"பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா' (டஙஓஆவ) என்பது "ஆயுஷ்மான் பாரத் யோஜனா' என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இந்திய அரசின் முதன்மைத் திட்டமாகும். ஏழைகள், பொருளா தாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு, இத்திட்டத் தின் மூலம் சுகாதாரக் காப்பீடு கிடைக்கிறது.

தமிழ்நாடு அரசு வழங்கும் மருத்துவக் காப்பீடு போலவே, ஆயுஷ்மான் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தினர், ஆண்டொன்றுக்கு ரூ.5 லட்ச ரூபாய் வரை மருத்துவ சேவைகளைப் பெறமுடியும். இடைக்கால பட்ஜெட் 2024ல், இத்திட்டத்துக்காக ரூ.7500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

dd

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் ஆயூஷ் மான் யோஜனா திட்டமும் இணைந்து செயல்படுத்தப் படுகிறது.

Advertisment

ஆயுஷ்மான் பாரத் லிடஙஓஆவ என்பது உலகிலேயே மிகப்பெரிய காப்பீட்டுத் திட்டம் என ஒன்றிய அரசின் சாதனையாகச் சொல்லப்படும் நிலையில், இத்திட்டத் தின் பெயரால் மோசடிகள் அரங்கேறுவ தாக, ‘காவல்துறை தகவல்’ என்ற பெயரில் வாட்ஸ்-ஆப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதில் "கொள்ளையர்கள் பயன்படுத்தும் சமீபத்திய திருட்டு தொழில்நுட்பம் என்னவென்றால், நான் இந்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்துடன் தொடர்புடையவன் என்று கூறி உங்கள் வீட்டுக்கு வருவார்கள். புகைப்படம் மற்றும் கைரேகைகளை எடுக்கவேண்டும் என்பார்கள். அரசு அதிகாரிகளிடம் உள்ளதுபோல் மடிக்கணினிகள், பயோமெட்ரிக்ஸ் இயந்திரங்கள் வைத்திருப்பார்கள். அனைத்துப் பெயர்களின் தரவுப் பட்டியலைக் காண்பித்து, கூடுதல் விபரம் கேட்பார்கள். இதெல்லாம் ஒரு மோசடி. அவர்களை வீட்டுக்குள் நுழைய அனுமதிக்காதீர்கள். இதுபோல் கூறிக்கொண்டு யாரேனும் வந்தால், அருகிலுள்ள காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்'’என குறிப்பிடப்பட்டிருந்தது.

ee

Advertisment

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் லி சுசீந்திரத்திலிருந்து ஹிஷா என்பவர் நம்மைத் தொடர்புகொண்டார். "வாட்ஸ்-ஆப்பில் வந்த மெசேஜை நானும் பார்த்தேன். இப்ப என் லைன்ல வந்த ஒரு லேடி, ஆயுஷ் மான்ல இருந்து நாளைக்கு உங்க வீட்டுக்கு வர்றோம். உங்க வீட்ல இருக்கிற அஞ்சு பேருக்கும் அஞ்சு ஆயுஷ்மான் கார்டு எங்ககிட்ட இருக்கு. கார்டு ஒண் ணுக்கு 100 ரூபாய். நாளைக்கு 500 ரூபாய் ரெடியா வச்சிருங்க. வர்றோம்னு சொன் னாரு. எனக்கென்னமோ மோசடி பண்றவங்க மாதிரி தெரியுது''’என்று புலம்பினார்.

ஆயுஷ்மான் கார்டுக்கு பணம் கேட்ட வரது கைபேசி எண்ணில் நாம் தொடர்பு கொண்டபோது ‘முகாம் உறுப்பினர்’

ஷாலினி பேசினார். "கலெக்டர் ஆபீஸ் மூலம் கான்ட்ராக்ட்

பேஸிஸ்ல விநியோகிக்க ஆயுஷ்மான் கார்ட்ஸ் கொடுத்திருக்காங்க. எங்களுக்கு ஸ்மார்ட் ஐடிலின்னு ஒரு கான்ட்ராக்டர் இருக்காரு.. இந்த வேலை அவங்க மூலமாத்தான் எங்களுக்கு கிடைச்சிருக்கு. கான்ட்ராக்டர் அபிஷ் சென்னைல இருக்காரு. எங்களுக்கு ஐ.டி. கார்ட் எல்லாம் கொடுத்திருக்காங்க. ஆயுஷ்மான் கார்ட் ஒண்ணுக்கு 100 ரூபாய் கலெக்ட் பண்ணுறோம். நாங்க தப்பு ஒண்ணும் பண்ணலியே? என்னமோ கொலைக் குற்றம் பண்ணுன மாதிரி நீங்க விசாரிக்கிறீங்க?''’என்றார் எரிச்சலு டன். கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் டாக்டர் பிரகலாதனிடம் "ஆயுஷ்மான் அட்டை ஒன்றுக்கு ரூ.100 வசூலிக்கிறார் களே?''’என கேட்டோம்.

"ஆயுஷ்மான் கார்டு டிஸ்ட்ரிப்யூஷனுக்கு பணமெல்லாம் கிடையாது. அது ஒரு இலவச சேவை. ஆயுஷ்மான் கார்ட் ஜெனரேட் பண்ணுறதுக்கு, டிஸ்ட்ரிப்யூட் பண்ணுறதுக்கு, கலெக்டரேட்ல ஒரு பிரிவு இருக்கு. அது எங்களோட நேரடி கண்காணிப்புல கிடையாது. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் எங்க கண்காணிப்புல இருக்கும். ஆயுஷ்மானுக்கு தனிப் பிரிவு. அவங்கதான் க்ரியேட் பண்ணுவாங்க; விநியோகிப்பாங்க. இந்தமாதிரி ஒரு புகாரை நக்கீரன்தான் முதல்தடவை எங்ககிட்ட சொல்லிருக்கு. 100 ரூபாய் கொடுத்து வாங்குறதெல்லாம் அரசு விதிகளின்படி கிடையாது. ஆயுஷ்மான் ஒருங்கிணைப்பாளரை உங்ககிட்ட பேசச் சொல்லுறேன்''’என்றார்.

ஆயுஷ்மான் அட்டைகள் வழங்குவதில் கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுபவர் அபிஷ். அவருடைய உதவியாளரான சுதர்சன் நம்மிடம், "நான் ஸ்மார்ட் ஐடிலிங்கிற பிரைவேட் நிறுவனத்துல அசிஸ்டன்ட் கோலிஆர்டினேட்டரா இருக்கேன். நீங்க சொல்லுற ஷாலினி ஆயுஷ்மான் அட்டைகளை பிரைவேட்ல இருந்து வாங்கியிருப்பாங்க. அவங்க வச்சிருக்கிறது ஒரிஜினல் கார்டுதான். ஸ்மார்ட் ஐ.டி.ல இருந்து ஒரு செட் கார்ட்ஸை பிரைவேட்ல கொடுத் துட்டாங்க. கவர்மென்ட் டிஸ்ட்ரிப்யூட் பண் ணுனா எந்தப் பணமும் கேட்கத் தேவையில்ல. பிரைவேட்கிட்ட போனதுனால அவங்க என்ன பண்ணுறாங்கன்னு தெரியல. நாங்க ஸ்மார்ட் ஐ.டி. எங்க நிறுவனத்துக்கு கார்டுக்கு இவ்வளவுன்னு கவர்மென்ட்ல இருந்து பணம் கொடுத் திருவாங்க. மக்கள்கிட்ட நாங்க பணம் வாங்கமாட்டோம். மத்திய அரசின் கீழ் இயங்குறோம். அரசாங்கத்தோடு இணைந்து பண்ணுறோம். நெறய பேருக்கு ஆயுஷ்மான் கார்டு பத்தி எதுவும் தெரியல. சிலர் டவுன்லோட் பண்ணி லேமினேட் செய்து கொடுக்கிறத ஒரிஜினல்னு நம்பிடறாங்க. இது தவறான விஷயம். செல்பொன் கால் மூலமா நெறய கம்ப்ளைன்ட்ஸ் வந்திருக்கு. யாரும் நேரடியா புகார் தரல. வழக்கு போட்டு யாரும் அரெஸ்ட்டாகல''’என்றார்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

"ஆயுஷ்மான் கார்டு டிஸ்ட்ரிபியூஷன்ல நெறய கோல்மால் நடக்குது. அரசாங்கமே நேரடியா கொடுக்காம ஆபரேட்டர்ஸை வச்சு கொடுக்கிறாங்க. இந்த வேலைய ஸ்மார்ட் ஐடிலிங்கிற பிரைவேட் நிறுவனத்துகிட்ட கொடுத் துட்டாங்க. அந்த நிறுவனம் தனக்குக் கீழே ஒரு செக்டார் மாதிரி.. பெரிய பிராஞ்ச் மாதிரி வச்சு பண்ணிட்டிருக்கு. இதற்கிடையில், அந்த ஸ்மார்ட் ஐடிலில இருக்கிற ஆட்கள், ஆளாளுக்கு புகுந்து விளையாடுறாங்க. எப்படின்னா.. நான் ஒரு ஆபரேட்டர்.. நீங்க ஒரு ஆபரேட்டர்ன்னா.. ஆளுக்கொரு ஐடி கொடுத்திருப்பாங்க. கவர்மென்ட்ல இன்னைக்கு அப்ளை பண்ணுனா.. அதுவந்து 5 லட்சம் வரைக்கும் டம்ப் ஆகி கல்கத்தாவுல அச்சிடப்பட்டு, அதுக்கப்புறம் தமிழ் நாட்டுக்கு வந்து, தமிழ்நாட்டுல ஒவ்வொரு மாவட்டத் துக்கும் டெஸ்பாட்ச் ஆகும். இதுக்கே ஆறு மாசம்வரை ஆயிரும். அந்தக் கார்டைத்தான் இப்ப சுசீந்திரத்துல டிஸ்ட்ரிபியூட் பண்ணுறாங்க.

இன்னைக்கு அப்ளை பண்ணி நாளைக்கே கார்டு கொடுக்கிற வேலையை சில ஆபரேட்டர்ஸ் பண்ணுறாங்க. அது லேமினேட் பண்ணப்பட்ட போலியான கார்டு. ஒரிஜினல் கார்டுல ஆஇஐஆ நம்பர், மதச நம்பர்னு ரெண்டும் இருக்கும். போலி ஆயுஷ்மான் கார்டுல இதுல ஏதாச்சும் ஒரு நம்பர் மிஸ்ஸாகும். இல்லைன்னா.. கிராமம், வட்டம்னு உங்களோட அட்ரெஸ் டீடெய்ல்ஸ் பக்காவா இருக்காது. இந்த போலி ஆயுஷ்மான் கார்டை வச்சிக்கிட்டு ட்ரீட்மென்டுக்காக ஆஸ்பத்திரிக்கு போகும்போது, கலெக்டரேட்ல போயி ஒரிஜினல் கார்டு வாங்கிட்டு வாங்கன்னு திருப்பி அனுப்பிருவாங்க. நோயாளி உயிருக்குப் போராடிக் கிட்டிருக்கிற எமர்ஜென்ஸியான நேரத்துல இது நடந்தா அந்தக் குடும்பத்துல உள்ளவங்க என்ன பாடுபடுவாங்க? நோயாளிகள் எத்தனை அவதிகளுக்கு ஆளாவாங்க? இந்தக் குழப்பத்துக்கு நடுவுல, சுகாதாரத்துறைல இருந்து கிராம சுகாதார செவிலியர் மூலம் மக்களுக்கு ஆயுஷ்மான் கார்டு வினியோகிக்கும் பணியும் ஒருபுறம் நடக்குது''’என்றார்.

ஹிஷா மீண்டும் நம்மைத் தொடர்புகொண்டார். "மொதல்ல கார்டுக்கு 100 ரூபாய் கேட்டவங்க, நக்கீரன் தலையிட்டதுனால, பணமே வாங்காம அஞ்சு கார்டையும் கொடுத்துட்டுப் போயிட்டாங்க. வந்தவங்க எங்க வீட்டு வாசல்படியைத் தாண்டி வரல. அதனால வாட்ஸ்-ஆப்ல வந்தமாதிரி, ஆயுஷ்மான் பேர்ல மோசடி பண்ணுறவங்களா இருக்குமோங்கிற பயம் போயிருச்சு''’என்று பெருமூச்சுவிட்டார்.

தினமும் 10 லட்சம் ஆயுஷ்மான் அட்டைகள் வழங்குவதை இலக்காக வைத்திருக்கிறோம் என்கிறார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா. இதுவரையிலும் 30 கோடி ஆயுஷ்மான் அட்டைகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளதாகப் பறைசாற்றி வருகிறது ஒன்றிய அரசு. அதிக எண்ணிக்கையிலான ஆயுஷ்மான் கார்டுகள் வைத்திருக்கும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. முதல் பத்து மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இல்லை.

ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் கார்டை ஆன்லைனிலும் மொபைல் ஆப்பிலும் பதிவிறக்கம் செய்யக்கூடிய நடைமுறை உள்ளது. லேமினேட் செய்யப்பட்ட போலி ஆயுஷ்மான் காப்பீடு அட்டைகளும் புழக்கத்தில் இருக்கின்றன. ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட், ஆயுஷ்மான் காப்பீடு அட்டைக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன.

அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கவேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு, மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவ மனைகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதில், குறிப்பாக அட்டைகள் வழங்குவதில் இத்தனை குழப்பமும் குளறுபடிகளும் உள்ளன.

இலக்கை விரைந்து நிறைவேற்றுவதற்காக ஏனோதானோ வென அவசரகதியில் செயல்படாமல், அட்டை வினியோகத்தில் நிலவும் குறைபாடுகளைக் களையவேண்டும் ஒன்றிய அரசாங்கம்.