு போன்.

"என்ன... ரொம்ப பாராட்டுனீங்களாமே?''

"என்ன சொல்றீங்க...?''

"இன்னிக்கு நடந்த பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில அம்முவ ரொம்பவே பாராட்டுனீங்களாமே? அம்மு போன்பண்ணி சந்தோஷப்பட்டுச்சு...''ன்னு சொல்லிட்டு, எம்.ஜி.ஆர். போன வச்சுட்டாரு.

ஆர்.எம்.வீரப்பனுக்கு பயங்கர அதிர்ச்சி!

"1970கள்ல இருந்து எம்.ஜி.ஆர மிஸ்யூஸ் பண்ற ஜெயலலிதாவ எம்.ஜி.ஆர்.கிட்ட இருந்து விலக்க பெரும் போராட்டம் பண்ணி, அதுல சாதிச்ச நாமளே இப்ப பத்து வருஷம் கழிச்சு, மறுபடியும் அவங்க பேசிக்கிறதுக்கு காரணமாயிட்டமே'ன்னு வயித்துல வாயில அடிச்சுக்கிட் டார் ஆர்.எம்.வீ. அவரு அச்சப்பட்ட மாதிரியேதான் பின்னாடி நடந்துச்சு!

ஜெயலலிதா மறுபடியும் எம்.ஜி.ஆரோட தொடர்பு எல்லைக்குள்ள வந்துட்டாரு. கட்சியில சேர்ற விருப்பத் தையும் எம்.ஜி.ஆர்.கிட்ட சொல்ல... அவரும், அதை அங்கீகரிச்சாரு. ஆக... ஜெ.வோட அரசியல் என்ட்ரிக்கு ஒருவகையில ஆர்.எம்.வீ.யே காரணமானாரு.

அப்போ அ.தி.மு.க.வுல ஒரு சட்ட விதி அமல்ல இருந்திச்சு. அதாவது... கட்சியில ஒருத்தருக்கு ஒரு பதவிதான். அதனாலதான் முதலமைச்சரா இருந்த எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு ப.உ.சண்முகத்த தேர்வுசெய்ய வச்சார்.

திருப்பூர் மணிமாறன் சட்ட சபை கொறடாவா இருந்ததோட, கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராவும் இருந்தார்.

"ஒருவருக்கு ஒரு பதவி' திட்டப்படி, கொ.ப.செ. பதவிய ராஜினாமா செஞ்சாரு மணிமாறன்.

ssdf

1983 ஜனவரி 28ஆம் தேதி அ.தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளராக "ஜெ.'வ அறிவிச்சார் ப.உ.ச. ஏற்கனவே தன்னை மதிக்காத ஜெ. மேல ஆத்திரத்துல இருந்தார் ப.உ.ச. இதனால அடிக்கடி ரெண்டு தரப்புக்கும் பிரச்சினை.

ஆனா எம்.ஜி.ஆரோ ப.உ.ச. வாயாலேயே "ஜெ.'வை கொ.ப.செ.வா அறிவிக்க வச்சார்.

ஜோதிடம், நல்லநாள்... இதெல்லாம் பாத்து, பிப்ரவரி மாசம் 12-ந் தேதி, மகளிர் அணி என தன் ஆதரவாளர்களத் திரட்டி, மலர் தூவச் செஞ்சு, கட்சி ஆபீஸுக்குள்ள தனக்கு ஒதுக்கப் பட்ட அறைக்குள்ள நுழைஞ்சாரு ஜெ.

கஷ்டப்பட்டு ஜெயிக்கிறவ னுக்குத்தான் வெற்றியோட அருமை தெரியும். நோகாம பதவி கிடைச்சா என்னாகும்...?

பேராசைதான் வரும். ஜெ.வுக்கும் அந்த பேராசை வந்திச்சு.

ஆனா... அது எம்.ஜி.ஆரோட செல்வாக்குக்கான அடித்தளத்தை யே அசைச்சுப் பார்க்கிற பேராசைன்னு சொல்லலாம்.

(புழுதி பறக்கும்)