(255) மமதையில் கிளம்பிய ஜெ. ஆனால்...?
"ஜெயலலிதாவிடம் உண்டான அரசியல் எண்ணங்களுக்கு அவர் படித்த புத்தகங்களும், எம்.ஜி.ஆருமே காரணம்.
புத்தகங்கள் சிலரைப் புரட்டி எடுத்துவிடும். மா -சே -துங்கைப் பற்றி ஒரு புத்தகம் படித்துவிட்டால் உடனே மா -சே -துங் மாதிரி ஆகிவிட வேண்டும் என்று ஜெயலலிதா ஆசைப்படுவார். "ஆசைகள் குதிரைகளானால் அற்பர்களே சவாரி செய்வார்கள்' என்கிற பழமொழி கூட ஜெயலலிதாவைப் பொறுத்த மட்டில் உண்மையாய்த்தான் ஆகிவிட்டது. ஜெயலலிதாவிடம் எப்போது சென்றாலும் "மார்க்கரெட் தாட்சர்' பற்றிய புத்தகம் இருக்கும். எப்போதும் மார்க்கரெட் தாட்சர் ஆகிவிட வேண்டும் என்று நினைப்பார். தேவதை கதைகளில் நடைபெறுகிற சம்பவங்கள் மாதிரி இவைகள் நடந்தேறும் என்று ஜெயலலிதா நம்பினார். இறுதியில் ஒருநாள் ஜெயலலிதா ஆசைப் பட்டபடியே சொர்க்கத்திலிருந்து ஒரு கிரீடம் அவர் தலையைக் குறி வைத்து குதித்தேவிட்டது. மார்க்கரெட் தாட்சருக்கும் ஒரு வீழ்ச்சி வந்தது என்பதைத்தான் ஜெய லலிதா ஏற்க மறுக்கிறார். தனக்கு வசதியானவைகளை மாத்திரமே நம்புவது, இடைஞ்சலாக இருப்பவை களை அறவே மறந்துவிடுவது என்கிற மனப்பான்மைக்கு இந்த நூற்றாண்டில் தலை சிறந்த தமிழ்நாட்டு உதாரணம் ஜெயலலிதாதான்.
எம்.ஜி.ஆர். கொடுத்த ராஜ்யசபா சீட்... அடம் பிடித்து வாங்கிய ராஜ்யசபா சீட். டெல்லி பயணம். பாராளு மன்றத்தில் அறிஞர் அண்ணா அமர்ந்த இடத்தில் ஜெயலலிதா அமர்ந்தார். வளர்ச்சி யடைந்துவிட்ட வரலாற்று மனிதர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி உச்சத்தில் ஏறி விடுகிற உல்லாச ராணிகளை உலகம் இதுவரை பார்க்காமல் இல்லை. ஆனால் ஜெயலலிதாவைப் போல இந்தியாவின் வரலாற்றிலேயே தமிழ் மக்க ளின் அரசியல் வாழ்க்கையைக் காயடித்த ஒரு காட்டேரி இருந்திருக்கவே இயலாது.
அன்று அறிஞர் அண்ணாவின் இருக்கையில் அமர்ந்த ஜெயலலிதாவிற்கு பின்னாளில் அதே அண்ணா அமர்ந்த முதலமைச்சர் நாற் காலியும் முண்டியடித்துக் கொண்டு முன்னே வந்து விட்டது. நீங்கள் உட்காரா விட்டால் ஆகாது என்று ஆட்சிக்கட்டில் அடம்பிடித்து ஜெயலலிதாவை வாரி வைத்துக்கொண்டது போல ஆயிற்று. இன்று ஜெயலலிதா இழைக்கின்ற ஜெய லலிதாவின் பெயரால் இழைக்கப்படுகிற எல்லா தவறுகளுக்கும் அரங்கேறிவிட்ட இந்த அம்புலிமாமா கதைதான் காரணம். ஜெயலலிதாவைப் பொறுத்தமட்டில் எல்லாமே எளிதாக நடந்துவிட்டது. அம்புலிமாமா கதைகளில் இளவரசன் விரும்பிய இரத்தினக் கம்பளம் போல ஜெயலலிதாவிற்கு முதலமைச்சர் பதவி கிடைத்துவிட்டது. ஏதோ வியர்வையால் விதியை எழுதியவரைப் போல ஜெய லலிதா பேசலாம்; எழுதலாம்; ஆனால் உண்மையில் கடினமான எந்த உழைப் பும் இல்லாமல் எல்லாம் இயல்பாகவும், எளிதாகவும் ஜெயலலிதாவிற்கு நிகழ்ந்து விட்டது. ஆகவேதான் இந்திய அளவில் எந்த அரசியல் தலைவரும் செய்யத் துணியாத தவறுகளை ஜெயலலிதா தொடர்ந்து செய்துவருகிறார்.''
மேல நீங்க படிச்சது எங்க ஆசான் வலம்புரி ஜான் சார் "வணக்கம்' நூல்ல எழுதுனது.
எத்தனை பொருத்தம் பாருங்க. ரத்தினக் கம்பளத்துல வாழ்ந்து, தங்கத் தட்டுல உணவு அருந்திய மேடம் ஜெயலலிதா வாழ்க்கையில எப்பவும் தென்றலே அடிச்சுக்கிட்டிருந்தது. இனி வாழ்க்கை முழுவதும் தென்றல்தான்ங்கிற மமதையோடதான் 27.9.2014 காலையில சென்னை போயஸ் கார்டன்ல இருந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் கிளம்பும்போது நினைச்சிக்கிட்டு வந்தார். காரிலிருந்து இறங்கும்போதும், மதியம் உணவுக்கு சென்னை சென்றுவிடுவோம்னு ஓட்டுனரிடம் தெரிவிச்சுட்டுத்தான் நீதிமன்றத் துக்குள்ள நுழைஞ்சார்.
"நோ... நோ... அங்கெல்லாம் போகக் கூடாது... மரியாதையா அங்க போய் உட்காரு''ன்னு சொல்லாம சொல்லிட்டாய்ங்க கோர்ட்ல இருக்கிறவங்க.
தென்றல் மாறி சூறாவளிப் புயல் தேடிவந்து அடிச்சு துவம்சம் பண்ணீருச்சு. இத்தனைக்கும் காரணம் ஒரு துல்லியமான நீதிபதி ஒருத்தர், ஜெயலலிதாவின் வாழ்க்கையில் பார்க்காத ஒருத்தர்... அவர்தான் மைக்கேல் டி.குன்ஹா ற்ட்ங் ஞ்ழ்ங்ஹற்.
இப்பவும் எனக்கு அந்த கட்டாந்தரைய நினைச்சா குபீர்னு சிரிப்பு வரும். அந்தம்மா கனவுல கூட நினைச்சிருக்காது. மெட்ராஸ்ல இருந்து ஈ.ங.ஆ... பெரிய பவனியா ஜெக ஜோதியா பராக்கிரமத்தோட பெங்களூரு கோர்ட்டுக்கு வந்துச்சு. வரும்போது வாசல்ல ஒரு பெருங்கூட்டம்.
"அம்மா... அம்மா... அம்மா'ன்னு கத்த... எல்லாரையும் பாத்து கையசைச்சுக்கிட்டே கோர்ட்டுக்கு வந்தவங்க... மதிய உணவுக்கு தயிர்சாதம் செய்யச் சொன்னாங்களாம்.
"கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா, அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்'னு லிஎங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க.
நல்லா கவனிங்க, எங்கம்மா... என்னப் பெத்த அம்மா சொல்லுவாங்க. நீங்கபாட்டுக்கு மேல சொன்ன அம்மான்னு குழப்பிக்காதீங்க.
அதுகணக்கா... "பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் போறோம். நீதிபதிய ஒருமுறை முறைக்கிறோம். போன கார்லயே அதே பந்தாவுல திரும்புறோம்'னு கிளம்பிவந்தவக. அவங்க செஞ்ச அத்தனை பாவங்களும் பரப்பன அக்ரஹாரத்துல ஒண்ணா சேர்ந்து சங்கம் அமைச்சு பெரிய பள்ளம் தோண்டி உள்ள நின்னு குத்தாட்டம் போட்டுருக்கு. அது தெரியாம இந்தம்மா கார்ல இருந்து இறங்குனதுமே 'ஜ்ஹண்ற்.... மதியம் சென்னை போயிடலாம்... தயிர்சாதம் சாப்பிடலாம்'னு சொல்லி கால கீழ வைக்க...
இப்ப அந்தக் கால்... இல்ல, இல்ல அந்த பொற்பாதத்த... கட்டாந்தரையில தேம்பி, தேம்பி அழுதுக்கிட்டே வச்சுருக்கு...
இதத்தான் "விதி'ங்கிறது. எத்தன கோபம் வந்துருக்கும். எத்தன பொருமியிருக்கும்... எத்தன ஆங்காரமா இருந்திருக்கும். அந்தம்மா அப்படி உக்காந்ததப் பார்க்கப் பயந்து கூடியிருந்த அடிப்பொடி மந்திரிகள் எல்லாம் மிரண்டு போயிட்டாங்க.
ஆங்... சொல்ல மறந்துட்டேன். தேர்தலப்ப பிரச்சாரத்துக்கு போகணும்னா அந்தம்மா எந்த ஊர்ல பேசப் போறாங்களோ அந்த ஊர்ல இடம், மேடை எல்லாம் ரெடி யாகும். பக்கத்துலயே ஒரு பெரிய கக்கூஸ், ரெஸ்ட் ரூம்... எல்லாம் கட்டுவாய்ங்க. அப்பவே அதன் மதிப்பு 6 லட்சம் -வெறும் கக்கூஸ், ரெஸ்ட்ரூமுக்கு மட்டும்னா பாத்துக்கங்க. இந்தம்மா எந்த மாதிரி வாழ்க்க வாழ்ந்து ருக்குன்னு. மீட்டிங் முடிஞ்சதும் அந்த கக்கூஸை இடிச்சு தரைமட்டமாக்கிருவாங்க. வந்ததும் தெரியாது, இருந்ததும் தெரியாது... போனதும் தெரியாது. "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்'னு விவேக் சொல்ற மாதிரி அந்தம்மா கடுகடுன்னு இருந்தப்ப... நம்ம ஓ.பி.எஸ். அண்ணன் பைய... பூப்போல தயங்கி, தயங்கி கிட்டக்கப் போய் காதுல ஏதோ சொல்ல... "இதுதான் நீங்க வழக்கை பாத்த லெட்சணமா?'ன்னு ஒரு பார்வை பாத்துருக்கு.
"கட்டாந்தரையில, சாதாரண பிளாஸ்டிக் சேர்ல ஜெயலலிதாவ அமர வச்சிட்டாங்க. கர்நாடக போலீஸ் கஸ்டடி எடுக்கிறதுக்காக துப்பாக்கியோட பாதுகாப்புக்கு வந்துட்டாங்க. ஓ.பி.எஸ். தைரியத்த வரவச்சு குசுகுசுன்னு அவங்களோட பேசுனாங்க.
அண்ணன் நடேசன் ஆரம்பிச்சார். "1 மணிக்கு வந்து நாலு பேரையும் கூப்பிட்டு ஜட்ஜ்மெண்ட் பற்றி ஓபினியன் கேட்டாரு ஜட்ஜ். “"இது பொய்யான வழக்கு. இதனால எனக்கு மனக்கஷ்டம். எனக்கு உயர் ரத்த அழுத்தம்'னு சொன்னார் ஜெ. மாறாக, தண்ட னையைக் குறைச்சுக் கொடுங்கன்னு நீதிபதி கிட்ட அந்தம்மா கோரிக்கை வைக்கலை. கேட்டிருந்தா, ஒருவேளை நான்காண்டுக்குப் பதிலா மூன்றாண்டு தண்டனை கொடுத் திருக்கலாம்''னு சொல்லிமுடிச்சாரு நடேசன்.
ஒன்றரை மணிக்கு நீதிபதி எழுந்து உள்ளே போனார். தீர்ப்பின் பெரும் பகுதியையும் முன்னாலே டைப் பண்ணிட்டு வந்திருந்தார். ஆபரேடிவ் பகுதியை மட்டும் உள்ளே போய் டைப் பண்ணிட்டு வந்தார்.
இப்பதான் ஜெயலலிதாங்கிற மொரட்டு மனுஷியோட சிவப்புக் கம்பள பாதையில இடைஞ்சல் ஒண்ணு தலைவிரி கோலத்துல இலை போட்டு நடு ரோட்டுல உக்கார ஆரம்பிச்சது...
தீர்ப்பை வாசிக்க ஆரம்பிச்சார் நீதிபதி...
(புழுதி பறக்கும்)