dd

(242) போலீசிடம் சிக்கிய எக்ஸ்!

ந்தப் புத்தகம்... அதுதான் டி.ஜி.பி. விஜயகுமார் எழுதுனது. அதே புத்தகத்துல 273ஆம் பக்கத்துல எழுதுனத தம்பி சுப்பிரமணி நகல் எடுத்துக் குடுத்தாரு. அத அப்படியே குடுக்கிறேன். அதத் தொட்டா, "அடக் கருமமே இத்தன பெரிய துரோகமா...'ன்னு மனசுக்குள்ள போட்டு அடிச்சுக்கிச்சு.

வீரப்பனுடன் ரகசியத் தொடர்பிலிருந்த மிஸ்டர் எக்ஸ் எங்களிடம் வசமாக சிக்கினார்.

Advertisment

பெரிய மனிதர் போர்வையிலிருந்த, தனது வேடம் கலைந்துவிட்டதே என்ற குற்ற உணர்ச்சியில் அழுது முடித்தார்.

அவர் தப்பிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று அவருக்குச் சொல்லப் பட்டது. வீரப்பனைப் பிடிக்க உதவி னால், அவரைக் காப்பாற்றுவதற்கான பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று சொன்னோம்.

நீரில் மூழ்கிக்கொண்டிருப்பவருக்கு ஒரு துடுப்பு கிடைத்தது போல உடனடியாக அந்த வாய்ப்பை எக்ஸ் பற்றிக்கொண்டார். "எதுன்னாலும் சொல்லுங்க, செய்றேன்... ஆனா என்னை விட்டுடுங்க'' என்று அவர் சொன்னார்.

Advertisment

நல்லது. சில நாட்கள் கழிச்சு, நீங்க வீரப்பன்கிட்ட உங்க ஆளை அனுப் புங்க. அது உங்களோட தகவல் உண்மைன்னு வீரப்பனை நம்பச் செய்யும். இலங்கையில இருக்கிற உங்களோட நண்பர்களுடன் தொடர்பு கொண்டதாகவும், அவங்க ஒரு ஆளை அனுப்புவாங்க அப்படீன்னும், அந்த ஆள் வீரப்பனை திருச்சி அல்லது மதுரைக்கு பாதுகாப்பா கூட்டிட்டு வருவார், அதன்பிறகு வீரப்பனை இலங்கைக்கு அழைத்துச் செல்வார்கள். இங்கே ஆயுதப் பேச்சுவார்த்தை முடிந்து ஆயுதங்கள் கை மாறியதும், வீரப்பன் திரும்ப இந்தியாவுக்கு வந்துடலாம் என்றும் உங்க ஆள்கிட்ட சொல்லி அனுப்புங்க.

"அந்த ஆள் யாரு? அவனைப் பாதுகாப்பா அழைச்சிட்டுப் போகப்போறது யாரு?'' -எக்ஸ் கேள்வி கேட்டார்.

"அதைப்பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம். இந்தத் தகவலை அனுப்புறதோட உங்களோட வேலை முடிஞ்சது. இடையில ஏதாவது ஏடாகூடம் செய்ய முயற்சிக்காதீங்க. அப்புறம் எல்லாமே வில்லங்கமா போயிடும்.''

எக்ஸ், தனது அறையைச் சுற்றிலும் பார்த்தார். தப்பிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவுதான்.

"நீங்க அவனைக் கொன்றுவிடக்கூடாது. அப்படிச் செய்வீர்களா?'' என்று கேட்டார்.

"அவனை உயிரோடு பிடிப்பதற்கு உரிய அத்தனை வாய்ப்புகளையும் முயற்சி செய்வோம்'' என்று அந்த எஸ்.டி.எஃப். அதிகாரி உறுதி அளித்தார்.

எக்ஸ், தனது முகத்தைக் கைகளில் புதைத்துக்கொண்டார். அவரது தோள்கள் குலுங்கின. சிறிது நேரத்திற்குப் பின், அவரது வார்த்தைகள் மிகக்குறைந்த சத்தத்தில் வெளியே வந்தன. ஆனால், அவற்றை அவரால் திரும்பப் பெற முடியாது.

"நல்லது, நான் செய்றேன்.''

gg

சிலமணி நேரம் கழித்து நானும், கண்ணனும் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி ஆலோசனையில் இறங்கினோம்.

"பெரிய மனிதர் போர்வையிலிருந்த தனது வேடம் கலைந்துவிட்டதேங்கிற குற்ற உணர்ச்சி யில் இருந்தார்'னு குறிப்பிடுறாரு விஜயகுமார்.

இன்னொரு இடத்துல, "நீங்க, வீரப்பன்கிட்ட உங்க ஆளை அனுப்புங்க. அது உங்களோட தகவல் உண்மைன்னு வீரப்பனை நம்பச் செய்யும். இலங்கையில் இருக்கிற உங்களோட நண்பர்களுடன் தொடர்புகொண்டதாகவும், அவங்க ஒரு ஆளை அனுப்புவாங்க அப்படீன்னும் அந்த ஆள், வீரப்பனை திருச்சி அல்லது மதுரைக்கு பாதுகாப்பா கூட்டிட்டு வருவார்.... .... என்றும் உங்கள் ஆள்கிட்ட சொல்லி அனுப்புங்க''

இதுக்கு அந்தப் பெரிய மனுஷன் எக்ஸ், "நல் லது. நான் சொல்றேன்''னு தலையை ஆட்டுறார்.

எனக்கு சந்தேகமே... இலங்கையில இருக்கும் உங்க நண்பர்களோட தொடர்பு கொள்ளுங்கன்னா... இலங்கை நண்பர்கள் அதி கம் இருக்கிற பெருசும், முத்துலட்சுமி அக்கா சந்தேகப்படுற பெருசும் ஒரே ஆளா இருக்கக் கூடாது. சந்தேகம் ரொம்ப பெருசா போகுது...

அதே புத்தகத்துல 281ஆம் பக்கத்துல... "ஆபரேஷன் குக்கூன்...!' மிஸ்டர் எக்ஸிடம் தெளிவாகச் சொன்னார் ரெட்.

"அண்ணன் அக்டோபர் 18ஆம் தேதி வெளியே வருவாரு. உங்க ஆளு பாரப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் பக்கத் துல இரவு 10 மணிக்கு காத்திருக்கணும். எங்ககிட்ட இருந்து அந்த ஆளுக்கு அன்னைக்குத் தகவல் போகலைன்னா, அவரு அக்டோபர் 20ம் தேதி மறுபடி யும் வரணும். அந்தத் தேதியும் நடக்கலைன்னா, அதுக்குப் பிறகு 22ம் தேதி உங்க ஆளை அண்ணன்கிட்ட கூட்டிட்டுப் போவாங்க.

பிறகு ரெட், தங்களை வேறு யாராவது கவனிக்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்தார். அப்புறம் ஒரு லாட்டரி டிக்கெட்டை எடுத்தார். அந்த டிக்கெட்டை எக்ஸுக்கு காட்டினார். அதில் 007710 என்ற எண் இருந்தது. பின்னர் அந்த டிக்கெட்ட அவர் கச்சிதமாக, பாதியாகக் கிழித்தார். ஒரு பாதியை எக்ஸிடம் கொடுத்தார். அதில் அந்த நம்பர் 007 வரையில் இருந்தது. ரெட் வைத்துக்கொண்ட மற்றொரு பாதியில் 710 என்ற மீதி எண்கள் இருந்தன.

"இது அண்ணனோட பயணச் சீட்டு மாதிரி. உங்க ஆளு, எங்க ஆளுங்களைச் சந்திக்கும்போது அவங்க இந்த இரண்டு துண்டு டிக்கெட் டையும் சரி பார்ப்பாங்க. நாலுபேரை வெளியே கொண்டு வர்றதுக்கு ஏத்த மாதிரி வண்டி ஏற்பாடு செய்யுங்க'' என்றார் ரெட்.

"எங்க ஆளும் இருப்பார். கூடவே ஒரு டிரைவர். ஆக மொத்தம் ஆறு பேர். ஒரு பெரிய வண்டியா இருக்கணும். ஆம்புலன்ஸ் வண்டியை ரெடி செய்யுறேன். வேகமாவும் போகும், சந்தேக மும் வராது. போலீஸ் வழியில அதை நிறுத்துற துக்கும் வாய்ப்பு குறைவு'' என்றார் எக்ஸ்.

"ஒரு லாட்டரி டிக்கெட்ட "எக்ஸ்'கிட்ட (அதுதான் அந்தப் பெருசு) காட்டி, பாதியா கிழிச்சு ...'' படத்துல வர்ற மாதிரியேதான்... நாலுபேரை வெளிய கொண்டு வர்றதுக்குத்தான் இந்த ஏற்பாடாம்.

மேக்கொண்டு 282ஆம் பக்கத்துல...

ரெட் தலையை ஆட்டியபடி,

"நல்ல யோசனைதான். உங்க ஆளும் ஆம்புலன்ஸும் திட்டமிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் கண்டிப்பா வரணும்கிறதை நீங்க உறுதிப்படுத்துங்க'' என்றார்.

இரண்டு பேருமே இரண்டு துண்டாகக் கிழிக்கப்பட்ட லாட்டரி டிக்கெட்டில் முழு எண்ணைப் பார்த்தனர். பிறகு ரெட், தனது மீதி டீயைக் குடித்து முடித்துவிட்டு, திடீரென்று எப்படி வந்தாரோ அப்படியே அந்த இடத்தை விட்டுக் கிளம்பிவிட்டார்.

மிஸ்டர் எக்ஸ், தர்மபுரியில் இருந்து தனது சொந்த வாகனத்தில் கிளம்பினார். எஸ்.டி.எஃப். குழு ஒன்று சாதாரண உடையில் ஒரு ஆம்னி வேனில் அவரைப் பின்தொடர்ந்தது. குறிப்பிட்ட தூரம் சென்ற பிறகு ஆளரவமற்ற சாலையில் ஆம்னி வேன் எக்ஸ் போகும் வாகனத்தை முந்திச் சென்று மறித்து நிறுத்தியது. எக்ஸ், தனது வாக னத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கினார்.

வேனிலிருந்து வெளிப்பட்ட கண்ணன், எக்ஸ் அருகே சென்று "எப்படிப் போகுது?'' என்று கேட்டார்.

நடந்த விபரங்களைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு உடனடியாக தன்னிடமிருந்த பாதி டிக்கெட்டைக் கண்ணனிடம் கொடுத்தார் எக்ஸ்.

"என்னோட வேலை முடிஞ்சிடுச்சு. இதோட தயவுசெஞ்சு என்னை விட்டுடுங்க'' என்று கையெடுத்துக் கும்பிட்டார்.

கண்ணன் அந்த டிக்கெட்டில் இருந்த "007' என்ற எண்ணைப் பார்த்துப் புன்னகைத்தார். அதில் கடைசியாக இருந்த "07' என்ற எண்ணைப் பார்த்தபடி, மற்றொரு பாதி டிக்கெட்டில் இருக்கும் முதல் இரண்டு நம்பர் என்ன என்று கேட்டார்.

"71' என்று பதில் சொன்ன எக்ஸ்... குழப்பத்துடன் "ஏன்?' என்று கேட்டார்.

(புழுதி பறக்கும்)