(259) சம்பளம் ஒத்த ரூபா! சம்பவம் பல கோடி!
மலைக்க வைக்கும் "ஜெ.' சொத்துப் பட்டியல்!
ஆத்தாடீய்ய்ய்...
எம்புட்டு நகை?
இம்புட்டு நகைய வச்சுக்கிட்டு என்னதான் பண்ணுவாய்ங்க!
மொரட்டு மகன் (வளர்ப்பு மகன்) கல்யாணத்துல "ஜெ.'வும், சசியும் ஒரே மாதிரி பட்டுடுத்தி, நடமாடும் நகைக்கடையா நடந்து வந்தப்போ "எம்மாம் பெரிய ஒட்டியாணம்', "எந்தந்தண்டி காசுமாலை'னு கிறங்கி கிறுகிறுத்துத் தான் போய்ட்டாக மூக்குத்தி துவாரத்துல வேப்பங்குச்சியும், விளக்கமாத்துக்குச்சியும் செருகியிருந்த பொம்பளைக.
அரண்மனை வீட்டு வாசப்படி வழுக்கத்தான் செய்யும்கிற மாதிரி "ஜெ.' வீட்டுலயும் ஊன்றி நடந்தாலும் வழுக்குற அளவுக்கு ஆகிப்போச்சு ஊழல். அதுக்கு சாட்சியா இருந்த நகையலங்கார மும், நடையலங்காரமும் அடேங்கப்பா... கப்பா... ஜிகுஜிகுன்னு ஜொலிச்சுச்சு.
கொதிச்சுப் போயிருச்சு ஜனம்.
"நான் முதலமைச்சருக்கான அரசாங்க சம்பளத்தை வாங்கப்போறதில்லை. அது மக்கள் பணம். ஒரு பேருக்காக மாதம் ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் வாங்குவேன்'னு சொன்ன "ஜெ.' இம்புட்டு ஆபரணத்தோட இருக்கிறதப் பார்த்துட்டு, "இன்னும் எம்புட்டு பதுக்கி வச்சிருக்காங் களோ?'ன்னு மக்கள் மனசு ஆபரணத்தால ரணப்பட்டுப் போச்சு.
களம் மாறிச்சு! அதான் ஆட்சி மாறுச்சு...
ஜெயலலிதா தோத்துப்போனார்; ஆட்சி அம்பேல்!
மறுக்கா 2001 தேர்தலையொட்டி "இனி நான் நகைக... அதான் பொட்டுத் தங்கம் கூட போடமாட்டேன்; ஆடம்பரமாக இருக்கமாட்டேன்'னு சத்தியம் பண்ணுச்சு நம்ம எல்லார்கிட்டயும்.
வேஷம் போட்டு நடிச்சு அந்தத் தேர்தல்ல ஜெயிச்சாப்டி.
கொஞ்சநாள்லயே மக்களுக்கு குடுத்த வாக்குறுதிகள காத்துல பறக்க விட்டுருச்சு... நடிப்ப கலைச்சுருச்சு.
2001-ல அவர் முதல்ல போட்டுக்கிட்ட ஆபரணம்... வைரத்தோடு!
தங்கத்தை "மஞ்சள் பிசாசு' எனச் சொல்வாங்க. அந்தப் பிசாசோட மோகம் பிடிச்சுக்கிட்டா விடவே விடாது; பிசாசுக்கே பிசாசு மோகம் பிடிச்சா என்ன கதி ஆகும்?
அதுதான் ஜெ. வாங்கிக் குவிச்ச நகைப் பட்டியல்!
வீடுபேறு அடைதல்னா ஆன்மிகத்துல முக்தி அடைதல்னு அர்த்தம். ஆனா "ஜெ' அடைஞ்ச வீடுபேறு இருக்கே... அப்பப்பா..! குண்டக்க மண்டக்க லிஸ்ட் பெருசா போகுது.
கண்ட, "கண்ட' இடத்தையும் வாங்கிப் போடு! "பார்க்கிற' பங்களா வீடுகளை வாங்கிப் போடு!
இப்படி "போடு போடு'ன்னு போட்டாக. அண்ணாசாலை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையை, அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர். சமாதி தவிர, எல்லாம் இவுக பேர்ல.
பையூர் கங்கைஅமரன் பங்களா முதல் கோடநாடு எஸ்டேட் வரை எம்புட்டுச் சொத்துக் களை அடிச்சுப் புடுங்கி வாங்கிக் குவிச்சிருக்காங்க.
சம்பளம் ஒத்த ரூவாயாம்!
சம்பவம் பல கோடி ரூவாயாம்!
இந்த நகைப் பட்டியலையும், சொத்துப் பட்டியலையும்தான் மகராசன் நீதிபதி குன்ஹா தன் தீர்ப்புல சொன்னாப்டி.
திட்டம் போட்டு திருடிய கூட்டத்தின் சொத்துப் பட்டியலை இங்கே தந்துள்ளோம்.
"ஹார்ட்டு வீக்'கா இருக்கவங்க படிக்க வேணாஞ்சாமிகளா...!