uu

(273) சித்ரவதையால் சீரழிக்கப்பட்ட சின்னப்பொண்ணுவின் கதறல் தொடர்கிறது...

"வீரப்பனைப் பத்தி எதுவுமே இவளுக்குத் தெரியாதாம்'ன்னு சொல்லி, நல்லா இத்தாம் பெரிய கட்டைய (கையால் அளவு காண்பிக்கிறார்) எடுத்து வந்து தொடை மேலயே அடிச் சாங்க. அது ரெண்டா ஒடஞ்சி போச்சு. நல்ல வலி. நடக்க முடியாமப் போச்சி. தே...னு சொல்லிக் கிட்டே என் காதுல கரண்டு கம்பி வச்சு ஷாக் குடுத்து இப்ப நட...நடன்னு சொல்லி அடிச்சாங்க. நட, நடன்னு மிதிச்சாங்க.. கரண்டு குடுத்த அதிர்ச்சில உதுரம் (ரத்தம்) அப்டியே காலோட போவுது. கொழந்த பெறந்த கொஞ்சநாள்லயே கரண்ட் ஷாக் குடுத்ததும் அந்த அதிர்ச்சில ரொம்ப அதிகமா ரத்தம் போச்சு. அதப் பாத்த அவனுக, "நீயெல்லாம் ஒரு பொண்ணா?'னு சொல்லிக்கிட்டே பின்பக்கமா காலால ஒதைச்சிட் டாங்க. கரண்டு மெஷினோட அப்படியே முன்னாடிபோய் விழுந்துட்டேன். கரண்டுனால காதுல வலி தாங்காம கொக்கிகளப் பிச்சுப்போட் டேன். காது கிழிஞ்சு ரத்தமா ஊத்துச்சு. அப்றமும் ஒன்ன விடப் போறதில்லைன்னு சொல்லி நாங்க ஏற்கெனவே இருந்த ரூமுக்கு கூட்டிட்டுப்போய் திரும்பவும் கரண்ட்ஷாக் குடுத்து அடிச்சாங்க.

ஏங்கையா! ஒங்களுக்கெல்லாம் ஈவு இரக்கமே இல்லயா? வூட்டுக்காரரையும் கொன்னு போட்டீங்க.. அந்தப் பொணத்தக் கூட கண்ணுல காட்டல. நீங்களா பூவைக் கொடுத்து நீங்களா பொட்டக் கொடுத்து நீங்களாவே அதையும் அழிச்சிட்டீங்க. இப்பிடியெல்லாம் சித்ரவத பாவம் செய்றீங்களே. நாங்க என்ன பாவம் செஞ்சோம். கூலிவேலைதான செஞ்சோம்.

Advertisment

"இல்ல... நீங்க வீரப்பனுக்கு சாப்பாடு ஒதவி பண்ணிருக்கீங்க, கர்நாடகாவுல இருந்து ஓடி வந்துட்டீங்க'ன்னு சொல்லி அடிச்சாங்க.”

அவர எனக்கெல்லாம் தெரியாதுங்க. கலியாணம் ஆகி ஒரு வருசம்தான் ஆச்சு. இப்பதான் இங்க வந்தோம். அவரப்பத்தி எல்லாம் எனக்குத் தெரியாதுன்னு சொன்னேன். வீரப்பரு யாரு என்னன்னு கூடத் தெரியாதுங்க.

"நாங்க அப்படித்தான் கொடும பண்ணுவோம், நாங்க எதை சொன்னாலும் ஆமான்னு ஒத்துக்கணும்."

Advertisment

"என்னத்தையா ஒத்துக்கறது? அதச் சொன் னாலும் அடி தாங்கமுடியாம ஒத்துக்கலாம்னுதான் இருந்தோம். அதையும் சொல்லமாட்டிங்க. "நாங்க அப்படித்தான் செய்வோம். தேவைப்பட்டா ஒன்னக் கெடுக்கக்கூடச் செய்வோம்'னு சொல்லி அசிங்கமா நடந்துகிட்டாங்க. "ஒன்னக் கெடுத்தா எவன் என்ன மயிரப் புடுங்குவான்'னு சொல்லி அசிங்கம் அசிங்கமாத் திட்டுவாங்க. "வாடி போடி, தே...யா, ஆயா, ங்கொம்மா'ன்னுதான் திட்டுவாங்க. "தே...ளுங்களே ஒங்களுக்கு வேற மாப்பிள்ளைக எதுவும் கெடைக்கலையா? நீங்கள்லாம் வீரப்பனத்தாண்டி புருஷனா வச்சுக்கிட்டு இருக்கீங்க'ன்னு திட்டுவானுங்க. ரெண்டு மாசம் எவ்வளவு கொடுமை பண்ணணுமோ அவ்வளவும் பண்ணுனாங்க. இவனுக சித்ரவத எல்லாம் முடிச்சி அப்புறம் கர்நாடகாக்காரங்ககிட்ட குடுத்துட்டாங்க. அந்த எடத்துலயும் அவங்களும், இவங்களும் சேந்து சித்ரவத செஞ்சாங்க. மாதேஸ்வரன் மலைக்கு கூப்பிட்டுப் போயி அடிச்சாங்க. ஒரு வருஷம் ஆறு மாசம்னு செய்யாத சித்ரவத இல்ல.

ஒரே செட் உடைதான். உள்பாவாடை, சின்ன தாவணி, ஒரு பழைய ஜாக்கெட்டு. அந்த ஒரே செட்டு துணியோட எழுபது எம்பது ஆம்பளைங் களோட இருக்கணும். குளிக்கப் போகணும்னா பழைய துணிய பிழிஞ்சு போட்டுட்டு அந்த ஆம்பளைங்க வேட்டிய வாங்கி மூடிக்கிட்டு அப் பிடியே செவத்துப் பக்கமா குத்த வச்சி உக்காந் துக்குவோம். பின்னாடி கையையும் கட்டிடுவாங்க.

சாப்பாடு ரெண்டே ரெண்டு களித்துண்டு இத்துணூண்டு கொடுப்பாங்க. அதத் திங்கவே முடியாது. அந்த மாதிரி களி வேற எங்கயும் கெடைக்காது. காலைல ஆறு மணிக்கு சுவத்துப் பக்கம் திரும்பி உக்காரணும். கையில பின்னாடி கூடிக் கட்டி வெலங்கு போட்டுடுவாங்க. கண்ணுல கருப்புக்கலர் துணியக் கட்டிடுவாங்க. எவன் எவன் தொடுறான். எங்கெங்க தொடுறான்னு தெரியாது. திரும்பிப் பாத்தா பின்னாடி வந்து கட்டைல அடிப்பாங்க.

டேட் ஆகிடும். கூட இருக்கிற அந்த ஆம்பளைங்ககிட்டதான் வேட்டி யத் துண்டு துண்டா ஆக்கி கட்டிக்கு வோம். அத அலசிப் போடணும்னா வெளில போக முடியாது. அந்த ஆம்ப ளைங்களே அலசித் தருவாங்க. அந்த ஆம்பளைங்க மூஞ்சில முழிக்கிறதுக்கே ஒருமாதிரி பாவமா இருக்கும். அவங் களும் அடி, சித்ரவதைனு நொறுங்கிப் போயிக் கெடப்பாங்க. எங்க ளுக்கு நடந்த கொடுமைக வேற எந்தப் பொண்ணுக் கும் நடக்கக்கூடாது.

ss

போலீஸ்காரனுங்க பண்ணுன அநியாயத்துக் கும் அட்டூழியத்துக்கும் அளவே கெடயாது. ஒண்ணுக்கு வந்து வயிறு உப்புனாக்கூட பின்னால திரும்பிப் பாக்காம கையால ஒரு வெரல காட்ட ணும். கைல வெலங்கு வேற போட்டுருக்கும். "ஏண்டி மூதேவி என்ன வந்துருச்சு ஒனக்கு'ன்னு சொல்லி அடிப்பாங்க. நல்லவனா இருந்தா "சரி... போய்த் தொலை'ன்னு அடிச்சு அனுப்புவாங்க. மீதி ஆளுக பின்னாடியே வந்து அடிப்பாங்க. தின்னுப்புட்டு இதே வேலைன்னு அடிப்பாங்க. ஒண்ணர வருசமும் எங்க பொழப்பு இப்படியே தான் போச்சு. "இப்ப ஒங்களைக் கொல்லணும்'னு சொல்லி தலைல கட்டையாலயே அடிப்பாங்க. சவுண்டு விடாம இருந்தா ஒரு அடி.. ஐயோன்னு சத்தம் போட்டா ரெண்டு அடி. ஒருநாள் கூட அடி வாங்காத நாளே கிடையாது. தெனம் ஒருமணி நேரம், அரைமணிநேரம் யாரையாவது கரண்டு சித்ரவதை பண்ணிக்கிட்டேதான் இருப்பாங்க.

"வீரப்பனுக்கும் ஒங்களுக்கும் என்ன உறவு?'

இதக் கேட்டுக் கேட்டு பைத்தியமே பிடிச்சுருச்சு எங்களுக்கு.

சார்... நாங்க வீரப்பனுக்கு ஒதவி செஞ்சதாவே நெனைச்சு ஜெயில்லகூடப் போடுங்க. சித்தரவத பண்ணாதீங்கன்னு கதறு வோம். இல்லைனா கொண்டு போயி கொன்னு போட்டுடுங்கன்னு கத்துவோம்... அழுவோம்... கதறுவோம்... அப்புறந்தான் பிடிச்சு ஜெயில்ல போட்டானுங்க.

ஒன்பது வருஷம் ஜெயில்ல இருந்தேன். வெளில வர்றப்ப 24 வயசு தாண்டிடுச்சு. என் தாயே என்னை ஏத்துக்கலை. ஜெயில்ல இருந்தவ தானன்னு அவ பேசுன வார்த்தைகள தாங்க முடியல. பெத்தவ பேசுற மாதிரி இல்ல. வேற யாரோ பேசுற மாதிரி பேசுனா. எங்க அக்கா வீட்டுக் காரரு தம்பி. காதும் கேக்காது. வாய் பேசவும் முடியாது. அவருக்கு ஒரு மாதிரியா எழுதிக்காட்டி நான் எந்தத் தப்பும் பண்ணல. எல்லா சித்ரவதையும் செஞ்சாங்க. நான் நல்லவதான்னு சொல்லி வாழ்க்கைப் பிச்சை கேட்டேன். அந்த மனுஷன் என்னைக் கலியாணம் பண்ணி ஏதோ பாடுபட்டு அரைக் கஞ்சியோ, காக்கஞ்சியோ குடிச்சுக்கிட்டு இருக்கோம்.

ஒண்ணுக்குப் போற எடத்துல, என் புருஷனுக்கு நான் கரண்டு கொடுக்கணும். அவரு எனக்குக் கொடுக்கணும். என் செருப்பால நான் அவர அடிக்கணும். இல்லைனா போலீஸ்காரன் எங்கள சேத்துவச்சி செருப்பாலயே அடிப்பான். போலீஸ்காரன் கட்டையால அடிச்சதுனால முட்டியெல்லாம் வீங்கிப்போயி நடக்கவே முடியல. கரண்ட் ஷாக் கொடுத்ததால எப்பவுமே தலை டென்சனாவே இருக்கும். கண்ணுல, ஒண்ணுக்குப் போற எடத்துல எல்லாம் மொளகா காரம் போட்டு பயங்கரமா அடிப்பாங்க. ஒடம்புல கரண்டு குடுக்கிற இடம் எல்லாம் அந்த இடம், இந்த இடம்னு கெடயாது. எல்லா எடத்துலயும் கொடுத்தாங்க. அதெல்லாம் எங்களால சொல்லவும் முடியல. தூக்கமே வரமாட்டேங்குது.''

ss

"சின்னப்பொண்ணு சொன்னத கேட்டீங்கள்ல. ஐயா தேவாரம் அவர்களே... இதெல்லாம் நீங்க ரொம்ப வீரன், சூரன்னு சொல்லிக்கிட்டு திரியுற உங்க தலைமக்குக் கீழ வேலை பாக்குற... உங்க வார்த்தையில சொல்லணும்னா, "தன்னார்வமிக்கவர்களாக, தைரியசாலிகளாக, வலிமைமிக்கவர்களாக இருந்த அதிகாரிகள் + காவலர்களை எனக்குக் கீழ் சேர்த்துக்கொண்டேன்'னு சொல்லியிருப்பீங்க. அந்த மேப்படி தைரியசாலி, வலிமை, தன்னார்வமிக்கவய்ங்கதான் மேல சொன்ன சின்னப்பொண்ணு சங்கதிய பண்ணிய நாசகாரனுக. இவிய்ங்களுக்கு நீங்க வக்காலத்து வேற.

"அங்கிருந்த பொம்பளைங்கள காவல் துறை அதிகாரிங்க பலாத்காரம் பண்ணு னாங்க''ன்னு முக்தார் கேட்டா...

படக்குன்னு என்ன சொன்னீங்க... "சும்மா கதை...'

ஒரு பொண்ணு வாய்விட்டுக் கதறுது. இதப் படிச்சா கதையாவா தெரியுது. ஏன் சார்... நீங்களும் பெண் புள்ளைகளோட பிறந்தவருதான.

எங்களுக்கெல்லாம் சின்னப்பொண்ணு சொல்லச்... சொல்ல... பதறுதே.

உங்களுக்கு இதயம்னு ஒண்ணு இருக்குதா...? ம்ஹும்.. இருந்தாத்தானே!''

இப்ப... புதுசா ஒண்ணு முளைச்சிருக்கு!

"பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் தேவாரம் அவர்களின் கருத்துக்கு மட்டுமே மதிப்பளித்து, வீரப்பனின் வேண்டுகோளை ஏற்கத் தயாராயிருந்த இரண்டு மாநிலங் களின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. அந்த அளவு சக்தி வாய்ந்தது...''

(புழுதி பறக்கும்)