(276) வால்டர் தேவாரம்... அந்தப் புத்தகம்... 458ஆம் பக்கம்...!
ராஜ்குமார தேடிப்போற நக்கீரன் கோபால கொன் னுட்டா? கலைஞர காலிபண்ணிடலாம். எப்புடி ஐடியா...! எனக்குப் பின்னாடியே ஆட்கள போட்டு கொல்லத் திட்டமிட் டாய்ங்க. அதனால துக்கை யாண்டிங்கிற போலீஸ் ஆபீஸரே, "நீங்க போயிறாதீங்க, உங்களக் கொல்ல திட்டம் போட்டுருக்காங்க'ன்னு அவரே நேர்ல வந்து சொன்னத, இன்னைக்கும் என்னால மறக்க முடியாது. துக்கையாண்டி சார் பொய் சொல்ற ஆள் இல்ல. நேர்மைன்னா நேர்மை... அப்படி ஒரு நேர்மை!
பொதுவா எப்பவும் ரொம்ப ஜாக்கிரதையா இருப்பவன் நான். இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு இது... "இதுன்னா ஒங்க இது... எங்க இது இல்ல... பெரிய இது' இருந்துச்சு. போலீஸ்காரர் சொன்னதக் கேட்டு "பக்கு.. பக்கு...'ன்னு வேற அடிச்சுது. அதுக்கு விடையாத்தான் 23 வருஷம் கழிச்சு என்ன கொல்ல திட்டம் தீட்டுன வங்களோட தலைவி... அந்தப் புரட்சித் தலைவி ஏவுன வேலைய தட்டாம செய்ற போலீஸ்தான் வால்டர் தேவாரம். அந்தத் தேவாரமே "ஆமா'ன்னு ஒத்துக்கிட்ட மாதிரி அவரு எழுதுன புத்தகத்துல அழுத்தமா பதிவு செஞ்சிருக்காரு.
தேவாரம் எழுதுன புத்தகத்துல 458-ஆவது பக்கத்துல 2-வது பாராவுல அவரு... "சிறப்பு அதிரடிப்படையின் மனநிலையை கருத்தில் கொண்டு நான் வீரப்பனுக்கு அதிர்ச்சி கொடுக்கும்படியாக, அவன் தூதுவரை சந்திக்க வரும்போது... நாம் சந்தித்தால் என்ன? என்று திட்மிட்டேன்''னு ரொம்ப முக்கியமான வரிகள எழுதியிருக்காரு. ரொம்ப முக்கியம்... ரொம்ப, ரொம்ப முக்கியம்! எவ்வளவு பெரிய வார்த்த இது... உங்களுக்கு விளங்கும்னு நினைக்கிறேன்.
"எங்கப்பன் குதிருக் குள்ள இல்ல'ன்னு அடிக் கடி சொல்லுவேன் பாருங்க... இந்த இடத் துலயும் அந்தச் சொலவட சரியா இருக்கும்.
துக்கையாண்டி சார் வந்து, நான் கிளம்புறதுக்கு முன்னால... வீரப்பன், ராஜ்குமார கடத்துற செய்தி என்னிக்கு காலை யில டி.வி.யில வருதோ அன்னிக்கு மத்தியானம் 1:00 மணிக்கெல்லாம் பரபரப்பா சின்னகுத்தூசி ஐயா அறைக்கு வந்து, "போகாதீங்க... உங்களப் போட்டுருவாங்க... அதுக்கு ப்ளான் பண் ணிட்டாங்க'' அப்படீன்னு சூசகமா... சூசகமா இல்ல பட்டவர்த்தனமாவே சொன்னாரு. மெனக் கெட்டு போலீஸ் காஸ்ட் யூம்லயே நேரா வந்து எச்சரிக்கிறாரு... அத சும்மா எடுத்துக்க முடி யாதுல்ல.
சின்னகுத்தூசி ஐயா ரொம்பவே பயந்துட்டாரு. போகவே கூடாதுன்னு தான் ஐயாவும் சொன் னாங்க. நானும் போற மனநிலையில இல்ல... வேணாம்னுதான் இருந்தேன். வீரப்பன் காட்டுப்பக்கம் தலை வச்சுப் படுக்கவே கூடாதுன்னு சத்தியம் பண்ணாத குறையாத்தான் இருந்தேன். ஆனா, அதனாலதான் எனக்கொரு சின்ன எண்ணம் என்னன்னா, "ஒருவேள இப்படிப் பயமுறுத்துனா, நான் இதுல இருந்து ஒதுங்கு வேன்ங்கிற மாதிரி போலீஸ் நினைச்சுருப்பாங்களோ, அப்படீங்கிற மாதிரியெல்லாம் பல குழப்பம் இருந்தது.
ஆனா, இன்னிக்கு இந்தப் புத்தகம் படிச்சவுடனே, துக்கையாண்டி சொன்னதுல எவ்வளவு பெரிய உண்மை இருந்ததுன்னு தெளிவா தெரிஞ்சது. எத்தாத்தண்டி திட்டம் போட்டுருந்தாய்ங்கன்னு விளங்குது.
அவரு... என்ன சொல்றாரு தேவாரம்? "சிறப்பு அதிரடிப்படையின் மனநிலையை கருத்தில் கொண்டு'', அது என்ன வெங்காயக் கருத்துன்னா, வீரப்பன் காட்டுல தூதுவரா எவனும் போயிரக்கூடாது. ராஜ்குமார எவனும் காப்பாத் திடக்கூடாது.... அதான!
வீரப்பன சுட்டுப் புடிக்கணும்... கோபால அட்ரஸே இல்லாம ஆக்கீறணும்... ராஜ்குமார் செத்தாலும் பரவால்ல. தமிழர்கள் நாசமா போனாலும் பராவல்ல. அவங்கள்ல எத்தன பேர கர்நாடகாக்காரன் கொன்னாலும் பரவால்ல... அப்படீங்கிற மனோநிலைதான அவங்களுக்கு. அந்த மனநிலைய கருத்துல வச்சுக்கிட்டுதான் அவரு "நான் வீரப்பனுக்கு அதிர்ச்சி கொடுக்கும் படியாக...''
"என்ன வில்லத்தனம்...?'
அவரே சொல்றாரு... "அவன் தூதுவரை சந்திக்க வரும்போது... நான் சந்தித்தால் என்ன?''
எத்தன பெரிய பயங்கரத்தச் செய்ய திட்டமிட்டிருந்திருக்காய்ங்க பாருங்க. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்களேன்... எவ்வளவு பெரிய மொரட்டு கிரிமினல்தனம்.
ஒரு அரசாங்கம் தூது அனுப்ப திட்ட மிடுறாங்க சார். தூது அனுப்பறது நம்மள சார். கர்நாடாகவுல ஒரு லட்சம் பேற கொன்னுரு வாங்கன்னு சொன்னதுனால, வேற வழியில் லாததுனால, "சரி... போவோம்'' அப்படீன்னுட்டு நான் புறப்பட்டுப் போயாச்சு. போயாச்சுன்னா சும்மா பஸ்ஸுல, கிஸ்ஸுலயெல்லாம் போகல. காடு, மேடுன்னு பெரும்பாடு அது.
என் மக டீம் வீரப்பன பத்தி ஒரு டாக்கு சீரிஸ் எடுக்குறாங்கள்ல. அதுல இப்ப பார்ட்-1 வந்திருக்கு. பார்ட் 2, 3ன்னு இப்படிப் போறதுல மிச்சத்த பதிவு பண்ணுவோம்னு வச்சுக்கங்க... அது வேற.
ஆனா தேவாரம் அண்ணே என்ன சொல்றார்ர்ர்... "வீரப்பனுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில்...''
அதாவது தூதரா நான் காட்டுக்குப் போகும்போது வீரப்பன் என்னை சந்திக்க வருவாப்டில்ல... அந்த நேரம்... "நான் போய் சந்திச்சா என்ன?''ங்குறாரு.
எப்படிங்க? கற்பனை பண்ணிப் பாருங்களேன். ஒரு போலீஸ்காரன, "வாங்க மிஸ்டர் தேவாரம், எஸ்... உக்காருங்க'ன்னா சொல்லுவான் அவன்?
இல்லன்னா இவரும் வந்து, "வாங்க வீரப்பன்... வணக்கம்'னா போடுவாரு.
பாத்தவுடனே அவன் சுடணும், இல்லன்னா இவிய்ங்க சுடமாட்டாங்களா? அப்ப இடையில நான் மாட்டுனா என்னையும் சேத்துதான பொங்கல் வைப்பாய்ங்க? என்ன... இது எவ்வளவு பெரிய கபோதித்தனம்... அயோக்கியத்தனம்? இந்தத் தனத்துல... என்னென்னென்லாம் இருக்குதோ அதையெல்லாம் இதுல போட்டுக்கங்க. அவ்வளவு பெரிய சதித் திட்டத்துக்கு இவங்க ப்ளான் பண்ணியிருக்காய்ங்க. என்னையும் சேர்த்து வீரப்பனையும் கொல்றதுக்கு "நாங்க திட்டமிட்டோம்'னு அவரு வாயால, அவரே கைப்பட எழுதுன புத்தகத்துல இங்க பதிவாகியிருக்கு 458-ஆம் பக்கத்துல. இதத்தான்... இதத்தான் ரொம்ப காலமா எதிர்பாத்தேன்.
ஏன்... இந்தப் புத்தகத்த, அரசு போலீஸ் கேன்டீன்ல விக்கிறது எத்தனை பெரிய துரோகம். "ஜெ' தலைமையில, கலைஞர் ஆட்சிய காவு வாங்கத் துடிச்ச போலீஸ்தான் தேவாரம். அது எப்படி இப்ப நல்லபிள்ளையா ஆயிருவாரு... நான் கேக்குறது சரிதான...?
"நாம வர்ற வழியில தூதுவரை சந்திக்கும் போது வந்தா என்ன? நம்ம சந்திச்சா என்ன?ன்னு இவரு திட்டமிட்டது யார வச்சுன்னா...?' அந்த மோகன் நிவாஸ்... உதவி ஆய்வாளர்ங்கிற போர்வையில இருந்தான் பாருங்க... அவன்தான், அந்த ஆளுதான் என் சூ....க்குப் பின்னாடியே வர்றது.
எங்கெங்கெல்லாம் போவாங்க, இவங்க எப்படி வருவாங்க, அதுக்கு அவன் அங்கங்க ஆளுகளப் போட்டு மேக்ஸிமம் பாத்தீங்கன்னா வீரப்பனுக்கு எதிரா ரவுண்டுகட்டி உளவு சொல்றதுக்கு ஆளுகள திரட்டி வச்சிருப்பாப்டி.
இப்ப நான் போற இடமெல்லாம் சூ....க்குப் பின்னாடி ஆளுகள அனுப்பி, "இவன் இந்தப் பக்கம்தான் போறான், அப்படின்னா இங்கதான் சந்திப்பான் அப்படீங்கிறத மெனக்கெட்டு கண்டுபுடிச்சு, வீரப்பன போடுறதுக்கும், என்னப் போடுறதுக்கும் இவங்க திட்டமிட்டுருக் காங்கங்கிறத' அவரு இந்தப் புத்தகத்துல பதிவு பண்றாரு. அப்போ இதுக்கு யாரு உதவி? மோகன் நிவாஸ்.
இப்படி எல்லாம் மோப்பம் புடிச்சு நக்கீரன ஜெயிக்கவிடாம கொன்டேபுடணும்னு வெறிநாயாட்டம் போட்டு அலையுற மோகன் நிவாஸ் மேல, முதல்வர் கலைஞர்ட்ட நேர போயி புகார் சொன்னேன்.
"அண்ணே நான் காட்டுக்குள்ள போனா இந்த அதிகாரி என்ன கொல்லத் திட்டம் போட்டுருக்காருண்ணே. அதனால முதல்ல அவர இங்க வரச்சொல்லுங்க. இவரு அங்க இருந்தா நான் போக யோசிக்கணும்னு கொஞ்சம் தைரியத்த வரவச்சு சொன்னேன். பின்ன என் உசுரு முக்கியம்ல.
முதல்வருக்கும் காட்டுல இருந்து இந்தத் தகவல் வந்ததால ஒருகட்டத்துல கலைஞர் ரொம்ப கோவமாயிட்டாரு.
ஏன்னா, "நான் ஒரு முடிவெடுக்கிறேன். வீரப்பன் கடத்திட்டான். அதனால ரெண்டு மாநிலமும் சுமுகமா இருக்கிற மாதிரியும், நம்ம தமிழர்கள் யாருடைய உயிரும் போயிறக் கூடாது, யார் உயிருக்கும் பங்கம் வந்துறக் கூடாதுங்கிறது அக்கறையில நான் முயற்சி எடுத்துப் பண்ணிக்கிட்டிருக்கேன். இடையில ஒரு போலீஸ்காரன் இவ்வளவு அட்டூழியம் பண்றானா?''ன்னு எல்லார் முன்னாடியும் கத்திட்டாரு.
"நானும் கேள்விப்பட்டேன் கோபால்'' னாரு.
"இப்படிப்பட்டவங்க இருக்குறப்ப எப்படீண்ணே நான் உள்ள போறது?''ன்னு வருத்தமா சொன்னவுடனே...
"யோவ் அந்த ஆள வரச்சொல்லுய்யா. இங்க டி.ஜி.பி. ஆபீஸ விட்டு அவன் வேற எங்கயும் போகக்கூடாது. இங்கேயே உக்காந்து கையெழுத்துப் போடச் சொல்லுங்கய்யா''ன்னு ஆர்டர் போட்டாரு. இப்படி அவரு ஆர்டர் போட்டது எனக்கும் தெரியும், அலெக்ஸாண் டர் சாருக்கும் தெரியும். அப்படி ஆர்டர் போட்டதுனால மோகன் நிவாஸ் டி.ஜி.பி. ஆபீசுக்கு வேண்டா வெறுப்பா வந்துட்டாரு. அந்தாளு இங்க வந்து கையெழுத்து போட்ட பிறகுதான், நானே வண்டியக் கட்டுனேன்.
தேவாரம்... அவர் தலைமையில இருந்த மோகன் நிவாஸ் -இவிய்ங்க போட்ட சதியில இருந்து என் உசுர காப்பாத்த கலைஞர் போட்ட உத்தரவ, இப்ப இந்தப் புத்தகத்துல தேவாரம் அதே 458-ஆம் பக்கம்...
(புழுதி பறக்கும்)