கோவை மாவட்ட ஆவின் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாகத் தொடர் ரெய்டை நடத்த, அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

avin

ஆவின் ஊழியர்களே, எதற்கு இந்த ரெய்டு என பரிதவிப்பாய் கை பிசைய... இதன் பின்னணி குறித்து ஆவின் தரப்பில் நாம் விசாரித்த போது, "கோவை மாவட்ட ஒன்றியத்தில் ஆவின் உட்பட பார்லர்கள் ஆறு உள்ளன. ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், உக்கடம், வ.வு.சி. பார்க், பச்ச பாளையம் மற்றும் ஏ.எஃப். எஸ்.சி. ஆகிய பார்லர்கள் மூலம் மாதந்தோறும், விற்பனைப் பிரிவு மேலாளர் சங்கீதா, ஜீவிதா, சுப்பிரமணி, சாமிநாதன், சகுந்தலா ஆகி யோருக்கு லஞ்சப்பணம் கணிசமாகப் போகிறது.

அதுமட்டுமல்ல, மொத்த விற்பனையாளர்களின் ஆவின் பால் உப பொருட்கள் சில்லரை விலைக்கு இந்த 6 பார்லர்களி லும் விற்கப்படுகிறது. ஊழியர் கள் அதை எம்.ஆர்.பி. விலைக்கு பொதுமக்களிடம் விற்றுவிடு கின்றனர். இதற்கு சரியான கணக்கு வழக்கு இல்லாமல், ஏகப்பட்ட கோல்மால்கள் நடக்குது. மாதச் சம்பளமாக 20 ஆயிரம் அளவுக்கே வாங்குகிற ஜீவிதா, சமீபத்தில் 45 லட்சம் ரூபாய்க்கு வீடு வாங்கி இருக்கிறார் என்றால், இந்த வசதி எப்படி வந்தது? இவர் முன்னாள் பால் வளத்துறை மந்திரி ராஜேந்திர பாலாஜியின் சிபாரிசில் கோவை ஆவினுக்குள் வந்தவர்''’என்றார்கள் அழுத்தமாக.

இன்னும் சிலரோ, "எம்.எம்.ஓ. சாமிநாதன் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பச்சாபாளையத்தில் உள்ள ஹைடெக் பார்லரில் தனது குடும்பத்துடன் சென்று ஐஸ்கிரீம் சாப்பிடுவதோடு, பால் மற்றும் லஞ்சப்பணத்தையும் வாங்கிக்கொண்டு செல்கிறார். இதற்கு முன்பு அவர் திருப்பூர் மாவட்ட ஒன்றியத்தில் பார்லர் இன்சார்ஜாகப் பணி புரிந்தபோது, பால் உபபொருட்கள் விற்ற வகையில் ரூபாய் 23,60,000-ஐ இன்றுவரை அவர் ஆவினுக்குச் செலுத்தவில்லை. இதற்காக அவர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அதேபோல், எம்.எம்.ஓ. சகுந்தலா, பால்பூத் தருவ தற்கு பேரம் பேசுவார். சமீபத்தில் ஆவின் ஊழியர் ஒருவரின் சகோ தரிக்கு பீளமேடு சித்ரா ஏரியாவில் பூத் (2905) கொடுப்பதற்கு ரூபாய் 50,000 வசூலித்திருக்கிறார். இந்தப் பணம் பங்கு பிரிக்கப்பட்டுவிடும். மேலும் பாலசிங்கம் என்கிறவரின் சகோதரர்களுக்கு அதிக வருமானம் வரக்கூடிய பூத் 386-ஐ ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் பூத்தை நீக்கிவிட்டு, மீண்டும் புது பூத் தருவ தற்கு ரூபாய் ஒரு லட்சம் லஞ்சமாக வாங்கிக்கொண்டார். இப்படி... ஆவின் பூத்தில் லட்சக்கணக்கில் லஞ்சமாகக் கொடுக்கப்படுவதைத் தட்டிக் கேட்க எந்த அதிகாரியும் முன்வருவது இல்லை''’என்று சொல்ல, இதை, ஆவின் முகவர்கள் பலரும் வழிமொழிகின்றனர்.

Advertisment

avin

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க மாநிலப் பொதுச்செய லாளர் வாழப்பாடி ராஜேந்திரன் நம்மிடம், " இத்தனை பேர் தவறு செய்கிறார்கள் என்றால் அதற்குக் காரணமாக இருப்பவர், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் பொது மேலாளரான ரவிச்சந்திரன் தான். இவர் மீது முறைகேடு புகார் இருப்பதால் துறை ரீதியான விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில்... துணை பொதுமேலாளராக ஆகாமலே மேலாளராக ஆக்கப்பட்டிருக்கிறார். இதை எதிர்த்து பால் உற்பத்தியாளர் கூட் டுறவு சங்கத்தின் முன்னாள் இயக்குநர் நடராசு வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதே போல இவர்கள் வேலை செய்யும் குளிரூட் டும் நிலையங்களில் பாலில் தண்ணீர் கலந்தும், சோடா உப்பு கலந்தும் ஒன்றியத் திற்கு அனுப்பியதால் பாலின் தரம் குறைந்து, சுமார் 7368 கிலோ திடச் சத்துக்கள் குறைவாக உள்ளதால் ஒன்றியத்திற்கு சுமார் ரூ.16,50,000 இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல அம்மோனியா கசிவு என்று சொல்லி, இருப்பு வைக்கப்பட்ட வகையில் 8,25,316 ரூபாய் இழப்பு என்று சொல்லி ரவிச்சந்திரன் ஊழல் செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், 2017 முதல் 2021 வரை பல நிறுவனங் களுக்கு பால் உபயோகப் பொருட்கள் மற்றும் பால் கொடுத்த வகையில், கோவை ஆவினில் பல கோடி ரூபாய் வசூல் செய்யப் படவில்லை. ஒன்றிய விற்பனைப் பிரிவு மேலாளர் சங்கீதா கமிஷன் பெற்றுக் கொண்டு எதையும் கண்டுகொள்வதில்லை. ஆகமொத் தம், அரசுக்கு சேரவேண்டிய உரிய வருவாயைத் தராமல் கோவை ஆவினை அழித்துக்கொண்டிருக்கிறார்கள்''’என்றார் விபரமாக.

Advertisment

avin

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விற்பனைப் பிரிவு மேலாளர் சங்கீதாவிடம் நாம் கேட்டபோது, "“நாங்க யாருமே எந்த தவறும் செய்யவில்லை. நான் இங்கே வேலைக்கு வந்து 3 வருஷம் ஆச்சு. நான் நியாயமாக நேர்மையாக வேலை செய்யறதுக்கு கிடைச்ச புகார்கள்தான் இது. நான் இங்கே வேலைக்கு வருவதற்கு முன்னாலேயே வீடு வாங்கிவிட்டேன். ஆவினில் இருந்து போன எல்லாப் பொருட்களுக்கும் பில்கள் இருக்கின்றன. சில பில்கள் வேண்டுமானால் மிஸ்ஸாகியிருக்க லாம். அந்த பில்களையும் கொண்டுவரச் சொல்லியிருக்கிறேன். சரி செய்து விடுவேன்''’என்றார் சளைக்காமல்.

எம்.எம்.ஓ. சுப்பிரமணியனோ, "நான் ரிட்டயர்டாகப் போறேன். அதுனால என் மேல அபாண்டமாகப் பழி போடறாங்க''’என முடித்துக்கொண்டார் .

ஆவின் ஒன்றிய பொதுமேலாளர் ரவிச்சந்திரனை இந்தக் கட்டுரை பிரசுரமாகும் வரை பலமுறை தொடர்பு கொண்டும், அவர் கடைசிவரை போனை எடுக்கவேயில்லை. இந்த நிலையில்தான் தற்போது விஜிலென்ஸ் ரெய்டு நடந்திருக்கிறது.

கோவை ஆவின், தனது துறைக்கே கடைசிப் பால் ஊற்றப் பார்க்கிறது.