ff

(106) அருப்புக்கோட்டையில் போலீஸ் அடாவடி!

க்கீரனுக்கு புது வரவு. தன் தந்தையின் தூண்டுதலால் பெரம்பூர் டான்போஸ்கோ பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஸ்டாலின் பாரதி எனும் சிறுவன், நக்கீரனில் வரும் "போர்க்களம்' தொடரை தொடர்ந்து படித்து, தன் கைப்பட விமர்சனக் கடிதம் எழுதியதைக் கண்டு ஆச்சரியப்பட்டோம். பெரும்பாலும் இளைய தலைமுறை "செல்'லுக்குள் புதைந்து போன இந்தக் காலத்தில்... பத்திரிகையை இளம் வயது தம்பி தொடர்ந்து படித்து வருவது, நக்கீரனுக்கு என்றும் வெற்றி வசமாகும் என்ற மகிழ்ச்சியில் உங்களுடனும் பகிர்ந்துகொள்கிறோம்.

Advertisment

ff

அதேநாள்ல... அதே நேரத்துல அருப்புக்கோட் டைக்கு ஒரு போலீஸ் குருப் போயிருக்கு. அப்போ எங்க வீட்டுல எங்க அக்கா குடும்பம் இருந்துச்சு.

எங்க வீட்டுக்கு முன் னாடி திரும்புற இடத்துல வேன நிறுத்திட்டு, இதே மாதிரி அங்கயும் முதல்ல மூணு, நாலு பேரு போய்... பெல் அடிச்சு, கதவத் தட்டியிருக்காய்ங்க. சத்தம் கேட்டு எங்க அக்கா வந்து கதவத் தொறந்திருக்கு.

அவங்கள்ட்ட, இது யாரோட வீடு, நீங்க யாரு?''ன்னு கேள்வி மேல கேள்வியா கேட்டிருக்காங்க.

"இது எங்க அம்மா வீடு. உங்களுக்கு என்ன வேணும்? யாரத் தேடி வந்திருக்கீங்க?''ன்னு எங்க அக்கா கேட்டுருக்கு.

"நக்கீரன் கோபால் இங்க வந்திருக்கிறதா தகவல் கெடைச்சுதான் வந்திருக் கோம். அவரு உள்ள இருக் காரா?''ன்னு கேட்டிருக் காங்க.

"இங்க அவரு வரல்ல''ன்னு சொல்லவும்...

"அவருக்கு நெருக்க மான ப்ரெண்ட்ஸ் வீடெல் லாம் எங்க இருக்கு, அது எல்லாத்தையும் எங்க கூட வந்து காட்டுங்க''ன்னு அப்படின்னு வேறு கேட்டிருக்காங்க.

"அவரு இங்கல்லாம் வரல்ல சார். நான் இப்ப வெளிய வரவும் முடியாது''ன்னு சொல்லியிருக்காங்க.

நாங்க இருக்கிற வீட்டுக்கு பத்து தெரு தள்ளிதான் ச.ஆ.சுப்பிரமணியன்னு ஒரு தம்பி இருக்காரு. அவங்க சமூகத்துக்கு அவரு தலைவரா இருந்தார். அவரு வீட்ட தேடி ஒரு குரூப் போயிருக்கு. லோக்கல்ல எங்க அப்பாவோட அண்ணன் பையன் ஒருத்தரு... மணின்னு பேரு. அவரு ஒரு கடை வச்சி நடத்திக்கிட்டிருந்தாரு. அந்தக் கண்ணாடிக் கடைக்குப் போய்... "நக்கீரன்கோபால் அருப்புக்கோட்டைக்கு வந்திருக்காரா? உங்களுக்குத் தெரியுமா? இங்க வந்தா, அதுக்கப்புறமா வேற எங்கெங்கல்லாம் போவாரு?''ங்கிற மாதிரியான கேள்விகள எல்லாம் கேட்டிருக்காங்க.

"அதெல்லாம் எனக்குத் தெரியாது, நான் பாக்கவும் இல்ல, இங்க வரவும் இல்ல''ன்னு சொல்லியிருக்காரு. தம்பி சுப்பிரமணியும் இதே மாதிரியான பதிலச் சொல்லி அனுப்பிட் டாரு.

இதுல முக்கியமான விஷயம் என்னன்னா... வந்தவங்க, எங்க அக்காகிட்ட, "நாங்க ஈரோட்டுல இருந்து வர்றோம். அவர் மேல நாலஞ்சு வழக்கு இருக்கு. அதுக்காக விசாரிக்கத்தான் வந்திருக் கோம்''னு சொல்லியிருக்காங்க.

Advertisment

dd

ஈரோட்டுல இருந்து வர்றதா போலீஸ் சொல்லியிருக்காய்ங்க. ஈரோடு எங்க இருக்கு... அருப்புக்கோட்டை எங்க இருக்கு? எவ்வளவு பெரிய திட்டம் போட்டுருக்காய்ங்க! நக்கீரன உசுரோட எரிச்சிரணும்... இல்லன்னா உசுரோட புதைச்சிரணும் அப்படிங்கிற முடிவோட ஜெயலலிதாவும் அவரோட ஆளுங்களும் எவ்வளவு வேல பாத்திருக்காங்கன்னு தெரியுதா?

ஈரோடு டீம், அருப்புக்கோட்டையில எங்கேயோ ஒரு மூலையில இருக்கிற எங்க வீட்டத் தேடி வேன் நிறைய போலீஸ் வர்றாய்ங்கன்னா, அத இப்ப நினைச்சுப் பாத்தாலும் திகிலாத்தான் இருக்கும்.

அப்போ ஈரோடுன்னா... சேலம், கோயம்புத்தூர், திருப்பூர்... அதுக்கு அங்கிட்டு இருக்கிற மாவட்டம், இந்தப் பக்கம் போனீங்கன்னா, வட மாவட்டம், அந்தப் பக்கமா தென்மாவட்டம் கன்னியாகுமரி வரைக்கும் இப்படி... எல்லா எடத்துலயும் விஷ வலைய விரிச்சி நம்மளத் வெறித்தனமா தேடியிருக்காய்ங்க.

அதுக்காகத்தான் நான் மறுபடி, மறுபடி சொல்றது... ஜெயலலிதாவுடைய முதல் ரெண்டு நாள்... 48 மணி நேரமா, "அவன் உயிர எடுத்தே ஆகணும்... அவன் தலை என் காலுக்கு கீழ கிடக்கணும்'னு வெறியோட ஆணை யிட்டிருந்தாத்தான இப்படி என்னைத் தேடித்... தேடி, கும்பலா வந்து சுத்தோ சுத்துன்னு சுத்திக்கிட்டிருந்திருப்பாய்ங்க. அதனாலத்தான் எந்த வழியில பாத்தாலும் ஜெயலலிதாங்கிற பொம்பள எங்களுக்கு கெட்டவங்களாவே தெரியுது.

இன்னொரு பக்கம் எனக்கு முன்ஜாமீன், ரிட் இந்த மாதிரி விஷயங்களுக்கெல்லாம் நெறைய கையெழுத்துப் போட்டு இதுக்கு முன்னாடியும் ஒரு இடத்துல வச்சு கையெழுத்துப் போட்டுக் கொடுத்து அனுப்பியிருக்கேன். இப்ப மறுபடியும் அவசரமா கையெழுத்து வேணும்னு எனக்கு தகவல் வருது. இப்போ, நாம இருக்கிற இடத்த விட்டு எங்க நகர்ந்தாலும்... நாம காலி. இப்போ தம்பி ஐயப்பன வரச்சொல்லி, வாட்ச் கடை அன்பு அண்ணன் மூலமா ஐயப்பனுக்கு அனுப்பிக் குடுத்து ராத்திரியோட ராத்திரியா ஸ்ரீபெரும்புதூர் வந்து என்கிட்ட கையெழுத்து வாங்கி, அங்கிருந்து கிளம்பிப் போய் அட்வகேட் எட்விக் வீட்டுல அதிகாலைல கொண்டுபோய் சேர்த்திருக்காங்க. அதுக்காக நம்ம வழக்கறிஞர் டீம் பரபரப்பா இயங்கிக்கிட்டி ருந்தாங்க.

ஆனா, நமக்கு எதிரா உள்ளவங்க, அந்தம்மாவ திருப்திபடுத்தணும்... பத்திரிகைய ஒண்ணும் இல்லாம பண்ணீர ணும்ங்கிற முடிவோட அடுத்தடுத்து என்ன பண்ண லாம்னே ப்ளான் பண்ணியிருக் காய்ங்க.

ff

இந்த நேரத்துல தம்பி இளையசெல்வன் எங்கிட்ட பேசணும்னு சொல்லியிருக்காரு. அவருக்கு டெல்லிவரைக்கும் சோர்ஸ் உண்டு. நான் உடனே வேற நம்பர்ல இளையசெல்வனுக்கு பேசுனேன். அப்ப அவரு, "அண்ணே... டெல்லியில நம்ம பத்திரிகைக் கான ரெஜிஸ்ட்ரேஷன காலிபண்ண புகார் கொடுக்க அ.தி.மு.க. மினிஸ்டர் மூலமா ட்ரைபண்றதா ஒரு செய்தி வந்திருக்குதுன்னு சொன்னாங்க... ஒரு தகவலுக்காக ஒங்களுக்குச் சொல்றேன்''னாரு.

ஆர்.என்.ஐ.ல கம்ப்ளைண்ட்டு, அடுத்து பிரஸ் கவுன்சில்ல கம்ப்ளைண்டு....ன்னு தொடர்ச்சியா நம்மள குறி வச்சி அடிக்கிறாங்க பாருங்க. அடேயப்பா... அதாவது நமக்கு நடந்த பிரச்சினையோட கனம் எப்படிப்பட்டதுன்னு தெரிஞ்சுக்கணும்ங்கிறதுக்காகத்தான் சொல்றேன்.

ff

இப்ப டெல்லி வரைக்கும் போய் முடக்குறதுக்கு பெரிய முயற்சி எடுத்துருக்காங்கன்னு இளையசெல்வன் சொன்னவுடனே... "சரி தம்பி, பாத்துக் கலாம்''னு சொன்னேன். அது ஒரு தனி பாடி. யாரும் இன்புளூயன்ஸ் செய்ய முடியாது. அவங்க ஆக்ட்ல என்ன சொல்லியிருக்கோ, அதன்படிதான் செய்வாய்ங்க. இவிய்ங்க கத்தரிக்காய்லாம் அவங்ககிட்ட வேகாது. எனக்கு நம்பிக்கை இருக்கு. அங்க இவனுக போய் மூக்கொட பட்டுத்தான் திரும்புவானுக.... கவலையே படவேணாம். ஆர்.என்.ஐ.யிலயும், பிரஸ் கவுன்சில்லயும் நக்கீரன் முறைப்படி பதிவு பண்ணியிருக்கோம். பார்ப்போம், வர்றது வரட்டும்... எது வந்தாலும் அத சந்திப்போம் தம்பி, நான் பாத்துக்கிறேன்''னு அவர்கிட்ட சொல்லிட்டேன்.

இதுக்கு முன்னாடி ஜெயலலிதா எழுதுன கடிதங்கள்ல நாம வெளியிட்டிருந்தோம். சேலம் கண்ணன் குடுத்த அந்தக் கடிதங்கள்ல, அது இல்லாம வேற சில விஷயமும் இருந்துச்சு. அந்தக் கடிதங்கள புரட்டிப் பார்த்துக்கிட்டிருக்கும்போது... ஒரு முக்கியமான விஷயம் வந்தது.

1984-85. எம்.ஜி.ஆர். ஆட்சி. அப்போ...?

(புழுதி பறக்கும்)