ff

(258) முரசொலி மாறன் மறைவு! ஜெ. வன்மம்!

2001ல ஆட்சி மாறுது. ஆட்சி மாறுன வுடனேதான் பேய் ஆட்சி. பேய் ஆட்சியோட சர்வாதிகார ஆட்சி, ஹிட்லர் ஆட்சி, இடிஅமீன் ஆட்சின்னு உலக அளவுல எங்கெங்கெல்லாம் சர்வாதிகார ஆட்சி நடந்துச்சோ... அத்தனையும் மொத்தமா ஒண்ணா சேர்ந்த ஆட்சிதான், ஜெயலலிதாவோட ஆட்சி. 2001 மே மாசத்துல ஆட்சிக்கு வந்தவுடனே கலைஞர கைது பண்ணி துள்ளத் துடிக்கத் தூக்குறாங்க. அது உங்க எல்லாருக்குமே தெரியும்.

"கலைஞர் அரெஸ்ட்டுக்கும் சொத்துக் குவிப்பு வழக்குக்கும் என்னய்யா சம்பந்தம்'னு ஒரு கேள்வி உங்ககிட்ட இருக்கும்.

Advertisment

ஜெயலலிதாவுக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு தண்டனை கிடைச்சவுடனே சந்தோஷப்பட் டோம்னு கொஞ்சம்பேரு சொன்னாங்க.

ரொம்ப அநியாயமால்ல இருக்கு.

அந்தம்மா எப்படியெல்லாம் நடந்துச்சுங் கிறதுக்கு ரெண்டு மூணு உதாரணங்களச் சொல்லணும் இல்லியா? அதுல ஒண்ணுதான்... 2001-ல ஆட்சிக்கு வந்தவுடனே இரவோடு இரவா கலைஞர் கைது.

Advertisment

"சரி... கைது பண்ணுனாங்க. அதுக்கு என்ன இப்போ?'ன்னு சிலபேரு கேப்பாங்க.

அதுலதான் விஷயமே. அவங்களோட திட் டம் என்னன்னா... இதுக்காகவே ஆஜானுபாகுவா இருக்கக்கூடிய முருகேசன்ங்கிற ஏ.சி.ய வச்சு கோபாலபுரத்துல படுத்திருக்கிற கலைஞர ஓபன் ஜீப்ல தூக்கிட்டுப் போய் போயஸ் கார்டன் வீடு முன்னாடி நிறுத்தணும். இவங்க போற நேரத்துல அந்த டோர் "பளார்'னு தொறக்கணும்.... அங்க மாடியில உடன்பிறவா சகோதரிகள் ரெண்டுபேரு உக்காந்திருப்பாங்க, இவர அப்படியே தூக்கி காமிக்கணும்... ஏன்னா, ராத்திரி நேரத்துல கலைஞ ரோட கண்ணாடிய கழட்டிட்டா எதுவும் தெரி யாதுல்ல? அப்ப அவங்க அதப் பாத்து ரசிக்கணும். அதோட அவர முடிச்சிறணும்ங்கிறதுதான் அ.தி.மு.க. போலீஸோட திட்டமா இருந்துச்சு.

அதவிடக் கொடுமை, அப்போ எல்லாரோட கையிலயும் ஆளுக்கொரு செல்போன ஆன்பண்ணி வச்சுக்கச் சொல்லியிருக்காங்க. அந்த ஓலம்... "அடிக்கிறாங்க, கொல்றாங்க'ன்னு கத்துற சவுண்ட் அவங்களுக்கு கேக்கிற மாதிரியெல்லாம் செட் பண்ணி வச்சிருந்தாங்க. இந்தக் காரியத்த முன் னெடுத்துச் செஞ்சதுல டி.ஐ.ஜி. முகமது அலிக்கும் முக்கிய பங்கு இருந்துருக்கு. அவரும் கையில ஒரு செல்போன வச்சிருப்பாரு. முக்கியமா அவங்களோட திட்டமே "கலைஞர கைது பண்ணி அப்படியே தூக்கி காமிக்கணும்' இதுதான். இத எக்காளம் போட்டு பாக்கணும்னும் திட்டம் போட்டுருக்காங்க எகத்தாளமா. யாரு செஞ்ச புண்ணியமோ...! கோபாலபுரத்துல படுக்கவேண்டிய கலைஞர், அன்னிக்கு ஆழ்வார்பேட்டையில படுத் திருந்தாரு. முரசொலிமாறன் மட்டும் இல்லன்னா, கலைஞர அன்னிக்கு நாம உயிரோட பாத்திருக் கவே முடியாது. அண்ணன் முரசொலி மாறன் ஆழ்வார்பேட்ட வீட்டுல போட்ட அந்த சவுண்ட் இருக்கில்லியா... அதுதான் கிட்டத்தட்ட, அதுக்கப் புறமா ஒரு 16, 17 வருஷம் கலைஞர நாம உயிரோட பார்த்தது. ஆனா இதுல இன்னொரு கொடுமை... தன் மாமன காப்பாத்தப் போய் அரெஸ்ட் ஆன முரசொலிமாறன தலைக்கு மேல தூக்கிப் பந்தாடுன போலீஸ், அவருடைய ஃபேஸ்மேக்கர அடிச்சதுல... கொஞ்சநாள்ல உயிர விட்டுட்டாரு.

ff

இது எந்த ரகத்துல வரும்?

ஒருத்தர அரெஸ்ட் பண்றீங்க... அவர காட்டு றீங்க. அரெஸ்ட்பண்ணி அப்படியே கொண்டுபோக வேண்டியதுதான? அப்படியில்லாம, அவர தூக்கிக் காட்டணும்னு ஆஜானுபாகுவா முரட்டுத்தனமா, ஏதோ ஒரு இடத்துல ஏ.சி.யா இருந்தவர டிரான்ஸ்பர் பண்ணி இதுக்குன்னே எல்லா ஏற்பாடும்பண்ணி கொண்டுவந்தவங்கள எந்த ரகத்துல கொண்டுபோய் சேர்க்கிறது?

இந்த வன்மம் இருக்கில்லியா, இதையெல் லாம் பாத்ததுனாலதான்... இவ்வளவையும் சொல்றேன். இது மட்டும் இல்ல, இன்னொண் ணையும் சொல்றேன்.

எல்லாரும் என்ன நெனைச்சாங்க, "ஒரு பெரிய மனுஷி, சொத்துக் குவிப்பு வழக்குல சிறைக்குப் போகுது. அத நக்கீரன் கொண்டாடுதே' அப்படின்னு. அப்படியெல்லாம் இல்ல. "வினை, எதிர்வினை'ன்னு சொல்லுவாங்க.

2003 நவம்பர் 23, 24. ஜெயலலிதாவ டான்சி வழக்குல இருந்து ஹைகோர்ட் விடுதலை பண்ணுது. அதே நேரத்துல மத்திய அமைச்சரா இருந்த முரசொலி மாறன், அமெரிக் காவுல இருந்து சென்னைக்கு சிகிச்சைக்காக ராமச்சந்திராவுல ஏற்பாடாகி தனி விமானத்துல புறப்பட்டாச்சு. புறப்பட்டதும் ராமச்சந்திரா, "இங்க நாங்க அட்மிட் பண்ணமாட்டோம்'னு மறுக்க... (பின்னணியில நம்ம ஆத்தாதான்...) வேற வழி யில்லாம அப்பல்லோல சேர்த்தாங்க. அப்பல் லோ சிகிச்சை சரியில்லைன்னுதான் வெளிநாடு கொண்டுபோனாங்க. அது தனிக்கதை. அப்பல் லோவுல இறந்துர்றாரு. 24-ந் தேதி கோபால புரத்துல வச்சிருக்காங்க. அப்போ பிரதமரா இருந்த வாஜ்பாய், சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள்னு முக்கியமான தலைவர்கள் எல்லாரும் வந்தாங்க. வாழ்க்கையில அப்படி ஒரு இழப்ப கலைஞர் சந்திச்சிருக்கவே மாட்டாரு. அந்த அளவுக்கு மாறனுடைய மரணம் மிகப்பெரிய தாங்கிக்கொள்ள முடியாத இழப்பா இருந்ததுனால அவரு ரொம்ப அழுதாரு.

வைகோ அண்ணன் அப்போ "பொடா'ல கைதாகி வேலூர் சிறையில இருந்தாரு. இதுக் காக பரோல் வாங்கிட்டு வந்து மாறனப் பாத்து தாங்க முடியாம அப்படி அழுறாரு. வைகோ அண்ணன் அழுறதுங்கிறது... அவரு அழும் போது அப்படி வாயில இருந்து வாணி வடியும். மாறன் சாருடைய முகத்தப் பாத்துப் பாத்து தேம்பித் தேம்பி அழுவாரு. அதப்பாத்து கலைஞர் அழுவாரு. கலைஞர வைகோ அண்ணன் தேத்துவாரு, அவர கலைஞர் தேத்துவாரு. தாங்க முடியாத சோகத்துல கலைஞர் உடைஞ்சுபோய் உக்காருவாரு. அவர வீட்டுல கொண்டுபோய் உக்கார வைப்பாங்க. இடமே ரணகளமா இருந்துச்சாம்.

அந்தச் சூழல நெனைச்சுப் பாருங்க. "பொடா'ல இருந்ததுனால நான் அப்ப அந்த இடத்துல இல்ல. ஆனா நம்ம நக்கீரன்ல அப்ப பதிவு பண்ணியிருக்கோம். அவ்வளவு பெரிய இழப்புங்க. நடுவுல ராதாகிருஷ்ணன் ரோடு, இந்தப் பக்கம் கோபாலபுரம், அந்தப் பக்கம் போயஸ் கார்டன். கோபாலபுரத்துல ஒரே ஒப்பாரி... கண்ணீர்.... பெரிய, பெரிய தலைவர்கள்லாம் கண்ணீர் அஞ்சலி! எல்லாமே சோகமா இருக்கு.

ff

ரோட்டுக்கு இந்தப் பக்கம் ராதாகிருஷ்ணன் ரோட்டுல இருந்து வெடி போட ஆரம்பிச்சிட் டாய்ங்க. என்ன காரணம் அப்படின்னா? அன்னிக்கு டான்சி வழக்குல இருந்து ஜெயலலிதாவ ஹைகோர்ட் விடுதலை பண்ணிருச்சு.

பொதுவா நாம இருக்கிற தெருவுல... ஒரு மூலையில சாவு விழுந்தா... அந்த தெருவுல உள்ள எந்த வீட்டுலயும் சமைக்கக்கூட மாட்டாங்க. இதுதான் நம்முடைய சம்பிரதாயம்.

மாறன் எவ்வளவு பெரிய மனுஷன். மத்திய அமைச்சரா இருந்தவரு. மிகப்பெரிய வர்த்தக மேதை, பொருளாதார மேதை. வர்த்தக அமைச் சரா இருந்து இந்தியாவுக்கே நிறைய முதலீடுகளைக் கொண்டுவந்தவரு. அப்படிப்பட்ட பெரிய மனுஷன் இறந்திருக்காரு. ஜெயலலிதா விடுதலைக்கு, ராதா கிருஷ்ணன் சாலையில இருந்து வெடி போடுறாங்க. அங்க வெடி, இங்க வெடின்னு எல்லா இடத்துலயும் ஒரே வெடி... சந்தோஷ வெடி. அதுமட்டுமில்லாம... எல் லாருக்கும் இனிப்பும் கொடுத்து கொண்டாடுனாங்க.

யோசிச்சுப் பாருங்க...! மாறன் இறந்த செய்தி இந்தியா முழுக்கவே தீயா பரவுது. உடனே பிரதம மந்திரியே வர்றாரு. பிரதமர் வர்ற செய்தி முத லமைச்சரா இருக்கிற அந்தம்மாவுக்குத் தெரியாம போயிருக்குமா? முதலமைச்சருக்குத் தெரியாமலா பிரதமர் வந்திருப்பாரு? வரத்தான் விட்ருவாங்களா...?

இவ்வளவு பெரிய ஒரு சாவையே வெடி போட்டு கொண்டாடுறாங்கன்னா, அந்தம்மாவோட வன்மம் எந்த அளவுக்கு இருந்திருக்குங்கிறது தெரியுதா உங்களுக்கு? திஸ் இஸ் ஜெயலலிதா!

ஜெயலலிதா அரெஸ்ட்ட, வெடி போட்டுல்லாம் நாம கொண்டாடல.

ஏன் நக்கீரன் சாதனைன்னு சொன்னேன்னா...

மிகப்பெரிய ஒரு அநியாயத்த செஞ்சு, சொத்துக்களா வாங்கிக் குவிச்சத... என்னென்ன சொத்துக்கள் வாங்கிக் குவிச்சாங்கன்னு லிஸ்ட் போட்டாலும், குறைஞ்சபட்சம் 16 பக்கம் வரும். அத பின்னாடி சொல்றேன். அதையெல்லாம் சொல் லிட்டுப் போனாத்தான், "ஓகோ இப்படியெல்லாமா இருந்தாங்க'ன்னு ஒங்களுக்குத் தெரியும். ஏன்னா வரலாறு சில விஷயங்கள மன்னிச்சுரும்.

100 கோடி ரூபாய் ஜெயலலிதாவுக்கு பைன் போட்டாங்கன்றது யாருக்காவது இப்ப ஞாபகம் இருக்கா? 4 வருஷம் ஜெயில் தண்டனை இருக்கு? யாருக்காவது தெரியுமா? மறந்துட்டாங்க... எல்லா ருமே வசதியா மறந்துருவாங்க. அத நான் பின் னாடி சொல்லிட்டு, அதுக்கப்புறம் இன்னொரு விஷயத்தையும் சொல்லிட்டு... "போர்க்களம்' எண்டுக்கு வருவேன். அதாவது ஜெயலலிதாங்கிற ஒரு மனுஷியோட அரசியல் செல்வாக்குங்கிறது டெல்லியில உச்சத்துல பறந்த நேரம்... அந்த நேரத் துலதான் சொத்துக்கள வாங்கி, வாங்கிக் குவிச்சாங்க.

dd

1999ல டீ பார்ட்டிங்கிற பேர்ல டெல்லியில போய் உக்காந்து அந்தம்மா பண்ணுன அலப்பர கொஞ்சமா... நஞ்சமா? சு.சாமியோட சேர்ந்து டீ பார்ட்டி வச்சு மத்திய ஆட்சியையே கவுத்துச்சு.

அதுக்கப்புறம் 2001. ஆட்சிக்கு வர்றாங்க. வந்தவுடன முதல் அரெஸ்ட் கலைஞர். ஒரே பேயாட்டம். என்னை, வைகோ அண்ணன, சுப.வீ. அண்ணன...ன்னு 42 பேரு பொடாவுல.

இது எல்லாத்தையும் பாத்தீங்கன்னா... ஒரு நர்த்தனமே ஆடித் தீர்த்துருச்சு ஜெயலலிதா. அப்படிப்பட்ட அந்த பொம்பள சொத்துக் குவிப்பு வழக்குல ஜெயிலுக்குப் போகுதுன்னா... சந்தோஷப்படுவோமா... இல்லியா? அதுவும்... இரக்கமே இல்லாம 1000 பேருக்கு மேல வந்து ஆபீஸ துவம்சம் செஞ்சானுக. அதோட இல்லாம கக்கூஸ் கனெக்ஷனக்கூட விடல. 261 எஃப்.ஐ.ஆரு. கழுத பொதி சுமக்கிற மாதிரி ஆத்தா ஆட்சிக்கு வந்தா வழக்குங்கிற பொதிய சுமந்து... சுமந்து... தாலி அந்து போயிரும். அதாவது, தீமைகளை துடைச்சி எறியறதுக்கு கொஞ்சநாள் ஆகும். நாள் ஆகும்ங் கிறதுக்காக தீமை, நன்மையாயிருமா...? அப்படியெல் லாம் கிடையாதுல்ல. அதுதான் ஜெயலலிதா விஷ யத்துல. ஜெயலலிதாவ சொத்துக் குவிப்பு வழக்குல உள்ள வைக்கிறதுக்கு எத்தன வருஷம்... 18 வருஷம்! அப்படி 18 வருஷம் ஆனதுவரைக்கும் அவங்க யோக்கியமானவங்களா ஆகிறமாட்டாங்கள்ல!

நாலு வருஷ சிறை, நூ...று... கோடி அபராதம்! அப்படி என்ன சொத்து..து..துக் குவிப்..ப்..பு...? .

(புழுதி பறக்கும்)