டதுசாரி தொழிற்சங்கவாதி வி.பி. சிந்தன் அரவணைப்பில் உருவான சிந்தனையாளர். கலைஞரின் அன்பைப் பெற்ற எழுத்தாளர். இளம் வயதிலேயே பத்திரிகை ஆசிரியர். கவிஞர், ஓவியர், திரைப்பட இயக்குநர் எனப் பல்வேறு பரிமாணங்கள் ssகொண்டவரும், நக்கீரன் முன்னெடுத்த சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவருமான இளவேனில் புத்தாண்டு நாளான 2021 ஜனவரி 1ல் மறைந்துவிட்டார். ஆனால், என்றும் மறையாத தனித்துவம் கொண்டவை ‘ஆத்மா என்றொரு தெருப்பாடகன்’, ‘புயலுக்கு இசை வழங்கிய பேரியக்கம், ‘நாவல் காருவகி’ உள்ளிட்ட அவரது பல படைப்புகள்.

நான், தோழர் உலகநாதன், தோழர் பழனிபாலு, கவிஞர் இளவேனிலின் வகுப்பில் தினம் தோறும் தவறாமல் பங்கேற்போம். மாலை 6 மணிக்குத் தொடங்கும் அரசியல் -இலக்கிய வகுப்பு இரவு 10 மணிக்குதான் முடியும். தியாக ராயர் நகர் பெரியார் சிலைக்கு அருகில் உள்ள இந்தியன் காபி ஹவுஸ்தான் இளவேனில் ஹவுஸ்.

அது சட்டமன்றத் தேர்தல் காலம். தீவிரப் பரப்புரை காதைக் கிழிக்கிறது. எல்லோரும் தி.மு.க வெல்ல வேண்டும் என்று விவாதிக்கிறோம். இளவேனில் மட்டும், “"" தி.மு.க தோற்க வேண்டும். கலைஞர் அப்போது தான் நிறைய எழுது வார். நாமும் அவரை நினைத்த நொடியில் பார்க்கலாம், பேச லாம்'' என்றார். அது தான், இளவேனில்.

elaveni

Advertisment

அடையாறு மாணவர் நகலகம் அய்யா ஆனா ரூனா அறை. ""நம்ம நல்லக்கண்ணு அய்யாவுக்கு ஒரு கார் கூட இல்லைங்க'' என்றார் இளவேனில். ஒரே வாரத்தில் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் புதிய டவேரா காரின் சாவியை நல்லக்கண்ணு அய்யா கரங்களில் ஒப்படைத்தார் ஆனா ரூனா.

அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் நிரந்தரமாக உறங்கிய தோழர் இளவேனில் உடல் அருகில் நல்லக்கண்ணு அய்யா நின்று கதறிய காட்சி எல்லோரையும் நிலைகுலையச் செய்தது.

தோழர் இளவேனில் அடிப்படையில் கம்யூனிஸ்ட் என்றாலும், அவரது விமர்சனங்களுக்கு தோழர்களும் தப்பியதில்லை. ஆனால்,

Advertisment

கம்யூனிஸ்ட்டுகளை மட்டுமல்ல, காங்கிரசாரை, கலைஞரை என யாரையும் தன் விமர்சனப் பேனாவுக்கு அவர் விட்டுவைத்த தில்லை. பெயர் இளவேனில் என்றாலும், எழுத்து எரிமலைக் குழம்பு. சென்னை வடபழனி அருகில் சில ஆண்டுகளுக்கு முன்பு தோழரை பார்த்தேன்.. ""இங்கதான் என் அறை. நான் தனியாதான் இருக் கேன்'' என்றார். முகத்தின் சோகம் மறைத்தது அவரது புன்னகை.

விடைபெற்று சென்ற இளவேனிலை வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஆத்மா என்றொரு தெருப் பாடகன்... நடந்து கொண்டிருந்தார்.