(299) செல்வகணபதியை காட்டிக் கொடுத்த "ஜெ.'!
நீதியரசர் சிவப்பா 11-12-36லதான் பிறந்தவருன்னு கணக்கு வைக்கணும்னு ஜனாதிபதியே முடிவு பண்ணிட்டாருன்னு விளக்கம் அனுப்பியிருந்தாரு அமைச்சர் தம்பிதுரை. (ஜெயலலிதா குடுத்த அழுத்தத்துல முடிவு பண்ணுனதுன்னு ஊருக்கே தெரியும்)
அவர் அனுப்பியிருந்த அந்த ஃபேக்ஸ், உயர்நீதிமன்ற வக்கீல்ங்க மத்தியில பெரும் கொந்தளிப்ப ஏற்படுத்துச்சு.
"இப்படிப்பட்ட செய்திகள நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கிற அதிகாரம், குடியரசுத் தலைவர் மாளிகை செயலருக்கும் -மத்திய சட்டத்துறை செயலாளருக்கும் மட்டும்தான் உண்டு. அவர்கள்ட்ட இருந்து நீதிபதி சிவப்பா வயது விவகாரம் பத்தி எந்தத் தகவலும் உயர் நீதிமன்றத்துக்கு வரல. அதிகாரம் இல்லாத தம்பிதுரை -இந்தச் செய்திய அனுப்புனது அரசியல் சட்ட அத்துமீறல்''ங்கிறது அவங்களோட குற்றச்சாட்டு.
வக்கீல்களும், நீதிபதிகளும் தம்பிதுரையின் அத்துமீறல பத்தி என்ன நினைக்கிறாங்க அப்படீங்கிறத படம் பிடிச்சுக் காட்றதுபோல உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சி.அரிகிருஷ்ணன் இதப்பத்தி விரிவா விளக்கியிருக்காரு. (கதிரவன்: 6-3-99)
"ஒரு வழக்கை விசாரித்துக்கொண்டிருந்த நீதிபதிக்கு போதிய கால அவகாசம் தெரிவிக்கப்படாமல் "நீக்கம்' என்ற உத்தரவைக் காண்பித்து, வழக்கை பாதியிலேயே அந்த நீதிபதி விட்டுவிட்டுப் போகும்படியான நிலைமை -இந்திய வரலாற்றிலேயே இப்போதுதான் முதன்முறையாக நடந்துள்ளது. இந்த சம்பவம் அனைத்து நீதிபதிகளையும் மிகவும் மனம் உடையச் செய்துவிட்டது.
ஒரு நீதிபதியின் திடீர் நீக்கத்தை மற்ற நீதிபதிகள் அவமானமாகக் கருதுகிறார்கள். ஒரு நீதிபதி வழக்கை விசாரித்துக்கொண்டிருக்கும்போது, அவரது பதவி நீக்கத்தை அனைவரின் முன்னிலையிலும் தெரிவித்திருக்கக்கூடாது.
வக்கீல்கள் -சாட்சிகள் முன்னிலையில் இப்படி ஒரு நீதிபதியை அவமானப்படுத்தி யிருக்கக்கூடாது. நீதிபதியின் பதவி நீக்கம் குறித்த உத்தரவை சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு காலையில் கொடுத்திருக்கலாம். அதுவும் இல்லையென்றால் வழக்கு விசாரணை நடத்த அவர் போகுமுன்பே தெரிவித்திருக்கலாம். பதவி நீக்கம் குறித்த உத்தரவை சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு எந்த நேரத்திலும் -குறிப்பாக அவர் வழக்கை விசாரித்துக்கொண்டிருக்கும்போதும் கொடுக்க லாம் என்று எந்த சட்டத்திலும் இல்லை.
சட்ட மந்திரி தம்பிதுரை அப்படிச் செய்திருக்கக் கூடாது. நீதிபதியின் பதவி நீக்கத்தை தலைமை நீதிபதிதான் கொடுக்க வேண்டும். அதுதான் முறை...''
அப்படீன்னு குறிப்பிட்டிருக்காரு அரிகிருஷ்ணன்.
அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் (ஆஇஆட) தமிழக பிரிவிற்கான தலைவர் என்.ஜி.ஆர். பிரசாத் இன்னொரு முக்கியமான சந்தேகத்தை எழுப்பி -இந்த விவகாரத்துல பொதிஞ்சிருக்கிற அடிப்படையான தகவலை சுட்டிக்காட்டி யிருந்தாரு... அது என்ன?
"நீதிபதி சிவப்பாவின் வயது விவகாரம் பத்தி ஜனாதிபதி ஏற்கனவே முடிவெடுத்து, அந்த ஃபைலையும் மூடிட்டாரே, இப்போ அந்த ஃபைல திரும்பவும் திறந்து -புதிய முடிவு எடுத்தது எப்படி?'' என்று கேள்வி எழுப்பியிருக்காரு அவரு.
"நீதிபதி சிவப்பாவின் வயது விவகாரத்துல, நீதிபதியோட பதிலுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட ஃபைல ஜனாதிபதி மூடிட்டாரு. இப்போ சம்பந்தப்பட்ட அந்த நீதிபதிக்கு எந்தவித நோட்டீசும் அனுப்பாம, அவர்ட்ட விசாரணை நடத்தாம, மீண்டும் முடிவு எடுத்திருக்கிறது அரசியல் சட்டம் கூறியிருக்கிற உரிமைகள மீறுறது ஆகும். புகழ்பெற்ற பினாபானி வழக்குல உச்ச நீதிமன்றமே இதத் தெரிவிச்சிருக்கு''ன்னு ஒரு கேள்விய ஐயத்தோட எழுப்பியிருக்காரு என்.ஜி.ஆர்.பிரசாத்.
சிவப்பா வயது விவகாரமும் -அவர பதவி நீக்குனது பத்தியும், நீதித்துறையில் உள்ளவங் களோட கொதிப்பு ஒருபுறம் இருக்க... நீதிபதி சிவப்பாவ பதவி நீக்கம் செய்றதுல தம்பிதுரைக்கு ஏன் இவ்வளவு அக்கறை? அ.தி.மு.க.காரங்களுக்கு ஏன் இத்தன சந்தோஷம்? அந்த அளவுக்கு சிவப்பா மேல ஜெயலலிதாவுக்கும் அவரோட சீடகோடிகளுக்கும் என்ன கோபம்?
கலர் டி.வி. ஊழல் வழக்குல கைதுபண்ணி "ஜெ.' மேடத்த, நேரா கொண்டுபோனது சென்னையில இருக்கிற போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்கு.
கமிஷனர் ஆபீஸ்ல நடந்த விசாரணையில ஜெயலலிதாகிட்ட கேட்கப்பட்ட கேள்விகளையும், அதுக்கு அவர் சொல்லியிருந்த பதில்களையும் படிச்சுப் பாத்தாலே தெரியும், தனக்கு பிரச்சினை வந்தா, கூட இருந்தவங்கள காட்டிக் குடுப்பாருங்கிற... நல்ல குணம் ஜெயலலிதாவோடதுங்கிறதுக்கு உதாரணம் இந்த பேட்டி!
8-12-96ல "தினத் தந்தி' வெளியிட்ட அந்த கேள்வி பதில்கள்...
கேள்வி: டி.வி. வாங்கியதில் விதிமுறைகளை மீறி உத்தரவு போட்டிருக்கிறீர்களே; இது உங்கள் கையெழுத்துதானா?
ஜெயலலிதா: ஆமாம்; நான்தான் கையெழுத்துப் போட்டுள்ளேன்.
கேள்வி: படித்துப் பார்த்துதானே கையெழுத் துப் போட்டீர்கள்?
ஜெயலலிதா: ஆமாம்.
கேள்வி: விதிமுறை மீறப்பட்டிருப்பது தெரிந்தும், கையெழுத்துப் போட்டி ருக்கிறீர்களே?
ஜெயலலிதா: அமைச்ச ரவைக் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவு அது. இதை உள்ளாட்சித்துறை அமைச்சர் செல்வகணபதிதான் செய் துள்ளார்.
கேள்வி: நீங்கள் கையெழுத்துப் போடாமல் இருந்திருந்தால் அரசுக்கு எட்டரைக் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்காதே?
ஜெயலலிதா: இது அமைச்சரவையின் முடிவுதான்.
கேள்வி: 30-11-95ஆம் தேதி போயஸ் கார்டனில் உள்ள உங்களது வீட்டில் டெலிவிஷன் பெட்டிகள் வாங்குவது சம்பந்தமான கூட்டம் நடந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் அதிக விலை கொடுத்து டெலிவிஷன் வாங்க நிதித்துறை செயலாளர் ராஜாராமன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்படியும், அதை மீறி நீங்கள் கையெழுத்திட்டிருக்கிறீர்களே?
ஜெயலலிதா: விதிமுறையை மீறவில்லை. இதை பொதுவாகத்தான் செய்தேன். போயஸ் கார்டனில் கூட்டம் நடந்ததா என்பது எனக்கு ஞாபகமில்லை.
கேள்வி: நீங்கள் ரிக்கார்டு பராமரித்து வருகிறீர்களா?
ஜெயலலிதா: ரிக்கார்டு பராமரிக்கும் பழக்கம் இல்லை; பர்சனல் ரிக்கார்டு பராமரிக்கும் பழக்கமும் இல்லை.
கேள்வி: டெலிவிஷன் வாங்கியது சம்பந்தமான ஃபைலில் தவறு என்று தெரிந்தும் ஏன் கையெழுத்திட்டீர்கள்?
ஜெயலலிதா: உள்ளாட்சித்துறை அமைச்ச ராக இருந்த செல்வகணபதி கையெழுத்துப் போட்டிருந்ததால் நானும் கையெழுத்திட்டேன்.
கேள்வி: திறந்த ஒப்பந்தப் புள்ளி முறையை நீங்கள் ஏன் -டெலிவிஷன் வாங்குவதில் பின்பற்றவில்லை.
ஜெயலலிதா: மந்திரிசபை முடிவுப்படிதான் செய்தேன்.
கேள்வி: டெலிவிஷன் வாங்கும் ஒப்புதல் கமிட்டியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மச்சேந்திரநாதன் கையெழுத்திடாமல் இருந்துள்ளார். அதையும் மீறி நீங்கள் ஏன் ஒப்புதல் அளித்தீர்கள்?
ஜெயலலிதா: சரியாக நான் கவனிக்கவில்லை.
கேள்வி: 65 கோடி ரூபாய்க்கு டெலிவிஷன் பெட்டிகள் வாங்கப்படுகின்றன. உங்களுக்கு இந்தத் தொகை முக்கியமானதாகத் தெரியவில்லையா?
ஜெயலலிதா: அதை நான் பெரிதாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதவில்லை.
கேள்வி: ஜனவரி மாதத்துக்குள் உடனே சப்ளை செய்யவேண்டும் என்று கூறியிருக் கிறீர்களே?
ஜெயலலிதா: மந்திரிசபை எடுத்த முடிவின்படிதான் இந்த முடிவும் எடுக்கப்பட்டது. என்னுடைய முடிவு அல்ல...
-இப்படி ஜெயலலிதா பதில் சொன்னதா தினத்தந்தி செய்தி வெளியிட்டிருந்துச்சு.
சரியா 10:53க்கு கமிஷனர் ஆபீஸ்ல இருந்து வெளிய கொண்டுவரப்பட்டப்ப... பத்திரிகையாளர் கள்ட்ட, "அரசியல் பழிவாங்கும் படலம் தொடர்கிறது. இதுவரை என்ன நடந்தது என்பதையெல்லாம் நீங்கள் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறீர்கள்?''னு சொன்னாரு.
வேன் கீழ்ப்பாக்கம் டவர்ஸ் குடியிருப்புல உள்ள நீதிபதி ராமமூர்த்தி வீட்டுக்கு விரைவா போய் சேர்ந்துச்சு. 11:05-க்கெல்லாம் பலத்த பாதுகாப்போட வந்த "ஜெ.', போலீஸ் வேன்ல இருந்து இறங்குனாரு. அந்த குடியிருப்புல இருந்த நூற்றுக்கணக்கான ஆம்பளைங்க, பொம்பளைங்க, குழந்தைங்க எல்லாரும் ஜெயலலிதாவ உற்சாகமா மாடிகள்ல இருந்து பாத்தாங்க.
ஜெயலலிதா அவங்கள ஒரு பார்வ பார்த்துச்சுப் பாருங்க... ஆத்தாடீ... எரிச்சேபுடும் போல... அத்தன கோபப் பார்வை...
படக்குன்னு தலைய திருப்பிக்கிருச்சு. "உப்பு நெறைய சாப்புட்டா தண்ணி குடிச்சுத்தான ஆக ணும்...' -இத நான் சொல்லல, பெருசுங்க சொன்னது.
8-ஆவது மாடியில நீதிபதியோட வீடு இருந்ததுனால ஜெயலலிதாவ லிஃப்ட்டுல அழைச்சிட்டுப் போனாங்க...
(புழுதி பறக்கும்)