(295) கலைஞரை கொடுமைப்படுத்திய போலீஸ்!
நீதிபதி அசோக்குமா ரிடம், தன் வீட்டில் போலீசார் அநாகரிகமா நடந்துக்கிட்டத விவரிச்சு சரணடையப் போறதாச் சொன்னாரு ஸ்டாலின்.
ஸ்டாலினோட வக் கீல் ராஜஇளங்கோ, "சென்னை மத்திய சிறையில அடைக்கிறதுக்குதான் நீங்க உத்தரவு போடணும். வேற ஊரு ஜெயில்ல அடைச்சா, அவரோட உயிருக்கு ஆபத்து''ன்னு சொன்னாரு.
அதுக்கு நீதிபதி, "இதை முடிவு செய்ற பவர் என்கிட்ட இல்ல. ஜெயில் அதிகாரிகிட்டதான் நீங்க அந்த கோரிக்கைய வைக்கணும்''னு சொன்னாரு.
அதனால... சென்னை ஜெயில்லயே ஸ்டாலினை வைக்கச் சொல் றதுக்கான காரணத்த தனியா ஒரு மனுவா எழுதி நீதிபதிட்ட சமர்ப்பிச்சாரு ஸ்டாலினோட வக்கீல். இதை ஏத்துக்கிட்ட நீதிபதி, ஸ்டாலினை 15 நாள் ரிமாண்டில் வைக்க உத்தரவு போட்டாரு.
ஸ்டாலினை கைது செஞ்சு வெளிய கொண்டுவந்த போலீஸ், "நீங்க உங்க காருல வர்றீங்களா? இல்ல போலீஸ் வேன்ல வர்றீங்களா?''ன்னு கேக்க, "நான் போலீஸ் வேன்லயே வர்றேன்''னு சொன்னாரு ஸ்டாலின்.
வேன் சென்னை மத்திய சிறையை நோக்கிப் போகும்போது ஒரு உத்தரவு வந்தது. அதையடுத்து ஸ்டாலின மதுரை சிறைச்சாலைக்கு கொண்டுபோனாங்க ஷேக்ஸ்பியரோட புகழ்பெற்ற நாடகம் "ஜுலியஸ் சீஸர்.'
சீஸரை கொலை செஞ்சுருவாய்ங்க. அவரோட நண்பன் புருட்டஸும், சீஸரை வாளால குத்துவான். அப்போ சீஸர் பேசும் கடைசி வாக்கியம்தான் (You Too Brutus?) "புரூட்டஸ் நீயுமா?' என நம்ப முடியாம கேட்பாரு சீஸர்.
நடுராத்திரியில வயசானவருன்னும் பாக்காம துன்பப்படுத்தி -துயரப்படுத்தி போலி குற்றச் சாட்டுகளக் கூறி கலைஞர கைது செஞ்ச, ஜெ. போலீஸ் படையில, தன்ன அலேக்கா தூக்கி அவஸ்தைக் குள்ளாக்குன அஸிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் முருகேசனைப் பார்த்து கலைஞர் என்ன கேட்டாரு தெரியுமா?
தன்னுடைய நன்மதிப்புல இருந்த போலீஸ் அதிகாரிகள்ல ஒருத்தன்தான் முருகேசன். ஆட்சி மாறுனதும் அணி மாறுன அதிகாரிங்க லிஸ்ட்ல முருகேசன் மட்டும் விதிவிலக்கா என்ன? இதன்மூலமா சசிகலாவுக்கு வேண்டியவனா ஆனான் முருகேசன்.
ஜூன் 30, 2001 அன்னிக்கு கலைஞர் கைது செய்யப்பட்டாரு. இதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி கலைஞரை கைது செய்ய டி.ஜி.பி. ரவீந்திரநாத், டி.ஐ.ஜி. முகம்மது அலி இவங்களோட ஆலோசன செஞ்சாங்க ஜெயலலிதா.
சசிகலாவுக்கு வேண்டிய அஸிஸ்டெண்ட் கமிஷனர் முருகேசனை 3 நாளுக்கு முன்னாடியே மைலாப்பூருக்கு மாறுதல் செஞ்சிருந்தாங்க. காரணம், கலைஞர கைதுங்கிற பேர்ல தூக்கிட்டும், இழுத்துட்டும் போகணும்னா ஆஜானுபாகுவான உடல்வாகோட ஒரு பீம் வேணும்ல... அதுக்கான எல்லா ஏற்பாடும்தான்.
கலைஞர ஏ.சி. முருகேசன் அலேக்காகத் தூக்கிட்டு வந்து மாடிப்படியில நிறுத்தி, "இறங்குங்க'ன்னாரு. அப்போ கலைஞர் தடுமாற.... உடனே முருகேசனும், இன்னொரு போலீசும் கலைஞர அலேக்கா தூக்கிக்கிட்டு மாடிப்படிகள்ல வேக வேகமாக இறங்கினாய்ங்க. போலீஸ்காரய்ங்க அழுத்திப் பிடிச்சதுனால, வலி தாங்க முடியாம கலைஞர், "விடுங்கய்யா... விடுங்கய்யா...'ன்னு அலறுனாரு. ஆனா போலீஸ் விடாப்பிடியா மாடிப்படிகள்ல தூக்கிட்டு வந்ததுனால, கலைஞர் தன் தோள்ல கிடந்த துண்ட எடுத்து முருகேசன் மேல வீசி, "நீயுமா முருகேசா!''ன்னு கேட்டாரு. அவர விடாப்பிடியாக தூக்கிட்டுப் போய் கார்ல திணிச்சு சி.பி.சி.ஐ.டி. ஆபீசுக்கு கூட்டிட்டுப் போனாய்ங்க.
"நீயுமா முருகேசா?'
"நீயுமா முருகேசா?'ன்னு தன்னை கைதுங்கிற பேர்ல கஷ்டப்படுத்துன அஸிஸ்டெண்ட் கமிஷனர் முருகேசனப் பாத்து கலைஞர் கேட்டதுக்கு இன்னொரு முக்கிய காரணம்... முருகேசனும் மேலும் சில காக்கிகளும், கலைஞரோட கையப் புடிச்சு முறுக்குன வலி தாங்காமத்தான்.
பிரபல நாவலாசிரியரும், ஜெ.வோட நீண்டநாள் தோழியுமான இந்துமதி ஒரே நேரத்துல கலைஞர் கூடவும், ஜெ. கூடவும் தோழமையோட இருந்தவரு. கலைஞர் அரெஸ்ட்டாகி சென்ட்ரல் ஜெயில்ல 4 நாள் வைக்கப்பட்டு, பிறகு ஜாமீன்ல வெளிவந்தாரு. தாங்க முடியாத மன வலியோட, உடல் வலிக்கு, பிரபலமான ஆஸ்பத்திரியில ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டிருந்தாரு. அப்போ ஹாஸ்பிட்டல்ல போய் கலைஞரப் பாத்த இந்துமதி கலங்கிப் போனாங்க.
இது சம்பந்தமா சில வருஷத்துக்கு முன்னாடி அவரு கொடுத்த பேட்டியில என்ன சொல்லியிருந்தாங்கன்னா...
"மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கலைஞரைப் போய் பார்த்தேன். அப்போ கலைஞர் தன்னோட கைகள காட்டினார். போலீஸ் பலவந்தமா கலைஞர இழுத்ததுனால அவரோட கைகள் கன்னிப்போய் (ரத்தம் கட்டி) இருந்தது. அதைப் பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருந்தது. கலைஞர பார்த்துட்டு நேரா ஜெ.வோட போயஸ் வீட்டுக்குப் போனேன்.
"நீ எங்க போயிட்டு வர்றேன்னு எனக்குத் தெரியும்'னு ஜெயலலிதா சொன்னார்.
"ஆமா! அவரப் பாத்துட்டுத்தான் வர்றேன். நீங்க செஞ்சது சரியான முறையா? அவர் இருதய நோயாளி. அவரை இப்படியா தூக்கி பந்தாடுறது?ன்னு கேட்டுட்டு வந்தேன்'னு ரொம்ப ஆதங்கமா அந்த பேட்டியில சொல்லியிருப்பாரு...
பிரதமர் வாஜ்பாய், "கலைஞர், மத்திய அமைச்சருங்க முரசொலி மாறன், டி.ஆர்.பாலு... இவங்களோட அரெஸ்ட் பற்றி உடனடியா முழு ரிப்போர்ட் வேணும்'னு கேட்டதுனால, தமிழக தலைமைச் செயலாளர் சங்கர், இத பவ்யமா ஜெ.கிட்ட போய் சொன்னாரு.
"கலைஞரையோ, முரசொலி மாறனையோ காவல்துறை தாக்கலன் னும், கலைஞர் குடும்பத்துல உள்ள வங்களும், முரசொலி மாறனும்தான் காவல்துறை அதிகாரிகள தாக்குனாங் கன்னும் ஸ்ட்ராங்கா ஒரு ரிப்போர்ட்ட அனுப்புங்கன்னு முழுப் பூசணிக்காய சோத்துல மறைக்கிற மாதிரி ஆர்டர் போட்டாரு அம்மணி ஜெயலலிதா.
அத்தன துல்லியமான வீடியோ காட்சிக, மீடியாவோட நேரடி சாட்சியும், காட்சியும்... கலைஞர் எப் படில்லாம் கொடுமைப்படுத்தப் பட்டாருங்கிறதுக்கு, கைது செய்யப் பட்டாருங்கிறதுக்கு சாட்சியா வரிசை கட்டி நிக்குது... இன்னைக்கும் கண்ணு முன்னாடி. யாரும் அத மறக்கவே மாட்டாங்க. ஆனா... மனசாட்சியே இல்லா தவய்ங்களுக்கு இந்த சாட்சிகளும் காட்சிகளும் ஒரு பொருட்டே இல்லியே...
இவ்வளவு பெரிய காளி ஆட்டத்துக்கும் என்ன காரணம்குறீங்க?
இதத் தெரிஞ்சுக்கணும்னா 1980-களுக்கு Time travel பண்ணு னாத்தான் தெரியும்.
"1980, மே 25 தேதியிட்டு வந்த "காஸ்பாட் சன்டே'ங்கிற அமெரிக்க -இந்திய தயாரிப்புல குஜராத்துல இருந்து வெளிவர்ற ஆங்கிலப் பத்திரிகையில தன்னைப் பத்தி வந்த செய்திக்கு, அதன் ஆசிரியர் பியூஸ்ஜிக்கு (PIOUSJI) மறுப்புக் கடிதம் எழுதுறாரு ஜெ.
அந்தக் கடிதம்...
அன்புள்ள பியூஸ்ஜி,
1980, 25-ஆம் தேதி “சன்டே”காஸ்பட்டில் இடம் பெற்ற செய்தி ஒன்றை மேற்கோள் காட்டி, நீங்கள் எனக்களித்த பல பாராட்டுகளுக்கு நன்றி சொல்லும் அதேவேளை, நான் சினிமாவுக்கு மீண்டும் திரும்புவதற்கு.. திரும்பவும் சொல்கிறேன், மீண்டும் திரும்புவதற்கு போராடிக்கொண்டிருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டு வதற்கு வருந்துகிறேன். நீங்கள் இந்த தவறான மனப் பதிவை எப்படி பெற்றீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை.
உண்மையில், நான் சில சிறப்பான வாய்ப்புகளைக் கூட மறுத்து வந்திருக்கிறேன். பாலாஜியின் "பில்லா' படத்தில் ரஜினிகாந்தின் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு எனக்குத்தான் வந்தது என்பதை நீங்கள் அறியாமலிருக்கலாம். நான் அந்த வாய்ப்பை மறுத்த பின்பே தயாரிப் பாளர் பாலாஜி அந்தக் கதாபாத்திரத்துக்கு ஸ்ரீபிரியாவை புக் செய்தார். பாலாஜியே இதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இன்று இந்தியாவில் பாலாஜி முன்னணி தயாரிப்பாளர் என்பதையும், ரஜினிகாந்த் தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார் என்பதையும் அனைவரும் அறிவார்கள். அத்தகைய மகத்தான வாய்ப்பையே மறுத்திருக்கிறேன் என்றால், அதுவே மீண்டும் சினிமா வாய்ப்புக்காக நான் சற்றும் ஆர்வம்காட்டவில்லை என்பதை நிரூபிக்கப் போதாதா?
உண்மையில், சினிமா வாய்ப்புக்காகப் போராட வேண்டிய அவசியம் இல்லை. இனியும் சினிமா வாழ்க்கை யில் எனக்கு ஆர்வம் இல்லை. கடவுளின் அருளால், நான் பொருளாதார ரீதியாக மிகவும் நலமாக இருக்கிறேன். மிச்சமுள்ள வாழ்க்கை முழுவதும் நான் ஒரு ராணியைப் போல வாழமுடியும்.
நல்ல திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால் அல்ல, தற்போது நான் படத்தில் நடிக்க விரும்பாததாலும், தற் போது என் ஆர்வம் முற்றிலும் மாறுபட்ட திசையில் இருப் பதையும், சொல்வதற்காக மட்டுமே இதை உங்களுக்கு எழுதுகிறேன். எல்லா நலமும் உங்களுக்கு வாய்க்கட்டும்
தங்கள் உண்மையுள்ள
ஜெயலலிதா
இந்தக் கடிதத்துல கடைசி பாராவ நல்லா படிங்க. "என் கவனம் முழுவதும் வேறு திசையில் இருக்கிறது''ன்னு போறபோக்குல சொல்றாரு "ஜெ.' அதென்ன "வேறு திசை'ன்னுதான யோசிக்கிறீங்க.
வேறு திசைதான்... "அரசியல்!'
(புழுதி பறக்கும்)