(109) இதழியில் துறையின் வித்தியாசமான முன்னோடி!
"நக்கீரனைப் பற்றி பேசக்கூடாது' என்று 2000-ல் ஜெயலலிதாவுக்கு எதிராக நாம் வாங்கிய தடை காரணமாக ஜெயலலிதா பேசுவதில்லை. ஆனா, அந்த அம்மா பேச நினைச்சதத்தான் சோவும், எழுத்தாளர் வாசந்தியும் சேர்ந்து கும்மி அடித்தார்கள்.
முதல்ல சோவுக்கு, ஐயா சின்னகுத்தூசியின் பதில்...
"ஆங்கில ஏட்டில் சோவின் விஷமப் பிரச்சாரம்'' என்ற தலைப்பிலான கட்டுரையில் இப்படி ஆரம்பிக்கிறார்...
"டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஏட்டில் துக்ளக் ஆசிரியர் சோ... நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது பொச்சரிப்பும் பொறாமையும் -எரிச்சலும் பொங்கிட சேற்றை வாரி இறைத்திருக்கிறார்.
"கோபால்தான் இப்போது தமிழ்நாடு -கர்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் உண்மையான முதலமைச்சர் என்பதுபோலச் செயல்படுகிறாராம். கோபால் காட்டுக்குள்ளிருந்து வருகிறார்; கோரிக்கைகளை வ-யுறுத்துகிறார்; இரண்டு முதல்வர்களும் என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார்'' என்பதாக -வயிறு எரிந்து பேட்டியளித்திருக்கிறார் சோ. இந்த அளவுக்கு -ஜெயல-தாவின் குரல் போலவே -இன்னொரு காளிமுத்து போலவே கோபால் மீது பாய்ந்து பிறாண்டும் அளவுக்கு கோபால் செய்த குற்றம் என்ன?
தமிழகத்தில் இவ்வளவு பெரிய மேதாவி அம்பி இருக்கும்போது -இந்த அறிவாளி அம்பியை வீரப்பனிடம் தூதராக அனுப்ப முடிவெடுக்காத குற்றம் கோபாலுடையது அல்ல.
கன்னட நடிகர் ராஜ்குமாரை, வீரப்பன் கடத்திய செய்தி அறிந்து, ஏராளமான நிருபர்களும், வீடியோ காமிராக்காரர்களும், "நீங்கள் மறுபடியும் காட்டுக்குப் போவீர்களா? ராஜ்குமாரை மீட்கும் தூதராகச் செயல்படுவீர்களா?'' என்று கேட்டுத் துளைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அதேசமயம் கிருஷ்ணா, சென்னை வந்துவிட்டார்; தமிழக முதல்வருடன் ஆலோசனை நடத்திவருகிறார் என்ற செய்தியையும் -கர்நாடகத்தில் கலவரம் பரவி வருகிறது என்பதற்கான காட்சிகளையும் தொலைக் காட்சிகள் ஒளிபரப்பியபடியே இருந்தன.
முன் நடந்த அனுபவத்தில் ஏற்பட்ட அச்சம் காரணமாக தயக்கம் காட்டினார். அதையும் மீறி...
-ராஜ்குமாரை மீட்பது
-தமிழர்களின் நலன் காப்பது
என்ற இந்த இரண்டு உயரிய நோக்கங்களுக்காக, காட்டுக்குள் செல்லும் சிரமத்தை ஏற்றுக்கொள்வது என்று முடிவு எடுத்தார் அவர்.
1) அரசு தூதர் என்றால் என்ன அர்த்தம்?
அரசாங்கம் -என்னென்ன செய்ய முடியும்; என்னென்ன செய்ய முடியாது என்று வீரப்பனிடம் விளக்க விரும்புகிறதோ -அந்தச் செய்திகளை அரசாங்க சார்பில் வீரப்பனிடம் சொல்வது; வீரப்பனுக்கு திருப்தி ஏற்படும் வகையில் விளக்குவது.
2) வீரப்பன் சொல்வதை -அல்லது வ-யுறுத்தும் கோரிக்கைகளை காசட்டில் பதிவு செய்து அனுப்புவது அல்லது நேரில் வந்து இரு முதல்வர்களிடமும் விளக்குவது.
3) மீண்டும் இரு அரசுகளும் தரும் விளக்கங்களை வீரப்பனை சந்தித்து எடுத்துச் சொல்வது
-இதைத்தான் ஒரு தூதர் -இரு அரசுகளும் அல்லது வீரப்பனும் விரும்பும் வகையில் அல்லது எடுத்த காரியம் நல்லவிதமாக நிறைவேறும் வகையில் செய்ய முடியும். அதைத்தான் கோபால் குறைவறச் செய்துவருகிறார்.
இதிலே "சோ'வின் பொச்சரிப்புக்கு என்ன இடமிருக்கிறது?
"It appears that Gopal is the defacto Chief Minister of Karnataka and Tamilnadu. The Two Chief Ministers (Karunanithi and Karnataka counterpart S.M.Krishna) have became his P.A.s Gopal comes from the forest and handsover the demands, advising the two what to do?"
-என்று சோ உடம்பெல்லாம் எரிய -பொறாமை ததும்பி வழிய "அரட்டை'க் கச்சேரி நடத்தும் அளவுக்கு
-கோபால் சொல்கிறபடிதான் முதல்வர்கள் நடக்கிறார்கள் என்பதற்கு லிசோவிடம் இருக்கும் ஆதாரம் என்ன?
-இரு முதல்வர்களும் கோபாலின் தனிச் செயலர்கள் போல செயல்படுவதாக -இந்த வயிற்றெரிச்சல் பேர்வழி சொல்லும் புகாரை இவரால் நிரூபிக்க முடியுமா?
நக்கீரன் ஆசிரியர் -அரசு தூதர் என்ற பணியை மேற்கொண்ட விநாடியிலிருந்து இதுவரை -தமது சொந்தக் கருத்து என்று எதையும் சொல்லவில்லை. சொன்னால் அது அரசுக்கு ஆதரவானதாகவோ அல்லது வீரப்பனுக்கு எதிரானதாகவோ ஆகிவிடும். அதுபோலவே வீரப்பனுக்கு ஆதரவான கருத்து என்றோ -அல்லது அரசுக்கு பிடிக்காத கருத்து என்றோ ஆகிவிடும். இதனால் இரு தரப்பினருக்கும் பொதுவானவர் என்ற மதிப்பை இழந்துவிட நேரிடும். வீரப்பன் அப்படி நினைக்க நேர்ந்துவிட்டால் -எதற்காக இந்த தூது நடைபெறுகிறதோ -அந்த நல்ல நோக்கத்துக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.
முள்ளும் முறியக்கூடாது -சேலையும் கிழியக்கூடாது என்பதுபோல -இந்த விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக பொறுமையையும் -நிதானத்தையும் கடைப் பிடிப்பவராக நடந்துவருகிறார் கோபால்.
தூதுபோன இடத்தில் வால் கோட்டை கட்டி அதிலே அமர்வது, வரும்போது -தூது சென்ற இடத்தை வாலில் தீ வளர்த்து கொளுத்திவிட்டு வருவது போன்ற விட்டலாச்சார்யா மாயாஜாலங்கள் எல்லாம் சோ போன்ற அறிவாளிகள் எழுதும் ராமாயணத்திலே வேண்டுமானால் நடக்கக்கூடியதாக இருக்கலாம்.
எதார்த்த வாழ்க்கையில் -அப்படி யெல்லாம் நடக்காது; நடத்த முடியாது.
-ராஜ்குமாரை மீட்டு வருவது
-அதன்மூலம் கர்நாடகத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பது
என்ற இரு பெரிய காரணங்களுக் காகத்தான் -இரண்டு அரசுகளுமே தங்களால் முடிந்தவரையில் -வீரப்பன் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வந்திருக் கின்றன.
மற்றபடி -வீரப்பன் கோரிக்கைகளை வேறு ஒரு சாதாரண நபர் சம்பந்தப்பட்ட நெருக்கடியாக இருந்தால் -இரு அரசுகளுமே இந்த அளவுக்கு இறங்கி வந்து நிறைவேற்றித் தந்திருக்காது. இது மிகவும் சிக்கலான விஷயம்.
ராஜ்குமார் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல -லட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிர், உடமைகள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால்தான் இரு அரசுகளுமே -கூட்டாக முடிவு எடுத்து, முடிந்தவரையில் கோரிக்கைகளை நிறைவேற்றி வைத்து ராஜ்குமாரை மீட்பது என்று பாடுபட்டு வருகின்றன.
இது சோவுக்கு தெரியாதா?
தெரியும்.
கோபால்தான் இரு மாநிலங்களுக்கும் முதல்வர். கலைஞரும் கிருஷ்ணாவும், கோபாலின் செயலாளர்கள்தான் என்று வயிறெரிந்து சொன்ன சோ -அடுத்த கேள்விக்கு பதிலளிக்கும்போது -தொடர்ந்து என்ன சொல்கிறார்?
"This is a very unfortunate situation. We have to free Rajkumar first. He is an important person, if any thing happens to him the tamilians in Karnataka would be at a disadvantage" என்கிறார் சோ.
அது மட்டுமா? பேட்டியின் இறுதியிலும் -ஜெயலலிதா போலவே பேட்டி அளிக்கும் தன்னை யாரும் -ஜெயலலிதாவின் ஆள் என்று சந்தேகப்பட்டுவிடுவார்களோ என்கிற ஜாக்கிரதையுணர்வுடன் "கமாண் டோக்களை காட்டுக்குள் அனுப்பி ராஜ்குமாரை மீட்டு வரவேண்டும் என்று ஜெயலலிதா சொல்வதை நான் ஏற்கவில்லை. அப்படிச் செய்வது-
அடிடா ராமா... அடிடா ராமான்னு சொல்லிக்கிட்டே ஒரு அந்தர் பல்டி...
(புழுதி பறக்கும்)